NMT 61

மதுசூதனனைச் சரணடை: துன்பம் வராது

2442 மனக்கேதம்சாரா மதுசூதன்தன்னை *
தனக்கேதான் தஞ்சமாக்கொள்ளில் * - எனக்கேதான்
இன்றொன்றிநின்றுஉலகையேழ் ஆணையோட்டினான் *
சென்றொன்றிநின்றதிரு.
2442 maṉak ketam cārā * matucūtaṉ taṉṉai *
taṉakke tāṉ tañcamāk kŏl̤l̤il ** - ĕṉakke tāṉ
iṉṟu ŏṉṟi niṉṟu ulakai * ezh āṇai oṭṭiṉāṉ *
cĕṉṟu ŏṉṟi niṉṟa tiru -61

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2442. The lord, the ruler of the world fought with the seven bulls to marry Nappinnai. He is my treasure and I am with him. If you ask Madhusudan, the refuge for all, for refuge he will protect you and you will not have any trouble in your mind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மதுசூதன் மது என்னும் அசுரனை; தன்னை கொன்ற பெருமானை; தனக்கே தான் தனக்கே ரக்ஷகன்; தஞ்சமாக் கொள்ளில் என்று நினைப்பவனுக்கு; மனக் கேதம் சாரா மனவருத்தங்கள் வராது; ஏழ் உலகை ஏழு லோகங்களிலும்; ஒன்றி நின்ற பொருந்தி நின்று; ஆணை செங்கோல்; ஓட்டினான் செலுத்தும் எம்பெருமான்; சென்று தானே வந்து; ஒன்றி நின்று என் மனதில் நிற்கும்; திரு இன்று செல்வமானது; எனக்கே தான் எனக்கே உள்ளது
madhusūdhan thannai emperumān who killed the demon madhu; thanakkĕ thanjam ā thān kol̤l̤il if one takes(emperumān) as his refuge; manak kĕdham troubles of the mind; sārā will not reach; onṛi ninṛu (without letting go) standing firmly; ĕzh ulagai in all the seven worlds; āṇai ŏttinān emperumān who rules with his sceptre; inṛu today; thān he himself; senṛu coming (to me); onṛi ninṛa thiru the wealth which is fitting (in me); enakkĕ is only for me and for no one else.