தம்மை ஒக்கும் அகிஞ்சனவர்க்கு இவன் நிர்வாஹகன் ஆன படியைக் காட்டுகிறார்-
அப்பிள்ளை உரை அவதாரிகை தம்மை ஓக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனான படியை மூதலிக்கிறார்
இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள் கண்டான் அவை காப்பான் கார்க் கண்டன் நான்முகனோடு உண்டான் உலகோடு உயிர்-87-
பதவுரை
இமயம் பெரு மலை போல்-பெரிய இமய மலை போன்றிருக்கும்படி