மூன்றாம் திருவந்தாதி தனியன்கள் / 3rd Thiruvandāthi taṉiyaṉkal̤

சீராரும் மாடத் திருக்கோவலூரதனுள் *
காரார் கருமுகிலைக் காணப்புக்கு * -
ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான் கழலே *
உரைக் கண்டாய் நெஞ்சே! உகந்து

cīrārum māṭat tirukkovalūrataṉul̤ *
kārār karumukilaik kāṇappukku *
orāt tirukkaṇṭeṉĕṉṟuraitta cīrāṉ kaḻale *
uraik kaṇṭāy nĕñce! ukantu
குருகை காவலப்பன் / kurukai kāvalappaṉ

Word by word meaning

நெஞ்சே! என் மனமே!; சீராரும் மாட அழகிய மாடங்களை உடைய; திருக்கோவலூர் திருக்கோவல் என்னும் ஊரில்; அதனுள் ஓர் இடைக்கழியில்; காரார் கார்காலத்து; கருமுகிலை கருத்த மேகம் போன்ற எம்பெர்மானை; காணப்புக்கு வணங்கப் புகுந்து; ஓரா மனத்தினுள்ளே அனுபவித்து; திருக் கண்டேன் திருக் கண்டேன்; என்று என்று நூறு பாசுரங்களை; உரைத்த அருளிச்செய்த பேயாழ்வாரின்; சீரான் கழலே சீர்மையுடைய திருவடிகளை; உரைக் கண்டாய் உகந்து மகிழ்ந்து வணங்குவாயாக