PAT 3.4.9

குழலூதும் அலங்காரப் பிள்ளை

262 வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை *
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத்
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி *
அலங்காரத்தால்வருமாயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு *
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே.
262 valaṅ kātil mel-toṉṟip pū aṇintu * mallikai vaṉamālai mauval mālai *
ciliṅkārattāl kuzhal tāzha viṭṭut * tīṅkuzhal vāymaṭuttu ūti ūti **
alaṅkārattāl varum āyap pil̤l̤ai * azhaku kaṇṭu ĕṉmakal̤ ācaippaṭṭu *
vilaṅki nillātu ĕtirniṉṟu kaṇṭīr * vĕl̤val̤ai kazhaṉṟu mĕym mĕlikiṉṟate (9)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

262. On his left ear he wears a lovely thondri flower and his long hair is adorned with jasmine and forest mauval flowers. Seeing the beauty of the cowherd child, as he comes playing his flute, my daughter is in love with him. She stands before him without moving away and see, her lovely bangles become loose and she grows thin.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலங் காதில் வலது காதில்; மேல்தோன்றிப் பூ அணிந்து செங்காந்தள் பூவையும்; மல்லிகை வனமாலை வனப்பான மல்லிகை மாலையயும்; மெளவல் மாலை காட்டு மல்லிகை மாலையையும் அணிந்து; சிலிங்காரத்தால் சிருங்காரமாக அலங்கரித்து; குழல் தாழ விட்டு குழல் கற்றயைத் தொங்க விட்டுக்கொண்டு; தீங்குழல் இனிமையான புல்லாங்குழலை; வாய் மடுத்து வாயில் வைத்து; ஊதி ஊதி வித விதமாக இசைத்துக்கொண்டு; அலங்காரத்தால் அலங்கரித்தவண்ணம்; வரும் ஆயப் பிள்ளை வருகின்ற ஆய்ப் பிள்ளை; அழகு கண்டு அழகைப்பார்த்து; என் மகள் ஆசைப்பட்டு என் மகள் அவனிடம் மதி மயங்கி; விலங்கி நில்லாது அந்த இடத்தை விட்டு விலகாமல்; எதிர் நின்று கண்டீர் எதிரிலேயே நிற்பதைப் பாரீர்; வெள்வளை கழன்று சங்கு வளைகள் கழலும் அளவுக்கு; மெய்ம் மெலிகின்றதே உடல் மெலியப்பெற்றாள்
valaṅ kātil on His left ear; meltoṉṟip pū aṇintu He had a lovely thondri flower; ciliṅkārattāl and beautifully decorated with; mĕl̤aval mālai garland made of the fragrant; mallikai vaṉamālai jasmine; kuḻal tāḻa viṭṭu taking and; tīṅkuḻal the divine flute and; vāy maṭuttu keeping it in the mouth and; ūti ūti playing; aḻaku kaṇṭu seeing the beauty; varum āyap pil̤l̤ai of this Cowherd child; alaṅkārattāl who is so well decorated; ĕṉ makal̤ ācaippaṭṭu my daugther has lost her senses; vilaṅki nillātu she is not leaving that spot; ĕtir niṉṟu kaṇṭīr and standing right in front of Him; mĕym mĕlikiṉṟate she became so thin; vĕl̤val̤ai kaḻaṉṟu that her bangles have become loose