MUT 1

ஆழிவண்ணனை இன்று கண்ணாரக் கண்டேன்

2282 திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் * திகழும்
அருக்கனணிநிறமும் கண்டேன் * - செருக்கிளரும்
பொன்னாழிகண்டேன் புரிசங்கம்கைக்கண்டேன் *
என்னாழிவண்ணன்பாலின்று. (2)
2282 ## tirukkaṇṭeṉ * pŏṉ meṉi kaṇṭeṉ * tikazhum
arukkaṉ aṇi niṟamum kaṇṭeṉ ** cĕruk kil̤arum
pŏṉ āzhi kaṇṭeṉ * puri caṅkam kaik kaṇṭeṉ *
ĕṉ āzhi vaṇṇaṉ pāl iṉṟu -1

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2282. I saw and worshipped now the Mahalakshmi seated in the ocean-colored lords chest, his golden body adorned with jewels that shone with the color of the bright sun and the golden discus in his hands that fights in war and the sounding curving conch.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்று இப்பொது; என் ஆழி கடல் போன்ற; வண்ணன் நிறமுடைய; பால் எம்பெருமானிடத்தில்; திருக் திருமகளை; கண்டேன் கண்டு வணங்கினேன்; பொன்மேனி அழகிய திருமேனியையும்; கண்டேன் கண்டேன்; அருக்கன் ஸூர்யன்போன்று; திகழும் விளங்கும்; அணி நிறமும் அழகிய ஒளியையும்; கண்டேன் கண்டேன்; செருக் கிளரும் யுத்த பூமியில் சீறிஎழுகின்ற; பொன் ஆழி பொன் போன்ற சக்கரத்தையும்; புரி சங்கம் வலம்புரி சங்கையும்; கைக் கண்டேன் வலது இடது கைகளில்; கண்டேன் கண்டு வணங்கினேன்
inṛu now (on the day when the other two mudhal āzhvārs made him see); en āzhi vaṇṇan pāl in (the divine form of) emperumān who has the complexion of ocean; thiru periya pirāttiyār (ṣrī mahālakshmi); kaṇdĕn ī had the fortune to worship; pon mĕni the beautiful divine form; kaṇdĕn ī had the fortune to worship; thigazhum shining; arukkan like sun; aṇi beautiful; niṛamum resplendent radiance [of the divine form of emperumān]; kaṇdĕn ī had the fortune to worship; seru in the battlefield; kil̤arum bursting out; pon āzhi beautiful divine disc; kai in the (right) hand; kaṇdĕn ī had the fortune to worship; puri sangam (pānchajanyam) divine conch curling towards right (in the other divine hand); kaṇdĕn ī had the fortune to worship