PAT 3.4.2

ஆயர்குழாம் நடுவே வரும் பிள்ளை

255 வல்லிநுண்இதழன்னஆடைகொண்டு
வசையறத்திருவரைவிரித்துடுத்து *
பல்லிநுண்பற்றாகஉடைவாள்சாத்திப்
பணைக்கச்சுந்திப்பலதழைநடுவே *
முல்லைநல்நறுமலர்வேங்கைமலர்
அணிந்து பல்லாயர்குழாம்நடுவே *
எல்லியம்போதாகப்பிள்ளைவரும்
எதிர்நின்றுஅங்கினவளைஇழவேன்மினே.
255 valli nuṇ itazh aṉṉa āṭai kŏṇṭu * vacai aṟat tiruvarai virittu uṭuttu *
palli nuṇ paṟṟāka uṭaivāl̤ cātti * paṇaikkaccu unti pala tazhai naṭuve **
mullai nal naṟumalar veṅkai malar aṇintu * pal āyar kuzhām naṭuve *
ĕlliyam potākap pil̤l̤ai varum * ĕtirniṉṟu aṅku iṉaval̤ai izhaveṉmiṉe (2)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

255. Kannan, wearing a soft garment on the waist that looks like the petals of flowers blooming on a vine, carrying a small sword, that clings like a lizard and adorned with a garland made of fragrant mullai and vengai blossoms mixed with fresh kachandi leaves, comes in the middle of a group of cowherds in the evening. O girls, if you go before him, your bangles will slip from your hands and you will lose them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்லி கற்பகக்கொடியின்; நுண் இதழ நுண்ணிய இதழ் போன்ற; அன்ன ஆடை மெல்லிய ஆடையைக்; கொண்டு கொண்டுவந்து; வசை அற சுருக்கமின்றி; திருவரை ஒழுங்காக இடுப்பில்; விரித்து உடுத்து பிரித்து உடுத்திக்கொண்டு; பல்லி நுண் சுவரைப் பல்லி பற்றிகொள்ளும்; பற்றாக பாங்கைப்போன்று; பணை அதன் மேல் பெரிய; கச்சு உந்தி கச்சத்தைக் கட்டிக்கொண்டு; உடை வாள் சாத்தி உடைவாளைச் சொருகிக்கொண்டு; பல தழை நடுவே பல தோரணங்கள் நடுவே; முல்லை நல் நறு மலர் வாச மிக்க முல்லை மலர்; வேங்கை மலர் வாடாமல்லி மலர்; அணிந்து மாலைகளை அணிந்து; பல் ஆயர் ஏராளமான ஆயர்; குழாம் நடுவே பிள்ளைகள் நடுவே; எல்லியம் போதாக மாலைப் பொழுதினிலே; பிள்ளை வரும் அங்கு கண்ணன் வரும் வழியில்; எதிர் நின்று எதிரே நின்று; இனவளை உங்கள் வளையல்களை; இழவேன்மினே இழக்காதீர்கள்
virittu uṭuttu He wears; aṉṉa āṭai soft garments; kŏṇṭu brought; vacai aṟa without folds; tiruvarai on the hip; nuṇ itaḻa that looks like small petals; valli in the vine of karpaga plant; kaccu unti He has a scabbard; paṇai that is big; paṟṟāka that looks like; palli nuṇ a lizard clining to the wall; uṭai vāl̤ cātti with a sword in it; aṇintu He wears garland made of; mullai nal naṟu malar fragrant jasmine flower and; veṅkai malar vadamalli flower; pala taḻai naṭuve in the middle of various garlands; ĕlliyam potāka in the evening; pal āyar amidst several; kuḻām naṭuve aiyarpadi children; pil̤l̤ai varum aṅku on the path where Kannan comes; ĕtir niṉṟu standing in front of Him; iḻaveṉmiṉe do not loose; iṉaval̤ai your bangles