NMT 57

நல்வினை தீவினைகளாக இருப்பவன் கண்ணனே

2438 ஒருங்கிருந்தநல்வினையும் தீவினையுமாவான் *
பெருங்குருந்தம்சாய்த்தவனேபேசில் * - மருங்கிருந்த
வானவர்தாம்தானவர்தாம் தாரகைதான் * என்னெஞ்ச
மானவர்தாம் அல்லாததென்?
2438 ŏruṅku irunta nal viṉaiyum * tīviṉaiyum āvāṉ *
pĕrum kuruntam cāyttavaṉe pecil ** - maruṅku irunta
vāṉavar tām tāṉavar tām * tārakai tāṉ * ĕṉ nĕñcam
āṉavar tām allātatu ĕṉ? -57

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2438. The lord himself is good karmā and bad karmā. If I wanted to describe him who killed the Asurans when they came as Kurundam trees, I would say he is the stars, the gods, the Asurans and he is in my heart. Is there anything that he is not?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெருங் குருந்தம் பெரிய குருந்த மரத்தை; சாய்த்தவனே வீழ்த்தி தள்ளினவனே!; ஒருங்கு இருந்த உடன் நிற்கும்; நல் வினையும் புண்யங்களுக்கும்; தீ வினையும் பாபங்களுக்கும்; ஆவான் நிர்வாஹகன் அவனே; பேசில் உண்மை பேசப் புகுந்தால்; மருங்கு இருந்த அருகிலிருக்கும்; வானவர் தாம் தேவர்களும்; தானவர் தாம் அசுரர்களும்; தாரகை தான் இப்பூமியும்; என் நெஞ்சம் என்மனதும்; ஆனவர் ஆகிய அனைத்திலும்; தாம் உள்ளான்; அல்லாதது அவன் இல்லாத வஸ்து; என்? எது? ஒன்றுமில்லை
pĕsil if one were to talk the truth; peru kurundham sāyththavanĕ ŏh kaṇṇapirān who uprooted the kurundha tree (a type of wildlime)!; orungirundha nalvinaiyum thīvinaiyum āvān he is the executor for the puṇya (virtues) and pāpa (vices) which are with jīvas (souls).; marungu irundha staying close-by; vānavardhām celestial entities; dhānavardhām demonic entities; thāragaidhān earth; en nenjam ānavardhām the sarvĕṣvaran who stays in my heart; allādhadhu en what entity is there without that sarvĕṣvaran?