MUT 74

யசோதைதான் கண்ணனுக்குப் பாலூட்டினாள்

2355 நலமேவலிதுகொல்? நஞ்சூட்டுவன்பேய் *
நிலமேபுரண்டுபோய்வீழ * - சலமேதான்
வெங்கொங்கையுண்டானை மீட்டாய்ச்சியூட்டுவான் *
தன்கொங்கைவாய்வைத்தாள்சார்ந்து.
2355 nalame valitu kŏl? * nañcu ūṭṭu vaṉ pey *
nilame puraṇṭu poy vīzha ** - calame tāṉ
vĕm kŏṅkai uṇṭāṉai * mīṭṭu āycci ūṭṭuvāṉ *
taṉ kŏṅkai vāy vaittāl̤ cārntu 74

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2355. He drank the milk of the breasts of cruel devil Putanā and made her fall to the ground, but the cowherdess Yasodha took him on her lap and fed him milk, keeping him at her breasts. Isn't her love beautiful?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சலமே வஞ்சனையாகவே; நஞ்சு ஊட்டு விஷத்தை ஊட்ட வந்த; வன் பேய் கொடிய பூதனையானவள்; நிலமே பூமியில்; புரண்டு போய் வீழ சரிந்து விழும்படி; தான் சலமே தானும் வஞ்சனையாகவே; வெம் கொங்கை விஷப் பாலை; உண்டானை பருகின கண்ணனை; ஆய்ச்சி யசோதையானவள்; மீட்டு அந்த பூதனையிடமிருந்து மீட்டு; ஊட்டுவான் தன் பாலை ஊட்டுவதற்காக; சார்ந்து அணுகிச் சென்று; தன் தன்னுடைய; கொங்கை ஸ்தனத்தை எடுத்து; வாய் அவனது வாயிலே; வைத்தாள் உண்ணக் கொடுத்தாள்; நலமே யசோதையின் அன்பு; வலிதுகொல் வலிமையானது
salamĕ with deceitfulness; nanju poison; ūttu having come to feed; van pĕy the cruel demon pūthanā; nilamĕ on earth; puraṇdu pŏy vīzha to fall down (as a corpse); thān salamĕ he [emperumān] also, with deceit; vem kongai the bosom which was cruel; uṇdānai kaṇṇan (krishṇa) who suckled it; mīttu drawing him away (from that pūthanā); ūttuvān in order to feed him (her milk); sārndhu approaching him; than kongai her bosom; vāy vaiththāl̤ kept it in his mouth for him to feed; nalamĕ validhu kol it appears that this affection is very strong