MUT 9

மணிவண்ணன் உறுப்புகள் தாமரையே

2290 கண்ணும்கமலம் கமலமேகைத்தலமும் *
மண்ணளந்தபாதமும் மற்றவையே * எண்ணில்
கருமாமுகில்வண்ணன் கார்க்கடல்நீர்வண்ணன் *
திருமாமணிவண்ணன்தேசு.
2290 kaṇṇum kamalam * kamalame kaittalamum *
maṇ al̤anta pātamum maṟṟu avaiye ** - ĕṇṇil
karu mā mukil vaṇṇaṉ * kārk kaṭal nīr vaṇṇaṉ *
tiru mā maṇi vaṇṇaṉ tecu -9

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2290. His eyes and hands are like lovely lotuses and he has beautiful lotus feet that measured the world. The shining body of the lord has the color of a cloud, the ocean and a precious sapphire.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருமா முகில் கரிய பெரிய மேகம்; வண்ணன் போன்றவனும்; கார் கடல் கருத்த கடல்; நீர் வண்ணன் நீரின் நிறமுடையவனும்; திரு மா மணி அழகிய நீலமணி போன்ற; வண்ணன் தேசு பெருமானின் அழகை; எண்ணில் நினைத்தால்; கண்ணும் கண்களும்; கமலம் தாமரைப் பூ போன்றவை; கைத்தலமும் கைத்தலங்களும்; கமலமே தாமரைப் பூ போன்றவை; மற்று மேலும்; மண் அளந்த உலகளந்த; பாதமும் திருவடிகளும்; அவையே தாமரைப் பூ போன்றவையே
karumā mugil vaṇṇan one who has the form of an expansive, black cloud; kārkkadal nīr vaṇṇan with the complexion of black coloured water; thirumā maṇivaṇṇan emperumān with the colour of beautiful, expensive gemstone; thĕsu beauty; eṇṇil if one were to think of; kaṇṇum the divine eyes; kamalam are like lotus flower; kaiththalamum the divine hands; kamalamĕ are also like lotus flower; maṝu moreover; maṇ al̤andha pādhamum the divine feet which measured the world; avaiyĕ are also like that lotus flower