MUT 47

எங்கள் நரகத்தை ஒழித்தவன் திருமாலே

2328 நின்றபெருமானே! நீரேற்று * உலகெல்லாம்
சென்றபெருமானே? செங்கண்ணா! * - அன்று
துரகவாய்கீண்ட துழாய்முடியாய் * நாங்கள்
நரகவாய்கீண்டாயும் நீ.
2328 niṉṟa pĕrumāṉe! nīr eṟṟu * ulaku ĕllām
cĕṉṟa pĕrumāṉe! * cĕṅkaṇṇā! ** - aṉṟu
turaka vāy kīṇṭa * tuzhāy muṭiyāy! * naṅkal̤
naraka vāy kīṇṭāyum nī -47

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2328. O lord with beautiful eyes, when Mahābali promised to give you three feet of land you took it and grew tall and measured the whole earth and the sky. Adorned with a thulasi garland, you split open the mouth of Kesa when he came as a horse. You close the door of hell and save us so we do not enter it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர் ஏற்று மகாபலியிடம் தான நீர் ஏற்று; நின்ற பெருமானே! நின்ற பெருமானே!; உலகு எல்லாம் உலகங்களை எல்லாம்; சென்ற பெருமானே! அளந்த பெருமானே!; செம் சிவந்த; கண்ணா! கண்களையுடைய பெருமானே!; அன்று துரக அன்று கேசி என்னும் குதிரையின்; வாய் கீண்ட வாயை கிழித்தவனும்; துழாய் துளசிமாலை; முடியாய்! அணிந்தவனே!; நங்கள் ஸம்ஸாரம் என்னும்; நரக வாய் நரக வாய்; கீண்டாயும் நீ? அழித்தவனும் நீ அன்றோ?
nīr ĕṝu ninṛa perumānĕ ŏh emperumān, who stood near mahābali to take the water as symbolic of taking alms!; ulagu ellām senṛa perumānĕ ŏh emperumān who measured all the worlds!; sem kaṇṇā ŏh one who has lotus like eyes!; anṛu at an earlier point of time; thuragam the demon kĕsi who took the form of a horse; vāy his mouth; kīṇda one who tore it and killed the demon; thuzhāy mudiyāy ŏh one who wears the thul̤asi garland on top of your crown!; nangal̤ our; naragam vāy way to samsāram which is like hell for us; kīṇdāyum nī was it not you alone who destroyed this also!