MUT 20

திருமாலே! நினக்கு எதுவும் அரியதில்லை

2301 முன்னுலகம் உண்டுமிழ்ந்தாய்க்கு * அவ்வுலகமீரடியால்
பின்னளந்துகோடல்பெரிதொன்றே? - என்னே!
திருமாலே! செங்கணெடியானே! * எங்கள்
பெருமானே! நீயிதனைப்பேசு.
2301 muṉ ulakam * uṇṭu umizhtāykku * avvulakam īraṭiyāl *
piṉ al̤antu koṭal pĕritŏṉṟe ? ** - ĕṉṉe!
tirumāle ! * cĕṅkaṇ nĕṭiyāṉe ! * ĕṅkal̤
pĕrumāṉe ! nī yitaṉaip pecu. - 20

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2301. O Thirumāl, you, the tall god with beautiful eyes, swallowed all the worlds and spat them out in ancient times. How could it have been difficult for you to measure the earth and the sky with your two feet at Mahabali’s sacrifice? O divine lord? Tell us all about it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பொரு காலத்தில்; உலகம் உலகங்களை; உண்டு வயிற்றிலே வைத்து காத்து பிறகு; உமிழ்ந்தாய்க்கு வெளிப்படுத்தின உனக்கு; அவ் உலகம் அந்த உலகங்களை; ஈரடியால் இரண்டு அடிகளாலே; பின் அளந்து பின் ஒரு காலத்தில் அளந்து; கோடல் கொள்வதானது; பெரிது பெரியதொரு; ஒன்றே? வேலையாகுமோ?; திருமாலே! பெருமானே!; செங்கண் சிவந்த கண்களை உடைய; நெடியானே! பெரியவனே!; எங்கள் பெருமானே! எம் பெருமானே!; நீ நீ இது பற்றி; இதனை அடியேன் புரிந்துகொள்ளும்படி; பேசு! என்னே கூறவேண்டும்
mun at an earlier point of time; ulagam all the worlds; uṇdu swallowing them; umizhndhāykku later spitting them out; avvulagam those worlds; pin at a later point of time; īr adiyāl with two divine feet; al̤andhu kŏdal measuring [them]; peridhu onṛĕ is it a huge task? [ṇo]; thirumālĕ ŏh consort of mahālakshmi!; sem kaṇ nediyānĕ ŏh supreme being, having reddish divine eyes!; engal̤ perumānĕ our swāmy (lord); nī idhanai pĕsu you have to tell (for me to know); ennĕ how amaśing is this!