வேதாந்த ரகசியம் இது என்று இருந்தபடி எங்கனே என்னில் நான் ஒருத்தனும் இன்றாக அறிந்ததோ பிரசித்தம் அன்றோ -என்கிறார் –
அப்பிள்ளை உரை அவதாரிகை வேத ஸித்தமான அர்த்தம் இங்கனே என்று நீர் அறிந்த படி எங்கனே என்ன நான் ஒருவனுமா இன்றாக அறிந்தேன் சர்வ லோக பிரசித்தம் (லோகம் -வேதம் என்றும் உலகோர் என்றும் )
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்