NMT 38

நீர்வண்ணனே நம்மை ஆட்டுவிப்பவன்

2419 அகைப்பில்மனிசரை ஆறுசமயம்
புகைத்தான் * பொருகடல்நீர்வண்ணன் * - உகைக்குமேல்
எத்தேவர்வாலாட்டும் எவ்வாறுசெய்கையும் *
அப்போதொழியுமழைப்பு.
2419 akaippu il maṉicarai * āṟu camayam
pukaittāṉ * pŏru kaṭal nīr vaṇṇaṉ ** - ukaikkumel
ĕt tevar vālāṭṭum * ĕvvāṟu cĕykaiyum *
appotu ŏzhiyum azhaippu -38

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2419. The ocean-colored lord created six religions for the people by his grace. If he becomes angry he will destroy at once any evil gods who create troubles or do bad deeds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அகைப்பு இல் மதிப்பில்லாத; மனிசரை மனிதர்களை; ஆறு சமயம் ஆறு மதங்களில்; புகைத்தான் புகும்படி செய்தவனும்; பொரு கடல் அலை வீசும் கடல்; நீர் நீர் போன்ற; வண்ணன் நிறமுடைய பெருமான்; உகைக்குமேல் புறக்கணித்துவிட்டால்; எத் தேவர் எந்தத் தேவதைகளுக்கும் தங்கள்; வாலாட்டும் அஹங்காரத்தால்; எவ்வாறு எந்தவிதமான யாக; செய்கையும் கிரியைகளும் யாகத்தால்; அழைப்பு கிடைக்கும் பயனும் ஹவிஸும்; அப்போது ஆகியவை அப்போது அவர்களுக்கு; ஒழியும் கிடைக்காமல் போகும்
porukadalneer vaṇṇan sarvĕṣvaran who has the complexion of ocean water with waves lapping; agaippu il manisarai people who do not have distinction of being knowledgeable; āṛu samayam in the (lowly) six philosophies; pugaiththān made them get caught; ugaikkum ĕl if he remains indifferent (towards them); appŏdhu at that time itself; eththĕvar vālāttum the ego of whichever deity; evvāṛu seygaiyum the various deeds carried out towards them as worship (such as rituals etc); azhaippu the invocations of these deities (in such rituals); ozhiyum will disappear