NMT 17

ஆழியானையே வணங்குக

2398 ஆலநிழற்கீழ் அறநெறியை * நால்வர்க்கு
மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் * - ஞால
மளந்தானை ஆழிக்கிடந்தானை * ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்குமாறு.
2398 āla nizhaṟkīzh * aṟa nĕṟiyai * nālvarkku
melai yukattu uraittāṉ * mĕyt tavattoṉ ** - ñālam
al̤antāṉai * āzhik kiṭantāṉai * ālmel
val̤arntāṉait tāṉ vaṇaṅkumāṟu -17

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2398. Shivā the lord of true tapas taught the path of dharma under the shadow of banyan tree to the four Nāyanmārs in the last yuga. He truly worshiped Thirumāl who measured the world, rests on Adisesha on the ocean, and rested on a banyan leaf as a baby at end of the eon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெய் மெய்யான; தவத்தோன் தவநெறியை உடைய ருத்ரன்; ஞாலம் அளந்தானை பூமி அளந்தவனும்; ஆழி பாற்கடலில்; கிடந்தானை சயனித்தவனும்; ஆல்மேல் ஆலிலையில்; வளர்ந்தானை துயின்றவனுமானவனை; தான் தான் வழிபடும்; வணங்குமாறு மார்க்கமாகிய; அறநெறியை நல்வழியை; மேலை யுகத்து முன் யுகத்திலே; ஆல நிழற்கீழ் ஓர் ஆல மரத்தின் நிழலிலே; நால்வர்க்கு நால்வர்க்கு [நால்வர்: அகஸ்த்யர் புலஸ்த்யர் தக்ஷன் மார்க்கண்டேயர்]; உரைத்தான் உபதேசித்தான்
mey thavaththŏn rudhra, who has true knowledge about the methods of penance; gyālam al̤andhānai one who measured the worlds; āzhi kidandhānai one who reclined in the milky ocean (kshīrābdhi); āl mĕl val̤arndhānai emperumān who lay on the tender banyan leaf; thān vaṇangum āṛu the path by which he worships; aṛam neṛiyai the righteous path; mĕlai yugaththu in earlier yuga (period of time); āla nizhal kīzh in the shadow of a banyan tree; nālvarkku to four great sages; uraiththān discoursed (instructed)