MUT 90

மண்ணளந்த மாலின் தோற்றம்

2371 சிலம்பும்செறிகழலும்சென்றிசைப்ப * விண்ணாறு
அலம்பியசேவடிபோய் * அண்டம் - புலம்பியதோள்
எண்திசையும்சூழ இடம்போதாதென்கொலோ? *
வண்துழாய்மாலளந்தமண்.
2371 cilampum cĕṟi kazhalum * cĕṉṟu icaippa * viṇ āṟu
alampiya cevaṭi poy ** aṇṭam - pulampiya tol̤
ĕṇ ticaiyum cūzha * iṭam potātu ĕṉ kŏlo? *
vaṇ tuzhāy māl al̤anta maṇ. 90

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2371. When Thirumāl, adorned with a beautiful thulasi garland, grew tall and touched the rivers in the sky with his divine foot at the sacrifice of Mahābali as his silambu and his anklets rattled, his eight arms hurt as they extended in eight directions because the space of the whole earth was not enough for them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிலம்பும் நூபுரங்களும்; செறி கழலும் வீரத்தண்டைகளும்; சென்று இசைப்ப எங்கும் ஒலிக்க; விண் ஆறு ஆகாச கங்கையில்; அலம்பிய அலம்பிய; சேவடி அவன் திருவடிகள்; அண்டம் போய் அண்டம் வரை போனபோது; புலம்பிய அனைவராலும் துதிக்கத்தக்க; தோள் தோள்கள்; எண் திசையும் எட்டு திசைகளிலும்; சூழ வியாபிக்க; இடம் எங்குமே இடம்; போதாது போதவில்லை; வண் அழகிய; துழாய் துளசி மாலை அணிந்துள்ள; மால் எம்பெருமான்; அளந்த அளந்த; மண்? பூமி என்ன பெரிதா? இல்லை; என்கொலோ மிகவும் சிறியதே அன்றோ!
silambum decorative anklets (which have been applied on the divine feet); seṛi kazhalum hollow anklets which have been applied closely; senṛu isaippa making noise everywhere; viṇ āṛu ākāṣa gangai (river gangā in the ethereal layer); alambiya cleaned; sĕ adi the divine feet; aṇdam pŏy when they extended until the walls of the universe; pulambiya fit to be worshipped (by everyone); thŏl̤ divine shoulders; eṇ dhisaiyum sūzh to permeate all eight directions; idam pŏdhādhu there was no place; vaṇ thuzhāy māl emperumān who is donning the beautiful thul̤asi garland; al̤andha the one that he measured; maṇ the earth; en kol how big is it! [it appears that it is only small]