NMT 19

வைகுந்தம் தருபவன் ஆழியான்

2400 தவஞ்செய்து நான்முகனால்பெற்றவரத்தை *
அவஞ்செய்த ஆழியாயன்றே * உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனையாவாய்நீ * வைகுந்தம்
ஈப்பாயுமெவ்வுயிர்க்கும்நீ.
2400 tavam cĕytu * nāṉmukaṉāl pĕṟṟa varattai *
avam cĕyta āzhiyāy aṉṟe ** - uvantu ĕmmaik
kāppāy nī * kāppataṉai āvāy nī * vaikuntam
īppāyum ĕv uyirkkum nī -19

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2400. You with a discus destroyed the boons that Hiranyan and other Asurans received doing tapas to Nanmuhan, and you are pleased to protect and save us. Since you are the protector of all creatures, even a fly that worships you will go to Vaikuntam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தவம் செய்து தவம் செய்து; நான்முகனால் பிரமனிடத்திலிருந்து; பெற்ற இரணியன் பெற்ற; வரத்தை வரத்தை; அவம் செய்த அழியச்செய்த; ஆழியாய் சக்கரத்தை உடையனவனாய்; உவந்து உள்ளம் உவந்து; எம்மை எங்களை; காப்பாய் நீ காப்பவனும் நீயே; காப்பதனை ரக்ஷிக்க வேண்டும் என்னும்; ஆவாய் நீ ஸங்கல்பமுடையவனும் நீயே; எவ் உயிர்க்கும் அனைவருக்கும்; வைகுந்தம் பரமபதம்; ஈப்பாயும் நீ அளிப்பவனும் நீயே
thavam seydhu carrying out penance; nānmuganāl from brahmā; peṝa (those entities such as hiraṇyakashyap who) obtained; varaththai boons; avam seydha one who ruined them; āzhiyān anṛĕ aren’t you the emperumān with divine disc in your divine hand!; emmai us; uvandhu with a happy divine mind; kāppāy nī you are the only one who protects; kāppadhanai āvāy nī the vow to protect is also yours only; evvuyirkkum for all chĕthanas (who attained you); vaikundham paramapadham (ṣrīvaikuṇtam); ippāyum one who grants; it is only you