MUT 59

திருமாலின் அடிசேர்ந்து வாழும்வகை அறிந்தேன்

2340 வாழும்வகையறிந்தேன் மைபோல்நெடுவரைவாய் *
தாழுமருவிபோல்தார்கிடப்ப * - சூழும்
திருமாமணிவண்ணன் செங்கண்மால் * எங்கள்
பெருமானடிசேரப்பெற்று.
2340 vāzhum vakai aṟinteṉ * mai pol nĕṭu varaivāy *
tāzhum aruvi pol tār kiṭappa ** - cūzhum
tiru mā maṇi vaṇṇaṉ * cĕṅkaṇ māl * ĕṅkal̤
pĕrumāṉ aṭi cerap pĕṟṟu 59

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2340. I found the way to survive worshiping the feet of the dear lovely-eyed sapphire-colored lord adorned with long thulasi garlands that make him look like a dark mountain on which a waterfall flows.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மை போல் மை போல் இருண்ட; நெடு வரைவாய் மலையின் இருபுறமும்; தாழும் தாழப் பாய்கின்ற; அருவி போல் அருவி போல்; தார் சாத்தப்பட்ட மாலையில்; கிடப்ப ஈடுபட்டு ஒருகணமும்; சூழும் விட்டுப் பிரியாமல் இருக்கும்; திரு பிராட்டியையுடையவனும்; மா மணி நீலமணி போன்ற; வண்ணன் வடிவழகை உடையவனும்; செங் கண் சிவந்த கண்களை உடைய; எங்கள் பெருமான் எங்கள் பெருமானின்; அடி திருவடிகளை; சேரப் பெற்று அணுகப் பெற்றதால்; வாழும் வகை உய்யும் வகை; அறிந்தேன் அறிந்தவனானேன்
mai pŏl nedu varai vāy in the huge mountain which is very dark like a black pigment; thāzhum flowing down, on both sides; aruvi pŏl like stream; thār kidappa with the garland lying; sūzhum circling it without leaving it even for a moment; thiru one who has ṣrī mahālakshmi; mā maṇi vaṇṇan one who has the complexion of blue coloured gem; sengaṇ māl the great one with reddish eyes; engal̤ perumān emperumān’s; adi divine feet; sĕrappeṝu since (ī) approached; vāzhum vagai aṛindhĕn ī learnt the way to sustain myself