MUT 63

அரியும் அரனும் ஒருவரே

2344 தாழ்சடையும்நீள்முடியும் ஒள்மழுவும்சக்கரமும் *
சூழரவும்பொன்னாணும் தோன்றுமால் * சூழும்
திரண்டருவிபாயும் திருமலைமேலெந்தைக்கு *
இரண்டுருவுமொன்றாயிசைந்து.
2344 tāzh caṭaiyum nīl̤ muṭiyum * ŏṇ mazhuvum cakkaramum *
cūzh aravum pŏṉ nāṇum toṉṟumāl ** - cūzhum
tiraṇṭu aruvi pāyum * tirumalaimel ĕntaikku *
iraṇṭu uruvum ŏṉṟāy icaintu 63

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2344. My father, the god of Thirumālai where waterfalls flow with abundant water has only one form that combines Shivā with his long jata, shining golden mazu, and a snake around his neck and our Thirumāl with a tall crown, a discus, and golden thread.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாழ் சடையும் தாழ்ந்த ஜடையும்; நீள் முடியும் நீண்ட முடியும்; ஒண் மழுவும் ஒளியுள்ள மழுவும்; சக்கரமும் சக்கரமும்; சூழ் இடையில்; அரவும் சுற்றப்பட்ட ஸர்ப்பமும்; பொன் நாணும் பொன் அரைநாணும்; இரண்டு சங்கர நாராயணர்களின் இருவித; உருவும் வடிவும்; சூழும் திரண்டு நாற்புறமும் திரள் திரளாக; அருவி பாயும் அருவிகள் பாயும்; திரு மலை மேல் திருவேங்கட; எந்தைக்கு பெருமானுக்கு; ஒன்றாய் ஒரு வடிவமாக; இசைந்து பொருந்தி; தோன்றுமால் தோன்றுகிறது ஆச்சர்யம்!
thāzh sadaiyum matted locks tied in a lowly way; nīl̤ mudiyum long divine crown; oṇ mazhuvum the beautiful weapon mazhu (axe); chakkaramum divine disc; sūzh aravum snakes coiling around; pon nāṇum having golden waist cord; iraṇdu uruvum these two forms (of ṣankara and nārāyaṇa); sūzhum thiraṇdu aruvi pāyum thirumalai mĕl endhaikku for my father (emperumān) who is atop thirumalai hills which have streams on all sides; onṛu āy isaindhu thŏnṛum merge into one; āl how amaśing is this!