MUT 91

கண்ணன் கயிற்றால் கட்டுண்ட காட்சி என்னே!

2372 மண்ணுண்டும் பேய்ச்சிமுலையுண்டுமாற்றாதாய் *
வெண்ணெய்விழுங்கவெகுண்டு * ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால்கட்டத் தான்கட்டுண்டிருந்தான் *
வயிற்றினோடாற்றாமகன்.
2372 maṇ uṇṭum * peycci mulai uṇṭum āṟṟātāy *
vĕṇṇĕy vizhuṅka vĕkuṇṭu ** āycci - kaṇṇik
kayiṟṟiṉāl kaṭṭa * tāṉ kaṭṭuṇṭiruntāṉ *
vayiṟṟiṉoṭu āṟṟā makaṉ 91

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2372. The young lord swallowed the earth at the end of the eon, drank poisonous milk from the breasts of the devil Putanā, and when Yasodha the cowherdess tied him with a rope because he stole butter, even though it hurt him he did not get upset and kept quiet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வயிற்றினோடு வயிற்றை வைத்துக் கொண்டு; ஆற்றா சும்மா இருக்கமுடியாத; மகன் கண்ணன்; மண் உண்டும் உலகங்களை உண்டான்; பேய்ச்சி முலை பூதனையின்; உண்டும் விஷப்பாலைப் பருகி; ஆற்றாதாய் திருப்தி பெறாதவனாய்; வெண்ணெய் வெண்ணையை களவு செய்து; விழுங்க விழுங்க அதைக்கண்டு; வெகுண்டு கோபம் கொண்டு; ஆய்ச்சி யசோதை; கண்ணி பல முடிச்சுகளையுடைய; கயிற்றினால் கட்ட கயிற்றினால் கட்ட; தான் சர்வசக்திமானான அந்த பெருமான்; கட்டுண்டிருந்தான் கட்டுண்டிருந்தானே!
vayiṝinŏdāṝā magan the child (kaṇṇan; krishṇa) who cannot keep quiet with his stomach; maṇ uṇdu swallowing all the worlds; pĕychchi the demon pūthanā’s; mulai (poisoned) bosom; uṇdum drinking that; āṝādhāy not being satisfied; veṇṇey butter; vizhunga as he swallowed; āychchi yaṣŏdhāp pirātti; veguṇdu getting angry; kaṇṇi kayiṝināl with a rope having many knots; katta tying securely; thān he, the omnipotent supreme being; kattuṇdu irundhān remained tied (instead of trying a way to get out of it)