MUT 37

திருமாலுக்கே நான் அடிமை

2318 அவற்கடிமைப்பட்டேன் அகத்தான்புறத்தான் *
உவக்கும்கருங்கடல்நீருள்ளான் * துவர்க்கும்
பவளவாய்ப்பூமகளும் பன்மணிப்பூணாரம் *
திகழுந்திருமார்பன்தான்.
2318 avaṟku aṭimaip paṭṭeṉ * akattāṉ puṟattāṉ *
uvarkkum karuṅ kaṭal nīr ul̤l̤āṉ ** - tuvarkkum
paval̤a vāyp pūmakal̤um * pal maṇip pūṇ āram *
tikazhum tirumārpaṉ tāṉ -37

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2318. I became the slave of the lord colored like the rolling ocean who is inside and outside of all, with shining jewels and coral-mouthed Lakshmi on his divine chest.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவற்கு அப்படிப்பட்ட பெருமானுக்கு; அடிமை அடிமை; பட்டேன் பட்டவனானேன்; உவர்க்கும் உப்புக்கரிக்கும்; கருங் கடல் நீர் கருங்கடல் நீரில்; உள்ளான் சயனித்திருப்பவனும்; துவர்க்கும் சிவந்த; பவள பவளம் போன்ற; வாய் அதரத்தை உடைய; பூ மகளும் திருமகளையும்; பல் மணி பல ரத்தினங்களால் ஆன; பூண் ஆபரணங்களையும்; ஆரம் ஹாரங்களையும்; திகழும் அணிந்திருக்கும்; திருமார்வன் தான் திருமார்பையுடைய பெருமான் தான்; அகத்தான் என் மனதிலும்; புறத்தான் வெளியிலும் முழுமையாகக் கலந்துள்ளான்
avarkku to that emperumān [as described in the previous pāsurams]; adimai pattĕn ī became a servitor; uvarkkum karungadal nīr ul̤l̤ān he reclines on the dark ocean with salty water.; thuvarkkum paval̤a vāy pū magal̤um pirātti (ṣrī mahālakshmi) who has reddish coral-like mouth; pal maṇi pūṇ many ornaments with different types of gemstones; āram necklaces; thigazhum being adorned with; thirumārvan thān emperumān with such divine chest; agaththān puṛaththān is present both within and outside (of me)