NMT 80

கண்ணன் லீலைகளையே கேளுங்கள்

2461 விரைந்தடைமின்மேலொருநாள் வெள்ளம்பரக்க *
கரந்துலகம் காத்தளித்தகண்ணன் * - பரந்துலகம்
பாடின, ஆடினகேட்டு * படுநரகம்
வீடினவாசற்கதவு.
2461 viraintu aṭaimiṉ mel ŏru nāl̤ * vĕl̤l̤am parakka *
karantu ulakam kāttu al̤itta kaṇṇaṉ ** parantu ulakam *
pāṭiṉa āṭiṉa keṭṭu * paṭu narakam
vīṭiṉa vācal katavu -80

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2461. When a terrible flood came in ancient times Kannan protected the world and gave it his grace. If you listen to the songs of this wide world and dance and praise him, that will save you from falling into a terrible hell. and will open the door to Mokshā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பரந்து உலகம் பரந்த உலகத்தில்; பாடின சிறந்த பக்தர்கள் பாடி; ஆடின கேட்டு ஆடினவற்றை கேட்டு; படு நரகம் நரகங்களின்; வாசற் கதவு வாசற்கதவுகள்; வீடின விழுந்தன; மேல் ஒரு நாள் மேலும் ஒரு நாள்; வெள்ளம் பிரளய வெள்ளம்; பரக்க பரவினபோது; உலகம் உலகங்களை யெல்லாம்; கரந்து மறைத்து வைத்து; காத்து அளித்த காத்து அளித்த; கண்ணன் கண்ணனை; விரைந்து விரைந்து சென்று; அடைமின் பணியுங்கள்
parandhu pervading everywhere; ādina dancing; ulagam distinguished followers; pādina the divine names recited; kĕttu since they were heard; padunagaram vāsal at the entrance of hell; kadhavu doors; vīdina fell down; mĕl oru nāl̤ at an earlier point of time; vel̤l̤am parakka when the flood due to deluge spread; ulagam all the worlds; karandhu hiding (inside his stomach); kāththu al̤iththa removed the sorrow and protected; kaṇṇan kanna pirān (krishṇa); viraindhu adaimin go soon and bow down to him.