MUT 21

சக்கரத்தான் வடிவுபற்றி எவ்வளவோ பேசலாம்

2302 பேசுவார் எவ்வளவுபேசுவர் * அவ்வளவே
வாசமலர்த்துழாய்மாலையான் * - தேசுடைய
சக்கரத்தான் சங்கினான்சார்ங்கத்தான் * பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு.
2302 pecuvār * ĕvval̤avu pecuvar * avval̤ave
vāca malart tuzhāy mālaiyāṉ ** - tecu uṭaiya
cakkarattāṉ * caṅkiṉāṉ cārṅkattāṉ * pŏṅku arava
vakkaraṉaik kŏṉṟāṉ vaṭivu -21

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2302. Speaking of the fragrant Tulasi garland Lord, who wields the sharp discus, conch, Sarnga bow, and the mace that killed the nosy Dantavakra, Can anyone exhaust speaking his glories?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாச மணம்மிக்க; மலர் மலர்களுடன் கூடின; துழாய் துளசி; மாலையான் மாலை அணிந்தவனும்; தேசு உடைய ஒளியுடைய; சக்கரத்தான் சக்கரத்தை கையிலுடையவனும்; சங்கினான் சங்கை உடையவனும்; சார்ங்கத்தான் வில் தரித்தவனும்; பொங்கு அரவ ஆரவாரமுடன் வந்த; வக்கரனை தந்தவக்கரனை; கொன்றான் கொன்ற பெருமானின்; வடிவு தன்மைகளை; பேசுவார் பேசுபவர்கள்; எவ்வளவு தாங்கள் அறிந்தவற்றையே; பேசுவர் பேசுவார்கள் அவன்; அவ்வளவே? பெருமைகள் பேசி ஆகுமோ?
vāsam malar thuzhāy mālaiyān one who is adorning the thul̤asi garland which is with fragrant flowers; thĕsu udaiya chakkaraththān one who is having the radiant divine disc; sanginān one who is having ṣrī pānchajanniyam (divine conch); sārngaththān having the divine bow sārngam; pongu aravam vakkaranaik konṛān emperumān who killed dhanthavakkiran who came with lot of tumult; vadivu characteristics [of emperumān]; pĕsuvār evval̤avu pĕsuvar avval̤avĕ to the extent to which those who speak about them, speak.