MUT 83

திருமால் என் உள்ளத்தில் உள்ளான்

2364 இனியவன்மாயன் எனவுரைப்பரேலும் *
இனியவன்காண்பரியனேலும் * - இனியவன்
கள்ளத்தால்மண்கொண்டு விண்கடந்தபைங்கழலான் *
உள்ளத்தினுள்ளேயுளன்.
2364 iṉi avaṉ māyaṉ * ĕṉa uraipparelum *
iṉi avaṉ kāṇpu ariyaṉelum ** - iṉiyavaṉ
kal̤l̤attāl maṇ kŏṇṭu * viṇ kaṭanta paiṅ kazhalāṉ *
ul̤l̤attiṉ ul̤l̤e ul̤aṉ 83

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2364. Even though people praise Māyan saying that he is sweet, no one can see him, yet the sweet ankleted lord, stays inside your heart who became a dwarf, went like a thief and measured the earth and the sky at Mahābali’s sacrifice.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இனி இப்போது; அவன் அந்தப் பெருமான்; மாயன் என மாயன் என்று; உரைப்பரேலும் சொல்லுவார்களாகிலும்; இனி அவன் இனி அவனை; காண்பு கண்டு அநுபவிக்க; அரியனேலும் முடியாதவனாகிலும்; இனியவன் இனியவான அந்தப் பெருமான்; கள்ளத்தால் வஞ்சனையாக மகாபலியிடம்; மண் கொண்டு பூமி தானம் வாங்கி; விண் கடந்த ஆகாசத்தளவும் அளந்த; பை பரந்த; கழலான் திருவடிகளையுடைய பெருமான்; உள்ளத்தின் என் உள்ளத்தில் நிலைத்து; உள்ளே உளன் நிற்கிறான்
ini now; avan that supreme being; māyan amaśing entity who is difficult to be known; ena like this; uraippar ĕlum even if they (people) say; ini now; avan that emperumān; kāṇbu ariyan ĕlum difficult to see and enjoy; kal̤l̤aththāl with deceit; maṇ koṇdu obtaining earth as a gift; viṇ kadandha pai kazhalān avan that emperumān who has expansive divine feet with which he occupied sky and all the outer worlds; ini now; ul̤l̤aththin ul̤l̤ĕ ul̤an is dwelling firmly inside my heart (not knowing other places) (this great benefit is enough for me)