சர்வ ரக்ஷகனானவன் திருவடிகளே ப்ராப்ய ப்ராபகம் என்கிறார் –
மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும் நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி —4—
பதவுரை
திருந்திய–இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான செம் கண்–செந்தாமரை போன்ற திருக் கண்களையுடைய-திருந்திய செம் கண் மால்–ஸர்வேஸ்வரனாயும்-திருந்திய