NMT 27

திருமாலை நினைக: அதுவே பெரும்பேறு

2408 மால்தான்புகுந்த மட நெஞ்சம் * மற்றதுவும்
பேறாகக்கொள்வனோ? பேதைகாள்! * நீறாடி
தான்காணமாட்டாத தாரகலச்சேவடியை *
யான்காணவல்லேற்கிது.
2408 māl tāṉ pukunta * maṭa nĕñcam * maṟṟatuvum
peṟākak * kŏl̤vaṉo ? petaikāl̤! ** - nīṟāṭi
tāṉ kāṇa māṭṭāta * tār akalac cevaṭiyai *
yāṉ kāṇa valleṟku itu -27

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2408. O ignorant ones, our Thirumāl has entered my innocent heart— how can I worship any other god? I tell you that I am able to see the divine feet of him decorated with garlands that even Shivā with the Ganges in his matted hair could not to see.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேதைகாள்! மூடர்களே!; நீறாடி தான் நீறு பூசின ருத்திரனாலும்; காண மாட்டாத காண முடியாத; தார் மலர் மாலைகளால்; அகல அலங்கரிக்கப்பட்ட; சேவடியை சிவந்த திருவடிகளை; காண வணங்கத்தக்க; வல்லேற்கு பாக்யமுடைய எனக்கு; மால் தான் திருமால் தானே வந்து; புகுந்த மடம் புகுந்திருக்கும் இடமான; இது நெஞ்சம் என் மனதை விட; யான் மற்றதுவும் வேறொன்றை; பேறாகக் பாக்யமாக; கொள்வனோ கொள்ளமாட்டேன்
pĕdhaigāl̤ ŏh foolish people!; nīṛādi thān rudhra who has his body covered with ash; kāṇa māttādha not worshipped; thār donned with garland; agalam being expansive; sĕvadiyai the divine foot; kāṇa vallĕṛku for me who is fortunate to worship that; māl emperumān; thān pugundha that which he entered on his volition; mada nenjam idhu more than this obedient heart (of mine); maṝadhuvum anything else; pĕṛu āga as a benefit; yān kol̤vanŏ will ī accept? [ ṇo. ī will not]