NMT 4

எல்லாப் பொருள்களுமானவன் நாரணன்

2385 ஆறுசடைக்கரந்தான் அண்டர்கோன்தன்னோடும் *
கூறுடையனென்பதுவும் கொள்கைத்தே * - வேறொருவ
ரில்லாமைநின்றானை எம்மானை * எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன்தொகுத்து.
2385 āṟu caṭaik karantāṉ * aṇṭarkoṉ taṉṉoṭum *
kūṟu uṭaiyaṉ ĕṉpatuvum kŏl̤kaitte ** - veṟu ŏruvar
illāmai * niṉṟāṉai ĕmmāṉai * ĕp pŏruṭkum
cŏllāṉaic cŏṉṉeṉ tŏkuttu (4)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2385. Every one knows the Ganges flows in Shivā’s matted hair, and that he shares half of his body with his wife Girija, but our dear lord, the real truth for the gods in the sky is alone in this world, without any one sharing him. I wish to praise him, the meaning of all words.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆறு சடை கங்கா நதியை ஜடையில்; கரந்தான் மறையச் செய்த ருத்ரன்; அண்டர் தேவர்களுக்கும்; கோன் தேவனான; தன்னோடும் எம்பெருமானோடு; கூறு உடையன் சமமுடையவன் என்று; என்பதுவும் பாமரர்கள் கூறுவது; கொள்கைத்தே ஏற்கத்தக்கது அன்று; ஒருவர் திருமாலுக்கு ஒப்பான தெய்வம்; வேறு இல்லாமை வேறு இல்லை என; நின்றானை அப்படி நின்றவனை; எப்பொருட்கும் அனைத்து பொருளைக் கூறும்; சொல்லானை சொல்லும் அவனே அப்படிப்பட்ட; எம்மானை நாராயணன் எல்லா தெய்வங்களையும்; தொகுத்து உள்ளடக்கியவன் என்பதை தொகுத்து; சொன்னேன் சொன்னேன்
āṛu the river gangā (ṅanges); sadai in his matted hair; karandhān rudhra is bearing it (gangā) in a hidden fashion; aṇdar kŏn thannŏdum with bhagavān who is the lord of all dhĕvas; kūṛu udaiyan enbadhuvum the words spoken (by ignorant people) that he is equal; kol̤gaiththĕ could it be approved? (ṇo); vĕṛu oruvar illāmai ninṛānai one who excels in not having anyone to compare with; epporutkum sollānai one who has every word used for referring to all the things as referring to himself (this is called as sarvaṣabdha vāchyan; emmānai emperumān; thoguththuch chonnĕn ī mentioned briefly