MUT 17

செங்கண்மாலையே என் வாய் வாழ்த்துக

2298 சென்றநாள்செல்லாத செங்கண்மாலெங்கள்மால் *
என்றநாளெந்நாளும்நாளாகும் * - என்றும்
இறவாதவெந்தை இணையடிக்கேயாளாய் *
மறவாதுவாழ்த்துகவென்வாய்.
2298 cĕṉṟa nāl̤ cĕllāta * cĕṅkaṇ māl ĕṅkal̤ māl *
ĕṉṟa nāl̤ ĕn nāl̤um nāl̤ ākum ** - ĕṉṟum
iṟavāta ĕntai * iṇai aṭikke āl̤āy *
maṟavātu vāzhttuka ĕṉ vāy -17

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2298. All the days I have lived in the past, and the days I live in the present and the future are good days if I constantly praise the lovely-eyed Thirumāl. May my mouth praise him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங் கண் சிவந்த கண்களையுடைய; மால் திருமால்; எங்கள் மால் எங்களிடத்தில் பேரன்புடையவன்; என்ற நாள் என்று சொல்லும் நாள் உண்டானால்; சென்ற நாள் கழிந்த காலமும்; செல்லாத இனி வரப்போகும் காலமும்; என் நாளும் எல்லா காலங்களும்; நாள் ஆகும் நல்ல காலமே ஆகும்; என்றும் ஒரு நாளும்; இறவாத அழிவில்லாத; எந்தை எம்பெருமானின்; இணை அடிக்கே இரு திருவடிகளுக்கே; ஆளாய் ஆட்பட்டு; மறவாது என் வாய் மறவாமல் என் வாய்; வாழ்த்துக அவனையே வாழ்த்த வேண்டும்
sengaṇmāl engal̤māl enṛa nāl̤ if there is a day when it is said “the lotus eyed kaṇṇan (krishṇa) is very affectionate towards us”; senṛa nāl̤ the days which have passed [before that day]; sellādha (nāl̤) days which will come hereafter; ennāl̤um at all times; nāl̤ āgum will be very good days only; enṛum iṛavādha endhai emperumān who does not have an end ever; iṇai adikkĕ to the two divine feet; āl̤ āy to be subservient; maṛavādhu without forgetting; en vāy vāzhththuga my mouth should praise