MUT 24

மனமே! ஆழியான் அடிகளையே சேர்

2305 வருங்காலிருநிலனும் மால்விசும்பும்காற்றும் *
நெருங்குதீநீருருவுமானான் * - பொருந்தும்
சுடராழி யொன்றுடையான்சூழ்கழலே * நாளும்
தொடராழிநெஞ்சே! தொழுது.
2305 varuṅkāl iru nilaṉum * māl vicumpum kāṟṟum *
nĕruṅku tī nīr uruvum āṉāṉ ** pŏruntum
cuṭar āzhi * ŏṉṟu uṭaiyāṉ cūzh kazhale * nāl̤um
tŏṭar āzhi nĕñce! tŏzhutu -24

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2305. O ocean like heart, worship in future every day the ankleted feet of the lord, who is with a beautiful shining discus in his hand and who is soul of the 5 great elements viz the blowing wind, the wide earth, the sky where clouds float, strong fire and the water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி நெஞ்சே! கடல் போன்ற மனமே!; இரு நிலனும் விசாலமான பூமியும்; மால் விசும்பும் பெரிய ஆகாசமும்; காற்றும் காற்றும்; நெருங்கு தீ நீர் அடர்ந்த தீயும் நீரும்; உருவும் ஆகிய பஞ்சபூதங்களுக்கும்; ஆனான் அந்தர்யாமியானவனும்; பொருந்தும் தனக்குப் பொருத்தமான; சுடர் ஆழி ஒன்று ஒளிமிக்க சக்கரத்தை; உடையான் உடையவனுமான பெருமானின்; சூழ் கழலே கவர்ந்திழுக்கும் திருவடிகளை; வருங்கால் வரும் காலங்களில்; நாளும் நாள் தோறும்; தொடர் தொடர்ந்து; தொழுது வணங்குவாயாக
āzhi nenjĕ ŏh my heart which is like the deep sea!; iru nilanum expansive earth; māl visumbum boundless sky; kāṝum wind; nerungu thī fire which cannot be split; nīr uruvum ānān the fifth element water. emperumān became the antharyāmi (in-dwelling soul) for the five elements.; porundhum sudar āzhi onṛu udaiyān emperumān who is holding the well suited (to him) radiant divine disc; sūzh kazhalĕ the divine feet which subordinate the followers; varungāl nāl̤um in the days to come; thozhudhu worshipping; thodar keep following