NMT 14

நரகத்தைத் தவிர்ப்பவன் நாராயணனே

2395 நாராயணண் என்னையாளி * நரகத்துச்
சேராமல்காக்கும் திருமால்தன் * பேரான
பேசப்பெறாத பிணச்சமயர்பேசக்கேட்டு *
ஆசைப்பட்டாழ்வார்பலர்.
2395 nārāyaṇaṉ ĕṉṉai āl̤i * narakattuc
cerāmal * kākkum tirumāl ** taṉ - perāṉa
pecap pĕṟāta * piṇac camayar pecak keṭṭu *
ācaippaṭṭu āzhvār palar -14

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2395. Nārāyanan, my ruler, saves me from entering hell. If people listen to the teachings of other religions like Jainism they will fall into hell and the world will not praise them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாராயணன் ஸ்ரீமந்நாராயணனும்; என்னை ஆளி அடியேனை ஆட்கொள்பவனும்; நரகத்து சேராமல் நரகத்தில் சேராதபடி; காக்கும் காத்தருள்பவனுமான; திருமால் தன் திருமாலின்; பேரான பெயர்களை; பேச வாயார வாழ்த்த; பெறாத பெறாதவர்கள்; பிணச் சமயர் நடைப் பிணங்களே; பேச சிலரின் பிதற்றலை; கேட்டு கேட்டு; ஆசைப் பட்டு அதையே விரும்பி; ஆழ்வார் பலர் அநர்த்தப்படுவார்கள்
nārāyaṇan one who has the divine name of nārāyaṇa; ennai āl̤i one who has made me as his servitor; naragaththu sĕrāmal kāḵkum one who protects (his followers) from coming to samsāram (materialistic realm); thirumāl̤ than thirumāl’s; pĕr āna divine names; pĕsa peṛādha those who are unfortunate in not reciting (such divine names); piṇam walking like a corpse; samayar those who do not believe in vĕdhas or who misinterpret vĕdhas; pĕsa babbling; kĕttu hearing such words; palar many people; āsaippattu desiring to be such disbelievers or misinterpreters of vĕdhas; āzhwār they will also fall into that rut.