NMT 55

திருமாலே! நின் திருவடிப் பெருமைதான் என்னே!

2436 கடைநின்றமரர் கழல்தொழுது * நாளும்
இடைநின்றவின்பத்தராவர் * - புடைநின்ற
நிரோதமேனி நெடுமாலே! * நின்னடியை
யாரோதவல்லாரவர்?
2436 kaṭai niṉṟu amarar kazhal tŏzhutu * nāl̤um
iṭainiṉṟa * iṉpattar āvar ** - puṭainiṉṟa
nīr ota meṉi * nĕṭumāle ! * niṉ aṭiyai
yār ota vallār avar? -55

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2436. If people stand at the doors of some gods worshiping their feet, they will be happy only at that time. O Nedumāl colored like the ocean rolling with waves, how could they be capable of worshiping your feet?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரர் மற்ற தெய்வங்களை; கடை நின்று பற்றி நின்று; நாளும் எப்பொழுதும்; கழல் அவர்கள் திருவடிகளை; தொழுது வணங்கி நிற்பவர்; இடை நின்ற நடுவே கிடக்கும்; இன்பத்தர் ஸ்வர்க்கம் ஆகியவைகளை; ஆவர் பெறுவர்; புடை இவ்வுலகை; நின்ற சூழ்ந்திருக்கும்; நீர் ஓத கடல் போன்ற; மேனி திருமேனியையுடைய; நெடுமாலே! பெருமானே!; நின் அடியை உன் திருவடியை; ஓத வல்லார் அநுஸந்திக்கவல்லார்; யார் அவர்? ஆரேனும் உண்டோ?
amarar kadai ninṛu standing at the doorsteps of other deities; nāl̤um everyday; kazhal thozhudhu falling at (their) feet; idai ninṛa inbaththar āvar attaining lowly comforts (such as svarga etc) which come in the middle (between samsāram and mŏksham); pudai ninṛa nīr ŏdham mĕni nedumālĕ ŏh lord of all, who has a divine form similar to the ocean which is surrounding (earth); nin adiyai your divine feet; ŏdha vallār avar yār is there anyone who will meditate? (there is none)