MUT 44

மனமே! கண்ணன் அடியிணைகளை நண்ணு

2325 உலகமும் ஊழியுமாழியும் * ஒண்கேழ்
அலர்கதிருஞ்செந்தீயுமாவான் * பலகதிர்கள்
பாரித்த பைம்பொன்முடியானடியிணைக்கே *
பூரித்துஎன்நெஞ்சே! புரி.
2325 ulakamum * ūzhiyum āzhiyum * ŏṇ kezh
alar katirum * cĕntīyum āvāṉ ** - pala katirkal̤
pāritta * paim pŏṉ muṭiyāṉ aṭi iṇaikke *
pūrittu ĕṉ nĕñce! puri -44

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2325. He is the world, the eon, the ocean the shining sun and moon and red fire. O heart, worship the feet of the lord happily, whose pure golden crown shines with bright rays.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சே! என் மனமே!; உலகமும் உலகங்களும்; ஊழியும் பிரளயகாலமும்; ஆழியும் கடல்களும்; ஒண் கேழ் அழகிய நிறத்தையும்; அலர் மலரும்; கதிரும் கிரணங்களையுமுடைய; செந் தீயும் சிவந்த நிறமுடைய அக்னியும்; ஆவான் ஆவான் பெருமான்; பல கதிர்கள் பல கிரணங்களை; பாரித்த பைம் வெளியிடும் அழகிய; பொன் பொன்; முடியான் முடியுடைய பெருமானின்; அடி இணைக்கே திருவடிகளுக்கே; பூரித்து புரி முழுமையாக விருப்பம் கொள்
en nenjĕ ŏh my heart!; ulagamum the worlds; ūzhiyum deluge; āzhiyum the oceans; oṇ kĕzh alar kadhirum moon and sun who have beautiful colour and radiant rays; sem thīyum fire with reddish colour; āvān one who has all the above as his attributes; pala kadhirgal̤ pāriththa one who lets go of many rays; paimpon mudiyān emperumān who has golden hued locks; adi iṇaikkĕ for his divine feet; pūriththu puri desire wholeheartedly.