MUT 100

திருமகளைத் தழுவியவன் திருமால்

2381 சார்வுநமக்கென்றும் சக்கரத்தான் * தண்துழாய்த்
தார்வாழ்வரைமார்பன்தான்முயங்கும் * - காரார்ந்த
வானமருமின்னிமைக்கும் வண்தாமரைநெடுங்கண் *
தேனமரும்பூமேல்திரு. (2)
2381 ## cārvu namakku ĕṉṟum cakkarattāṉ * taṇ tuzhāyt
tār vāzh * varai mārpaṉ tāṉ muyaṅkum ** - kār ārnta
vāṉ amarum miṉ imaikkum * vaṇ tāmarai nĕṭuṅ kaṇ *
teṉ amarum pūmel tiru -100

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2381. The dark cloud-colored lord with a discus is always our refuge. Our lord with a tulasi garland on his mountain-like chest has lovely lotus eyes that shine like lightning in a dark cloud as he embraces Lakshmi who is on a flower dripping with honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சக்கரத்தான் சக்கரக்கையனும்; தண் துழாய் குளிர்ந்த துளசி; தார் வாழ் மாலை அணிந்தவனும்; வரை மலை போன்ற அகன்ற; மார்பன் மார்பையுடையவனால்; தான்முயங்கும் அணைக்கப்படுபவளாய்; கார் ஆர்ந்த மேகங்கள் நிறைந்த; வான் ஆகாசத்தில்; அமரும் நிலைத்து நிற்கும்; மின் இமைக்கும் மின்னல் போலிருக்கும்; வண் அழகிய; தாமரை தாமரைப் பூ போன்ற; நெடுங் கண் நீண்ட கண்களையுடைய; தேன் அமரும் தேன் நிறைந்த; பூமேல் தாமரைப்பூவின் மேல்; திரு இருப்பவளான திருமகள்; நமக்கு நமக்கு; என்றும் சார்வு எப்போதும் தஞ்சமாவாள்
thaṇ thuzhāy thār vāzh one who has the cool thul̤asi garland; varai mārvan thān by emperumān, who has mountain-like chest; muyangum one who is together with him; kār ārndha vān in the sky full of dark clouds; amarum one which is established well; min like lightning; imaikkum being resplendent; vaṇ thāmarai like a beautiful lotus; nedu wide; kaṇ having divine eyes; thĕn amarum pū mĕl one who lives atop a lotus which is full of honey; thiru periya pirāttiyār (ṣrī mahālakshmi); namakku enṛum sārvu is our refuge for all times