PAT 3.4.1

காலிப்பின் வரும் கண்ணனைக் கண்டு இடைக்கன்னியர் காமுறுதல் மங்கையர் ஊண் மறந்தனர்

254 தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்
தண்ணுமைஎக்கம்மத்தளிதாழ்பீலி *
குழல்களும்கீதமுமாகிஎங்கும்
கோவிந்தன்வருகின்றகூட்டம்கண்டு *
மழைகொலோவருகின்றதென்றுசொல்லி
மங்கைமார்சாலகவாசல்பற்றி *
நுழைவனர்நிற்பனராகி எங்கும்
உள்ளம்விட்டுஊண்மறந்தொழிந்தனரே. (2)
254 ## tazhaikal̤um tŏṅkalum tatumpi ĕṅkum * taṇṇumai ĕkkam mattal̤i tāzhpīli *
kuzhalkal̤um kītamum āki ĕṅkum * kovintaṉ varukiṉṟa kūṭṭam kaṇṭu **
mazhaikŏlo varukiṉṟatu ĕṉṟu cŏlli * maṅkaimār cālaka vācal paṟṟi *
nuzhaivaṉar niṟpaṉar āki ĕṅkum * ul̤l̤am viṭṭu ūṇ maṟantu ŏzhintaṉare (1)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

254. Decorated with fresh leaves and garlands, cowherds come while the sounds of flutes and songs are heard everywhere while drums are beaten. Govindan, his hair adorned with peacock feathers, comes with them and young women, coming to their doorsteps, see the cowherds and Kannan and say, “Is a cloud coming in the crowd?” They forget what they should do and stand there, forgetting even to eat.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தழைகளும் தொங்கலும் தோரணங்களும் மயிற்பீலிகளும்; எங்கும் ததும்பி எல்லா இடங்களிலும் நிறைந்து; தண்ணுமை மிருதங்கங்களும்; எக்கம் ஒரு தந்தியையுடைய வாத்யம்; மத்தளி மத்தளி என்னும் வாத்திய இசையும்; தாழ் பீலி பீலிகள் பிணைக்கப்பட்ட இசைக்குழல்; குழல்களும் கீதமும் புல்லாங்குழல் கீதங்களும்; ஆகி எங்கும் பரவி எங்கு பார்த்தாலும்; கோவிந்தன் வருகின்ற கண்ணனுடன் வரும்; கூட்டம் கண்டு கூட்டத்தைப்பார்த்து; மங்கைமார் ஆய்ச்சியர்கள்; மழைகொலோ மேககக்கூட்டம் தான்; வருகின்றது வருகிறதோ; என்று சொல்லி என்று கூறியபடி; சாலக தங்கள் வீட்டுச் சிறிய; வாசல் பற்றி நுழை வாயிலில்; நுழைவனர் கூட்டம் கூட்டமாக நுழைவதும்; நிற்பனர் ஆகி நிற்பதும் ஆகி; எங்கும் கண்ணன் போகுமிடங்களிலெல்லாம்; உள்ளம் விட்டு தங்களை மறந்து; ஊண்மறந்து உணவை மறந்து; ஒழிந்தனரே அவன் பின் போயினர்
taḻaikal̤um tŏṅkalum galrlands and peacock feathers; ĕṅkum tatumpi are everywhere; ĕkkam while sounds of music instruments and; mattal̤i the music from an instrument called mathali and; taṇṇumai mirudangam are heard; kuḻalkal̤um kītamum music from the flute; tāḻ pīli decorated with peacock feathers; āki ĕṅkum spreads and everywhere; kovintaṉ varukiṉṟa coming along with Kannan; kūṭṭam kaṇṭu seeing people; maṅkaimār cowherd women thought that; ĕṉṟu cŏlli and said that; maḻaikŏlo the dark cloud itself; varukiṉṟatu is coming; nuḻaivaṉar and as group they entered; vācal paṟṟi the small entrance; cālaka of their homes; niṟpaṉar āki and stood there; ul̤l̤am viṭṭu they were mesmerized; ūṇmaṟantu and forgot to eat; ŏḻintaṉare and went; ĕṅkum wherever Kannan went