NMT 15

தேவதேவனின் திருவடிகளையே வாழ்த்துக

2396 பலதேவரேத்தப் படிகடந்தான்பாதம் *
மலரேறவிட்டிறைஞ்சிவாழ்த்த - வலராகில் *
மார்க்கண்டன்கண்டவகையே வருங்கண்டீர் *
நீர்க்கண்டன்கண்டநிலை.
2396 pala tevar ettap * paṭi kaṭantāṉ pātam *
malar eṟa iṭṭu iṟaiñci vāzhtta valar ākil **
mārkkaṇṭaṉ kaṇṭa vakaiye * varum kaṇṭīr *
nīrkkaṇṭaṉ kaṇṭa nilai-15

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2396. If you place flowers on his feet, and praise and worship the highest lord of the world worshiped by many gods, you will find the way like Markandeyan to whom our god gave life when Shivā with the Ganges flowing in his hair went with the boy to see the lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பல தேவர் பல தேவர்கள்; ஏத்த துதிக்கும்படியாக; படி கடந்தான் பூமியை அளந்தவனான பெருமானின்; பாதம் திருவடிகளிலே; மலர் புஷ்பங்களை; ஏற இட்டு ஸமர்ப்பித்து; இறைஞ்சி வாழ்த்த வணங்கி வாழ்த்த; வலர் ஆகில் வல்லவர்களானால்; நீர்க்கண்டன் நீலகண்டனிடத்தில்; கண்ட நிலை காணத்தக்க நிலைமை; மார்க்கண்டன் மார்க்கண்டேயன் சிவன் மூலமாக; கண்ட அடைந்த ஆயுளையும் மோக்ஷமும்; வகையே பெற்றதை அறிவீர்; வரும் உங்களுக்கும்; கண்டீர் அவ்விதமே உய்வு கிட்டும்
pala dhĕvar many dhĕvathās (deities who are attained by samsāris); ĕththa to be praised; padi earth; kadandhān emperumān who measured, his; pādham divine feet; malar flowers; ĕra vittu offering; iṛainji worshipping; vāzhththa valar āgil if you are able to praise him; nīrkkaṇdan kaṇda nilai the position of rudhra who has poisoned neck; mārkkaṇdan kaṇda vagaiyĕ the way (sage) mārkkaṇdĕya saw directly; varum kaṇdīr you would see that this happens