அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்- அல்லாதாருக்கும் ஒக்க விரோதியைப் போக்குமவன் என்கிறார் –
(அடைமினோ என்று சொல்லவே விரோதிகள் அடைய ஒட்டுமோ -என்ன நப்பின்னைப் பிராட்டிக்கும் மாற்று உள்ளவருக்கும் விரோதிகளை நிரசித்துத் தரும் தன்மையன் அன்றோ ஆகவே விரோதிகளுக்கு அஞ்ச வேண்டாம் என்கிறார் – திருவடி -திருக்கை –திருப்பவளம் -திருமேனி–நான்காலும் நான்கு ரக்ஷணம்- விரோதி நிரஸனம் – பண்ணி