3. அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த ஸ்ரீபாஷ்ய த்ரவிடாகமாத்யதசகத்வந்த்வ ஐககண்ட்யத்தின் அடிப்படையிலான விளக்கக்குறிப்புகள்:----
3.1. ப்ரஹ்மஸூத்ரங்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கம், சாரீரகமீமாம்ஸா பாஷ்யம் எனப்படுகிறது. இதில், நான்கு அத்யாயங்கள் உண்டு. ‘ஸமந்வயாத்யாயம்’ எனப்படும் முதல் அத்யாயத்தில், ‘ப்ரஹ்மம் ஒன்று மட்டுமே அண்டத் தின் காரணம்’ என்று காட்டித்தரப்படுகிறது. இரண்டாம் அத்யாயமான ‘அவிரோதாத்யாயம்’ என்பது, ‘ப்ரஹ்மமே அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணம் மற்றும் மூலப் பொருள்’ என்பதை விளக்குகிறது. ஸாதனையைக் கூறும் மூன்றாம் அத்யாயம் ‘ஸாதனாத்யாயம்’, ப்ரஹ்மத்தை அடையும் வழிமுறைகளைக் கூறுகிறது. பலத்தைக் கூறுவது நான்காம் அத்யாயமான ‘பலாத்யாயம்’, இது முக்திய டைந்தவன் அடையும் பேற்றை விவரிக்கிறது.
3.2. வேதாந்தத்தின் விழுப்பொருளைத் தமிழ்மொழி யில் விளக்குவது நம்மாழ்வார் அருளிச்செய்த ‘‘திருவாய் மொழி’’. சாரீரகமீமாம்ஸா பாஷ்யத்தின் நான்கு அத்யாயங் களுக்கு இணையான பொருள், திருவாய்மொழிப் பாசுரங்களில் அமைந்துள்ளது என்பது நம் பூர்வர்களின் அறுதியிட்ட முடிவாகும். இதனையே ‘ஐககண்ட்யம்’ என்று ஸம்ஸ்க்ரு தத்தில் குறிப்பிடுவர்.
3.3. நம்பிள்ளை தமது ‘ஈட்டுப் பேருரையில்’ பலவிடங்களில் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு இணை யான வேதச் சொற்றொடர்களையும்,ப்ரஹ்மஸூத்ரங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் தம்முடைய ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்யரத்னாவளி’ மற்றும் ‘அதிகரண ஸாராவளி’ போன்ற நூல்களில் திருவாய்மொழிக்கும் ஸ்ரீபாஷ்யத்திற்கும் இடையே அமைந்துள்ள கருத்தொற்றுமை யைப் பரக்கப் பேசியுள்ளார். அழகியமணவாளப் பெருமாள் நாயனார், ஸ்ரீபாஷ்யகாரர் ப்ரஹ்மஸூத்ரங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்திடும் போது திருவாய்மொழிப் பாசுரங்களை கைவிளக்காகக் கொண்டுதான் பொருள் அருளிச்செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ‘த்ராவிட ஆம்நாயம்’ (திராவிட வேதம்) என்ற உயர்வினைப் பெற்றது திருவாய்மொழி.
3.4. ‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ என்று ஸ்ரீமந்நாத முனிகள் நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறார். ‘‘வேதம் தமிழ் செய்த மாறன்’’ என்ற இந்த நூலில் நம்பிள்ளை ஈட்டுப் பேருரையின் உதவி கொண்டு எந்தெந்த இடத்தி லெல்லாம் ஆழ்வார் வேதாந்தத்தின் விழுமியபொருளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும், காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருந்த வாதூலகுலத்திலுதித்த ஸ்ரீவேங்கட தேசிகர் சிஷ்யரான அழகியமணவாளச்சீயர் அருளிச் செய்த ‘ஸ்ரீபாஷ்ய த்ரவிடாகமாத்யதசகத்வந்த்வ ஐககண்ட்யம்’ மற்றும் ஸ்ரீநிகமாந்த தேசிகனின் அதிகரண ஸாராவளி ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படவுள்ளது.
4. ஸ்ரீபாஷ்யமும் திருவாய்மொழியும்
4.1. முதல்திருவாய்மொழியும், இரண்டாம் திருவாய் மொழியும், சாரீரகமீமாம்ஸா சாஸ்த்ரத்தின் நான்கு அத்யாயங் களுக்குச் சமமானவை. சாரீரகார்த்தந்தான் ப்ரஹ்மகாரணத் வமும், ததபாத்யத்வமும், முமுக்ஷுபாஸ்யத்வமும் முக்த ப்ராப்யத்வமும் ஆக அமைந்திருக்கும். ‘‘காரணத்வம பா3த்4யத்வமுபாயத்வமுபேயதா:’’ - சாரீரக சாஸ்த்ரத்தில், எம்பெருமானது காரணத்வமும், அவனை எக்காரணத்தாலும் இல்லை செய்ய இயலாது என்பதும், அவனது உபாயத்வமும், உபேயத்வமும் நான்கு அத்4யாயங்கள் வாயிலாகச் சொல்லப்படுகிறது.
4.2. முதல் இரண்டு திருவாய்மொழியும், வேதாந்த சாஸ்திரத்திற்கு இணையாக இருப்பதை ‘வீடுமின் முற்றவும்’ ப்ரவேசத்திலே ‘‘மோக்ஷ சாஸ்த்ரமென்பது தத்வபரமாயும், உபாஸனபரமாயும் இருப்பது’’ என்று நம்பிள்ளை ஈட்டில் அருளிச்செய்துள்ளார். இதில், தத்வபரமாக ‘சொல்ல’ வேண்டியதெல்லாம் முதல் பத்து முதல் திருவாய்மொழியில் சொல்லியாகிவிட்டது. உபாஸன பரமாக இருப்பதெல்லாம், ‘‘வீடுமின் முற்றவும்’’ என்று தொடங்கும் முதல் பத்து இரண்டாம் திருவாய்மொழியில் சுருக்கமாக சொல்லப் பட்டுள்ளது என்கிறார்.
4.3. வேதாந்தாசார்யரும், தம்முடைய ‘த்ரமிடோப நிஷத் தாத்பர்ய ரத்நாவளி’யில் இவ்வாறு அருளிச் செய்கிறார்:-
‘‘ஆதெ3ள ஶாரீரகார்த்த2 க்ரமமிஹ விஶத3ம் விம்ஶதிர் வக்தி ஸாக்3ரா’’ (அவதாரிகை. 5) - திருவாய்மொழியில் முதல் இருபது பாட்டுக்கள் வேதா3ந்த ஶாஸ்த்ரார்த்த2 முறையைத் தெளிவாகச் சொல்லுகிறது.
4.4. மேலும் ஆச்சான் பிள்ளை இவ்வாறு அருளிச் செய்கிறார்:-
‘‘புரா ஸூத்ரைர் வ்யாஸஶ் ஶ்ருதிஶதஶிரோர்த்த2ம் க்3ரதி2தவாந், விவவ்ரே தம் ஶ்ராவ்யம் வகுளத4ரதா மேத்ய ஸ புந: I உபா4வேதௌ க்3ரந்தெ2ள க4டயிதுமலம் யுக்திபி4ரஸௌ, புநர்ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்3ரஹ்ம முகுர: II’’- ‘‘முன்பு வ்யாஸர், ப்ரஹ்ம ஸூத்ரங்களால் வேதாந்தத்தின் பொருளைக் கூறினார். அவரே பின்பு, மகிழ்மாலைமார்பினரான நம்மாழ்வாராகத் தோன்றி, செவிக்கினிய செஞ்சொற்களாலே அப்பொருளை விளக்கினார். ப்ரஹ்மஸூத்ரம், திருவாய்மொழி ஆகிய இரண்டு க்3ரந்தங் களையும் யுக்திகளால் சேர்ப்பிப்பதற்காக, ப்ரஹ்மத்தின் முகம் காட்டும் கண்ணாடி போன்றவரான ராமாநுஜமுநிவராக வ்யாஸர் மீண்டும் தோன்றினார்’’. இவ்வாறு தெளிவாக்கப் பட்டிருப்பதால், முதல் இரண்டு திருவாய்மொழிகளில், சாரீரக மீமாம்ஸையின் சாரம் தரப்பட்டுள்ளது என்பது உறுதி படுத்தப்படுகிறது.
4.5. இனி, முதல் திருவாய்மொழி, முதல் இரண்டு அத்யாயங் களோடு ஒத்திருப்பது காட்டப்படுகிறது.
முதல் பாசுரமான,
1. உயர்வற உயர்நலம் உடையவன்யவனவன்* மயர்வறமதிநலம் அருளினன் யவனவன்* அயர்வறுமமரர்கள் அதிபதி யவனவன்* துயரறுசுடரடி தொழுதெழுஎன்மனனே.
என்ற திருவாய்மொழி 1-1-1 பாசுரத்தின் நான்கு வரிகளும் சதுஸ்ஸூத்ரியின், முதல் நான்கு ஸூத்ரங்களின் ‘அதா2தோ ப்3ரஹ்மஜிஜ்ஞாஸா’ (1-1-1), ‘ஜந்மாத்3யஸ்ய யத:’ (1-1-2), ‘சாஸ்த்ரயோநித்வாத்’ (1-1-3), ‘தத்து ஸமந்வயாத்’ (1-1-4) பொருளாக அமைந்துள்ளது.
இரண்டாம் பாட்டான,
2. மனனகமலமற மலர்மிசையெழுதரும்* மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்* இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்* இனனிலனெனனுயிர் மிகுநரையிலனே.
(திருவாய்.1-1-2) என்பது, ஈக்ஷத்யதிகரணம் 1-1-5 (ஸூத்ரங்கள் 8) ஆநந்தமயாதிகரணம் 1-1-6 (ஸூத்ரங்கள் 8) மற்றும் அந்தரதி4கரணம் 1-1-7 (ஸூத்ரங்கள் 2) ஆகியவற்றின் பொருளை விளக்குவதாக உள்ளது.
3. இலனதுஉடையினது எனநினைவரியவன்* நிலனிடைவிசும்பிடை உருவினன்அருவினன்* புலனொடுபுலனலன் ஒழிவிலன்பரந்த*அந் நலனுடையொருவனை நணுகினம்நாமே. (திருவாய். 1-1-3)
என்னும் மூன்றாம் பாட்டு , ஆகாஶாதி4கரணம் 1-1-8 (ஸூத்ரம் 1), ப்ராணாதிகரணம் 1-1-9 (ஸூத்ரம் 1), ஜ்யோதிரதிகரணம் 1-1-10 (ஸூத்ரங்கள் 4), இந்த்3ர ப்ராணாதி4கரணம் 1-1-11 (ஸூத்ரங்கள் 4) ஆகியவற்றின் பொருளைத் தருகிறது.
4. நாமவனிவனுவன் அவளிவளுவளெவள்* தாமவரிவருவர் அதுவிதுவுதுவெது* வீமவையிவையுவை அவைநலம் தீங்கவை* ஆமவையாயவை ஆய்நின்றஅவரே. (திருவாய்.1-1-4) 5. அவரவர்தமதமது அறிவறிவகைவகை* அவரவர்இறையவர் எனவடியடைவர்கள்* அவரவர்இறையவர் குறைவிலர்இறையவர்* அவரவர்விதிவழி அடையநின்றனரே. (திருவாய். 1-1-5)
- நின்றனர்இருந்தனர் கிடந்தனர்திரிந்தனர்* நின்றிலர்இருந்திலர் கிடந்திலர்திரிந்திலர்* என்றுமொரியல்வினர் எனநினைவரியவர்* என்றுமொரியல்வொடு நின்றவெந்திடரே. (திருவாய்.1-1-6)
என்று தொடங்கும் பாசுரங்கள் மூன்றும், திரிபாத்யார்த்தமாக (முதல் அத்யாயத்தின் மற்ற/அடுத்த மூன்று பாதங்களின் அர்த்தமாக) உள்ளது.
12. ஸர்வத்ர ப்ரஸித்த்யதிகரணம் 1-2-1 (ஸூத்ரங்கள் 8), 13. அத்த்ரதிகரணம் 1-2-2 (ஸூத்ரங்கள் 4), 14. அந்தராதிகரணம் 1-2-3 (ஸூத்ரங்கள் 6), 15. அந்தர்யாம்யதிகரணம் 1-2-4 (ஸூத்ரங்கள் 3), 16. அத்2ருஶ்யத்வாதி3கு3ணகாதி4கரணம் 1-2-5(ஸூத்ரங்கள் 3), 17. வைஶ்வாநராதி4கரணம் 1-2-6 (ஸூத்ரங்கள் 9),
முதல் அத்யாயம் இரண்டாம் பாதம் முற்றிற்று.
18. த்3யுப்4வாத்3யதி4கரணம் 1-3-1(ஸூத்ரங்கள் 6), 19. பூமாதிகரணம் 1-3-2 (ஸூத்ரங்கள் 2), 20. அக்ஷராதி4கரணம் 1-3-3 (ஸூத்ரங்கள்3), 21. ஈக்ஷதிகர்மாதி4கரணம் 1-3-4 (ஸூத்ரம் 1), 22. த4ஹராதி4கரணம் 1-3-5 (ஸூத்ரங்கள் 10), 23. ப்ரமிதாதி4கரணம் 1-3-6 (ஸூத்ரங்கள் 2), 24. தே3வதாதி4கரணம் 1-3-7 (ஸூத்ரங்கள் 5), 25. மத்4வதி4கரணம் 1-3-8 (ஸூத்ரங்கள் 3), 26. அபஶூத்3ராதி4கரணம் 1-3-9 (ஸூத்ரங்கள் 7), (23) ப்ரமிதாதி4கரணஶேஷம் 1-3-6 (ஸூத்ரங்கள் 2), 27. அர்த்தா3ந்தரத்வாதி3 வ்யபதே3ஶாதி4கரணம்1-3-10 (ஸூத்ரங்கள்3),
முதல் அத்யாயம் மூன்றாம் பாதம் முடிவுற்றது.
28. ஆநுமாநிகாதி4கரணம் 1-4-1 (ஸூத்ரங்கள் 7), 29. சமஸாதி4கரணம் (1-4-2) (ஸூத்ரங்கள் 3), 30. ஸங்க்2யோபஸங்க்3ரஹாதி4கரணம் 1-4-3 (ஸூத்ரங்கள் 3), 31. காரணத்வாதி4கரணம் 1-4-4 (ஸூத்ரங்கள் 2), 32. ஜக3த்3வாசித்வாதி4கரணம் 1-4-5 (ஸூத்ரங்கள் 3), 33. வாக்யாந்வயாதி4கரணம் 1-4-6 (ஸூத்ரங்கள் 4), 34. ப்ரக்ருத்யதி4கரணம் 1-4-7 (ஸூத்ரங்கள் 6), 35. ஸர்வவ்யாக்2யநாதி4கரணம் 1-4-8 (ஸூத்ரம் 1), நான்காவது பாதமும், முதல் அத்யாயமும் முடிவுபெற்றன.
இவ்வாறாக இந்த முதல் ஆறு பாசுரங்கள், சாரீரகமீமாம்ஸையின் முதல் அத்யாயத்தின் பொருளை விளக்குவதாக உள்ளன.
7. திடவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை* படர்பொருள் முழுவதுமாய் அவையவைதொறும்* உடல்மிசைஉயிரெனக் கரந்துஎங்கும்பரந்துளன்* சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே. (திருவாய்.1-1-7) என்னும் ஏழாம்பாசுரம் இரண்டாம் அத்யாயம் முதல் பாதத்தின் பொருளாக உள்ளது.
36. ஸ்ம்ருத்யதிகரணம் 2-1-1 (ஸூத்ரங்கள் 2), 37. யோக3ப்ரத்யுக்த்யதி4கரணம் 2-1-2 (ஸூத்ரம் 1), 38. விலக்ஷணத்வாதி4கரணம் 2-1-3 (ஸூத்ரங்கள் 9), 39. சிஷ்டாபரிக்3ரஹாதி4கரணம் 2-1-4 (ஸூத்ரம்1), 40. போக்த்ராபத்த்யதிகரணம் 2-1-5 (ஸூத்ரம் 1), 41. ஆரம்ப4ணாதிகரணம் 2-1-6 (ஸூத்ரங்கள் 6), 42. இதரவ்யபதே3ஶாதி4கரணம் 2-1-7 (ஸூத்ரங்கள் 3), 43. உபஸம்ஹாரத3ர்ஶநாதி4கரணம் 2-1-8 (ஸூத்ரங்கள் 2), 44. க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4கரணம் 2-1-9 (ஸூத்ரங்கள் 6), 45. ப்ரயோஜநவத்த்வாதி4கரணம் 2-1-10 (ஸூத்ரங்கள் 5),
  இரண்டாவது அத்யாயம் முதல் பாதம் முடிவுற்றது.
8. சுரரறிவருநிலை விண்முதல்முழுவதும்* வரன்முதலாயவை முழுதுண்டபரபரன்* புரமொருமூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து * அரனயனென உலகழித்தமைத்துளனே. (திருவாய்.1-1-8) என்னும் எட்டாம் பாட்டும்,
9. உளனெனில்உளன் அவனுருவம்இவ்வுருவுகள்* உளனலனெனில் அவனருவம்இவ்வருவுகள்* உளனெனஇலனென இவைகுணமுடைமைடயில் * உளனிருதகமையொடு ஒழிவிலன்பரந்தே. (திருவாய்.1-1-9) என்னும் ஒன்பதாம் பாட்டும், தர்க்க பாதார்த்தமாகவும், (இரண்டாம் அத்யாயம் இரண்டாம் பாதம்)
46.ரசநாநுபபத்யதிகரணம் 2-2-1 (ஸூத்ரங்கள் 9), 47. மஹத்தீ4ர்க்காதி4கரணம் 2-2-2 (ஸூத்ரங்கள் 7), 48. ஸமுதா3யாதி4கரணம் 2-2-3 (ஸூத்ரங்கள் 10), 49. உபலப்3த்4யதி4கரணம் 2-2-4 (ஸூத்ரங்கள் 3), 50. ஸர்வதா2நுபபத்த்யதி4கரணம் 2-2-5 (ஸூத்ரம் 1), 51. ஏகஸ்மிந்நஸம்ப4வாதி4கரணம் 2-2-6 (ஸூத்ரங்கள் 4), 52. பஶுபத்யதி4கரணம் 2-2-7 (ஸூத்ரங்கள் 4), 53. உத்பத்த்யஸம்ப4வாதி4கரணம் 2-2-8 (ஸூத்ரங்கள்4),
இரண்டாம் அத்யாயம் இரண்டாம் பாதம் முடிவுற்றது.
10. பரந்ததண்பரவையுள் நீர்தொறும்பரந்துளன்* பரந்தஅண்டமிதென நிலவிசும்பொழிவற* கரந்திசிலிடந்தொறும் இடம்திகழ்பொருள்தொறும்* கரந்தெங்கும்பரந்துளன் இவையுண்டகரனே. (திருவாய்.1-1-10) மற்றும் பலனைக் கூறும் 11-ம் பாட்டும் 3-ஆம் பாதமாகிய வியத் பாதம் மற்றும் 4-ஆம் பாதமாகிய ப்ராணபாதம் ஆகியவற்றின் பொருளாகவும் உள்ளன.
54. வியத3தி4கரணம் 2-3-1 (ஸூத்ரங்கள் 9), 55. தேஜோதி4கரணம் 2-3-2 (ஸூத்ரங்கள் 8), 56. ஆத்மாதி4கரணம் 2-3-3 (ஸூத்ரம் 1), 57. ஜ்ஞாதிகரணம் 2-3-4 (ஸூத்ரங்கள் 14), 58. கர்த்ரதி4கரணம் 2-3-5 (ஸூத்ரங்கள் 7), 59. பராயத்தாதி4கரணம் 2-3-6 (ஸூத்ரங்கள் 2), 60. அம்ஶாதிகரணம் 2-3-7 (ஸூத்ரங்கள் 11),
இரண்டாவது அத்யாயம் மூன்றாவது பாதம் முடிவுற்றது.
61. ப்ராணோத்பத்த்யதி4கரணம் 2-4-1 (ஸூத்ரங்கள் 3), 62. ஸப்தக3த்யதி4கரணம் 2-4-2 (ஸூத்ரங்கள் 2), 63. ப்ராணாணுத்வாதி4கரணம் 2-4-3 (ஸூத்ரங்கள் 2), 64. வாயுக்ரியாதி4கரணம் 2-4-4 (ஸூத்ரங்கள் 4), 65. ஶ்ரேஷ்டா2ணுத்வாதி4கரணம் 2-4-5 (ஸூத்ரம்1), 66. ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2நாதி4கரணம்2-4-6 (ஸூத்ரங்கள்2),
- இந்த்3ரியாதி4கரணம் 2-4-7 (ஸூத்ரங்கள் 2), 68. ஸம்ஜ்ஞாமூர்த்திக்லுப்த்யதி4கரணம் 2-4-8 (ஸூத்ரங்கள் 3),
இரண்டாவது அத்யாயமும் நான்காம் பாதமும் நிறைவு பெற்றன.
4.6. ‘‘உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்’’ (திருவாய். 1-1-1) என்கிற முதல் வரி. ‘‘சாரீரக மீமாம்ஸை’’ முதல் அத்யாயத்தின் முதல் பாதமான ‘ஜிஜ்ஞாஸாதி கரண’த்தின் பொருளைத் தருகிறது. இது எவ்வாறெனில், பூர்வமீமாம்ஸை, கர்மங்கள் ஆற்றும் வகையைக் கற்பிக்கிறது. இந்த கர்மங்களின் பலன், நிரந்தரமானவை அல்ல.
‘‘அக்ஷய்யம் ஹ வை சாதுர்மாஸ்யயாஜந: ஸுக்ருதம் ப4வதி’’ (ஆபஸ்தம்ப ச்ரௌத ஸூத்ரம் 2-1-134) - சாதுர்மாஸ்ய யாகத்தைச் செய்பவர்களுக்கு அழிவில்லாத புண்யம் கிடைக்கிறது. ஆனால், இத்தகைய யாகங்களில் ஈடுபடுபவர்களுக்கு, பிறவி என்பது மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், இந்த யாகங்களால் அவன் அடைந்த அழியாத பலன்களும் கூட, உயர்ந்த இலக்கை அடைவிக் காது. இதற்கான விருப்பம் அநுமதிக்கத்தக்கதே என்பதை விளக்குவதே முதல் அதிகரணத்தில் அமைந்துள்ள முதல் ஸூத்ரத்தின்-அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா - 1-1-1, குறிக்கோள்.
‘‘உயர்வற உயர்நலம் உடையவன்’’ (1-1-1) என்பதால், எல்லையற்ற இன்பத்தைத் தரும், நிரந்தரமான பலனைத் தரும் குணத்தையும், செல்வத்தையும் உடைய ஒருவனைச் சொல்லி, ‘‘யவன்’’ என்பதால், ‘‘ஆநந்தோ3 ப்3ரஹ்ம’’ (தை.ப்ருகு. 6-1)- ஆனந்தம் ப்ரஹ்மம் என்ற ப்ரமாணங் களால் அவன் சிறப்பிக்கப்பட்டிருப்பது தெரிவிக்கப்படுகிறது. ஸித்த வஸ்துவான பரப்ரஹ்மம் வேதாந்தத்தால் மட்டுமே அறியப்படவேண்டும் என்பது தெளிவுபடுத்தப் படுகிறது.
‘‘உயர்வற’’ (1-1-1) என்பதால், ‘கர்மத்திற்கேற்ற பலனைத் தரும் ப்ரஹ்மா தொடக்கமான தேவர்களுடைய பரிவு மற்றும் அங்கீகாரம் ‘‘தேவையில்லை’’ என்பது தெரிவிக்கப் படுகிறது. கர்மங்களின் நிலையற்ற பலன் பல வேதச் சொற்றொடர்களால் தெரிவிக்கப்படுகிறது. எனவே ‘‘உயர்வற உயர் நலம் உடையவன் எவன்’’ (1-1-1) என்பதால், பலன் தரும் காரணத்தை தன்னிடமே கொண்டிருப்பது (விசிஷ்டஹேது) தெரிவிப்பதால், இது சாரீரக மீமாம்ஸை முதல் ஸூத்ரத்தின் (அதா2தோ ப்3ரஹ்ம ஜிஜ்ஞாஸா - 1-1-1) பொருளை உள்ளடக்கியது என்பது அறியப்படுகிறது.
மேலும், ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ (1-1-1) என்பதால் ப்ரஹ்மத்தின் வியக்கத்தக்க மிகப்பெரியதாக இருக்கும் தன்மையை விளக்குகிறது. பாசுரத்தின் நான்காவது அடி ‘அவன் துரயறு சுடரடி தொழுதெழு’ (1-1-1) அந்த ப்ரஹ்மத்தின் திருவடிகளை வணங்கி வாழ்ச்சி பெற வேண்டும் என்னும் ஞானத்தை வழங்குவதாலும், இந்த முதல் வரி, முதல் அதிகரணத்தின் (ஜிஜ்ஞாஸாதி4கரணம் 1-1-1) பொருளாக அமைந்துள்ளது.
முதல் திருவாய்மொழி பாசுரத்தின் இரண்டாம் அடி. ‘மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்’ (திருவாய். 1-1-1) என்பது. ஜந்மாத்யாதிகரணத்தால் (ப்ரஹ்மஸூத். 1-1-2) அறியப்படும் பொருளாக உள்ளது (ப்ரமேயமாக உள்ளது).
ப்ரஹ்மத்தைஅறிவதற்கு, வேதாந்தச்சொற்றொடர்கள் சான்றாதாரங்களாக அமைந்திருந்தபோதிலும், அவை, ப்ரஹ்மத்தின் குண நலன்களைக் காட்டித்தராது. உதாரணமாக ‘‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே’’, (தை. ப்ருகு. 1-2)-எதிலிருந்து இந்த பூதங்களெல்லாம் பிறக்கின்றனவோ, போன்ற சொற்றொடர்கள், ‘ப்ரஹ்மம் அண்டம் தோன்று வதற்குக் காரணமாக உள்ளது’ போன்ற பண்புகளை தெரிவிக்காது. எனவே, ‘ப்ரஹ்ம ப்ரதிபத்தி’ ஸித்திக்காது (ஜன்மகாரணத்வாதிகளை).
ப்ரஹ்மம், ஜகத் காரணமாக இருப்பது அதன் விசேஷணமா, உபலக்ஷணமா என்று ஆராய்ந்தால், இரண்டுமே அல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கருத்தாகும் (பூர்வபக்ஷி). இதற்கு உரிய பதில் அளிக்கப் பட்டு, இந்த இரண்டாலும் ப்ரஹ்மத்திற்கு ஜகத் காரணமாக இருக்கும் தன்மை ஸித்திக்கும் என்பது விளக்கப்படுகிறது. தேவதத்தன் கருமையாயும் இளைஞனாகவும், சிவந்த கண்களையுடையவனாயும், சீரான உருவத்தையுடைய வனாயும் இருப்பவன் (‘தே3வத3த்த: ஶ்யாமோ யுவா லோஹிதாக்ஷ:), என்பதில் பல பண்புகளால் தேவதத்தன் அடையாளம் காணப்படுவது போலவும் ‘‘குறைக்கொம் பானது, கொம்பில்லாதது, முழுக்கொம்பு டையது மாடு என்று சொன்ன பொழுது மாடு என்கிற சொல் ஒன்றேயிருந்தாலும் (க2ண்டோ3 முண்ட3: பூர்ணஶ்ருங்கோ3 கெ3ள:), பசு அடையாளம் காணப்படுவது போலவும், ஜகத்திற்குக் காரணமாக இருப்பது போன்றவை, ப்ரஹ்மத்தின் அடையாளங்களாக அறியப்படுகின்றன.
இந்த அடையாளங் களால், ப்ரஹ்மத்தை அறிந்து, ‘ப்ரஹ்மப்ரதிபத்தி’ செய்யக் கூடுமாகையாலே, ‘‘ப்ரஹ்மம் என்பது என்ன?’’ என்று ஆராயத்தகும் என்பதே, ‘ஜந்மாத்யாதிகரண’ (ப்ரஹ்மஸூத்ரம். 1-1-2)த்தால் அறியப்படும் பொருளாகும்.
‘மயர்வற மதிநலம் அருளினன் யவன்’ (திருவாய்.1-1-1) என்பதால், அஞ்ஞானம் (அறியாமை) அந்யதாஞானம் (ஒன்றை மற்றொன்றாக அறிவது) மற்றும் விபரீத ஞானம் (தவறான அறிவு) ஆகியவற்றால் ஏற்படும் ‘மயர்வை’ப் போக்கியபடியை தெரிவிக்கிறது. மேலும், பக்தி ரூபமான ஞானத்தை அவன் அருளியதும் தெரிவிக்கப் படுகிறது. இதனால் எம்பெருமானின் கருணை அறியப் படுகிறது.
‘‘காரணம் து த்4யேய: ஸர்வைஶ்வர்யஸம்பந்ந: ஶம்பு4ராகாஶமத்4யே த்4யேய:’’ (அதர்வஶிகை. 2) - (அந்த ஜகத்காரண) காரணனே தியானிக்கத்தக்கவன். ஸர்வைஶ்வர்யத்துடன் கூடியவனும் ஸர்வேஶ்வரனுமான ஶம்பு ஹ்ருதயாகாஶமத்தியில் தியானிக்கத்தக்கவன்.
என்கிறபடி, இவ்வாறு அருள் புரிவதற்கும், மயர்வற மதி நலம் அருள்வதற்கும், ஜகத் காரணனாய் இருக்க வேண்டும் என்பதனால், இது ப்ரஹ்மம் ஜகத்காரணமாக இருக்கும் லக்ஷணத்தைத் தெரிவிக்கிறது. எனவே, இந்த வரி ஜந்மாத்யாதிகரண (ப்ரஹ்மஸூத்.1-1-1)த்தின் பொருளைத் தன்னுள் அடக்கியதாகும்.
மேலும், ‘‘மயர்வற’’ என்பதால், அஜ்ஞானம் போக்கடிக்கப்பட்டது சொல்லப்படுவதால்,
‘‘அவித்யா நிவ்ருத்திரேவ ஹி மோக்ஷ:’’ - அஜ்ஞானம் கழிவதே மோக்ஷமாகும். என்கிறபடி, ஜ்ஞானம் முக்திக்குக் காரணமாக இருப்பது சொல்லப்படுகிறது. இந்த முக்தியானது, ‘‘ஜக3து3த்ப4வஸ்தி2தி ப்ரணாஶ ஸம்ஸார விமோசநாத3ய: ‘‘ - உலகத்தை உருவாக்குவது, காப்பது, அழிப்பது, ஸம்ஸாரத் தைத் தாண்டுவிப்பது’, என்கிறபடி, பிறப்பு, இறப்பை இயல்பாகக் கொண்ட ஸம்சாரத்திலிருந்து விடுதலையையும், ப்ரார்த்திப்பதால், இதைத்தருவது ப்ரஹ்மத்தின் செயலே என்று அறியப் படுகிறது. எனவே, அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணமாக இருப்பது போல, ஜீவனுக்கு முக்தியளிப்பதும் ப்ரஹ்மத்தின் ஒரு லக்ஷணமாக அமைந்துள்ளது. இதே பொருள், ச்ருதப்ரகாசிகையில் பட்டரால் அருளிச் செய்யப் பட்டுள்ளது.
‘‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே I யேந ஜாதாநி ஜீவந்திI யத் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தி I தத்3விஜிஜ்ஞாஸஸ்வ I தத்3ப்3ரஹ்ம’’ (தை-ப்ரு 1-2) - ‘எவனிட மிருந்து இவையெல்லாம் மீண்டும்’. இவற்றால் மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் லீலைகள் - ‘முடிவற்ற, அற்புதமான, அசையும் மற்றும் அசையாத பொருட்களால் அமைக்கப் பெற்று, அனுபவிப்பவன், அனுபவிக்கப்படும் பொருள், அனுபவிப்ப தற்கான கருவிகள், அனுபவிப்பதற்கான இடம் ஆகியவற்றை சிறப்பியல்புகளாகப் பெற்று, அண்டத்தின் தோற்றம், நிலைநிற்கும் செயல் மற்றும் லயம் (அழிவு) ஆகியவற்றை நிர்வகிப்பது ஆகியவை விளக்கப்பட்டன.
இப்படி, ப்ரஹ்மமானது அண்டத்தின் தோற்றம், நிலைப்பு மற்றும் அழிவிற்குக் காரணமாக இருப்பதாகிய பண்பை விட்டுவிட்டு ,மோக்ஷத்திற்கு காரணமாக இருப்பதை ஆழ்வார் ஏன் அருளிச் செய்கிறார்? என்னும் கேள்வி எழுகிறது. ஜகத் காரணமாக இருப்பது மட்டுமே ப்ரஹ்மத்தின் லக்ஷணமென்று கூறவேண்டிய கட்டாயம் இல்லை. எல்லாமே அதன் பண்புகள்தான் என்று விளக்குவதற்காக, மோக்ஷத்திற்குக் காரணமாக இருக்கும் இயல்பை மட்டும் அருளிச் செய்தார்.
மேலும், வேதாந்த சாஸ்திரத்திற்கு உபயோகம் எனப்படுவது, மோக்ஷத்தை அறிவிப்பதேயாகும். எம்பெருமான் தமக்கு மோக்ஷத்தை தந்தருளுகையால் அதையே ஆழ்வார் அருளிச் செய்தார் என்னலுமாம். ப்ரஹ்மம், ஜகத்காரணமாக இருப்பதைக் கூறுகையில், அது சித், அசித் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த அண்டத்தைப் படைத்த அதன் அதிசயிக்கத்தக்க அளப்பரியத் தன்மையை விவரிக்குமே தவிர, மோக்ஷஸாதனமாக இருப்பது அறியப் படாது என்பது ச்ருதப்ரகாசிகா பட்டரின் திருவுள்ளம்.
எனவே, இங்கே ஆழ்வார், ‘‘மயர்வற மதி நலம் அருளினன்’ (1-1-1) என்கையில்,, ‘‘ஸம்சார விமோசன காரணத்தை அறிவிப்பதால், இந்த பாசுரவரி, ‘ஜந்மாத்யாதி கரண’(ப்ரஹ்மஸூத். 1-1-2)த்தின் இணையான பொருளைக் கொண்டது.
இப்பாசுரத்தின் மூன்றாம் வரி, ‘‘அயர்வற அமரர்கள் அதிபதி எவனவன்’’ (1-1-1) என்பதாகும். இது ‘ஶாஸ்த்ரயோ நித்வாத்’(ப்ரஹ்மஸூத். 1-1-3) அதிகரணத்தின் பொருளைத் தெரிவிப்பதாகும்.
ஒரு பொருளை விளைவிப்பதற்கு கர்த்தாவாக அல்லது காரணமாக ஒன்றும், மூலப்பொருளாக ஒன்றும் இருத்தல் வேண்டும். இவற்றில் கர்த்தாவாக இருக்கும் தன்மை, நிமித்த காரணம் என்றும், மூலப்பொருளாக இருக்கும் தன்மை, உபாதான காரணம் என்றும் அறியப் படுகின்றன. ப்ரஹ்மம் அண்டத்தின் நிமித்த காரணமாக இருப்பது,
‘‘க்ஷித்யாதி3கம் ஸகர்த்ருகம்; கார்யத்வாத் க4டவத்’’ - ‘‘பூமி முதலியவை கர்த்தாவைக் கொண்டது, கார்யமாக இருப்பதினாலே, கடத்தைப்போலே’’, ஆகிய அநுமான வாக்கியங்களாலே ப்ரஹ்மத்தின் நிமித்த காரணத்வம் ஸித்திக்கும். அதாவது, ஓர் மண்குடத்தைக் காண்கையில், இதை உருவாக்கிய குயவன் ஒருவன் உள்ளான் என்பது அநுமானித்தால் அறியப்படுகிறது. அதே போல, இந்த அண்டத்தைக் காண்கையில், இதை உருவாக்கிய ஒருவன் இருக்கிறான் என்று அநுமானிக்கப்படுகிறது. இதனால், ப்ரஹ்மத்திற்கு நிமித்த காரணம் அநுமானிக்கப்படுகிறது.
உலகியலில் குடம் உருவாக்கத் தேவையான மண்ணும், உருவாக்கும் குயவனும் வேறு வேறாக இருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்த நியதியின்படி, ‘அண்டத்திற்கு உபாதான காரணம் எது’ என்னும் கேள்வி எழ, இதை வேதாந்தங்கள் காட்டித் தருவதில்லையாகையாலே, ப்ரஹ்மத்தைக் குறித்த விசாரம் ஆரம்பிக்கத் தக்கதல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
மேலும், குயவனும், குடமும் போல, ப்ரஹ்மமும், அண்டமும் என்று கொள்வோமாகில், ப்ரஹ்மம் ஓர் சாதாரண ஜீவாத்மாக இருப்பதாக அறிய வேண்டிவரும். ‘‘ஈஶ்வரன்’’ என்று அறிய இயலாது. எனவே, ப்ரஹ்மத்திற்கு நிமித்த காரணமாக இருக்கும் தன்மையை அநுமானத்தால் உறுதி செய்ய முடியாது.
‘‘குயவனும், குடமும்’’ என்பது போல, நேரில் காணும் ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தாலும் நிலை நிறுத்த இயலாது. வேதாந்தத்தால் மட்டுமே இயலும். எனவே, ப்ரஹ்மத்தைக் குறித்த விசாரம் ஆரம்பிக்கத்தக்கதே என்பதை காட்டித் தருவதே ‘‘சாஸ்த்ரயோநித்வாதிகரணம் (1-1-3)’’.
ஆழ்வார், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்’ (1-1-1) என்பதால், எம்பெருமான், நித்யஸூரிகளின் தலைவனாக இருப்பதை அருளிச் செய்கிறார். நித்ய ஸூரிகளால் வணங்கப்படுவது ப்ரமாணத்திற்கு ஏற்றதோ, எதிரானதோ அல்ல. இப்படி சாதகங்களும் பாதகங்களும் இல்லாத ப்ரமாணமாக, நித்யஸூரிகளின் சேஷியாக இருப்பதை அருளிச்செய்வதால்,
‘‘தத்ஸாமாந்யாதி3 தரேஷு ததா2த்வம்’’- ‘‘அது பொதுவாகையால், மற்றவைகளுக்கு அவ்வாறே’’, என்கிற நியாயத்தால், ஸர்வஜ்ஞன் (எல்லாம் அறிந்தவன்) போன்ற குணங்களுடன் கூடிய ப்ரஹ்மம், ஜகத் காரணமாக இருப்பதற்கு வேதாந்தம் மட்டுமே ப்ரமாணம் ஆகவேண்டும், என்று அருளிச்செய்கிறார். எனவே, வேண்டிய பொருளைத் தருவதும், எதிரான பொருளை தராததும் சாஸ்த்திரம், என்னும் அர்த்தத்தைக் காட்டும் ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்’ (1-1-1) என்ற வரி, ‘‘ஶாஸ்த்ரயோநித்வாதி’’ கரணத்தின் (ப்ரஹ்மஸூத். 1-1-3) பொருளைக் காட்டித் தருகிறது என்று கொள்வதில் தட்டில்லை. ‘‘அதி4கபதி: - அதி4பதி:’’ என்று அந்தப் ‘பதி’ என்ற சொல்லால் குறிப்பிடப்படும் நிமித்தகாரணமாயிருக்கும் தன்மையை அருளிச்செய்தார். இப்படி நிமித்த காரணமாயும் உபாதான காரணமாயிருக்கும் தன்மைகளை ‘அதிபதி’ என்று அருளிச்செய்கையாலே ப்ரமாணாந்தர அப்ராப்த ப்ரமாணாந்தர அவிருதார்த்தக (முரண்பாடற்ற) சாஸ்த்திர ப்ராமாண்யத்தை இச்சந்தை குறிப்பிடுகிறது. ஆக இவையெல்லாவற்றாலும் இது ஶாஸ்த்ரயோந்யதிகரண ப்ரமேயம்.
பாசுரத்தின் நான்காமடியான, ‘‘துயரறு சுடரடி தொழுதெழு’’ (1-1-1) என்பது ஸமந்வயாதிகரணத்திற்கு (ப்ரஹ்மஸூத்.1-1-4) இணையான பொருளைக் கொண்டது. ‘அர்த்தா2ர்த்தீ2 ராஜகுலம் க3ச்சே2த்’’, ‘‘மந்தா3க்3நிர்நாம்பு3 பிபே3த்’’, ‘‘ஸ்வர்க3காமோ யஜேத’’ (தை.ஸம்ஹி 2-5), ‘‘ந களஞ்ஜம் ப4க்ஷயேத்’’ - ‘‘பொருளை விரும்புமவன் ராஜ குலத்திற்குப் போகக்கடவன்’’ ‘‘அக்னி மந்தமா யிருப்பவன் ஜலத்தைக் குடிக்கக்கூடாது’’ ‘‘ஸ்வர்க்கத்தை விரும்புமவன் ஜ்யோதிஷ்டோம யாகம் செய்யக்கடவன்’,’ ‘‘களஞ்ஜத்தைச் சாப்பிடக்கூடாது’’(உள்ளிப்பூண்டைத் தின்னலாகாது), இது முதலிய வாக்யங்களில் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளால் (செய்கை, செய்யாதொழிகை, இவற்றால்) ஸாத்யமான இஷ்டப்ராப்தி, அநிஷ்ட நிவ்ருத்தி இவைகளின் வடிவாகக் காணப் பட்டுள்ளது. இது போன்ற வேத வாக்யங்கள், ‘‘இதைச் செய்யலாம்’’, ‘‘இதைச் செய்யக்கூடாது’’ என்பவற்றைக் கற்றுத்தருபவை. இவை, சில விஷயங்களைக் கற்றுத் தருவதான உபயோகத்தை உடையவை. ஆனால், ஸித்த வஸ்துவான ப்ரஹ்மத்தை அறிவிக்கும் சொற்றொடர்களுக்கு இது கிடையாது. எனவே, வேதாந்த சாஸ்திரம் ஆரம்பிக்கத் தக்கதல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் வாதமாகும்.
ப்ராப்தமாக, பயனாக, ஓர் நிதிபோல் இருக்கும் ப்ரஹ்மமே ஸ்வயம் ப்ரயோஜனமானது-அது தானே பலனாக அமையும் வடிவை உடையது-அதைக் காட்டித்தரும் வேதாந்த வாக்யங்களே, அந்த உபயோகத்தைக் கற்பிக்கும் சான்றாதாரங்களாகும்.
விரும்பப்படுபவை, வெறுக்கப்படுபவை ஆகிய வற்றை, பெறவோ நீக்கவோ வழிமுறைகளைக் கற்பிக்கும் வாக்யங்கள், இவற்றை நடைமுறைப்படுத்த உதவுபவையே தவிர, நேராக தாமே ஓர் பயனைத் தருபவை அல்ல.
ஆகையால், அனைத்து கல்யாண குணங்களும் குறைவின்றி பரிபூர்ணமாக நிறைந்திருக்கும் ப்ரஹ்மமே பயனாக இருக்கையில், அதைக் காட்டித்தரும் சாஸ்திரம் ப்ரமாணமாக ஸித்திக்கையாலே, இந்த சாஸ்திரம் ஆரம்பிக் கத்ததே என்று காட்டித்தருவதே, ஸமந்வயாதிகரணத்தின் (ப்ரஹ்மஸூத்ரம்.1-1-4) பொருள்.
  ஆழ்வார், ‘துயரறு சுடரடி தொழுதெழு’ (1-1-1) என்பதால் ‘துன்பங்களையெல்லாம் போக்கும் ஒளிமயமான திருவடிகளில் கைங்கர்யம் செய்து வாழ்ச்சி பெறுங்கள்’ என்று உபதேசிக்கிறார். எனவே, ‘‘உலகளந்தபொன்னடியே அடைந்துய்ந்தேன்’’ (பெரியதிருமொழி 5-8-9) என்று கொண்டாடப்படும் திருவடிகளே பயனாய், அவற்றை வணங்கி வழிபடுவதே புருஷார்த்தமாய் ப்ரார்த்தித்து, ஒப்பற்றவனான எம்பெருமானே மிக உயர்ந்த பயன் என்று அறிவிப்பதால், இந்த பாசுர அடி, சாஸ்த்ரம் ஆரம்பிக்கத் தக்கது என்று கூறும் ஸமன்வயாதிகரணத்திற்கு (ப்ர.ஸூத்.1-1-4) இணையானது.
  எனவே, திருவாய்மொழியின் முதல் பாட்டு, ‘‘சாஸ்த்ர விசாரத்தை ஆரம்பிக்கலாம்’’ என்று அறிவிக்கும் ‘‘சதுஸ்ஸூத்ரி’’யின் பொருளை அறிவிப்பதாக அமைந்துள்ளது.
ப4க்தாம்ருதாத்3யகா3தா2யாஸ் சதுஸ்ஸூத்ர்யேககண்ட2தா I நிரூபிதா வேத3மௌளி த்3வயநிஷ்ட2ஸதாம் முதே3 II .
பக்தர்களுக்கு அம்ருதம் போன்றதான திருவாய் மொழியின் முதற்பாட்டானது, ஸாரீரகஸாஸ்த்ரத்தின் முதல் நான்கு ஸூத்ரங்களின் பொருளாயிருப்பது, ஸம்ஸ்க்ருத, த்ராவிட வேதாந்தங்களில் ஊன்றிய நல்லோர்களின் உகப்பிற்காக நிரூபிக்கப்பட்டது.
  4.7. இதற்கு மேல், அடுத்த இரண்டு பாசுரங்கள் (1-1-2, 1-1-3), ‘‘ஈக்ஷதேர் நாஶப்3த3ம்’’ (ப்ர.ஸூத் 1-1-5) என்பதிலிருந்து தொடங்கி, அதிகரணங்கள், பாதங்கள் தரும் விளக்கத்திற்கு இணையானதாகயிருக்கும் என்பது விளக்கப் படுகிறது.
‘‘மனனகமலமற’’ (திருவாய் 1-1-2) என்று தொடங்கும் பாசுரம், ஸாமான்ய சொற்கள் பரமாத்மாவின் சிறப்புடைய வடிவைக் காட்டித்தருகின்றன என்பதை விளக்கும் ஈக்ஷத்யதிகரணம் 1-1-5 , ஆநந்தமயாதிகரணம் 1-1-6, அந்தரதி4கரணம் 1-1-7, ஆகியவற்றால் விளக்கப்படும் பொருள்களுக்கு இணையாக கொள்ளப் படுகிறது.
‘இலனதுயுடையனது’ (திருவாய் 1-1-3) என்று தொடங்கும் மூன்றாம் பாசுரம் ஆகாஶாதி4கரணம் 1-1-8, ப்ராணாதிகரணம் 1-1-9, ஜ்யோதிரதிகரணம் 1-1-10 மற்றும் இந்த்3ரப்ராணாதி4கரணம்(1-1-11) ஆகியவற்றிர்க்கு இணையான பொருளைத் தருவதாக உள்ளது.
‘மனனகமலமற’ (திருவாய்.1-1-2) என்னும் பாட்டு ஈக்ஷத்யதிகரணம் 1-1-5 , ஆநந்தமயாதிகரணம் 1-1-6, ஆகியவற்றின் பொருளைத் தருவதாக அமைந்துள்ளது. ஈக்ஷத்யதிகரணத்தில், ‘‘ஸதே3வ ஸோம்யேதமக்3ர ஆஸீத் ஏகமேவாத்3 விதீயம்’’ (சாந்.உப. 6-2-1) (’ஸத்’ என்பது மட்டிலுமே முதலில் இங்கு இருந்தது; அது தனியாக இருந்தது; இரண்டாவதாக ஏதும் இருக்கவில்லை) என்பது போன்ற சொற்றொடர்கள் அண்டத்தின் காரணம், முக்குணங்கள் கலந்த, அநுமானத்தால் அறியப்படும் ப்ரதானமே ஒழிய, இந்த குணங்கள் இல்லாத ப்ரஹ்மம் அல்ல என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று.
ஜகத்தை உருவாக்குவதற்குக் காரணமாக இருக்கும் ‘‘ஸங்கல்பம்’’ என்பது ப்ரதானத்திற்கு இல்லையாதலாலும், ப்ரஹ்மத்திற்கு அது உள்ளதாலும், சித், அசித்துடன் கூடிய ப்ரஹ்மம்; ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய குணங்களை உடைய அசித்தை தன் உடலாக அது கொண்டிருப்பதாலும், அது ஜகத்காரணமாகக் கூடும். எனவே, ‘‘ஸத்’’ என்பதற்குப் பொருள், அநுமானத்தால் அறியப்படும் ப்ரதானமன்று, பரமாத்மா தான் என்பது ஸித்தாந்தமாக அமைகிறது.
ஆநந்தமயாதிகரணத்தில், ஜகத்திற்குக் காரணமான ‘ஆனந்தமயன்’ ‘ஜீவனே’ என்பது என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று. இதற்காகக் கூறப்படும் காரணங்கள்:-
‘‘தஸ்மாத்3வா ஏதஸ்மாத் விஜ்ஞாநமயாத்I அந்யோ(அ)ந்தர ஆத்மா(ஆ)நந்த3மய:’’ (தை.ஆந. 5-2). ‘அதிலிருந்து, உண்மையில் விஜ்ஞானத்தால் அமைக்கப்பெற்ற இதனுள், உள்ளுக்குள் உறையும் ஆநந்தத் தால் அமைக்கப்பெற்ற ஆத்மாவிலிருந்து’ (’மநோமயனுக்கு மேற்பட்டவனாய் ஓர் அவயவியாக வர்ணிக்கப்பட்ட விஜ்ஞானமயனைக் (அறிவே வடிவானவனைக்) காட்டிலும் வேறாய் ஸூக்ஷ்மமாயுள்ள (நுண்ணியதான) ஆத்மா ஆநந்தமயன்’) ஆகையால், ஜீவனுடனான வேறுபாடு குறிப்பிடப்படுவதால், மந்திரத்தில் விவரிக்கப்பட்ட ஆநந்தமயன் எனப்படுபவன் ஜீவனே.
‘‘தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா’’ (தை.ஆந. 5-1) - ‘உண்மையில் இவன் உடலுக்கு உள்ளடங்கிய ஆத்மா’’ என்பதில் உடலின் தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
‘‘அநேந ஜீவேநா(ஆ)த்மநா(அ)நுப்ரவிஶ்ய’’ (சா2.உப. 6-3-2) - (நானேயாக இருக்கும் இந்த ஜீவனால் வ்யாபித்து, உள்நுழையப்பெற்று) என்பதால், ஜீவ பரமாத்மாக்களின் ஐக்யமும் கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலாக கர்ம வசப்பட்ட ஜீவாத்மாவிற்கு, மித மிஞ்சிய ஆநந்தம் ஏற்படாது என்பதாலும், ‘‘சாரீரன்’’ என்பது, ‘கர்மத்தால் ஏற்பட்ட உடலைக் குறிப்பிடாது, இந்த அண்டமே உடலாக இருப்பதைக் குறிப்பிடும்’ என்பதாலும், சரீர ஆத்ம ஸம்பந்தம் அந்த ஒருநிலைபட்டபடியைச் சொல்லுகிறதே தவிர, ஸ்வரூப ஐக்யத்தைச் சொல்ல வில்லை என்பதாலும், ‘ஆநந்தமயன்’’ என்னும் சொல் ஜீவனைக் குறிக்காது. முற்றிலும் வேறுபட்டவனான பரமாத்மாவையே குறிக்கும் என்பது ஸித்தாந்தமாக கொள்ளப்படுகிறது.
அந்தரதி4கரணத்தில் (1-1-7) பொதுவாக, ஜீவாத்மா ஜகத்திற்கு ‘காரணன் ஆகமாட்டான்’ என்றாலும், அதிக அளவில் புண்யத்தை சேமித்து வைத்திருக்கும் ஆதித்யன் போல்வார் அண்டத்தின் காரணமாகக் கூடுமே என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்றாகும். இதற்குக் காரணமாகக் கூறப்படுவதாவது:-
‘ய ஏஷோ (அ)ந்தராதி3த்யே ஹிரண்மய: புருஷோ த்3ருஶ்யதே ஹிரண்யஶ்மஶ்ரு: ஹிரண்யகேஶ ஆப்ரணகா2த் ஸர்வ ஏவ ஸுவர்ண: I (சாந். 1-6-5) தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீகமேவமக்ஷிணீ தஸ்யோதி3தி நாம ஸ ஏஷ ஸர்வேப்4ய: பாப்மப்4ய உதி3த: உதே3தி ஹ வை ஸர்வேப்4ய: பாப்மப்4யோ ய ஏவம் வேத3I (சாந்.1-6-8) தஸ்ய ருக் ச ஸாம ச கே3ஷ்ணௌ ..... இத்யதி4தை3வதம்’’ (சா2.உப. 1-6-7) - (இங்கு காணப்படும் ஒருவன் சூரியனுக்கு உள்ளே இருப்பவன், பொன்னால் ஆக்கப்பெற்று, பொன்போன்ற மீசையுடன், பொன்னிற முடியுடன், விரல் நகங்களின் நுனிவரை பொன்னால் ஆக்கப்பெற்றவனும், ஆவான். அவன் இரண்டு கண்கள், சூரிய கிரணங்களால் அலர்த்தப்பட்ட தாமரை மலர்கள் போல் உள்ளன. அவன் பெயர், ‘உத்’ (உயர்ந்தது).
இந்த ஒருவன், எல்லா பாவங்களிலிருந்தும் (விடுபட்டவன்) உயர்ந்தவன். எல்லா பாவங்களிலிருந்தும் (விடுபட்டு) உயர்ந்தவனாக அறியப்படுபவன். ரிக் மற்றும் சாமம் இரண்டும் அவனைத் துதிக்கும் பாடகர்கள். இது அவன் இறைவனாக இருப்பதுடன் தொடர்புடையது) போன்ற சாந்தோக்ய உபநிஷத் சொற்றொடர்களால் காரணமாக இருக்கக்கூடிய ஒன்றிற்கு, உடல் உறுப்புகள் இருப்பது அறிவிக்கப்படுகிறது. இது கர்ம வசப்பட்ட ஜீவனுக்கே இருக்கக்கூடியது. எனவே, அவனே ஜகத் காரணன் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
‘‘ஸ ஏஷ ஸர்வேப்4ய: பாப்மப்4ய உதி4த:’’ (சா2.உப. 1-6-7) - ‘இவன், இந்த ஒருவன், எல்லா பாவங்களிலிருந்தும் மேல் எழுந்தவன்!’ பாவங்கள் அழிக்கப் பெற்றிருப்பது என்பது, கர்மங்கள் அழிக்கப்பெற்றிருப்பது. அதாவது, கர்ம வயப்பட்டிருப்பதின் சாயல் கூட (பயனற்று) இல்லாமல் இருப்பது. ஜீவர்கள் மகிழ்ச்சியையும் துயரத்தையும் தம் கர்மத்திற்கு ஏற்ப பகிர்ந்து கொள்வதால் கர்மவயப் பட்டவர்கள் என்பதால், அபஹதபாப்மத்வம்-எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டிருத்தல்-போன்ற குணங்கள், பரமாத்மாவிற்கே உரியவை. அவனுக்குக் கர்மவசத்தால் ஏற்படும் உடல் இல்லாத போதிலும், அப்ராக்ருதமான திவ்யமங்கள விக்ரஹம் உண்டென்பது ச்ருதி வாக்யத்தால் அறியப்படுகிறது. எனவே, ஜகத்காரணமாக இருப்பது, அளவிற்குட்பட்ட புண்யத்தை உடைய ஜீவாத்மாவல்ல. இவனை விட வேறுபட்டு மிக உயர்ந்தவனான பரமாத்மாவே என்பது ஸித்தாந்தமாகக் கொள்ளப்படுகிறது.
ஆழ்வார், இரண்டாம் பாசுரத்தில், ‘‘பொறியுணர் வவையிலன்’’ (1-1-2) என்பதால், பரமாத்மா, ‘அசித்தாலான இந்திரியங்களின் தொடர்பு அற்றவன்’ என்பதைத் தெரிவிக்கிறார். இது, அசித் சம்பந்தமற்ற ஈச்வரனின் இயல்பைத் தெரிவிக்கும் ஈக்ஷத்யதிகரணத்தின் ( 1-1-5) பொருள் என்று அறியலாம்.
‘‘மனனகமலமற மலர்மிசையெழுதரும் மனனுணர் வளவிலன்’’ (1-1-2) என்பதால், ‘ஜீவர்கள் தமக்கிருக்கும் அவித்யையை, யோகாப்யாசங்களால் கழித்து, மேல் நோக்கி எழும் மானஸ ஞானத்தை அடைகிறார்கள். இதனால் இந்த ஞானத்திற்கு விஷயமாக இருப்பவன், ஆத்மா அல்லன் அவனைக் காட்டிலும் வேறுபட்ட ப்ரஹ்மம் என்பதை அறிகிறார்கள், என்பதைக் காட்டித்தரும் இந்தச்சொற்றொடர் ஆநந்தமயாதிகரணத்தின் (1-1-6) பொருளை அறிவிப்பதாக உள்ளது.
‘‘உணர்முழுநலம்’ (1-1-2) என்பதால், பரமாத்மா, ஞானம் மற்றும் ஆநந்தம் ஆகிய கணக்கற்ற குணங்களைப் பெற்றிருப்பதை அருளிச்செய்கிறார். இதனால், அசேதன மான ப்ரதானத்திற்கு இல்லாத ஸங்கல்பமும், சேதனனான ஜீவாத்மாவிற்கில்லாத அளவிட இயலாத ஆநந்தமும் அறிவிக்கப்படுகிறது. எனவே, ஈக்ஷதேர் நாஶப்3த3ம் - 1-1-5 ,(ஸத்வித்யையிலே சொல்லப்படும் Ôஸத்Õ என்னும் ஜகத்காரணப்பொருள்), ஶப்தத்தால் (சொல்லால்) மாத்திரம் அறியப்படாததான மூலப்ரக்ருதி ஆகாது; (அதற்கு) ஸங்கல்பம் சொல்லப்படுவதால் (உறுதியான நினைவு சொல்லப்படுவதால்).
மற்றும், ஆநந்த3மயோ(அ)ப்4யாஸாத் - 1-1-13 ,(தைத்திரீயாநந்த3வல்லியில்) ஆநந்த மயனாக குறிப்பிடப்படுமவன் (பரமபுருஷனே); Òதேயே ஶதம்Ó என்று அவனுடைய ஆனந்தத்தை மேன்மேலே பெருக்கிப் படிக்கையால், என்பவற்றின் பொருள் இந்தப் பாசுரச் சொற்றொடரால் புரிந்து கொள்ளப்படுகிறது.
‘‘எதிர்நிகழ்கழிவினும் இனனிலனெனனுயிர் மிகுநரை யிலனே’’ (திருவாய்.1-1-2) என்னும் பாசுரச் சொற் றொடரால், இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றிலும் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பரமாத்மா குறிப்பிடப்படுகிறான். ‘தாமரை மலர்’ போன்ற திருக் கண்களை படைத்திருக்கை, எல்லா பாவங்களும் அழிக்கப் பெற்றிருக்கை, போன்றவற்றால் சுட்டிக்காட்டப்பட்டு, ஆதித்ய மண்டலத்தின் நடுவில் எழுந்தருளியிருப்பவன், உயிர்களைப் படைக்கும் ஆற்றல் பெற்ற ஓர் ஜீவனல்லன். அவன் பரமாத்மாவே என்று உறுதிப்படுத்தும் அந்தரதி கரணத்தின் (1-1-7) பொருள் இந்த வரிகளில் காணப்படுகிறது.
ஈக்ஷத்யதிகரணத்தில், (1-1-5) ‘அசித்தான ப்ரதானம் ஜகத் காரணமல்ல’ என்பது நிலை நிறுத்தப்பட்டது. ஆநந்தமயாதி கரணத்தில் ‘ஆநந்தமயன் என்பவன் ஜீவாத்மாவல்ல’ என்பது நிலை நிறுத்தப்பட்டது. இந்த பாசுர வரியில், ஆநந்தமயாதி கரணத்தின் பொருள் முதலில் எடுத்துரைக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று ஆராய்கையில், புத்தி கூர்மை படைத்தவர்களுக்கு, ஸித்த வஸ்துவான ஜீவாத்மா ஜகத் காரணமல்ல என்பதை முதலில் கூறினால் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதாலாகும்.
ஆனால் ஸூத்ரகாரர், அசித்தான ப்ரதானம் ஜகத் காரணமல்ல என்று முதலில் அருளிச் செய்கைக்குக் காரணம் இந்த உண்மையைக் கூட அறிய இயலாத எளியவர்கள் ஜகத் காரணத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்காகவாகும். முதலில் அசித்தைக் காட்டி பின்பு, அதைவிட நுண்ணிய தான ஜீவனைக் காட்டி, இவ்விரண்டுமே ஜகத்காரணமல்ல என்று தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு ஆழ்வார் ஒரு முறையாலும், ஸூத்ரகாரர் இன்னொரு முறையாலும் கூறியிருப்பது ஒரே விஷயத்தைப் பற்றியதே. இவ்விரண்டிற்குமிடையே விரோதமில்லை. எனவே, ‘மனனகமலமற’ (1-1-2) என்று தொடங்கும் இந்தப் பாசுரம் ஈக்ஷத் அதிகரணம் (1-1-5), ஆநந்தமயாதிகரணம் (1-1-6) மற்றும் அந்தரதிகரணம் (1-1-7) ஆகிய மூன்று அதிகரணங்களுக்கும் இணையானது என்பது காட்டித் தரப்பட்டது.
இனி, ‘‘இலனது உடையனிது’’ (திருவாய். 1-1-3) என்கிற மூன்றாம் பாட்டு, ஆகாஶாதிகரணம் (1-1-8) தொடங்கி நான்கு அதிகரணங்களுக்கு இணையான பொருளைத் தருவது என்பது தெளிவாக்கப்படுகிறது.
ஆகாஶாதிகரணத்தில்(1-1-8), ஆகாஶஸ்தல்லிங்கா3த் - 1-1-23 ஸூத்ரத்தில், ‘‘அஸ்ய லோகஸ்ய கா க3திரிதி ஆகாஶ இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ஆகாஶாதே3வ ஸமுத்பத்3யந்தே ஆகாஶம் ப்ரத்யஸ்தம் யந்தி ஆகாஶோ ஹ்யே வைப்4யோ ஜ்யாயாநாகாஶ: பராயணம்’’ (சா2.உப. 1-9-1) - ‘இந்த மனிதர்களுக்கு இலக்கு (சேருமிடம்) எது? அவர் சொன்னார் ‘உண்மையில் ஆகாசம்’. இந்த இருப்பினங்கள் எல்லாமே உறுதியாக ஆகாசத்திலிருந்தே புறப்பட்டு வந்தன. அங்கேயே நிலைபெற செல்கின்றன. ஆகாஶம் மட்டுமே உறுதியாக இவற்றைக் காட்டிலும் மேம்பட்டது. ஆகாசம் மிக உயர்ந்த இலக்கு (சேருமிடம்). என்கிற சாந்தோக்ய உபநிஷத் வாக்யத்தில், ‘ஆகாஶம்’ என்னும் சொல்லால் அறியப்படுவது, எல்லோரும் நன்கறிந்த ஆகாசமே. ஏனெனில், ‘ஆகாஶம்’ என்பதால் இந்த வானமே அதிகமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது பரமாத்மாவல்ல என்பது என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
எல்லா சொற்களாலும் புரிந்து கொள்ளப்பட்டு ப்ரபஞ்சத்திற்குக் காரணமாக இருக்கை. ‘‘பராயணம்’’ எனப்படுகிற ப்ராப்ய ப்ராபகங்களாக இருக்கை. (நெறியாக வும், குறியாகவும் இருக்கை) போன்ற பண்புகள், நன்றாக அறியப்பட்ட ஆகாஶத்திற்கு பொருந்தாதாகையால், இந்த பெயர் பரமாத்மாவிற்கே பொருந்தும்.
‘‘ஆகாஶதே ஆகாஶயதி’’ (ஒளிரும் தன்மையுடைய ப்ரஹ்மம், ‘ஆகாசம்’ என்னும் சொல்லால் குறிப்பிடப்படுவது பொருத்தமானதே. (வடமொழியில் ‘ஆகாசம்’ என்னும் சொல் ‘காஸ்’ என்னும் வேரிலிருந்து தோன்றுகிறது. இதன் பொருள் ‘ஒளிர்வது’, ‘ஒளிர்விக்கச் செய்வது’ என்பவை)-('The word Akasa is derived from the root 'kas', to shine, and is interpreted to mean that which is Iuminous to itself and also that which causes other things to shine.). அது தானும் ஒளிர்விட்டுக்கொண்டு, மற்ற பொருள்களையும் ஒளிரச் செய்கின்றது). என்கிற வ்யுத்பத்தியாலே (சொற்பிறப்பியல்), ஆகாஶம் என்பது சாதாரணமான வானமல்ல. பரமாத்மாவே என்பது ஸித்தாந்தமாயிற்று.
ப்ராணாதிகரணத்தில் (1-1-9), அத ஏவ ப்ராண: - (1-1-24) என்ற ஸஜத்ரத்தில் Òஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ப்ராணமேவாபி4ஸம்விஶந்தி, ப்ராணமப்4 யுஜ்ஜிஹதேÓ (சாந்தோக்யம் 1\&11\&4) இந்த எல்லா பூதங்களும் ப்ராணனிலேயே லயிக்கின்றன; ப்ராண னிலிருந்து வெளிக் கிளம்புகின்றன.) என்னும் சொற்றொடர் காணப்படுகிறது.
இ¢ங்கு ப்ராணன் எனப்படுவது எல்லா ஜீவராசிகளும் வாழக் காரணமான பிராண வாயுவே என்று பூர்வபக்ஷிகள் (எதிர்வாதிகள்) கருதினார்கள். எல்லா பூதங்களும் பிராணவாயுவாலேயே உயிர்வாழ்வதாலும், செயல்படுவ தாலும் அதற்கு ஆகாசத்தைக் காட்டிலும் ஜகத்காரணமா யிருக்கத் தகுதியுண்டு என்று அவர்கள் கருத்து) கல், கட்டை போன்றவற்றிலும், ஜீவாத்மாவின் இயல்பிலும் நன்றாக அறியப்பட்ட ப்ராணனின் இயக்கம் (சுவாசித்தல்) காணப்படாமையால், ‘ப்ராணன்’ என்னும் சொல்லால் அறியப்படுவது, நன்கு அறியப்பட்ட ப்ராணன் (மூச்சுக் காற்று) அல்ல; பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
ஜ்யோதிரதிகரணத்தில் (1-1-10), ஜ்யோதிஶ் ஶரணாபி4 தா4நாத் (1-1-25) ஸூத்ரத்தில், ‘‘அத2 யத3த: பரோ தி3வோ ஜ்யோதி: தீ3ப்யதே விஶ்வத: ப்ருஷ்டே2ஷு ஸர்வத: ப்ருஷ்டே2ஷு அநுத்தமேஷு உத்தமேஷு லோகேஷு இத3ம் வாவ தத்3யதி3த3மஸ்மிந்நந்த: புருஷே ஜ்யோதி:’’ (சா2.உப. 3-13-7) - (சாந்தோக்யம் 3-13-7) (வ்யஷ்டி பதார்த்தங் களுக்கும் (பஞ்ச பூதங்களால் ஆன), ஸமஷ்டி (பஞ்ச பூதங்களின் கலப்பற்ற) பதார்த்தங்களுக்கும் அப்பால், பரமபதத்தின் மேலே, தமக்கு மேலில்லாத மிகச் சிறந்த லோகங்களிலே யாதொரு சோதியானது ஒளிவிடுகின்றதோ, அதுவே இம்மனிதனுக்குள் விளங்கும் ஜாடராக்நி என்னும் சோதியாகும் - (Jadaragni - This is an epithet of Agni or Fire. Here, this word denotes the digestive heat of the stomach in accordance with the scriptural passage - ''This Fire which is within man and by which food is digested - that is the Vaisvanara.") என்று சாந்தோக்யத்தில் ஓர் சொற்றொடர் காணப்படுகிறது. இதில் ஒப்பற்ற ஒளியுடையதாக ஓதப்படும் சோதியானது, மனிதனுடைய வயிற்றிலுள்ள ஜாடராக்னியோடு ஒன்றென ஓதப்படுவதால் உலகில் பிரஸித்தமான அக்னி ஸூர்யன் முதலான அசேதநமான சோதிகளிலொன்றே ஆக வேண்டும்.)
என்கிற சாந்தோக்ய உபநிஷத் சொற்றொடரில், ‘‘ஜ்யோதி’’ என்னும் சொல்லால் காட்டித்தரப்படுவது, நடைமுறையில் நன்றாக அறியப்பட்ட ‘‘ஒளியே’’ என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். பரமாத்மாவைக் குறிக்கும் அடையாளக் குறியீடுகள், இதில் இல்லை என்பது காரணமாக கூறப்படுகிறது. இது பொதுவாக அறியப்படும் ஒளியைக் குறிப்பதல்ல, ஒளிக்கெல்லாம் ஒளியூட்டும் ஒப்புயர்வற்ற பரமாத்மாவையே குறிப்பிடுகிறது என்பது ஸித்தாந்தம்.
இந்த்ரப்ராணாதிகரணத்தில் (ப்ரஹ்மஸூத்ரம் 1-1-11), ப்ராணஸ்ததா2 (அ)நுக3மாத் - 1--1-29 ஸூத்ரத்தில், ப்ரதர்தனனுக்கு இந்திரன் வரமாகக் கூறிய வார்த்தை: ‘‘ஸ ஹோவாச ப்ராணோ(அ)ஸ்மி ப்ரஜ்ஞாத்மா தம் மாமாயுரம்ருதமித் யுபாஸ்வ’’ (கௌ. 3-14) - ‘அவன் (இந்திரன்) கூறியதாவது; ‘‘நானே ப்ராணன், ப்ரஜ்ஞாத்மா; என்னை வாழ்வாகவும் அழிவற்றதாகவும் வணங்குவாயாக’’
போன்ற சொற்றொடர்களில் அறிவிக்கப்படும் இந்திரன், ஜீவாத்மாவே. ஏனெனில் ‘இந்திரன்’ என்பது, ஜீவனாகிய இந்திரனைக் குறிப்பது பழக்கத்தில் உள்ளது. மேலும், ‘‘மாமுபாஸ்வ’’ (கௌ. 3-14) - ‘என்னை வழிபடுவாயாக’. மிகச் சிறந்த நன்மையாவது, உண்மையில் அழிவற்ற தன்மையைப் பெறுவது. அண்டத்திற்கே காரணமான பொருளை வணங்குவதே, அழியாத தன்மை யைப் பெற்றுத்தரும் என்பது இவ்வாறு அறியப்படுகிறது. என்று அவன் தன்னை வணங்கச் சொல்கிறான் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். ‘‘ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்தோ3 (அ)ஜரோ(அ)ம்ருத:’’ (கௌ. 3-62) - ‘இந்த ப்ராணனே, ப்ரஜ்ஞாத்மா, ஆநந்தம், சிதையாதது, அழியாதது’. இந்தச் சொற்றொடர், ஆநந்தம் (பேராநந்தம்), அஜரா (மூப்பற்ற) மற்றும் அம்ருதா (அழிவற்ற) ஆகியவற்றுடன் ஸாமாநாதிகரண்யத்தில் பேசப்படுகிறது.
ப்ரஜ்ஞாத்மாவாக இருத்தல், ஆநந்தமயனாக இருத்தல், மூப்பற்று இருத்தல், அழிவற்று இருத்தல் போன்றவன், தேவனான இந்திரனிடம் பொருந்தாது. மேலும், ‘‘மாமுபாஸ்வ’’ என்பது, பரமாத்மாவின் சரீரமாக இருக்கும் இந்திரனாகக் குறிப்பிடுமே தவிர ஜீவனான இந்திரனை அல்ல, எனவே, இந்தச் சொற்றொடர்களால் அறியப் படுபவன் சேதனான இந்திரனல்ல, ஜகத் காரணனான பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
ஆழ்வார், ‘‘இலனதுஉடையனிதுஎனநினைவரியவன்’’ (திருவாய்.1-1-4) என்பதால், தொலைவிலுள்ள ஒன்றைக் காட்டி, ‘‘அதை உடையவன் அல்லன்’’ என்று கூறி, அருகில் உள்ள ஒன்றைக் காட்டி, ‘‘இதை உடையவன்’’ என்று நினைக்கவும் கூட அரியவன் என்று சொல்லிவிட்டு, ‘‘நிலனிடை விசும்பிடை உருவினன்’’ (1-1-3) என்பதால், இந்த பூலோகம், நடுப்பகுதி மற்றும் மேலுலகங்கள் ஆகிய வற்றில் வசிக்கும், எல்லா சேதன அசேதனங்கள் தன்னுடைய தாக உடையவனான பரமாத்மாவைக் குறிப்பிடுகிறார்.
‘‘அஸ்ய லோகஸ்ய கா க3திரிதி ஆகாஶ இதி ஹோவாச ஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ஆகாஶாதே3வ ஸமுத்பத்3யந்தே ஆகாஶம் ப்ரத்யஸ்தம் யந்தி ஆகாஶோ ஹ்யே வைப்4யோ ஜ்யாயாநாகாஶ: பராயணம்’’ (சா2.உப. 1-9-1) - ‘இந்த மனிதர்களுக்கு இலக்கு (சேருமிடம்) எது? அவர் சொன்னார் ‘உண்மையில் ஆகாசம்’. இந்த இருப்பினங்கள் எல்லாமே உறுதியாக ஆகாசத்திலிருந்தே புறப்பட்டு வந்தன. அங்கேயே நிலைபெறச் செல்கின்றன. ஆகாஶம் மட்டுமே உறுதியாக இவற்றைக் காட்டிலும் மேம்பட்டது. ஆகாசம் மிக உயர்ந்த இலக்கு (சேருமிடம்).
Òஸர்வாணி ஹ வா இமாநி பூ4தாநி ப்ராணமே வாபி4ஸம்விஶந்தி, ப்ராணமப்4 யுஜ்ஜிஹதேÓ (சா.உப. 1\&11\&4) இந்த எல்லா பூதங்களும் ப்ராணனிலேயே லயிக்கின்றன; ப்ராணனிலிருந்து வெளிக் கிளம்புகின்றன. என்னும் சொற்றொடர் காணப்படுகிறது. இ¢ங்கு ப்ராணன் எனப்படுவது எல்லா ஜீவராசிகளும் வாழக் காரணமான பிராண வாயுவே என்று பூர்வபக்ஷிகள் (எதிர்வாதம் செய்பவர்கள்) கருதினார்கள். எல்லா பூதங்களும் பிராணவாயுவாலேயே உயிர்வாழ்வதாலும், செயல்படுவ தாலும் அதற்கு ஆகாசத்தைக் காட்டிலும் ஜகத்காரணமா யிருக்கத் தகுதியுண்டு என்று அவர்கள் கருத்து.
‘‘பாதோ3(அ)ஸ்ய ஸர்வா பூ4தாநி த்ரிபாத3ஸ்ய அம்ருதம் தி3வி’’ (சா2.உப. 3-12-6) - ‘எல்லா இருப்பினங்களும் இதன் பாதம். அதன் (மற்ற) அழிவற்ற பாதங்கள் ஸ்வர்க்கத்தில் (பரமபதத்தில்) உள்ளன.
இது போன்ற ச்ருதி சொற்றொடர்களால் குறிப்பிடப் பட்ட ஆகாஶம் (வானம்), ப்ராணன், ஜ்யோதி போன்ற சொற்களால், எல்லாவற்றிற்கும் காரணமாக பரமாத்மா இருப்பது, சுட்டிக் காட்டப்படுவதை ஆழ்வாரும் அருளிச் செய்கிறார்.
‘‘உருவினன் அருவினன்’’ (திருவாய்.1-1-3) என்பதால், அவன் சித், அசித் பொருள்களுக்கு சேஷி என்பது விளக்கப்படுகிறது. ஆனால், அது ஜகத்காரணமாக இருப்பதைக் காட்டித் தரவில்லையே, எனில், சேஷியாக இருப்பவனுக்கு ப்ரபஞ்சம் கார்யமாக இருப்பதுவும் கூடும் என்று விளக்கப்படுகிறது. ஜ்யோதிரதிகரணத்தில் (1-1-10) காணப் படும் ‘‘பாதோ அஸ்ய ஸர்வா பூதாநி’’ (சா2.உப. 3-12-6)என்பதில் இந்த ப்ரபஞ்சத்திற்கே பரமாத்மா சேஷியாக இருப்பது குறிப்பிடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, இப்பாசுர வரிகளை அருளிச் செய்தார் ஆழ்வார். எனவே, மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அதிகரணங் களுக்குச் சமமான அர்த்தத்தைக் கொண்டது, இந்த பாசுரம் என்பது தேர்ந்த பொருளாகிறது.
‘‘அந்நலனுடை ஒருவனை’’ (திருவாய். 1-1-3) என்பதால், தனக் கொப்பார் இல்லாத ஆநந்த குணத்தை உடையவன் என்பதும், ‘‘ஸ ஏஷ ப்ராண ஏவ ப்ரஜ்ஞாத்மா ஆநந்தோ3(அ)ஜரோ(அ)ம்ருத:’’ (கௌ. 3-62) - ‘இந்த ப்ராணனே, ப்ரஜ்ஞாத்மா, ஆநந்தம், சிதையாதது, அழியாதது’. இந்தச் சொற்றொடர், ஆநந்தம் (பேராநந்தம்), அஜரா (மூப்பற்ற) மற்றும் அம்ருதா (அழிவற்ற) ஆகியவற்றுடன் ஸாமாநாதிகரண்யத்தில் பேசப்படுகிறது.
இந்த ச்ருதி சொற்றொடர் காட்டித்தரும் ஆநந்தம், மூப்பின்மை, அழிவற்ற தன்மை ஆகியவை, ‘இந்திரன், ‘ப்ராணன்’ போன்ற சொற்களால் குறிப்பிடப்படும், பரமாத்மாவிற்கே பொருந்தும் என்று காட்டப்பட்டது, என்பது இந்த பாசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இது ‘இந்திரப்ராணாதிகரணத்தின் (1-1-11) பொருளை உணர்த்துவது என்று கொள்ளலாம்.
‘‘நணுகினம் நாமே’’ (திருவாய். 1-1-3) - ‘நாம் அடையப்பெற்றோம்’ என்பதால், பெற்ற பலன், பரமாத்மாவின் உபாஸனத்தால் கிடைத்தது என்பது அறிவிக்கப்படுகிறது. ‘‘ப்ராணோ(அ)ஸ்மி ப்ரஜ்ஞாத்மா தம் மாமாயு ரம்ருதமித்யுபாஸ்வ’’ (கௌ. 3-14) - ‘என்னை மட்டுமே உண்மையில் அறிந்துகொள்’ ‘நானே ப்ராணன், ப்ரஜ்ஞாத்மா, என்னை வாழ்வாகவும், அழிவற்றதாகவும் வழிபடுவாயாக’. என்னும் சொற்றொடரின் பொருளாகிய இந்திரனை உடலாகக் கொண்ட பரமாத்மா வழிபடப்பட வேண்டும் என்பதும் இந்தப் பாசுரத்தில் உள்ளது.
எனவே, இந்த மூன்றாம் பாசுரம் (திருவாய்.1-1-3) ஆகாஶாதிகரணம் (1-1-8) ப்ராணாதிகரணம் (1-1-9) ஜ்யோதிரதிகரணம் (1-1-10) மற்றும் இந்த்ரப்ரணாதிகரணம் (1-1-11) ஆகிய நான்கு அதிகரணங்கள் தரும் அதே பொருளைத் தருகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆம்நாயமௌளியுக3ளீவிஹாராணாம் ஸதாம் முதே| நிரூபிதாஆத்3யபாத3ஸ்ய கா3தா2த்ரயமார்த்த2தா ||
ஸம்ஸ்க்ருத, த்ராவிட வேதாதங்களில் ஸஞ்சரிக்கக் கூடிய நல்லோர்களின் உகப்பிற்காக, திருவாய்மொழியின் மூன்று பாட்டுக்களும், ஸாரீரக சாஸ்த்திரத்தின் முதல் அத்யாயத்தின் முதற் பாதத்தோடு ஒரே பொருள் கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்டது
  திருவாய்மொழியின் முதல் மூன்று பாசுரங்களுக்கும் ஸ்ரீபாஷ்யம் முதல் அத்யாயம் முதல் பாதத்தில் காணப்படும் அர்த்த விசேஷங்களுக்கும் உள்ள கருத்தொற்றுமை இதுகாறும் விளக்கப்பட்டது.
4.8. இனி நான்காம் பாசுரம் தொடங்கி மேல் மூன்று பாசுரங்கள் (திருவாய். 1-1-4, திருவாய். 1-1-5, திருவாய், 1-1-6) ஆகியவை முதல் அத்யாயத்தின் மற்ற பாதங்களுடன் ஒத்திருப்பது காட்டித்தரப்படுகிறது.
நான்காம் பாசுரமான, ‘‘நாம் அவன் இவன்’’ என்பது, இரண்டாம் பாதத்தில் விளக்கப்படும் ‘‘ஜகத்சரீரத்வத்தை’’ (பரமாத்மா இந்த அண்டத்தைத் தன் உடலாகத் தரித்திருப்பது) விளக்குகிறது. இந்த இரண்டாம் பாதம் ஜகத் சரீரத்வத்தை கூறுபவை ‘த்3விதீயே ஜக3ச்ச2ரீரகத்வம்’ என்று ஶ்ருதப்ரகாசிகா பட்டரும், ஸ்ரஷ்டா தே3ஹீ ஸ்வநிஷ்டே நிரவதி4மஹிமா (அ)பாஸ்தபா3த4: ஶ்ரிதாப்த: ஸ்வாத்மா தேரிந்த்3ரியாதே3 ருசிதஜநநக்ருத் ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ | நிர்தோ3ஷத் வாதி3ரப்4யோ ப3ஹுப4ஜநபத3ம் ஸ்வார்ஹ கர்மப்ரஸாத்3ய: பாபச்சி2த்3 ப்3ரஹ்மநாடீ3 க3திக்ருத3திவஹந் ஸாம்யத3ஶ்சாத்ர வேத்3ய: || (அதிகரண ஸாராவளி -19). (இதன் விரிவான பொருளை ‘வேதம் தமிழ் செய்த மாறன் பாகம் 1, பக்கங்களில் கண்டுகொள்வது) என்று நிகமாந்த தேசிகனும் விவரித் துள்ளனர். முதல் அத்யாயத்தின் நான்கு பாதங்களுக்கும், அடைதே பொருள் சொல்லுமிடத்தில், இரண்டாம் பாதத்தின் பொருளான, பரமாத்மா ‘‘தேஹீ’’ என்பதை, ஸ்ரீமத்வேங்கட நாதர் அருளிச் செய்கிறார்.
இரண்டாம் பாதம் முதல் அதிகரணத்தில், ‘‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம’’ (சாந். 3-14-1) - ‘இவையெல்லாம் உண்மையில் ப்ரஹ்மம்’என்னும் சாண்டில்ய வித்யா வாக்கியத்தில் அறியப்படும் ப்ரஹ்மம் ஜீவாத்மாவே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். குற்றங்களற்ற பரமாத்மாவிற்கு, குறைகள் நிறைந்த சித், அசித் வடிவமான பண்பு ஏற்புடையதாகாது என்பதாலும், ஜீவாத்மாவிற்கு எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருக்கும் பண்பு ஏற்கும் என்பதாலும் இவ்வாறு கூறப்படுகிறது.
ஸர்வ ஜகத்காரணம் ப்ரஹ்மத்திற்கே பொருந்தும். தேவர், மனிதர் போன்ற உடல்களில் ஜீவன் உறைவது, கூடுமானாலும், அவனுக்கு ஜகத்காரணம் கூடாது. எனவே, இந்தச் சொற்றொடரில் காணப்படும் ப்ரஹ்மம் என்ற சொல்லால் அறிவிக்கப்படுவது, பரமாத்மாவே; ஜீவனல்ல என்பது ஸித்தாந்தமாகிறது.
இரண்டாம் அதிகரணத்தில் (அத்த்ரதி4கரணம் 1-2-2), ‘யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷத்ரம் ச உபே4 ப4வத ஓதந:I ம்ருத்யுர்யஸ்யோபஸேசநம் க இத்தா2 வேத3 யத்ர ஸ: II ‘‘ (கடோ2பநிஷத் 2-25) - ‘எவனுக்கு ப்ராஹ்மணரும் க்ஷத்ரியருமாகிற இரு வர்க்கமும் உணவாகின்றனரோ, யமன் எவனுக்கு ஊறுகாயாகிறானோ என்று கடவல்லியில் உணவையும் ஊறுகாயையும் உண்பவனாக ஒருவன் ஓதப்படுகிறான். கர்மபல அநுபவ முடைய ஜீவனே உணவு முதலானவற்றை உண்ண முடியும். ஆகையால் இங்கு ஓதப்படுபவன் ஜீவனேயாக வேண்டும்’.
என்பது போன்ற கடவல்லி வாக்யத்தில் ‘‘ஓதந:’’ என்பதால் அறியப்படுபவன் ஜீவனாகவே இருக்கவேண்டும். கர்மவசத்தால் அநுபவங்களைப் பெறுபவன் ஜீவாத்மாவே. ஆகையால். இவ்வாக்யத்தில் காட்டித்தரப்படுபவன், ஜீவாத்மாவே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். இது கர்மமடியாகவரும் அநுபவம் அல்ல. ‘‘கர்த்ருத்வத்தால்’’ வருவது. இது பரமாத்மாவின் இயல்பு, எனவே, இங்கே சொல்லப்படுவது பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
மூன்றாம் அதிகரணத்தில் (அந்தராதி4கரணம் 1-2-3), ‘‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே I ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத3ம்ருதமப4யம் ஏதத்3ப்3ரஹ்ம’’ (சாந். 4-15-1) -’(யோகிகளால்) கண்ணிலே யாவனொரு புருஷன் பார்க்கப்படுகிறானோ, இவனே ஆத்மா என்றும், இவனே அம்ருதம் என்றும், இவனே ப்ரஹ்மம்’.
என்னும் சாந்தோக்ய உபநிஷத் வாக்யத்தில் குறிப்பிடப்படுபவன் ஜீவாத்மாவே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். ஜீவனானவன், ‘கண்களில் வசிக்கிறான்’ என்பது பொதுவாக அறியப்படுகிறது. ஒருவர் மரணமடைந்து விட்டால், உயிர் (ஜீவன்) பிரிந்து விட்டதை, கண்களைப் பார்த்தே முடிவு செய்கிறோம். எனவே இவன் ஜீவன் தான் எனப்படுகிறது. ‘‘ரஶ்மிபி4ரேஷோ(அ)ஸ்மிந் ப்ரதிஷ்டி2த:’’ (ப்3ருஹ.உப. 7-5-1) - ‘இந்த ஒளிக்கற்றை யால், இதுவே இதனுள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது’, என்று ச்ருதி கூறுவதால், இது ஜீவனே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
‘‘ஏஷ ஆத்மேதி ஹோவாச, ஏதத3ம்ருதம் ஏதத3ப4யம் ஏதத்3ப்3ரஹ்மேதி (சாந். 4-15-1) ஏதம் ஸம்யத்3வாம இத்யாசக்ஷதே I ஏதம் ஹி ஸர்வாணி வாமாந்யபி4ஸம்யந்தி ............ (சாந். 4-15-2) ஏஷ உ ஏவ வாமநி: I ஏஷ ஹி ஸர்வாணி வாமாநி நயதிI" - ‘இவனே ஆத்மா என்றும், இவனே அம்ருதமென்றும், இவனே ப்ரஹ்மமென்றும், இவனை ஸம்யத்வாமன் என்றும் சொல்கிறார்கள். விரும்பத்தக்க குணங்களெல்லாம் இவனை அடைந்திருக்கின்றனவன்றோ. எவன் இதை அறிகிறானோ அவனையும் விரும்பத்தக்க குணங்கள் வந்தடைகின்றன. இவனேயன்றோ ‘வாமனி’ எனப்படுகிறான்; இவனேயன்றோ எல்லா வாமங்களையும் (அழகிய குணங்களையும்) (அடியார் களுக்கு) வரவழைக்கிறான். இதை அறிந்தவனும் எல்லா வாமங்களையும் (தன்னைச் சேர்ந்தவர்களுக்கும்) அளிப்பவன் ஆகிறான்.) என்று படிக்கப்பட்டது. இது போன்ற சொற்றொடர்களால் காட்டித்தரப்படும் கல்யாண குணங்கள் பரமாத்மாவிற்கே உள்ளதாலும்,’’யஶ்சக்ஷுஷி திஷ்ட2ந் ... யமயதி’’-(எந்தப் பரமாத்மா கண்ணினுள் நின்று நியமிக்கிறானோ) என்று பரமாத்மா விழியை இருப்பிடமாகக் கொண்டிருப்பது ச்ருதியால் அறியப்படுவதாலும், கண்ணில் வசிப்பவன் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
நான்காம் அதிகரணத்தில் (அந்தர்யாம்யதிகரணம் 1-2-4), ‘‘ய:ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந் ப்ருதி2வ்யா அந்தரோ யம் ப்ருதி2வீ ந வேத3 யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம் ய: ப்ருதி2வீமந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா (அ)ந்தர்யாம்யம்ருத:’’ (ப்ருஹ. 5-7-7) ‘‘எவன் பூமியில் நிலை நிற்கிறானோ, எவனை பூமி அறியாதோ, எவனுக்கு பூமியானது சரீரமோ, எவன் பூமியை உள்ளிருந்து கட்டுப் படுத்துகிறானோ, இந்த உள்ளிருந்து கட்டுப் படுத்துவன் உன்னுடைய அழிவற்ற ஆத்மா’’, இது போன்ற வாஜஸநேயக சொற்றொடர்கள், அந்தர்யாமியாக இருப்பவன் புலன்களால் உணரும் ஜீவன் என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று. பரமாத்மா ஒருவனே அனைத்தையும் நியமிக்கிறான் என்பது அசாதாரண தர்மமாகையால்,
‘‘த்3ரஷ்டா ....... ஶ்ரோதா’’ (ப்ருஹ. 5-7-27) - ‘காண்பவன், கேட்பவன்’. இப்படி காண்பவன் மட்டுமே உள்ளிருந்து நியமிப்பவனாக அறிவுறுத்தப்படுவதாலும், கீழ்க்கண்டவாறு மற்றொரு காண்பவன் மறுக்கப் படுவதாலும். ‘‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’’ (ப்ருஹ. 5-7-27) - ‘இவனைத்தவிர (மற்றொரு) காண்பவன் இல்லை’. இவ்வாறாக அறிந்து கொண்ட பிறகு, இவ்வாறு பதில் கூறப்படுகிறது: ‘தெய்வங்களையும், அண்டங் களையும் உள்ளிருந்து கட்டுப்படுத்துபவனின் (நியமிப்பவனின்) குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால்’, புலனுறுப்புகள் இல்லாமலேயே, பரமாத்மா உணர்கையாலும் அந்தர்யாமி, ஜீவனல்ல; பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
ஐந்தாம் அதிகரணத்தில்- அத்2ருஶ்யத்வாதி3 கு3ணகாதி4 கரணம் 1-2-5, ‘யத்ததத்3ரேஶ்யமக்3ராஹ்யம்’’ (முண்ட. 1-1-6)-’எதைக் காண இயலாததோ (க்ரஹிக்க முடியாத தோ)’, இவற்றால் மிக உயர்ந்த ப்ரஹ்மத்தின் இயல்பு வர்ணிக்கப் படுகிறது. ‘அக்ஷராத் பரத: பர:’’ (முண்ட. 2-1-2) - ‘மிக உயர்ந்த ஒன்று, அழிவிற்கு அப்பாற்பட்டது’ என்று ஸமஷ்டி புருஷன் (அண்ட ஸ்ருஷ்டிக்கு முற்பட்டுள்ள ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் முதலிய தத்வம்) முன்மொழியப்படுகிறது. இந்த அழியாத ஒன்றிக்கு அப்பாற் பட்ட, இருப்பிடத்தை அறிபவன். தரப்படுத்துதலுக்கு அப்பாற்பட்டவன்.’’அத்3ரேஶ்யமக்3ராஹ்யம்’’(முண்ட. 1-1-6) போன்ற சொற்களால் அறியப்படுவது ஜீவாத்மா மற்றும் ப்ரக்ருதி என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும். ஆனால், முண்டக உபநிஷத்தின் அதே பகுதியில், ‘‘ய: ஸர்வஜ்ஞ: ஸர்வவித்’’ (முண்ட. 1-1-10) - ‘எல்லாம் அறிந்தவன் எல்லா அறிவும் படைத்தவன்’ என்கிற சொற்கள் பரமாத்மாவிற்கே உரிய குணங்களைக் காட்டுவதால், ‘அத்3ரேஶ்யமக்3ராஹ்யம்’’ என்னும் சொல் பரமாத்மா வையே குறிக்கும் என்பது ஸித்தாந்தம்.
ஆறாவது அதிகரணத்தில், (வைஶ்வாநராதி4 கரணம் 1-2-6)
‘‘ஆத்மாநமேவேமம் வைஶ்வாநரம் ஸம்ப்ரத்யத்4 யேஷி தமேவ நோ ப்3ரூஹி’’ (சாந். 5-11-6) - (நீர் இந்த வைஶ்வாநராத்மாவையே இப்போது உபாஸிக்கிறீர்; அவனையே எங்களுக்கு உரைப்பீராக என்னும் ச்ருதி வாக்கி யத்தில், வைச்வாநரன் எனப்படுபவன் பரமாத்மா அல்ல. ஏனெனில், இது ஜாடராக்நி, இரண்டாம் பூதமாகிய அக்நி. ஓர் தேவதையைக் குறிக்கும் சொல் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.’’கோ ந ஆத்மா கிம் ப்3ரஹ்ம’’ (சாந். 5-11-1) - ‘யார் நம்முடைய ஆத்மா? மற்றும் எது ப்ரஹ்மம்?’ போன்ற சொற்றொடர்களால் எல்லா உயிர் களுக்கும் பரமாத்மா ஆத்மாவாக இருப்பது காட்டப் படுவதால், இந்த அண்டம் அவனுடைய சரீரமாக இருப்பது அறியப்படுவதாலும், ஜாடராக்நி போன்றவற்றை குறிக்க, ‘‘வைச்வாநரன்’’ என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்ட போதிலும், இவ்விடத்தில் இது பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
இந்த பாதத்தில் சொல்லப்பட்ட ‘ஜகத் சரீரத்வம்’ இந்தச் சொற்றொடர்களால் காட்டித்தரப்படுகிறது.
முதல் அதிகரணம் (ஸர்வத்ர ப்ரஸித்த்யதிகரணம் 1-2-1) :- ‘‘ஸர்வம் க2ல்வித3ம் ப்3ரஹ்ம’’ (சாந். 3-14-1) - ‘இவையெல்லாம் உண்மையில் ப்ரஹ்மம்’
இரண்டாம் அதிகரணம் (அத்த்ரதிகரணம் 1-2-2):- ‘‘கு3ஹாம் ப்ரவிஶ்ய திஷ்ட2ந்தீ’’- இதய குகையில் உள்ளே இருந்து. ‘‘தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மநுப்ரவிஷ்டம்’’ (கடோ2பநிஷத் 1-12) - ‘அவனைக் காண்பது அரிது, மறைக்கப்பட்டிருப்பவன், தொடர்ந்து நுழைபவன்’. என்பதால், இவன் சரீரம் சௌபரியைப் போன்றதன்று. இவன், ஸ்வரூபத்தால் எல்லா உடல்களிலும், ஹ்ருதயம் என்னும் குகையில் வசிப்பது கூறப்பட்டது.
மூன்றாம் அதிகரணம் (அந்தராதிகரணம் 1-2-3):-
‘‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யதே I ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத3ம்ருதமப4யம் ஏதத்3ப்3ரஹ்ம’’ (சாந். 4-15-1) - (யோகிகளால்) கண்ணிலே யாவனொரு புருஷன் பார்க்கப்படுகிறானோ, இவனே ஆத்மா என்றும், இவனே அம்ருதம் என்றும், இவனே ப்ரஹ்மம்’. என்பதால், இந்திரியங்களும் பரமாத்மாவின் சரீரம் என்பது காட்டப்பட்டது.
நான்காம் அதிகரணம் (அந்தர்யாம்யதிகரணம் 1-2-4) :-
‘‘ய:ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந் ப்ருதி2வ்யா அந்தரோ யம் ப்ருதி2வீ ந வேத3 யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம் ய: ப்ருதி2வீமந்தரோ யமயதி ஏஷ த ஆத்மா (அ)ந்தர்யாம்யம்ருத:’’ (ப்ருஹ. 5-7-7) - ‘எவனொரு வன் அண்டத்தில் வசிக்கிறானோ, அவன் அண்டத்தின் உள்ளிருக்கிறான். எவனை அண்டம் அறியாதோ, எவனுக்கு அண்டம் உடலோ, எவன் அண்டத்தை உள்ளிருந்து நியமிக்கிறானோ, அவனே உன் ஆத்மா, உள்ளிருந்து நியமிப்பவன், அழிவற்றவன்’. இவ்வாறு யாரோ ஒருவன், தெய்வத்தன்மை வாய்ந்தவற்றுள் வசிப்பது குறிப்பிடப் படுகிறது - நீர், நெருப்பு, அந்தரம் (நடுப்பகுதி), காற்று, சூரியன், திசைகள், சந்திரன், தாரகைகள், வானம், இருட்டு மற்றும் வெளிச்சம். அவனுக்குச் சொந்தமான எல்லா பருப்பொருள்கள் - ப்ராணன், வாக்கு, கண், செவி, மனம், தோல், உணர்வு, விதை. இப்படி, பல பொருள்களில் உள்ளிருந்து, இவ்வாறு இருப்பது, அந்தப் பொருள்களுக்குத் தெரியாமல், அப்பொருள்களைத் தன் உடலாகக் கொண்டு அவற்றை நியமிப்பது இவ்வாறு வெளிப்படுத்தப் படுகிறது.இந்திரியங்களுக்கு மட்டு மல்லாமல், எல்லா தத்வங்களுக்கும் பரமாத்மா சரீரி என்பது காட்டப்பட்டது.
ஐந்தாம் அதிகரணம் - அத்2ருஶ்யத்வாதி3கு3ணகாதி4கரணம் 1-2-5 :- எல்லா தத்துவங்களின் தொகுப்பும், உருவத்தால், ப்ரஹ்மத்தின் சரீரம் என்று.
ரூபோபந்யாஸாத் ச (1-2-24) - (உலகம் முழுவதையும் அக்ஷரத்திற்கு) ஶரீரமாகச் சொல்லுகையாலும் (அக்ஷரம் பரமாத்மாவே.)
‘‘அக்3நிர்மூர்த்தா4 சக்ஷுஷி சந்த்3ரஸூர்யௌ தி3ஶஶ்ஶ்ரோத்ரே வாக்3விவ்ருதாஶ்ச வேதா3: I வாயு: ப்ராணோ ஹ்ருத3யம் விஶ்வமஸ்ய பத்3ப்4யாம் ப்ருதி2வீ ஹ்யேஷ ஸர்வபூ4தாந்தராத்மாII’’ (முண்ட 2-1-4) - என்ற வர்ணனைக்குப் பொருளாவது:- ‘அவன் சிரம் (தலை) மேலுலகம் (சொர்க்கம்); அவன் விழிகள் சூரியன் மற்றும் சந்திரன்; அவன் செவிகள் திசைகளாகும். அவன் பேச்சு வேதங்களாகும். அவன் ப்ராணன் காற்றாகும். அவன் இதயமே இந்த அண்டம், அவன் பாதங்கள் இந்த பூமி; அவன், எல்லா இருப்பினங்களை உள்ளிருந்து ஆள்பவன்’ என்பதாகும். இத்தகைய ஓர் வடிவம், எவன் எல்லாவற்றின் உள்ளுறை ஆத்மாவாக உள்ளானோ, அந்த மிக உயர்ந்த ஆத்மாவிற்கே உரியதாக இருக்க இயலும்.
ஆறாம் அதிகரணம் - வைஶ்வாநராதி4கரணம் 1-2-6 :- பரமாத்மாவின் இந்த, ‘‘ஜகத் சரீரத்வம்’’ மோக்ஷத்தை விரும்புபவர்களால், உபாஸிக்கத் தக்கது எனப்பட்டது.
‘‘ஆத்மாநமேவேமம் வைஶ்வாநரம் ஸம்ப்ரத்யத்4 யேஷி தமேவ நோ ப்3ரூஹி’’ (சாந். 5-11-6) - (நீர் இந்த வைஶ்வாநராத்மாவையே இப்போது உபாஸிக்கிறீர்; அவனையே எங்களுக்கு உரைப்பீராக என்று தொடங்கி, ‘‘யஸ்த்வேதமேவம் ப்ராதே3ஶமாத்ரமபி4 விமாநமாத் மாநம் வைஶ்வாநரம் உபாஸ்தே’’ (சாந். 5-18-1) - (எவனொருவன் எங்குமிருப்பவனாகையாலே அளவற்ற வனான வைஶ்வாநரானவனை ஓரிடத்திலிருப்பவனாக உபாஸிக்கிறானோ, அவன் ஸர்வலோக ஸர்வபூத ஸர்வாத்மாக்களிலும் அந்நத்தை உண்கிறான், என்பதீறாக வைஶ்வானரன் என்று ஒரு தத்துவம் ஓதப்பட்டது.
ஆறு அதிகரணங்கள் கொண்ட முதல் அத்யாயம் இரண்டாம் பாதத்தில் சொல்லப்பட்ட ஜகத்சரீரத்வத்தை, ஆழ்வார்,
நாமவனிவனுவன் அவளிவளுவளெவள் தாமவரிவருவர் அதுவிதுவுதுவெது வீமவையிவையுவை அவைநலம் தீங்கவை* ஆமவையாயவை ஆய்நின்றஅவரே. (திருவாய்.1-1-4) என்ற பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார். தந்தாமாயும், தூரத்தில் இருப்பவனாகியும், அருகில் இருப்பவனாகியும், வேறு எங்கோ இருப்பவனாகியும், ஆகிய ஆண்களும், தூரத்திலிருப்பவளும், அருகில் இருப்பவளும், எங்கோ இருப்பவளும், யார் என்று கேட்கப்படுபவளும், ஆகிய பெண்களும்; பன்மையில் விளிக்கப்படும் அவர்கள், இவர்கள் உவர்கள் எனப்படுப வர்களும், ஆண், பெண் ஆகிய அடையாளமில்லாத அது, இது, உது என்று சொல்லப்படும் பொருள்களாயும், நல்லதாயும், தீயதாயும் உள்ள பொருள் களாயும், ஆகிய இத்தனையுமாகி, மூன்று காலங்களிலும் இருக்கக் கூடியவன், பரமாத்மா என்று ஸாமாநாதிகரண் யத்தாலே, இந்த ஜகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் இடையே நிலவும் சரீர-ஆத்ம பாவத்தை அருளிச் செய்வதால், இப்பாசுரம்-இரண்டாம் பாதத்தோடு கருத்தொற்றுமை கொண்டதாயிற்று.
அவரவர்தமதமது அறிவறிவகைவகை அவரவர்இறையவர் எனவடியடைவர்கள் அவரவர்இறையவர் குறைவிலர்இறையவர்* அவரவர்விதிவழி அடையநின்றனரே.
(திருவாய். 1-1-5) என்ற பாசுரத்தில், மூன்றாம் பாதத்தில் தரப்பட்டுள்ள பொருளை அருளிச் செய்கிறார். இந்த இரண்டிலும், பரமாத்மா எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருப்பது காட்டித்தரப் படுகிறது. இப்பாதம், இந்த கருத்தைச் சொல்வதை ‘‘த்ருதீயே ஸர்வாத்மத்வப்ரகார:’’- ‘‘முதல் அத்யாயத்தின் மூன்றாம் பாதமானது, பரமாத்மா எல்லா வற்றுக்கும் ஆத்மாவாயிருக்கும் வகையைச் சொல்லுகிறது’’, என்று ச்ருதப்ரகாசிகையில் பட்டர் அருளிச் செய்துள்ளார்.
மூன்றாம் பாதம், முதல் அதிகரணத்தில் (த்3யுப்4வாத்3ய தி4 கரணம் 1-3-1), ‘‘யஸ்மிந் த்3யௌ: ப்ருதி2வீ ச அந்தரிக்ஷமோதம் மநஸ்ஸஹ ப்ராணைஶ்ச ஸர்வை: I தமேவைகம் ஜாநதா2த்மாநம் அந்யாவாசோ விமுஞ்சத2 அம்ருத ஸ்யைஷ ஸேது:’’ (முண்ட. 2-2-5)- ‘எவனிடம் தேவலோகமும் பூமியும், அந்தரிக்ஷமும், மனமும் எல்லா இந்திரியங்களும் சேர்ந்திருக்கின்றனவோ, அந்த ஆத்மா ஒருவனையே அறியுங்கள்; மற்ற வார்த்தைகளை விடுங்கள்; இவன் மோக்ஷத்திற்கு வழியாவான்’. என்பதால் அறியப் படுபவன், பூவுலகம், இடைப்பட்ட பகுதி, மேலுலகம் ஆகியவற்றைத் தாங்குபவதாலும், மனம், ப்ராணன் ஆகிய வற்றுடன் தொடர்புடையதாலும் நாடிகளை தரித்திருப் பதாலும் பல பிறப்புகளை அடைவதாலும், ஜீவனே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
‘‘தமேவம் வித்3வாநம்ருத இஹ ப4வதி I நாந்ய: பந்த்தா2 அயநாய வித்3யதே’’ (தை.ஆரண்யகம் 3-12-17, புருஷ ஸூக்தம்-17) - ‘அவனை இவ்வாறு அறிந்தவனாகி, அவன் (அறிந்தவன்) இங்கே அழிவற்ற வனாகிறான். இதைத்தவிர முக்திக்கு (விடுதலைக்கு) வேறு வழியில்லை’.
அழிவற்ற தன்மையை அடைவிக்கும் பாலமாக இருப்பதும், எல்லாவிதமான ஞானத்தை உடையவனும் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவனுக்கு, மனம், ப்ராணன், நாடிகள், ஆகியவற்றைத் தரிப்பது கூடும் என்பதாலும், கர்மவசப்படாமல், பல பிறவிகளை அடைவது இவனுக்கும் உண்டாகையாலே, பரமாத்மாவே இதில் ஆதாரமாகக் கூறப்படுபவன் என்பது ஸித்தாந்தம்.
இரண்டாம் அதிகரணத்தில் (பூமாதிகரணம் 1-3-2 ),
‘‘யத்ர நாந்யத் பஶ்யதி நாந்யத் ஶ்ருணோதி நாந்யத்விஜாநாதி ஸ பூ4மா I அத2 யத்ர அந்யத் பஶ்யதி அந்யத் ஶ்ருணோதி அந்யத்3விஜாநாதி தத3ல்பம்’’ (சாந். 7-24-1) - ‘எதை அறியும்போது வேறொன்றைக் காண்பதும் கேட்பதும், அறிவதுமில்லையோ அதுவே பெரிது; எதை அறியும்போது வேறொன்றைக் காணவும், கேட்கவும், அறியவும் செய்கிறானோ அது சிறிது’ என்கிற சாந்தோக்ய உபநிஷத் வாக்கியத்தில் காணப்படுபவன், ‘பூம’ என்னும் குணத்தை உடைய, ஜீவனாக இருக்கவேண்டும்.
‘‘தரதி ஶோகமாத்மவித்’’ (சாந். 7-1-3) - ‘ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைத் தாண்டிச் செல்கிறான்’என்று முமுக்ஷு ஜீவனிடத்தில் ஆத்மோபதேஶம் நிறைவடை வதாலும், முக்தி அடைந்த நிலையில், அவன் அடையும் ஆனந்தம் ‘பூமா’ என்னும் சொல்லால் குறிப்பிடப்படுவதால், இவ்வாக்கியத்தில் அறியப்படுபவன், ஜீவனே என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
‘‘யஸ்ஸத்யேநாதிவத3தி’’ (சாந். 7-16-1) - ‘எவனொருவன் அதிகப்படியான துணிவுடன் உண்மையைப் பேசுகிறானோ’ என்னும் வாக்கியத்தால் ‘ஸத்ய’’ என்பதால் ஆத்மோபதேஶம் பரமாத்மாவிடமே இறுதிப் பயனைப் பெறும். மேலும், பரமாத்மாவின் ஆநந்தம், ‘‘பூமா’’ என்பதாக அறியப் படுவதாலும், ‘‘பூமா’’ எனப்படுவது பரமாத்மா என்பது ஸித்தாந்தம்.
மூன்றாம் அதிகரணத்தில் (அக்ஷராதி4கரணம் 1-3-3),
‘‘ஸஹோவாச ஏதத்3வை தத3க்ஷரம் கா3ர்கி3 ப்3ராஹ்மணா அபி4வத3ந்தி அஸ்தூ2லம் அநண்வஹ்ர ஸ்வம் அதீ3ர்க4மலோஹித மஸ்நேஹமச்சா2யம்’’ (ப்ருஹ. 5-8-7) - (யாஜ்ஞவல்க்யர் கூறினார். இதையே அக்ஷரமென்று ப்ரஹ்மஜ்ஞானிகள் கூறுகின்றனர்; அது பருமனில்லாதது; அணுவல்லாதது; குட்டையல்லாதது; நீளமல்லாதது; சிவப்பில்லாதது; பசையில்லாதது; நிழலற்றது ...) எனப்படும் வாஜஸநேய வாக்கியத்தால் அறியப்படும் ‘‘அக்ஷரம்’’ ஜீவனாகவே இருக்கவேண்டும் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
ஏனெனில், ‘‘அக்ஷராத்பரத: பர:’’ (முண்ட. 2-1-2) - ‘மிக உயர்ந்தது, அக்ஷரத்திற்கு அப்பாற்பட்டது’. ‘‘அவ்யக்தமக்ஷரே லீயதே’’ (ஸுபாலோ. - 2), ‘வெளிப்படாதது, அழியாத அதனுள் அமிழ்கிறது’, எனப்படும் சொற்றொடர்களின் பொருள் ஜீவனைக் குறிக்கின்றன. மூன்று காலங்களிலும் நிலைபெற்று, எல்லாவற்றிற்கும் ஆதரமாக இருந்து தரிப்பவனும், ‘‘ஆகாஶ’’, ‘‘அக்ஷரம்’’ என்னும் சொற்களால் அறியப்படுபவனும் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
நான்காம் அதிகரணம் (ஈக்ஷதிகர்மாதி4கரணம் 1-3-4 ) :--
‘‘ய: புநரேதம் த்ரிமாத்ரேண ஓமித்யநேந ஏவாக்ஷரேண பரம்புருஷம் அபி4த்4யாயீத ஸ தேஜஸி ஸூர்யே ஸம்பந்ந: I யதா2 பாதோ3த3ரஸ்த்வசா விநிர்முச்யதே ஏவம் ஹ வை ஸ பாப்மநா விநிர்முக்த: ஸஸாமபி4: உந்நீயதே ப்3ரஹ்மலோகம் ஸ ஏதஸ்மாத் ஜீவக4நாத் பராத்பரம் புரிஶயம் புருஷமீக்ஷதேII’’ (ப்ரஶ்நோ. 5-5) - ‘மூன்று மாத்திரைகளையுடைய இந்த ‘ஓம்’ என்னும் அக்ஷரத் தாலேயே இந்தப் பரமபுருஷனை எவன் த்யானிக்கிறானோ அவன் தேஜோமயமான சூரியனில் சேர்ந்தவனாய், பாம்பு சட்டையை விட்டுவருவதுபோல் பாபத்தினின்று நீங்கி வந்தவனாய், ஸாமகானம் செய்பவர் களாலே ப்ரஹ்ம லோகத்தை அடைவிக்கப் படுகிறான். தேஹேந்த்ரியங்களைக் காட்டிலும் மேலான, ஜீவனைக் காட்டிலும் மேலான ஹ்ருதயவாஸி புருஷனைக் காண்கிறான் அவன்’ இந்த வாக்கியத்தில் காட்டப்படும் பரமபுருஷன் நான்முக ப்ரஹ்மனே என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று. ஏனெனில், இவனுக்கு, பூலோகம், நடுப்பகுதி ஆகியவற்றை ஸங்கல்பிக்கும் திறமை உள்ளது.
‘‘யத்தத் ஶாந்தமஜரமம்ருதமப4யம்’’ (ப்ரச்ந. 5-7) - ‘எந்த ஒன்று, அமைதி நிறைந்ததோ, வயதுவரம்பற்றதோ, அழிவற்றதோ, அச்சமற்றதோ’ என்று அழிவற்றதன்மை பேசப்படுகையாலும், முக்தனுக்கு பலனாக ப்ரஹ்மலோகம் அல்லாததாலும்,
‘‘யத்தத்கவயோ வேத3யந்தே’’ (ப்ரச்ந. 5-7) - ‘எதை அறிஞர்கள் அறியப் பெறுகிறார்களோ’. ‘கவய:’ - அறிவு நிறைந்தவர்கள் (ஞானிகள்). இப்படிப்பட்ட ஞானிகள் காணத்தக்கது விஷ்ணுவின் இருப்பிடம் மட்டுமே. என்று நித்யஸூரிகளால் ஸேவிக்கப்படும் இடம் ப்ரஹ்மலோகம் அல்லாததாலும், இதில் கூறப்படும் பரமபுருஷன், பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
ஐந்தாம் அதிகரணத்தில் (த4ஹராதி4கரணம் 1-3-5),
‘‘அத2 யதி3த3மஸ்மிந் ப்3ரஹ்மபுரே த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம த3ஹரோ(அ)ஸ்மிந்நந்தர ஆகாஶ: தஸ்மிந் யத3ந்த: தத3ந்வேஷ்டவ்யம் தத்3வாவ விஜிஜ்ஞாஸிதவ்யம்’’ (சாந். 8-1-1) - ‘ப்ரஹ்மத்தின் உறைவிடமான இந்த தேஹத்தில் தாமரை போன்று சிறிய (ஹ்ருதயமென்னும்) ப்ரஹ்மத்தின் இருப்பிடம் உள்ளது. இதனுள் நுண்ணியதான ஆகாஶம் உள்ளது. அதற்குள்ளி ருப்பது தேடத்தக்கது; அதுவே அறியத்தக்கது’ போன்ற சாந்தோக்ய சொற்றொடரில், இதயம் என்னும் தாமரையில் வசிப்பது ஜீவனாகவோ அல்லது பொதுவாக அறியப்படும் ஆகாஶ(வான)மாகவோ இருத்தல் வேண்டும் என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று.
‘‘ஏஷ ஆத்மா(அ)பஹதபாப்மா விஜரோ விம்ருத்யு: விஶோக: விஜிக4த்ஸ: அபிபாஸ: ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப:’’ (சாந். 8-1-5) - ‘இவன் இயற்கை யிலேயே ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருப்பவனாய்), பாபமற்றவனாய், ஜராமரணமற்றவனாய் (மூப்பு, இறப்பு அற்றவனாய்), ஶோகமற்றவனாய், பசிதாகமற்றவனாய், தடை படாத காமத்தையும் ஸங்கல்பத்தையுடையவனாயிருப் பவன்’. இந்தச் சொற்றொடர்கள் ஒருவரை, ‘தஹராகாசம் என்பது ‘மிக உயர்ந்த ப்ரஹ்மமே’ என்பதை, புரிந்து கொள்ள வைக்கும்.
ப்ரஜாபதியின் வாக்கியத்தால், ஜீவன் எல்லா பாவங்களும் அழியப்பெற்ற, ‘‘அபஹதபாப்மா’’வாக இருப்பது அறிவிக்கப்படுவதும் இதற்கு ஓர் காரணமாக கூறப்படுகிறது. இந்த, ‘‘அபஹதபாப்மா’’வாக இருப்பது, பொதுவாக அறியப்படும் ஆகாஶத்தில் இல்லாததாலும், ப்ரஜாபதியின் வாக்கியத்தில், ஜீவனுக்கு இது இருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும், தஹரவாக்யத்தில் அறிவிக்கப் பட்டிருக்கும் அபஹதபாப்மத்வம் இவனுக்கு இல்லாமை யாலும், ஆகாஶம் என்னும் சொல்லால் பரமாத்மா அறியப் படுவதாலும், தஹராகாஶம் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
ஆறாவது அதிகரணத்தில் (ப்ரமிதாதி4கரணம் 1-3-6 ):-
‘‘அங்கு3ஷ்ட2மாத்ர: புருஷோ மத்4ய ஆத்மநி திஷ்ட2தி I ஈஶாநோ பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே I ஏதத்3வைதத்’’ (கடோ. 4-12) - கட்டை விரல் பருமனுள்ள புருஷன் சரீரத்தின் நடுவில் நிற்கிறான். முக்காலத்திலுமுள்ள அனைத்துக்கும் ஈச்வரனான அவன் அத்தகைய இருப்பில் வெறுப்படைவதில்லை என்னும் கடவல்லி வாக்கியத்தில் அறியப்படுபவன் ஜீவாத்மாவே என்பது எதிர்வாதம் செய்வபரின் கூற்று. இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும், கட்டுப்படுத்துபவன் பரமாத்மாவேயாகை யால், இந்த அங்குஷ்டமாத்ர புருஷன் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது அதிகரணங் களில் (தே3வதாதி4கரணம் 1-3-7, மத்4வதி4கரணம் 1-3-8, அபஶூத்3ராதி4கரணம் 1-3-9), ப்ரஹ்மத்தை அறிய யார் யாருக்கு அதிகாரம் உள்ளது அல்லது இல்லை என்பது விசாரிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் அதிகரணத்தில் (அர்த்தா3ந்தரத்வாதி3வ்யபதே3ஶா தி4கரணம் 1-3-10),
‘‘ஆகாஶோ ஹ வை நாமரூபயோ: நிர்வஹிதா தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம தத3ம்ருதம் ஸ ஆத்மா’’ (சாந். 8-14-1) - ‘ஆகாஶமே நாமரூபங்களை நிர்வஹிப்பது; அவையில்லாமல் இருப்பது எதுவோ அதுவே ப்ரஹ்ம மாகவும், அம்ருதமாகவும் ஆத்மாவாகவுமிருப்பது’ என்னும் சாந்தோக்ய உபநிஷத் வாக்கியத்தில் ‘‘ஆகாஶம்’’ எனப்படுபவன், ஜீவாத்மாவைக் குறிக்கிறது என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்று. ஏனெனில்,
‘‘அஶ்வ இவ ரோமாணி விதூ4ய பாபம் சந்த்3ர இவ ராஹோர்முகா2த் ப்ரமுச்ய I தூ4த்வா ஶரீரமக்ருதம் க்ருதாத்மா ப்3ரஹ்மலோகமபி4 ஸம்ப4வாமிII’’ (சாந். 8-13-1) - ‘குதிரை மயிர்களை உதறுவதுபோலும், சந்திரன் ராஹுவின் முகத்திலிருந்து விடுபடுவதுபோலும் சரீரத்தை உதறிவிட்டு க்ருதார்த்தனாய் நித்யமான ப்ரஹ்மலோகத்தை அடையக் கடவேன்’. ஆற்றப்பட்ட கர்மத்துடன் (க்ருதாத்மா) நான் ப்ரஹ்ம லோகத்தின் முடிவற்ற தன்மையை (அக்ருதம்) அடையக் கடவேன்.
என்பதில் ஜீவன், முக்தனாவதற்கு முன்பு, கர்ம வசப்பட்டு, நாம ரூபங்களோடு இருந்தான் என்பதால், இது அவனுக்கே பொருந்தும் எனப்படுகிறது. ஜீவாத்மாவுடன் அநுப்ரவேசம் செய்து, நாம ரூபங்களை அடைபவன் பரமாத்மாவாக இருப்பதால் இந்த சொற்றொடரில் ‘ஆகாஶம்’ என்பதால் அறியப்படுபவன் பரமாத்மாவே என்பது ஸித்தாந்தம்.
‘ப்3ரஹ்மலோகமபி4 ஸம்ப4வாமி(நி)’’ (சாந்.உப. 8-13-1) - ‘நான் ப்ரஹ்ம லோகத்தை அடையக்கடவேன்’ என்பது ச்ருதி வாக்கியம். இவ்வாறாக, இந்த மூன்றாம் பாதத்தில், பரமாத்மா எல்லாவற்றிற்கும் ஆத்மாவாக இருக்கிற இயல்பு, பலவகைகளில் நிரூபிக்கப்பட்டது. இந்த பண்பை- ‘‘ஸர்வாத்மத்வ ப்ரகாரத்தை’’-ஆழ்வார், ‘‘அவரவர்’’ என்று தொடங்கும் திருவாய்மொழி 1-1-5 பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.
இப்பாசுரத்தில் (திருவாய்.1-1-5), பலவிதப்பட்ட அதிகாரிகள் (மக்கள்) தம்முடைய ருசிக்கு ஏற்றவாறு, அதிலுள்ள வேறுபாட்டிற்கு ஏற்ப ரஜஸ், தமஸ் மற்றும் மிஶ்ர ஸத்வர்களாக இருக்கிற தேவதைகளை வணங்குகிறார்கள். இந்த தேவதைகள் தம்மை வணங்குபவர்களுக்கு ஏற்ற பலனைத் தருவதில் எந்த குறையும் அற்றவர்கள். இதற்குக் காரணம், எல்லோரையும் தன் உடலாகக் கொண்டிருக்கும் பரமாத்மா, அவரவர் வணங்கும் தேவதைகளுக்கு அந்தர் யாமியாக இருந்து, அவரவர் விரும்பும் பலனைத் தருகிறான் என்பதாகும்.
முதல் அதிகரணத்தில் (த்3யுப்4வாத்3யாயதநம் ஸ்வஶப்3தா3த் - 1-3-1 ), காட்டித்தரப்படும் குற்றங் களற்ற பண்பை ‘‘இறையவர்’’(திருவாய். 1-1-5) என்பதால் காட்டித்தருகிறார். இறையவர் என்பதால் ஈச்வரனாக இருப்பது குறிப்பிடப்படுவதால், குற்றமற்ற தன்மைகள் விளக்கம் பெறுகின்றன.
இரண்டாம் அதிகரணத்தில் (பூமாதிகரணம் 1-3-2) பரமாத்மாவின் அதிசயமான ஆநந்தம் விளகக்ப்படுகிறது.
‘‘தஸ்யேயம் ப்ருதி2வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்’’ (தை.ஆந) ‘‘இப்படிப்பட்டவனுக்கு செல்வம் நிறைந்த இந்த பூமி வசப்படும்’’.
மூன்றாம் அதிகரணத்தின் (அக்ஷராதி4கரணம் 1-3-3) பொருளான நியமிக்கும் சேஷியாக இருப்பது ஆகிய பண்புகளும் ‘‘இறையவர்’’(திருவாய். 1-1-5) என்பதால், அறியப்படுகிறது. ‘‘அவரவர் விதிவழி அடைய நின்றனரே’’ (திருவாய். 1-1-5) என்பதால் தேவர்களுக்கு அந்தர்யாமியாக இருப்பது காட்டித்தரப்படுகிறது.
நான்காம் அதிகரணத்தின் ( ஈக்ஷதிகர்மாதி4கரணம் 1-3-4 ) பொருளான, முக்தனுக்கு பலனாக இருப்பதும், ‘‘இறையவர்’’ (திருவாய். 1-1-5) என்பதால் காட்டப்பட்டது.
‘‘ந பஶ்யோ ம்ருத்யும் பஶ்யதி ந ரோக3ம் நோத து3:க்க2தாம் I ஸர்வம் ஹ பஶ்ய: பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ:II’’ (சாந். 7-26-2) - ‘காண்பவன் மரணத்தைக் காண்பதில்லை. அல்லது நோய்களையும், அல்லது துன்பத்தையும் காண்பதில்லை. உண்மையில் எல்லா வற்றையும் காண்கிறான். எல்லா இடங்களிலிருந்தும் எல்லாவற்றையும் பெறுகிறான்’ என்பது ப்ரமாணம்.
இங்கே, ‘‘இறையவர்’’ (திருவாய்.1-1-5) என்பதால், ‘‘இந்த தேவதை’’ என்று சிறப்பித்துக் கூறாததால், இது ஸர்வ சேஷியான எம்பெருமானைக் குறிப்பதாகும். கலிவைரி தேசிகர், ‘‘அவர்களுக்கும், அவர்கள் வணங்கும் தேவர் களுக்கும் வேறுபாடு இல்லாமல் எல்லோர்க்கும் இறைவன் இவன்’’ என்று பொருளுரைக்கிறார்.
ஐந்தாவது அதிகரணத்தில் (த4ஹராதி4கரணம் 1-3-5) விவரிக்கப்படுவது, பரமாத்மாவின் ஆச்சர்யமான போக்ய குணம் (அநுபவிக்கும் தன்மை). இந்த குணம், அவன் எல்லா தேவதைகளுக்கும் அந்தர்யாமியாக இருப்பதைக் கொண்டு விளக்கப்படுகிறது .
‘‘யாவந்வா அயமாகாஶ: தாவாநேஷோ(அ)ந்தர் ஹ்ருத3ய ஆகாஶ:’’ (சாந். 8-1-3) - ‘உண்மையில் இந்த ஆகாசம் எந்த அளவோ, இதயத்தின் உள்ளே இருக்கும் இந்த ஆகாசத்தின் அளவும் அதுவே’.
‘‘உபே4 அஸ்மிந் த்3யாவா ப்ருதி2வீ அந்தரேவ ஸமாஹிதே உபா4வக்நிஶ்ச வாயுஶ்ச ஸூர்யாசந்த்3ரம ஸாவுபெ4ள வித்4யுந்நக்ஷத்ராணி’’ (சாந். 8-1-3) - ‘மேலுலகும், கீழுலகும் உண்மையில் ஒன்றாக உள்ளே வைக்கப்பட்டுள்ளன. தீயும், காற்றும், சந்திரனும், சூரியனும். மின்னலும், நக்ஷத்ரங்களும்’ என்பதால், தஹராகாசத்தைச் சொல்லி, அது அக்நி, வாயு, சூரியன், சந்திரன் ஆகியவற்றைத் தாங்குவதைச் சொல்லி,
‘‘யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி ஸர்வம் தத3ஸ்மிந் ஸமாஹிதம்’’ (சாந். 8-1-3) - இங்கே எது உள்ளதோ, அதுவும், எது இல்லையோ அதுவும் எல்லாம் நன்றாக இதற்குள் வைக்கப்பட்டிருக்கிறது’ என்பதால், இந்த தஹராகாஶத்தை உபாஶனம் பண்ணுகிறவர்களுக்கு இவ்வுலக, மறுவுலக பலன்கள் கிடைக்கும் என்பது விவரிக்கப்பட்டது. இந்த இரண்டு சொற்றொடர்களின் பொருளையே, ‘‘இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே’’(திருவாய்.1-1-5) என்று ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்டது.
ஆறாவது அதிகரணத்தில் (ப்ரமிதாதி4கரணம் 1-3-6), அந்தர்யாமியாக இருப்பவன், தாயின் சகிப்புத் தன்மையையும், தந்தையின் கண்டிப்பையும் உடையவன் என்பது, விளக்கப்படுகிறது. இந்த பண்புகளால், தேவதாந் திரங்களை வணங்குபவர்களையும், அந்தந்த தேவதாந்திரங் கள் மூலம் ரக்ஷிக்கிறான் என்பதும் இப்பாசுரத்தால் (திருவாய். 1-1-5) காட்டப்பட்டது.
யார் அதிகாரி? யார் இல்லை? என்பதை விவரிக்கும் ஏழு, எட்டு, ஒன்பது (தே3வதாதி4கரணம் 1-3-7, மத்4வதி4கரணம் 1-3-8, அபஶூத்3ராதி4கரணம் 1-3-9) அதிகரணங்களின் சாரம், ‘அவரவர் தமதமது’’ (திருவாய். 1-1-5) என்பதால் விவரிக்கப்படுகிறது.
பத்தாவது அதிகரணத்தில் (அர்த்தா3ந்தரத்வாதி3 வ்யபதே3ஶா தி4கரணம் 1-3-10), பரமாத்மா தானாகவும், தேவதாந்தரங்கள் மூலமாகவும் ரக்ஷிப்பவன் என்பது விளக்கப் பட்டது. இந்த பொருள் இந்த பாசுரத்தில் (திருவாய். 1-1-5) விளக்கப்படுகிறது.
இவ்வாறாக, அனைத்திற்கும் ஆத்மாவாக பரமாத்மா இருப்பதை விளக்கும் இந்த மூன்றாம் பாதமும், ‘‘அவரவர் இறையவர்’’ என்னும் திருவாய்மொழி 1-1-5ஆம் பாட்டும் கருத்தொற்றுமை உடையவை என்பது காட்டித்தரப்படுகிறது.
முதல் அத்யாயம் நான்காம் பாதத்திற்கு இணையான பொருளைத் தருவது,
நின்றனர்இருந்தனர் கிடந்தனர்திரிந்தினர் நின்றிலர்இருந்திலர் கிடந்திலர்திரிந்திலர் என்றுமொரியல்வினர் எனநினைவரியவர்* என்றுமொரியல்வொடு நின்றவெந்திடரே. (திருவாய்.1-1-6) என்னும் பாசுரமாகும். இந்த நான்காம் பாதத்தில், எல்லா பொருள்களும் ப்ரஹ்மத்தின் காரியமாகவும், அதன் சரீரமா கவும், அதனால் நியமிக்கப்படுவதாகவும் இருப்பதால், அதன் காரியமாகவும், அதன் சரீரமாகவும் அதனால் நியமிக்கப் படாததும் எதுவும் இல்லை என்பது விளக்கப்படுகிறது.
இதே பொருள், திருவாய்மொழி 1-1-6ஆம் பாசுரத்திலும் அருளிச் செய்யப்படுவதால், இரண்டிற்கும் கருத்தொற்றுமை உண்டு. இந்த பாதத்தின் பொருளை, ‘‘அதத்கார்ய-அதச்ச2ரீர- அததா3த்மகஸ்த்வ ஸம்ப4வ:’’ ‘‘ப்ரஹ்மத்தினால் படைக்கப் படாததும், ப்ரஹ்மத்தை சரீரமாகக் கொள்ளாததும், ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொள்ளாததுமான வஸ்து கிடையாது என்பது சொல்லப் படுகிறது’’,என்று ச்ருதப்ரகாசிகா பட்டரும், ‘‘நிரவதி மஹிமா’’ (அதிகரணஸாராவளி. 19), ‘‘எம்பெருமான் உலகத்தைப் படைப்பவன், உலகத்தை தேஹமாக் உடையவன், உலகிற்கு ஆதாரமானவன், அளவற்ற பெருமையை உடையவன்’’, என்ற சொல்லால் தேசிகரும் அருளிச் செய்துள்ளார்கள்.
நான்காம் பாதம் முதல் அதிகரணத்தில் (ஆநுமாநிகாதி4 கரணம் 1-4-1 ), தத2தீ4நத்வாத3ர்த்த2வத் - ப்ரஹ்ம ஸூத்ரம். 1-4-3 - ப்ரஹ்மத்திற்கு அதீனமாயிருப்பதால் (ஆத்மாதி கள் எல்லாம் பயன் பெறும்.) தத3தீ4நத்வாத் - (பரமபுருஷனுக்கு) வசப்பட்டிருக் கையால், அர்த்த2வத் - (மூலப்ரக்ருதி) பயனுடையதாகிறது; என்னும் ஸூத்ரத்தால், ஜகத்திற்கு ப்ரஹ்மம் ஆத்மாவாக இருப்பது சொல்லப்பட்டது.
இரண்டாம் அதிகரணத்தில் (சமஸாதி4கரணம் -1-4-2),
‘‘அஜாமேகாம் லோஹிதஶுக்லக்ருஷ்ணாம்
ப3ஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமாநாம் ஸரூபா:
அஜோ ஹ்யேகோ ஜுஷமாணோ(அ)நுஶேதே
ஜஹாத்யேநாம் பு4க்தபோ4கா3மஜோ(அ)ந்ய:
(ஶ்வே. 4-5)
 சிவப்பு (ரஜஸ்), வெளுப்பு (ஸத்வம்), கறுப்பு (தமஸ்) என்னும் மூன்று நிறங்களை (குணங்களை) உடையதாய், தன்னைப்போன்ற பல பிரஜைகளை உண்டாக்குவதாய், பிறப்பற்றதான ஒன்றோடு (மூல ப்ரக்ருதியோடு) பிறப்பற்ற ஒருவன் (ஸம்ஸாரி ஜீவன்) உகப்புடன் கூடியிருக்கிறான்; அநுபவிக்கப்பட்ட இதை (மூலப்ரக்ருதியை) பிறப்பற்ற மற்றொருவன் (முக்த புருஷன்) விட்டுச்செல்கின்றான் என்று படிக்கப் படுகின்றது. இங்கு ‘அஜா’ (பிறப்பற்றது) என்று மூல ப்ரக்ருதியைப் படிப்பதாலும், பல பொருள்களைத்தானே தன் இச்சையாலே ஸ்ருஷ்டிப்பதாகக் கூறுவதாலும் இம்மந்திரம் ப்ரஹ்மாத்மக மல்லாத ஸ்வதந்த்ர (தன்னிச்சையான) ப்ரக்ருதியையே காரணமாகக் கூறுகின்றது என்பது விளங்கும்; என்னும் ஶ்வேதாஶ்வதர மந்திரத்தின், ‘இந்த அண்டம் ப்ரஹ்மத்தின் கார்யம் இல்லை’’ என்னும் ஐயப்பாடு தோன்றுகிறது.
தைத்தரீயத்தில் இந்த ஐயப்பாடு நீக்கப்படுவது விவரிக்கப்படுகிறது. மூன்றாவது அதிகரணத்தில் (ஸங்க்2யோபஸங்க்3ரஹாதி4கரணம் 1-4-3) சாங்கியர்கள் கூறும், ‘‘யஸ்மிந் பஞ்ச பஞ்சஜநா ஆகாஶஶ்ச ப்ரதிஷ்டி2த:I தமேவம் மந்ய ஆத்மாநம் வித்3வாந் ப்3ரஹ்மாம்ருதோ(அ)ம்ருதம்II’’ (ப்ருஹ. 6-4-17) - ‘எந்த ஆத்மாவிடத்தில் ஐயைந்து (இருபத்தைந்து) தத்துவங்களும் ஆகாசமும் நிலை நிற்கின்றனவோ, பெரிதாய், அழிவற்றதான அவ்வாத்மாவை இவ்வண்ணம் அறியும் மனிதனும் முக்தியடைகிறான்’. [Explanatory Note: The term pancajanas is regarded by the Sankhyas as meaning ''groups, each of which consists of five. ''The five groups of five are: (i) the senses, (ii) the organs of action, (iii) the five elements, (iv) the five rudimentary elements, and (v) the remaining five principles of the Sankhyas. According to Sri Ramanuja, the term stands for ''sense organs'' - tvak or skin, eye, ear, anna or nose and tongue, and mind.]
என்பதால், ‘ஜகத், ப்ரஹ்மத்தின் காரியமல்ல’ என்பது தோன்றும் என்று ஐயப்பட்டு, அதைக் கண்டித்து, ‘அண்டம் ப்ரஹ்மத்தின் காரியம்’ என்று நிலை நிறுத்தப்படுகிறது.
‘‘தமேவம் மந்ய ஆத்மாநம் வித்3வாந் ப்3ரஹ்மாம்ருதோ (அ)ம்ருதம்II’’ (ப்ருஹ. 6-4-17) ‘பெரிதாய், அழிவற்றதான அவ்வாத்மாவை இவ்வண்ணம் அறியும் மனிதனும் முக்தியடைகிறான்’ என்பதே இந்த அதிகரணத்தின் (ஸங்க்2 யோபஸங்க்3ரஹாதி4கரணம்1-4-3) முக்யமான வாக்யம்.
நான்காம் அதிகரணத்தில் (காரணத்வாதி4கரணம் 1-4-4) ‘‘அஸத்’’ மற்றும் ‘‘அவ்யக்தம்’’ போன்ற சொற்கள் ப்ரக்ருதியைக் குறிப்பதல்ல; அது ப்ரளய காலத்தில் ப்ரஹ்மத்தின் நிலையை குறிப்பிடுபவை என்பது விளக்கப் பட்டது.
ஐந்து மற்றும் ஆறாவது (ஜக3த்3வாசித்வாதி4கரணம் 1-4-5, வாக்யாந்வயாதி4கரணம் 1-4-6) அதிகரணங் களில், ஜீவன், காரணனோ, ஆத்மாவோ அல்ல. மாறாக இந்த சொற்கள் ப்ரஹ்மத்தைக் குறிப்பவை என்பது விளக்கப்பட்டது.
ஏழாவது அதிகரணத்தில் (ப்ரக்ருத்யதி4கரணம் 1-4-7 ), ‘ஜகத்திற்கு ப்ரஹ்மமே காரணம்’ என்பது நிலை நிறுத்தப்பட்டது.
எட்டாவது அதிகரணத்தில் (ஸர்வவ்யாக்2யநாதி4 கரணம் 1-4-8), அழிவற்ற தன்மையை அடைய, ப்ரஹ்மமே தியானிக்கப்படவேண்டுமென்பது அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு இந்த அண்டமானது, பரமாத்மாவின் அதீனம், அதன் காரியம், அதை ஆத்மாவாக உடையது. அதைத் தவிர வேறு ஒன்றின் அதீனமாகவோ, கார்யமாகவோ, வேறு ஒன்றை ஆத்மாவாக உடையவையோ அல்ல என்பதை ஸூத்ரகாரர் நிலை நிறுத்துகிறார். இதே பொருள் ஆழ்வாரின், ‘‘நின்றனர் இருந்தனர்’’என்னும் திருவாய்மொழி பாசுரம் 1-1-6இல் அருளிச்செய்யப் பட்டுள்ளது.
நிற்பது, இருப்பது, கிடப்பது, திரிவது என்று செயல்பாட்டில் ஈடுபடுவது மட்டுமில்லாமல், இந்த செயல்பாட்டில் ஈடுபடாமல் இருப்பதும் கூட ஜீவர்களின் தன்மையல்ல. இவை எல்லாம், ப்ரஹ்மத்தின் செயல். அதன் அதீனம், அதன் கார்யம் என்று ஸாமாநாதிகரணத்தால் ஆழ்வார் அருளிச்செய்வதால், இந்த பாசுரம் (1-1-6) முதல் அத்யாயத்தின் நான்காம் பாதத்தின் பொருளோடு கருத்தொற்றுமை கொண்டதாக உள்ளது.
‘‘எந்திடரே’’ என்பதால், இறுதி அதிகரணத்தால் (ஸர்வவ்யாக்2யநாதி4கரணம் 1-4-8) அறியப்படும் ப்ரமாண அர்த்தங்கள் நியமிக்கப்பட்டன.
ஸாரீரகாத்3யாத்4யாயேந கா3தா2ஷட்கஸார்த்த2தா I யதிராண்மதநிஷ்டா2நாம் தி3ங்மாத்ரம் த3ர்ஸித முதே3 II
‘‘சாரீரக சாஸ்த்திரத்தின் முதல் அத்யாயத்தோடு, திருவாய்மொழி முதல் பத்தின் ஆறு பாட்டுக்களோடு உள்ள பொருள் ஒற்றுமை யதிராஜருடைய மதத்தில் ஊன்றிய வர்களின் உகப்பின்பொருட்டு சிறிது காட்டப்பட்டது’’.
  இவ்வாறாக, திருவாய்மொழியின் முதல் ஆறு பாசுரங்கள், ஸ்ரீபாஷ்யத்தின் முதல் அத்யாயத்துடன் கருத் தொற்றுமைகொண்டதாக அறியப்படுகிறது.
4.9. இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்திற்கும் (ஸ்ம்ருதிபாத3ம்),
திடவிசும்பெரிவளி நீர்நிலம்இவைமிசை
படர்பொருள்முழுவதுமாய் அவையவைதொறும்
உடல்மிசைஉயிரெனக் கரந்துஎங்கும்பரந்துளன்*
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே.
திருவாய்மொழி 1-1-7பாசுரத்திற்கும் கருத்தொற்றுமை உண்டு என்பது காட்டித் தரப்படுகிறது. இந்த முதல் பாதத்தில் ப்ரஹ்மத்தைத் தவிர மற்றவைகளுக்கு அண்டத்தின் காரணமாகும் தகுதி உண்டு என்னும் கருத்து விலக்கப் படுகிறது. இதை
தத்ர பரைருத்3பா4விதாஸ்ச தோ3ஷா: பரிஹ்ருதா: ந| (ஸ்ரீபாஷ்யம்-2-ஆம் அத்யாயம் முதல் பாதம்)-’’அங்கு (2-ஆம் அத்யாயத்தின் முதல் பாதத்தில்) பிற மதத்தவர்களால் கூறப்பட்ட தோஷங்கள் கழிக்கப்பட்டன’’, என்று பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார்.
முதல் பாதத்தில் பத்து அதிகரணங்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு? காரணத்தை முன்னிட்டு, ப்ரஹ்மம் ஜகத் காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாக வைக்கப்படுகிறது. இவை தகுந்த காரணங்களால் கண்டிக்கப்படுவது ஸித்தாந்தமாகிறது.
1. ஸாங்க்ய ஸ்ம்ருதிகளுக்கு விரோதமான கருத்துக்களால் ப்ரஹ்மம் ஜகத் காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
‘‘விரோதே4 த்வநபேக்ஷம் ஸ்யாத்’’ (பூர்வ. மீமாம்ஸா. 1-3-3) - ‘(வேதச்சொற்றொடர்களுக்கு) முரண்பாடு காணப்படுகையில் ஸ்ம்ருதியானது கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. ஸாங்க்ய ஸ்ம்ருதி, வேதத்திற்கு புறம்பானதால், அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதல்ல என்பது ஸித்தாந்தம்.
2. சதுர்முக ப்ரஹ்மன், ஜகத் காரணனன் என்று கூறும் யோக ஸ்ம்ருதியுடன் பொருந்தாததால் பரஹ்மம் ஜகத் காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்று. சதுர்முக ப்ரஹ்மன் காரணன் என்பது வேதப்ரமாணம் அல்லாததால் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதில்லை என்பது ஸித்தாந்தம்.
3. மண் காரணமாகவும், குடம் காரியமாகவும் இருப்பது போல், ப்ரஹ்மம் காரணமாகவும், அண்டம் காரியமாகவும் இருப்பது பொருத்தமில்லாததால், ப்ரஹ்மம் ஜகத்காரண மல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
சாணத்திலிருந்து தேள் உற்பத்தியாகிறது. இதில், காரண காரியங்களுக்குப் பொருத்தம் காணப்படவில்லை. இதைப்போல, காரண காரியங்களுக்கிடையே பொருத்தம் இருந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயமில்லை என்பது ஸித்தாந்தம்.
4. பரமாணுவே ஜகத்காரணம் என்பது நிலை நிறுத்தப்படவேண்டும் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்..
பல மதங்கள் கடைபிடிக்கும் இந்த ‘பரமாணுவே ஜகத் காரணம்’ என்னும் கோட்பாடு, வெறும் தர்க்கத்தை அடிப் படையாகக் கொண்டது. இது ப்ரஹ்மத்தை காரணமாகச் சொல்லும் வேதச் சொற்றொடர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்பது ஸித்தாந்தம்.
5. சித், அசித் வடிவமான அண்டத்தை கார்யமாக உடையதால், இவற்றால் ஏற்படும் இன்ப துன்பங்கள் ப்ரஹ்மத்தை பாதிக்கும் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
ப்ரளய காலத்தில், சித், அசித்தோடு கூடிய ப்ரஹ்மம் ஸூக்ஷ்ம நிலையில் காரணமாவதாலும், அதுவே ஸ்தூல நிலையில் (பருத்த நிலையில்) சித் அசித்துடன் கூடிய காரியமாக பரிணமிக்கையில், இன்ப துன்ப வடிவிலான குற்றங்கள் ப்ரஹ்மத்தைப் பாதிக்காது என்பது ஸித்தாந்தம்.
6. காரணத்திற்கும் காரியத்திற்கும் ஒருபடிப்பட்ட தன்மை கூடவே கூடாது என்பது நையாகிகர்கள் முன் வைக்கும் எதிர்வாதம்.
கார்யத்திற்கும், உபாதானமாகிற (மூலப்பொருள்) காரணத்திற்கும் ஒற்றுமை உண்டு என்பது வேதத்தால் அநுமதிக்கப்பட்டது. காரணத்தின் வகைப்படுத்தப்பட்ட வடிவமே காரியம் என்பது ஸித்தாந்தம்.
7. ப்ரஹ்மம் என்பது ஜீவனிலிருந்து வேறுபடாத தாகையால், இன்ப துன்பங்கள் அதை பாதிக்கும் என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
ப்ரஹ்மனும் ஜீவனும் ஒன்றாக இருந்தபொழுதிலும், இருவருக்கும் ஸ்வரூபத்தில் (பண்பில்) ஒற்றுமை கிடையாது. எனவே, இன்ப துன்பங்கள் ப்ரஹ்மத்தை தீண்டாது என்பது ஸித்தாந்தம்.
8. உலகத்தில் எந்த ஓர் தொழிலை செய்பவனுக்கும், அவன் உபயோகிக்க, உபகரணங்கள் தேவை. இதைப் போல, உபகரணங்களின் தேவை காணப்படாததால், ப்ரஹ்மம் ஜகத் காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
பால் தயிராவதற்கு எந்த உபகரணமும் தேவை யில்லை. இதே போல் ப்ரஹ்மம் எந்தவிதமான உபகரணங் களின் துணையில்லாமல் அண்டத்தை உண்டாக்கும் என்பது ஸித்தாந்தம்.
9. ப்ரஹ்மம் கார்யமாக பரிணமிக்கும்போது அவயவங் களுடன் உள்ளது. இது காரணமான நிலையில் ப்ரஹ்மம் அவயவங்களற்றது என்பதுடன் பொருந்தாது என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
ப்ரஹ்மம் விசித்திரமான சக்தியைப் பெற்றிருப்பதால், ‘‘அவயமற்றது’’ என்னும் தன் ஸ்வரூபம் கெடாமலேயே அவயவங்களுடன் கூடிய காரியமான அண்டமாக மாற இயலும் என்பது ஸித்தாந்தம்.
10. எல்லா விருப்பங்களும் ஈடேறப்பெற்ற ப்ரஹ்மம், எந்த காரணத்திற்காக அண்டத்தைப் படைக்கவேண்டும்? எனவே, ப்ரஹ்மம் ஜகத்காரணமல்ல என்பது எதிர்வாதம் செய்பவரின் கூற்றாகும்.
பரிபூர்ணனான ப்ரஹ்மத்திற்கு, இந்த ஜகத்ஸ்ருஷ்டி வெறும் லீலையே என்பது ஸித்தாந்தமாக வைக்கபட்டது.
இந்த பத்து அதிகரணத்தின் பொருளை வேதாந்த தேசிகர், தம்முடைய ஸாராவளியிலே இவ்வாறு அருளிச் செய்கிறார்:-
‘‘ஸாங்க்2ய ஸ்ம்ருத்யா விரோதா4த்4விதி4மத விஹதே: கார்யவைரூப்யதோ(அ)ஸ்மிந் ஏகார்த்தே2 (அ)நேக தந்த்ரோ தி3த விஹதிதயா தே3ஹ போ4கா3 வியுக்த்யா I கார்யோ பாதா3ந பே4தா3த் ஸ்வஹித விஹதித: காரகஸ்தோமஹாநே: க்ருத்ஸ்நாம்ஶாத்யூஹ பா3தா3த் க்ருதி விப2லதயா வ்யர்த்தி2 தம் ப்ரத்யவித்4யத் II (22), (வேதாந்தவாக்யங்களோடு) கபிலஸ்ம்ருதிக்கு விரோதம் வருகையாலும், ஹிரண்யகர்பரால் செய்யப்பட்ட யோக சாஸ்த்ரத்தோடும் விரோதிக்கையாலும், படைக்கப்படும் உலகமும், ப்ரஹ்மமும் பொருந்தா மலிருப்பதாலும், பற்பல மதங்களோடு விரோதிக்கையாலும், அண்டத்தை ஸரீரமாகக் கொண்டதால் ப்ரஹ்மத்திற்கு பாதகம் ஏற்படுகையாலும், கார்யத்திற்கும் காரணத்திற்கும் ஒருபடிப்பட்ட தன்மை கூடாதாகையாலும், ஜீவனிலிருந்து ப்ரஹ்மம் வேறுபடாமை யால் தோஷங்கள் ஏற்படுகையாலும்,
ப்ரஹ்மத்திற்கு உபகரணங்கள் தேவைப்படாமை பொருந்தா தாகையாலும், ப்ரஹ்மம் உலகமாக ஆவது, ஒரு பகுதியா? முழுமையாகவா? என்ற கேள்வியில் இரண்டுமே பொருந்தா தாகையாலும், ப்ரஹ்மம் உலகைப் படைப்பது எதற்காக? தன் ப்ரயோஜநத்திற்காகவா, பரப்ரயோஜநத் திற்காகவா, இரண்டுமே பொருந்தாதாகையாலும் எழுந்த ப்ரஹ்மத்தின் ஜகத்காரண ஸந்தேஹங்களை ஸூத்ரகாரரான வ்யாஸர் (இரண்டாம் அத்யாயத்தின் முதல் பாதத்தில்) கண்டித்தார்.
இந்த முதல் பாதத்தின் பொருளைத் தம்முடைய திருவாய்மொழி பாசுரம் (1-1-7)இல்
திடவிசும்பெரிவளி நீர்நிலம்இவைமிசை*
படர்பொருள்முழுவதுமாய் அவையவைதொறும்*
உடல்மிசைஉயிரெனக் கரந்துஎங்கும்பரந்துளன்*
சுடர்மிகுசுருதியுள் இவையுண்டசுரனே’’
என்று அருளிச் செய்கிறார், ஆழ்வார். ‘உறுதியான ஆகாசம், ஒளி, காற்று, நீர், மண் ஆகிய எல்லாவற்றிற்கும் காரணமாக, அந்த பொருள்கள் எல்லாவற்றிலும், உடல்களில் ஆத்மா நுழைந்து இருப்பதைப்போல உட்பிரவேசித்து நியமிப்பவனாய், அவற்றில் காணப்படாதவனாய், அவற்றில் முழுமையாக வசித்து அவற்றின் தோஷங்களால் பாதிக்கப் படாதவனாய், வேதத்தால் அறியப்படுபவனாக இருக்கும் தேவனாக பரமாத்மாவை ஆழ்வார் காட்டித்தருகிறார்.
முதல் பாதம், (ஸ்ம்ருதிபாதம் 2-1) இரண்டாம் பாதம் (தர்க்கபாதம் 2-2) மற்றும் மூன்றாம் பாதம் (வியத்பாதம் 2-3) ஆகிய பாதங்களில், ஸாங்க்யயோகம் போன்றவை முன் வைக்கும் காரணங்கள், வேதத்திற்குப் புறம்பானவை என்று கண்டித்து, வேதம் ப்ரஹ்மத்தை ஜகத்காரணமாக காட்டித் தருவதை, ‘சுடர் மிகு சுருதியுள்’ (1-1-7) என்னும் சொற்றொடரால் ஆழ்வார் அருளிச் செய்கிறார்.
மூன்றாம் அதிகரணத்தில் (விலக்ஷணத்வாதி4 கரணம் 2-1-3), ‘‘ஆகாசம்’’ போன்ற வற்றிற்கும் ஜகத் காரணமாக இருப்பது பொருந்தாது. அவற்றிற்கும் காரணமாய் இருப்பது ப்ரஹ்மமே என்பது அறிவிக்கப்படுகிறது. இதையே ஆழ்வார் ‘‘திடவிசும் பெரிவளி’’ என்று விவரிக்கிறார்.
‘‘ஆகாஶாத் வாயு:’’(தை.ஆந.1-2) - ஆகாசத் திலிருந்து வாயு உண்டாகிறது. என்று காற்றிற்கு ஆகாயத் துடன் வடிவத்தில் ஒற்றுமை இல்லாவிட்டாலும், ஆகாயம் காரணமாக சொல்லப்பட்டது. இதை ஸாங்கியர்கள் கோட் பாடு அநுமதிக்கிறது. இதைப் போலவே ஜகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் வடிவத்தில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் கார்ய காரணபாவம் கூடும் என்பதை, ‘‘திடவிசும்பு’’ (1-1-7) என்னும் இந்த பாசுரத்தில் அருளிச் செய்கிறார், ஆழ்வார்.
பாஷ்யகாரர் இந்த விஷயத்தை, சாணத்திலிருந்து, தேள் உருவாவதை உதாரணமாகக் காட்டுகிறார். ஆகாசத் திலிருந்து காற்று உற்பத்தியாவதை உதாரணமாகக் காட்டுவதைக் காட்டிலும், இது எளிமையானது. குறைந்த அறிவுள்ளவர்களுக்கும் புரியும் என்பதே பாஷ்யகாரரின் திருவுள்ளம்.
‘த்3ருஶ்யதே து’ - 2-1-6- (ஈ முதலானவற்றிலிருந்து அவற்றிலும் மிகவும் வேறுவகைப்பட்ட புழு முதலானவை உண்டாவது காணப்படுகிறது; (ஆகையால் ப்ரஹ்மத்திட மிருந்து மிகவும் வேறுவகைப்பட்ட உலகம் உண்டாவதில் குறையில்லை).
என்பது சாஸ்த்ரங்களுக்கும் ப்ரத்யக்ஷமாக காணப் படுபவைகளுக்கும் பொதுவானது.
‘த3ர்ஶநாச்ச’ 3-1-20 - ச்ருதியிலும் (பஞ்சமா ஹுதியில்லா மலே சிலர்க்கு தேஹமுண்டாவதாகக்) காண்கையாலும் (இது தெளிவாகும்).
‘ஸ்ம்ருதேஶ்ச’ 4-3-10 - ஸ்ம்ருதியிலிருந்தும் (இவ்வர்த்தம் விளங்குகிறது).
‘‘க்ருதாத்யயேநுஶயவாந் த்3ருஷ்ட ஸ்ம்ருப்4யாம் யதே2தமநேவம் ச’’ - 3-1-8, - செய்யப்பட்ட கர்மம் (பலமநுபவிக் கப்பட்டு) முடிந்தபின், கர்மஶேஷத்தோடு கூடியவனாகவே (ஜீவன் திரும்பி வருகிறான்); ச்ருதி ஸ்ம்ருதிகளிலிருந்து (இது அறியப் படுகிறது); (ஒரு பகுதி) சென்ற வழியாகவும், (மற்றொரு பகுதி) வேறுவழியாகவும் (திரும்பி வருகிறான்), போன்ற ஸூத்ரங்களில், இந்த சொற்கள் ‘ச்ருதி பரமாகவே’ உள்ளன.
உபஸம்ஹாரத3ர்ஶநாதி4கரணத்தில் (2-1-8) - உபஸம்ஹாரத3ர்ஶநாத்நேதி சேந்ந க்ஷீரவத்3தி4 2-1-24 - (உலகில் கார்யப்பொருள் களை உண்டாக்கும்போது உபகரணங்களை) உதவியாகக் கொள்வதைக் காண்கிறோ மாகையால். - (அத்தகைய உபகரணங்களற்ற பரம்பொருள்) காரணமாகமாட்டாது; எனில், இவ்வா க்ஷேபம் பொருந்தாது; பால் உபகரணங்களின் உதவி யில்லாமல் தயிராகுமிடத்திற் போலே (உபகரணமற்ற ப்ரஹ்மமும் காரணமாகலாம்) இது உலகில் பிரஸித்தம்., பாலானது தானாக தயிர் ஆவதைப்போன்றது, ப்ரஹ்மம் அண்டத்தைப் படைப்பது.
‘தே3வாதி3வத3பி லோகே’ 2-1-25 -தம் தம் உலகில் தேவர் முதலானார் (ஸங்கல்பமாத்திரத்தினால் ஸ்ருஷ்டிப்ப தாக சாஸ்திரங்களிலிருந்து அறியப்படுவது) போலே; (ப்ரஹ்மமும் ஸங்கல்பத்தினால் உலகை ஸ்ருஷ்டிக்கக் குறையில்லை). மேலிரண்டு ஸூத்ரங்களாலும் இத்தை அறிவிக்கிறார்.
உலகியல் விஷயமான பால் தயிராவதை, உதாரண மாகக் காட்டி, ப்ரஹ்மம் அண்டத்திற்குக் காரணம் என்பதை நிரூபிப்பதைக் காட்டிலும், வேத ப்ரமாணங்கள் சிறந்தவை என்பதை, ‘‘தே3வாதீ3நாம் வேதா3வ க3தஶக்தீநாம் த்3ருஷ்டாந்ததயோபாதா3நம், ப்3ரஹ்மணோ வேதா3வக3த ஶக்தே: ஸுக2க்3ரஹணாயேதி ப்ரதி பத்தவ்யம்’’ (ஸ்ரீபாஷ்யம் 2-1-25) - ‘‘தேவதைகள் ஸங்கல்பத்தினாலே அவரவர்களுக்கு வேண்டியதை ஸ்ருஷ்டிக்கிறார்கள் என்பதை வேதத்தின் மூலமாக அறிவதைப் போலே என்று சான்றாதாரம் காட்டியது, ப்ரஹ்மமும் ஸங்கல்பத்தினாலேயே இவ்வுலகைப் படைக்கிறது என்பதும் வேதத்தின் மூலமாகவே அறியவருகிறது தெளிவாகக் காட்டுவதற்காகவாம்’’, என்று பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்கிறார். இதே பொருளை, அதாவது ,கார்யத்திற்கும் காரணத்திற்கும் உருவ ஒற்றுமை இல்லா விட்டாலும், கார்யம் ஏற்படும் என்பதை, ‘‘திடவிசும்பு’’ (திருவாய். 1-1-7) என்பதில், ஆழ்வார் காட்டித் தருகிறார்.
ஐந்தாம் அதிகரணத்தில் (போக்த்ராபத்த்யதி கரணம் 2-1-5 ), சித், அசித் வடிவத்திலான அண்டத்தின் தோஷம், இவற்றின் உள்ளுறையும் ப்ரஹ்மத்தைத் தீண்டாது என்பதை- ‘‘உடல்மிசை உயிரெனக் கரந்து’’ (திருவாய். 1-1-7) என்பதால் காண்பிக்கிறார் ஆழ்வார். உடலிலே, உயிரானது (ஜீவன்) மறைந்திருந்து, உடலை நியமித்துக் கட்டுப் படுத்துவதைப் போல், பரமாத்மா மறைந்திருந்து இந்த முழு அண்டத்தை நியமித்துக் கட்டுப்படுத்துகிறான் என்று தெளிவாகக் காட்டித்தருகிறார்.
ஆறாவது அதிகரணத்தில் (ஆரம்ப4ணாதிகரணம் 2-1-6) கார்யத்திற்கும் உபாதானத்திற்கும் (மூலப்பொருளி ற்கும்) உள்ள ஒற்றுமை காட்டித் தரப்படுகிறது. இதே கருத்தை ஆழ்வார் ‘‘திடவிசும் பெரிவளி------ முழுவதுமாய்’’ (திருவாய். 1-1-7) என்று ஸாமாநாதிகரணத்தால் அருளிச் செய்கிறார்.
ஏழாம் அதிகரணத்தில் (இதரவ்யபதே3ஶாதி4 கரணம் 2-1-7), கரணங்கள் (பொறிகள்) இருப்பதாலும், இல்லாததாலும் ஏற்படும் குற்றம், ப்ரஹ்மத்தைத் தீண்டாது என்பது, ‘‘உடல்மிசை உயிரெனகரந்து’’ (திருவாய். 1-1-7) என்பதால் உணர்த்தப்படுகிறது. இத்தால், ஜீவனுக்கும் ஈச்வரனுக்கும் உடலுக்கும் உயிருக்கும் இடையே அமைந்துள்ள தொடர்பினைப் போன்றதாகும்.
எட்டாம் அதிகரணத்தில் (உபஸம்ஹாரத3ர்ஶநாதி4 கரணத்தில் 2-1-8), ‘அண்டத்தைப் படைக்க ப்ரஹ்மத்திற்கு எந்தவிதமான உபகரணமும் தேவையில்லை; அதற்கு வெறும் ஸங்கல்பமே போதும்’ என்பது விளக்கப்பட்டது. இந்த கருத்தை ஆழ்வார், ‘‘இவையுண்ட சுரனே’’ (திருவாய். 1-1-7) என்று அருளிச் செய்கிறார். அதாவது, ‘‘சுரன்’’ எனப்படும் பரமாத்மா ஆச்சர்யமான சக்தி படைத்தவன்; அவனுக்கு உபகரணங்கள் தேவையில்லை; ‘ஸங்கல்பமே போதும்’ என்று அருளிச் செய்யப்பட்டது. இந்த கருத்தை, பாஷ்யகாரர், ‘‘யதா2 தே3வாத3ய: ஸ்வே ஸ்வே லோகே ஸங்கல்பமாத்ரேண ஸ்வாபேக்ஷிதாநி ஸ்ருஜந்தி, ததா2(அ)ஸௌ புருஷோத்தம: க்ருத்ஸ்நம் ஜக3த் ஸங்கல்பமாத்ரேண ஸ்ருஜதி’’- தேவதைகள் தமக்கு உரிய உலகங்களில், தாம் விரும்பும் பொருள்களை, வெறும் சங்கல்பத்தாலேயே படைப்பதைப்போல, இந்தப் புருஷோத்தமனும், இந்த முழு அண்டத்தை வெறும் சங்கல்பத்தாலேயே படைக்கிறான். என்ற ஸூத்ர வாக்கியத்தாலும் ( தே3வாதி3வத3பி லோகே - 2-1-25) அருளிச் செய்துள்ளார்.
ஒன்பதாம் அதிகரணத்தில் (க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4 கரணம் 2-1-9 ), ‘‘எல்லா விருப்பங்களும் ஈடேறப்பெற்ற பரமாத்மா, வெறும் லீலைக்காக இந்த அண்டத்தைப் படைக் கிறான்’’ என்பது சொல்லப்பட்டது. இதை, ‘‘இவையுண்ட சுரனே’’ (திருவாய். 1-1-7) என்று அருளிச் செய்கிறார், ஆழ்வார். ‘‘அமரா நிர்ஜரா தேவாஸ்த்தித3ஶா விபு3தா4ஸ் ஸுரா:’’- ‘‘அமர:, நிர்ஜர:, தே3வ:, த்ரித3ஶ:, விபு3தா4:, ஸுர: ஆகியவை தேவர்களைக் குறிக்கும் சொற்கள்’’, என்று நாமாலிங்காநுஶாஸனம் (அமரகோசம்) இருக்கையாலே, என்பதில் ‘ஸுரா’ என்றால், ‘தேவன்’ என்று பொருள் படுகிறது. தேவன் யார் என்பது,
‘‘தி3வு-கிரீடா விஜிகீ3ஷா வ்யவஹார த்4யுதி ஸ்துதி மோத3 மத3 ஸ்வப்ந காந்தி க3திஷு’’(தாதுபாடம்) ‘‘திவு’’ என்னும் வினை, விளையாட்டு, வெல்வதில் விருப்பம், பேச்சு, ப்ரகாசம், ஸ்தோத்ரம், சந்தோஷம், கர்வம், ஸ்வப்நம், ஒளி, செல்லுதல் ஆகிய பொருள்களில் வரக்கூடியது. - என்னும் தாதுபாடத்தால், ‘‘க்ரீடாத்வம்’’- விளையாட்டு - ‘தேவன்’ என்பதன் பொருள் என்று உறுதிபடுத்தப்படுகிறது. எனவே, ‘சுரன்’ என்பது ‘தேவன்’-’தேவன்’ என்பது, விளையாட்டை உடையவன்’ என்னும் நியாயத்தால் ஆழ்வார் பரமாத்மா அண்டத்தைப் படைப்பது லீலைக்காக என்பதை இந்த வரியில் காட்டித்தருகிறார்.
பத்தாவது அதிகரணமும் (ப்ரயோஜநவத்த்வாதி4 கரணம் 2-1-10 ), ‘ஜகத் ஸ்ருஷ்டி பரமாத்மாவின் லீலை வடிவானது’ என்பதைக் கூறுகிறது. இதை,
‘‘தம: ......... ஏகீ ப4வதி’’ (ஸுபால.- 2) - தமஸ் ஒன்றாகிறது. ஆகையால், அவ்யக்தத்தைத் தன் உடலாகக் கொண்ட மிக உயர்ந்த ப்ரஹ்மத்திடமிருந்து மட்டுமே, எல்லாப் பொருள்களின் தோற்றம் என்பது அறியப்படுகிறது. என்று ஸுபாலோபநிஷத் காட்டித்தருகிறது.
இவ்வாறு திருவாய்மொழி 1-1-7ஆம் பாசுரத்திற்கும், ஸ்ரீபாஷ்யம் இரண்டாம் அத்யாயம் முதல் பாதத்திற்கும் கருத்தொற்றுமை உள்ளது அறியப்படுகிறது.
5.0. ஸ்ரீபாஷ்யத்தின் இரண்டாம் அத்யாயத்தின் (அவிரோதா4த்4யாய:) இரண்டாம் பாதம் ‘‘தர்க்க பாதம்’’ எனப்படுகிறது. இதற்கும் திருவாய் மொழி 1-1-8 மற்றும் 1-1-9 பாசுரங்களுக்கும் கருத்தொற்றுமை உள்ளது காட்டப்படுகிறது. இந்த இரண்டாம் பாதத்தில், முக்யமாக பிற தர்சனங்களின் கண்டனம் காணப்படுகிறது. இதை பாஷ்யகாரர்,’’ஸ்வபக்ஷரக்ஷணாய பரபக்ஷா: ப்ரதிக்ஷிப் யந்தே’’ (ப்ர.ஸூத்.2-2-1)- இந்தப் பாதத்தில் விசிஷ்டாத் வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டு வதற்காக மற்ற பல மதங்கள் சான்றாதாரங்களின் அடிப்படையைக் கொண்டு மறுக்கப்படுகின்றன, என்று அருளிச் செய்கிறார். ஆழ்வாரின் திருவாய்மொழி 1-1-8, 1-1-9ஆம் பாசுரங்களும் இதையே காட்டித்தருகின்றன.
சுரரறிவருநிலை விண்முதல்முழுவதும்
வரன்முதலாயவை முழுதுண்டபரபரன்
புரமொருமூன்றெரித்து அமரர்க்கும்அறிவியந்து*
அரனயனென உலகழித்தமைத்துளனே. (1-1-8)
உளனெனில்உளன் அவனுருவம்இவ்வுருவுகள்
உளனலனெனில் அவனருவம்இவ்வருவுகள்
உளனெனஇலனென இவைகுணமுடைமையில்*
உளனிருதகைமையொடு ஒழிவிலன்பரந்தே. (1-1-9)
இந்த இரண்டாம் பாதத்தில், எட்டு அதிகரணங்கள் உண்டு. 1. ரசநாநுபபத்யதிகரணம் (2-2-1), 2. மஹத் தீ4ர்க்காதி4கரணம் (2-2-2), 3. ஸமுதா3யாதி4கரணம் (2-2-3), 4. உபலப்3த்4யதி4கரணம் (2-2-4), 5. ஸர்வ தா2நுபபத்த்யதி4கரணம் (2-2-5), 6. ஏகஸ்மிந்ந ஸம்ப4வாதி4கரணம் (2-2-6), 7. பஶுபத்யதி4 கரணம் (2-2-7), 8. உத்பத்த்யஸம்ப4வாதி4கரணம் (2-2-8), இதில் ஒவ்வொன்றும் ஓர் புற சமயத்தின் தவறான கண்ணோட்டத்தைக் கண்டிக்கிறது.
1. ‘ப்ரக்ருதியே ஜகத் காரணம்’ என்று கூறும் சாங்கிய மத கோட்பாடு மறுக்கப்படுகிறது.
2. ‘பரமாணுக்களே ஜகத்காரணம்’ என்னும் வைசேஷி கர்களின் கொள்கை, அது தர்க்க ரீதியாக நிலை பெறாதது என்பதால் ஒதுக்கப்படுகிறது.
3. ‘பரமாணுக்களே அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணம்’ என்னும் வைபாஷிக சௌத்ராந்திர பௌத்தர்களின் கொள்கை மறுக்கப்படுகிறது.
4. ‘வெளிப்பொருள் என்பது எதுவுமே இல்லை. எல்லாமே விஞ்ஞானம்தான்’ என்னும் யோகாசாரர்களின் (பௌத்தர்களில் ஒரு பிரிவு) கூற்று தள்ளப்படுகிறது.
5. ‘தத்வம் என்பது நிர்ணயிக்க இயலாத ஒன்று’ என்று வாதிடும் மாத்யாமிக பௌத்தர்களின் சூன்ய வாதம் இதில் காணப்படும் முரண்பாடுகளால், கண்டிக்கப்படுகிறது.
6. ‘‘சப்த பங்கி’’ எனப்படும் ஏழு மடங்கான விதி முறையைக் கொண்டு ஜைனர்கள் விளக்க முற்படுவது நிலை நிற்காது என்பதால் மறுக்கப்படுகிறது.
7. வேதத்திற்குப் புறம்பான சடங்குகளும், வழிபாட்டு முறைகளும் குறையுள்ள தத்துவ கோட்பாடுகளும் உடைய பாஶுபத மதம் ஒதுக்கப்படுகிறது.
8. ஜீவனின் தோற்றம் குறித்து எழும் சில மறுப்புக் களை, தகுந்த விளக்கங்களோடு விளக்கி பாஞ்சராத்ர ஆகமம் சான்றாதாரமாக விளங்கும் தன்மையை நிலை நிறுத்துகிறது இந்த அதிகரணம்.
இந்த பாதத்தில் (2-2) காணப்படும் விஷயங்களின் சுருக்கத்தை, வேதாந்த தேசிகர் கீழ்க்கண்டவாறு தம்முடைய அதிகரணஸாராவளியில் அருளிச் செய்கிறார். *
பாதே3(அ)ஸ்மிந் காபிலஸ்தை2: கணபு4க3பி4மதைர் பெ3ளத்3த4வைபா4ஷி காத்3யைர்யோகா3சாராபி4தா4நைஸ் ஸுக3தமத ரஹஶ்ஶூந்யவாத3ப்ரஸக்தை: I அர்ஹத்ஸித்3 தா4ந்தப4க்தை: பஶுபதி ஸமய ஸ்தா2யிபி4 ஶ்சாவரோத4ம் க்ஷிப்த்வா (அ)தோ2 பஞ்சராத்ரம் ஶ்ருதிபத2மவத3த் பஞ்சமாம்நாயத3ர்ஶீ II (44)
இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தில், மஹா பாரதமான ஐந்தாம் வேதத்தை அறிந்த வ்யாசர், கபில மதத்தைச் சார்ந்தவர்கள், கணாத மதத்தைச் சார்ந்தவர்கள், வைபாஷிகர்கள், பௌத்தர்கள், யோகா சாரர்களாகிற பௌத்தர்கள், மாத்யாமிகர்களாகிற ரஹஸ்யமான சூந்ய வாதத்தைக் கைக் கொண்டவர்கள், ஜைநஸமயக் காரர்கள், பாஸுபதமதத்தில் ஊன்றியவர்கள் ஆகியவர்க ளோடு ஏற்பட்ட வாதத்தில் ஏழு அதிகரணங்களால் அவர்களை நிரஸித்து, மேலே உத்பத்த்யஸம்பவாதி கரணத்தில், ஸ்ரீபாஞ்சராத்ர ஆகமமானது வேத மார்க்கத்தில் நிலை நின்றதாகத் தெளிவாக ஸ்தாபித்தார்.
மேற்கூறிய மதக்கோட்பாடுகளில் ஸாங்கியர்களும், வைசேஷிகர்களும், பாசுபதர்களும் வேதத்தை அங்கீகரிப் பவர்கள். மற்ற மதங்கள் வேதத்தை ப்ரமாணமாக ஏற்ப தில்லை. வேதச் சொற்றொடர்களுக்கு தம்முடைய மதக் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி பொருள் கூறுவர்.
இந்த இரண்டு வகைப்பட்டவர்களுள் முதல் வகையைச் சேர்ந்தவர்களை, திருவாய்மொழி ‘‘சுரரறி வருநிலை’’(1-1-8) பாசுரத்தில் குறிப்பிடுகிறார் ஆழ்வார். இரண்டாம் வகைப்பட்டவர்களை, ‘‘உளனெனில் உளன்’ என்னும் திருவாய்மொழி (1-1-9) பாசுரத்தில் காட்டித் தருகிறார்.
சுரரறிவருநிலை விண்முதல்முழுவதும்
வரன்முதலாயவை முழுதுண்டபரபரன்
புரமொருமூன்றெரித்து அமரர்க்கும்அறிவியந்து*
அரனயனென உலகழித்தமைத்துளனே. (1-1-8)
என்று, ‘‘ப்ரஹ்மன் முதலானவர்களாலும் அறிய இயலாத மூலப்ரக்ருதி தொடக்கமான அனைத்து அண்டங்களுக்கும் காரணமாய் இருந்து, அவற்றை யெல்லாம் அழிக்கும் பராத்பரனான ஈச்வரன், ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் இருந்து கொண்டு, த்ரிபுரத்தை ஸம்ஹாரம் செய்து, ஜகத் ஸம்ஹாரமும் செய்கிறான். சதுர்முகனுக்கு அந்தர்யாமியாக இருந்து, ஜகத்தைப் படைத்து, தேவர்களுக்கு ஞானத்தையும் அளிக்கிறான்’’ என்று இப்பாசுரத்தால், ‘ப்ரஹ்மம் ஜகத்திற்கு ஆத்மாவாக இருப்பதையும், க்ஷேத்ரஜ்ஞர்களான (ஜீவர்கள்) ப்ரஹ்ம ருத்ராதிகளுடைய படைத்தல், அழித்தல் ஆகியவையும், பகவானுடைய அதீனம்’ என்று அருளிச் செய்கிறார்.
இதனால் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகக் கொண்டிராத ப்ரதானத்தை ஜகத் காரணமாகக் கூறும் ஸாங்க்ய மத கோட்பாடும், ருத்ரனுக்கு ஜகத் காரணத்தைக் கூறும் பாசுபத மத கோட்பாடும், பரமாணுவை அண்டத்தின் தோற்றத்திற்குக் காரணமாகக் கூறும் மதங்களும் கண்டிக்கப்படுவது தெளிவாகிறது.
‘‘சுரரறி....முதலாய்’’ (திருவாய். 1-1-8) என்பதால், ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் முதலிய தத்வங்களுக்கும் பரமாத்மாவே காரணம் என்று அருளிச் செய்யப்படுகிறது.
‘‘அவை-பரபரன்’’ (திருவாய். 1-1-8) என்பதால், இந்த அண்டம் முழுவதையும் ஸம்ஹாரம் செய்பவன் ஈச்வரன் என்றும். ஸாங்கிய மதம் ஈச்வரனை அங்கீகரிக்காவிடில், ப்ரதானம் மட்டுமே தன்னடைவே பரிணமிக்கையில், அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவு என்பவை, ஏற்படாது. எனவே, இந்த மதம் ஏற்கத்தக்கதல்ல என்று விளக்கும்.
‘வ்யதிரேகாநவஸ்தி2தேஶ்சாந பேக்ஷத்வாத்’ 2-2-3 - (சேதனனால் அதிஷ்டிக்கப்படுவதை) எதிர்பாராமையால், - ஸ்ருஷ்டியிலும் வேறான நிலையான லயநிலையில் நில்லாமல் (ப்ரக்ருதிக்கு எப்போதும் ஸ்ருஷ்டியே ஏற்பட்டுக் கொண்டு) இருக்கவேண்டி வருமாகையாலும் (ஸ்வதந்த்ர ப்ரக்ருதி ஜகத்காரணமாக முடியாது). என்று இந்த ஸூத்ரத்தின் பொருள் இந்தப் பாசுர (1-1-8) வரிகளில் காட்டப் படுகிறது.
அவயவங்களற்ற பரமாணுக்களுக்கு, ஜகத் காரணம் கூடாதென்கிற நையாயிக மத கண்டனமும், ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம் ஆகியவற்றிற்கு ஈச்வரனே காரணம் என்பதும் இப்பாசுர (1-1-8) வரிகளால் அருளிச் செய்யப்பட்டது.
பாசுபதர்கள் ருத்ரனுக்கு பரத்வத்தைக் கூறுவதை மறுத்திடும் வகையில், ஆழ்வார், ‘‘அரனயனென.....உளன்’’ (திருவாய். 1-1-8) என்று, பகவான் அந்தர்யாமியாக இருப்ப தாலேயே, ருத்ரன் இவற்றைச் செய்கிறான் என்பதைத் தெளிவாக்குகிறார்.
பகவான், ருத்ரனுக்கும், நான்முகனுக்கும் அந்தர்யாமி யாக இருந்து, அழித்தல், படைத்தல் ஆகியவற்றை நடத்து வதை அருளிச்செய்கிறார், ஆழ்வார். இதற்குக் காரணம் அறிவில் குறைந்தவர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பது ஆழ்வார் திருவுள்ளம். பாஷ்யகாரர், ‘‘ருத்ரனை மட்டும் குறிப்பிட்டதற்குக் காரணம், ருத்ரனைச் சொன்னால் அது தன்னிடையே சதுர்முகனையும் சொன்னதாகும்’’ என்னும் கருத்தால் விளக்கப்படுகிறது.
இனி இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களை,
உளனெனில்உளன் அவனுருவம்இவ்வுருவுகள்
உளனலனெனில் அவனருவம்இவ்வருவுகள்
உளனெனஇலனென இவைகுணமுடைமையில்*
உளனிருதகைமையொடு ஒழிவிலன்பரந்தே. (திருவாய்மொழி 1-1-9)
பாசுரத்தில் விவரிக்கிறார் ஆழ்வார். அவர்களை நோக்கி, ‘‘நீ ஒருகால் ஈச்வரனுடைய இல்லாமையை, ‘உளன்’ என்கிற சொல்லால் நிரூபிக்க முயன்றால், அவன் உள்ளான் என்னும் உண்மையே தேறுமே ஒழிய, உன் மதம் கூறும் இல்லாமை தேறாது. ஒருகால் நீ ‘ உளன் அலன்’ என்னும் சொல்லால் இல்லாமையை சாதிக்க நினைத்தால், உலகத்தில் ‘இல்லை’ என்னும் சொல்லுக்கு பருத்த (ஸ்தூல) நிலை போய், நுண்ணியதாக (ஸூக்ஷ்ம) இருப்பதைக் குறிக்குமே ஒழிய, நீ விரும்பும் ஶூந்யத்வம் சித்திக்காது.’’ என்கிறார்.
‘இப்படி உள்ளதும், இன்மையும் குணமாக இருப்பதை, ‘தன்னுடையது, எதிர்தரப்பினரது’ என்று கொண்டால், ‘இருப்பது’ ஆகிய குணங்களுடன் கூடிய ப்ரஹ்மம் சித்திக்கும். இதனால், நீங்கள் உங்கள் மதம் கூறாத பொருளை அங்கீகரிக்க வேண்டி வரும். எனவே, எல்லையற்ற குணங்களை உடைய எம்பெருமானையும் அங்கீகரிக்கலாம்’ என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார்.
பௌத்தமதத்தின் வைபாஷிக பிரிவைச்சேர்ந்தவர் கள், ‘‘காற்று, நீர், நெருப்பு, மண் ஆகியவை அவையவைக்கு உரிய பரமாணுக்கள் ஒன்றாகச் சேருவதால் உருவாகின்றன. அதிலிருந்து சரீரமும், உடலும் தோன்றுகின்றன’’ என்று கூறுகிறார்கள். இப்படி ஏற்பட்ட உடலில் வசிக்கும், விஞ்ஞானமே ஆத்மா என்கிறார்கள். இவற்றிலிருந்து ஜகத்தின் எல்லா வஸ்த்துக்களின் கூட்டங்கள் ஏற்படாது என்பது,
‘‘ஸமுதா3ய உப4யஹேதுகே(அ)பி தத3ப்ராப்தி: (2-2-17) \& பரமாணுவைக் காரணமாகக்கொண்டதான பூமி முதலானவற்றின் ஸமுதாயத்திலும், பூமி முதலான பூதங்களைக்காரணமாகக் கொண்ட சரீரேந்திரிய ஸமுதாயத்திலும், ஸ-முதாயமாகும் தன்மை சேராது’’ என்று அருளிச் செய்யப்பட்டது.
இந்த பரமாணுக்கள், கணநேரத்திற்கே நீடிக்கும் க்ஷணிகமானவை எனப்படுவதால், இவற்றிலிருந்து நிலையான இருப்பினங்களும் ஞானமும் ஏற்படுவது கடினம் என்பதால், இந்த வாதங்கள் சாரீரகத்தில் நிரஸிக்கப்பட்டன. இப்படி, இருப்பது, இல்லாதது, பருத்தநிலை மற்றும் நுண்ணிய நிலைகளுடன் கூடிய வஸ்துவின் அழிவற்ற தன்மையை, ஆழ்வார், ‘‘உளனெனில்’’ (திருவாய். 1-1-9) என்னும் வரிகளில் அருளிச் செய்தார்.
(பௌத்தமதத்தைப் பற்றிய சில குறிப்புகள்: பௌத்தர்கள்: 1.வைபாஷிகர், 2.ஸௌத்ராந்திகர், 3.யோகாசாரர், 4.மாத்யமிகர் என நான்கு வகைப்பட்டவர்கள். அவர்களில் வைபாஷிகர் - பூமி முதலியவைகள் கண்கூடாகப் பார்க்கப்படுகின்றன என்று ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஸௌந்ராந்திகர் - த்ரவ்யங்கள் கண்கூடாகத் தெரிவதில்லை. விஜ்ஞாநத்தைக் கொண்டு வெளியில் த்ரவ்யமிருப்பதாக கருதலளவையின் அடிப்படையில் ஊஹிக்கிறோமென்கிறார். யோகாசாரர் - உள் விஜ்ஞாநம் மட்டுமே உள்ளது. வெளிப் பொருள்களே இல்லை என்கிறார். மாத்யமிகர் - விஜ்ஞாநம் இல்லை. ஸூந்யம் தான் தத்வம் என்கிறார். இவர்கள் கொள்கைகள் இனி விவரிக்கப்படுகிறது.
புத்தருடைய முதல் உபதேசம் சூந்யவாதம். அவருடைய உபதேசத்தை அவ்விதமே ஏற்றுக் கொண்டவன் மாத்யமிகன். இவன் குருவின் உபதேசத்தைக் கேட்டு மேலும் தெளிவுபெறக் கேள்விகள் கேட்காததால் உயர்ந்தவனல்லன். ஆசார்யர் உபதேசித்ததில் ஈடுபாடு கொண்டு அடக்கமாக இருந்ததால் தாழ்ந்தவனுமல்லன். இவன் நடு நிலைமை யுள்ளவனாக மத்யமனாக இருப்பதால் மாத்யமிகன் எனப்படுகிறான்.
ஒருவன் வெளிப் பொருள்கள் இல்லை என்பதை ஒப்புக் கொண்டு, விஜ்ஞானம் இல்லை என்பதை எவ்வாறு ஒப்புக் கொள்ள முடியும்? என்று கேள்வி கேட்டான். ஆகையால் ஒரு விஷயத்தில் யோகம், மற்றொரு விஷயத்தில் பர்யநுயோகம் என்பது கேள்வியாகும். ஸம்மதி (தியானம்), ஆசாரம் (தூய்மை) இரண்டும் உடையவரா என்ற கேள்வியை எழுப்புவதால் அவனை யோகாசாரன் என்கிறார்கள்.
மற்றொருவன் - விஜ்ஞானம் என்பது ஒரே விதமாக இருப்பதில்லை. கடம் - குடம், படம், நீலம், மஞ்சள் என்றவாறு - அதாவது கட ஜ்ஞாநம், படஜ்ஞாநம் என்று பல ஆகாரங்கள் இருக்கின்றன. விஜ்ஞாநத்திற்கு இவ்வாகாரங்கள் வெளியி லுள்ள பொருள்களால்தானே வந்திருக்க வேண்டும். ஆகையால் வெளிப் பொருள்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று விவாதித்தான். புத்தர் அதை அங்கீகரித்தார். ஆனால் அவைகள் கண்ணால் பார்த்து அறியக் கூடியவைகளல்ல. அநுமா னத்தினால் ஊஹித்து அறியக்கூடியவை என்று உபதேசித்தார். அதைக் கேட்டதும் புத்தரைப் பார்த்து, இந்த உபதேச ஸூத்ரத்திற்கு முடிவு எங்கே? என்று கேட்டான். அதனால் ஸௌத்ராந்திகன் எனப்படுகிறான்.
வேறு ஒருவன் முன் சொன்னதை மறுத்து, கண்களால் காண இயலாமல் அநுமானமே உண்டாகாதே என்று கண்களால் காண இயலாத அநுமானம் (கருதலளவை) என்ற சொல் விபாக்ஷை - மாறுபட்டதான பாஷை என்றான். இதனால் புத்தபாஷைக்கு மாறுபட்டதான பாஷையைச் சொன்னதினால் வைபாஷிகன் எனப்பட்டான். இவனை பௌத்தனல்லன் என்று சொல்ல வொண்ணாது. இவனும் யோகாசாரனைப் போலவும், ஸௌத்ராந்திகனைப்போலவும் தாங்கள் ஒப்புக் கொண்ட பொருள்கள் எல்லாம் க்ஷணிகங்கள்(க்ஷணிகம்-ஒரு கணப் பொழுது) என்றான். ஒரு க்ஷணத்திற்கு மேல் இராமல், பிறந்து அழிகின்றன என்று சொல்லுவதால் இவனும் பௌத்தமதத்தைச் சேர்ந்தவனே யாகும்.)
‘‘ப்ரதிஸங்க்2யா(அ)ப்ரதிஸங்2யா நிரோதா4ப்ராப்திர விச்சே2தா3த்’’ (2-2-21), என்னும் ஸூத்ர பாஷ்யத்தில்,’’ஸத உத்பத்திவிநாஶௌ நாமாவஸ்தா2ந்தராபத்திரேவ, அவஸ்தா2யோகி3 து த்3ரவ்யமேகமேவ ஸ்தி2ரமிதி காரணாத3நந்யத்வம் கார்யஸ்ய உபபாத3யத்3 பி4ரஸ்மாபி4:, ‘‘தத3நந்யத்வம்’’ (ப்ரஹ்ம.ஸூத்ரம். 2-1-15) இத்யத்ர ப்ரதிபாதி3த: I நிர்வாணஸ்ய தீ3பஸ்ய நிரந்வய விநாஶத3ர்ஶநாத் அந்யத்ராபி விநாஶோ நிரந்வயோ (அ)நுமீயத இதி சேந் ந, க4டஶராவா தெ3ளம்ருதா3தி3 த்3ரவ்யாநுவ்ருத்த்யுபலப்3த்4யா ஸதோ த்3ரவ்யஸ்யா வஸ்தா2ந்தரா பத்திரேவ விநாஶ இதி நிஶ்சிதே ஸதி ப்ரதீ3பாதெ3ள ஸூக்ஷ்ம த3ஶா பத்த்யா(அ)பி அநுபலம்போ4பபத்தே: தத்ராப்ய வஸ்தா2ந்தரா பத்திகல்பநஸ்யைவ யுக்தத்வாத் II’’ - மேலும், அந்தப் பொருளின் ஒருபடித்தான தொடர்ச்சி நிறுத்தப்படுவதாகிய இயல்பு - நுண்ணிய அழிவு, ‘பொருளின் ஒருபடித்தான தொடர்ச்சியின் முழுமையான அழிவு - ஒவ்வொரு கணமும் நிகழும் காணப்பெறாத அழிவு’. இவற்றை, ‘‘கணநேர நிலைப்பு’’ என்னும் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள். ‘ப்ரதிஸங்க்யா அழிவு’ மற்றும் ‘அப்ரதிஸங்க்யா அழிவு’ என்று பேசுகிறார்கள். இந்த இரண்டுமே இயலாதது. இதுவே இங்கு பெறப்படும் பொருளாகும்.
முழுமையான துண்டிப்பு காணப்படாததால் - ‘இருப்பவைகளை (நிலை பெற்றிருப்பவைகளை) முழுமை யாக துண்டிப்பது இயலாததால்’ - இந்த இயலாமை இவ்வாறானது - இருப்பைப் பெற்றிருக்கும் ஓர் பொருளின் தோற்றம் மற்றும் அழிவு என்பவை. (அந்தப் பொருள்) வேறொரு பெயர் மற்றும் நிலைக்கு மாறுவதைத் தவிர வேறல்ல. ஏனெனில், ஓர் நிலையுடன் தொடர்பு கொண்ட ஓர் பொருள் ஒன்று மட்டுமே, உறுதியாக இருப்பது. இது, ‘கார்யம் என்பது காரணத்தைக் காட்டிலும் வேறுபட்டதல்ல’ என்பதை முன் மொழிகையில். எங்களால் விளக்கப்பட்டது. இந்தச் ஸூத்ரத்தின் தொடர்பில்:
‘‘தத3நந்யத்வம்’’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 2-1-5) - ‘காரணமான ப்ரஹ்மத்தைக் காட்டிலும் (கார்யமான உலகம்) வேறுபடாமலேயுள்ளது’.
இவ்வாறு விவாதிக்கப்படுமாகில், ‘‘அணைக்கப்பட்ட விளக்கின் திறத்தில், முழுமையான அழிவு அறியப்படுவ தால், வேறு ஓர் இடத்தில் உள்ள அழிவு கூட முழுமை யானது என்று முடிவெடுக்கப்படும்’’.
[Explanatory Note: The theory of momentariness requires that the persistence of anything in time must be deemed illusory. It is supposed that destruction overtakes everything in the world every moment, but it is subtle and unobserved. When a pot is seen to exist for a number of moments, a series of similar momentary pots are seen in reality and not one pot. The destruction of a pot by a blow with a hammer is different. It is gross and visible. (The two types of destruction are included by the Buddhists in the 75 dharmas or categories into which they analyse the world. Unobserved destruction includes failure to notice things when the attention is engaged elsewhere. Deliberate destruction as a category refers to the final destruction of bondage.) ]
இல்லை என்று, நாங்கள் பதிலளிக்கிறோம். ‘அழிவு என்பது வேறு ஓர் நிலையை அடைவதைத் தவிர வேறு அல்ல’ என்று உறுதி செய்யப்பட்ட பிறகு, இருப்பைப் பெற்றிருக்கும் ஓர் பொருளின் திறத்தில், பொருளின் தொடர்ச்சி அறியப்படுவதால் - மண் போன்றவற்றின் தொடர்ச்சி குடம், சிறு தட்டு போன்றவற்றில் - வேறு ஓர் நிலையின் ஊகம் முற்கோள் காட்டப்படுவது, விளக்கு போன்றவற்றின் திறத்தில் சரியானதே. ஏனெனில், அங்கே நுண்ணிய நிலையை ஊகிப்பதால், ‘அறியாதது’ என்பது கணக்கிடப்படும்.
[Explanatory Note: Against Ramanuja's argument that destruction means only the passing of a substance into another state, the Buddhists cite the example of a lamp going off. The destruction there is complete, and we should infer a similar but unobserved destruction in the case of pots etc. The reply to this is that the observed persistence of clay in the conditions of pots, potsherds etc. cannot be explained away to suit a mere theory. It will however be legitimate to assume from the persistence of clay that the lamp-flame also persists in a subtle condition. From what is seen, what is unseen can be conceived; but what is seen should not be ignored or denied. ]
என்று, விளக்கப்பட்டிருப்பது, ‘‘உளனெனில் உளன்’’ (1-1-9) என்னும் இவ்வரிகளைக் கொண்டு வ்யாக்யானம் செய்தது தெளிவாக உள்ளது. எனவே, இந்த அதிகரணத்தில் (ஸமுதா3யாதி4கரணம் 2-2-3) அறியப்படும் பொருள், இந்த பாசுரத்தில் (1-1-9) அமைந்துள்ளது என்பது தெளிவு.
சௌத்ராந்திக மதத்தினர் கொள்கைப்படி, வெளியே உள்ள பொருள், நேரடியாக அறியப்படுவதில்லை. ஆனால் அந்தப் பொருளைக் குறித்த அறிதிறனால், அது அறியப் படுகிறது என்பதாகும். இதற்கு அவர்கள் கூறும் விளக்கம்:- ஓர் பொருளை நேரிடையாக அறிவதற்கு இரண்டு கணங்கள் ஆகும்-ஒரு கணத்தில் பார்ப்பது, ஒரு கணத்தில் அறிவது- ஆனால், இவர்கள் கொள்கைப்படி எல்லாமே க்ஷணிக மானதால், இந்த முறையில் பொருள்களின் நேரடி அறிவு ஏற்படாது, என்பதாகும். எனவே, பொருள்கள் அறிவில் ஏற்படும் மனப்பதிவுகளே அறிதலுக்கும் காரணம் என்பது இவர்கள் கூற்று.
எந்தப் பொருளையும் தன்னுடைய மனப் பதிவுகளுக்கு நேராக எடுத்துச் செல்ல (தெரிவிக்க) இயலாது என்பதால், இந்த கோட்பாடு மறுக்கப்படுகிறது. அறிபவனின் அறிவு, கணநேரத்தில் அழிந்து விடுமாகில் அவனால் அறியப்படுவதும் கண நேரத்தில் அழிந்துவிடும். அப்பொழுது, பொருளின் வடிவம் அறிவில் பதிவை ஏற்படுத்தும் என்று சொல்ல இயலாது. சாரீரகத்தில் இவ்வாறு மறுக்கப்பட்டதை, ஆழ்வார், ‘‘அவனுருவம் இவ்வுருவுகள்’ (திருவாய். 1-1-9) என்று அருளிச்செய்கிறார். கண் முதலிய இந்திரியங்களால் அறியப்பட்ட பொருள்களே அறிவால் உணரப்படுகிறது என்பது ஆழ்வாரால், காட்டித்தரப்பட்டது.
யோகாசார மதத்தினர், வெளியே, பொருள்கள் என்பதே கிடையாது; வெறும் விஞ்ஞானம் மட்டுமே உள்ளது என்கிறார்கள். அறிபவனோ, அறியப்படும் பொருளோ கிடையாது; தொடர்ந்து வரும் எண்ணங்கள் மட்டுமே உள்ளன என்கிறார்கள். வெளியே பொருள்கள் இருப்பதை மறுக்க இயலாது என்பதாலும், இந்த வெளிப்பொருள்கள் கனவில் காணப்படுவது போன்றவை அல்ல என்பதாலும், இந்தக் கொள்கை தள்ளப்படுகிறது. ‘நான் அறிகிறேன்’ என்பது உள்மனத்தைப் பற்றியதாகும். அறியப்படும் பொருள் வெளியே உள்ளது. இந்த ‘அறிவும்’, ‘இருத்தலும்’ யோகாசாரர்கள் சொல்வதுபோல் ஒன்றாக இருக்கவே இயலாது என்பதால் தள்ளப்படுகிறது. வெளியே, பொருள் என்பதன் இருப்பு இருந்தே ஆகவேண்டும் என்று சாரீரகத்தில் சொல்லப் பட்டதை, ஆழ்வார் ‘‘அவனுருவம், அவனருவம், ஒழிவிலன்பரந்தே’’ (திருவாய். 1-1-9) என்று அருளிச் செய்கிறார்.
நாபா4வ உபலப்3தே4: (2-2-27), (அறிவு தவிர்ந்த வெளிப்பொருள்கள்) இல்லையென்பது, தவறு; (அவ்வறிவுக்கு விஷயமாக அப்பொருள்கள்) காணப்படுகையால். என்கிற ஸூத்ரத்தில், வெளியே பொருள்கள் இல்லாத சமயத்தில், அதன் உபயோகம் குறித்த அறிவு ஏற்படாது என்று சொல்லப்பட்டதை, ஆழ்வார், ‘உருவம்’’ (1-1-9) என்னும் சொல்லால் காட்டித்தருகிறார்.
‘‘உருவம்’ என்றாலேயே ஸ்தூலமாக-பருத்த நிலையில் உள்ள ஓர் பொருள் என்பதைக் குறிப்பிடும், இந்திரியங்களால் அறியப்படும் ஒன்றிற்கே, ஸ்தூல நிலை உள்ளது. இப்படி இந்திரியங்களால் அறியப்படாவிட்டால், அதன் தன்மை குறித்த அறிவு இல்லாமலேயே போகும். எனவே, ‘வெளியே பொருள்’ என்பது இருந்தே ஆக வேண்டும் என்பதை, ‘உருவம்’ (1-1-9) என்பதால் அருளிச் செய்கிறார், ஆழ்வார்.
ஆனால் பிள்ளை ‘‘ஸர்வசூந்யவாதியை நிரஸிக்கிறார் இப்பாட்டாலே’’ என்றும், ‘ஸர்வதாநுபபத்தே:’ (ப்ரஹ்ம ஸூத்ரம். 2-2-30), எவ்வகையிலும் பொருந்தாதாகையாலும் (ஸர்வசூந்யவாதம் ஒட்டாது), ‘‘இந்த அண்டத்தில் காணப்படும் எல்லாமே, ‘ஸத்’ என்பதும் அல்ல. ‘அஸத்’ என்பதும் அல்ல’’ என்று கூறும் ‘மாத்யாமிக’ மத கண்டனமும் இந்தப்பாசுரத்தில் (1-1-9) காட்டப்பட்டுள்ளது. ‘‘வீடுமின் முற்றின்’’ ப்ரவேசத்திலே ‘‘முதல் திருவாய்மொழி பூர்வத் விகார்த்தம்’’ என்று அவர்தாமே அருளிச் செய்கையாலே, இந்த ப்ரதம தசகத்திலே தத்ஸூசநம் ஆவச்யகம், காதாந்தரத்திலே வைபாஷிகாதி மதநிரஸனம் அநவஸரக்ரஸ்தமாயிருக்கும். இப்பாட்டில் பதங்களும் பூர்வோக்த ப்ரக்ரியையாலே வைபாஷிகதாதிமத நிராஸ ஸூசகங்கள் என்னுமிடம் ஸ்வரஸதஸம்ப்ரதிபந்நம். வைபாஷிக மத நிராஸ ஸூத்ரபாஷ்யமும் இப்பாட்டில் சந்தைகளைக் உட்கொண்டு ப்ரவ்ருத்தம் என்னுமிடம் பூர்வமேவ உபபாதிதமாகையால் பிள்ளைக்கும் இது அபிமதமாகக் குறையில்லை.
ஜைன மத கண்டனமும், இந்தப் பாசுரத்தில் (1-1-9) காட்டப்படுகிறது. இவர்கள் கோட்பாட்டில், ‘ஸத்’ எனப்படும் இருப்பு ‘அஸத்’ எனப்படும் இல்லாமை ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் பொருள்களில் நிகழும் எனப்படுகிறது. இப்படி ‘ஸத்’ மற்றும் ‘அஸத்’ என்னும் இரண்டு நிலைகளும் ஒரு பொருளுக்கு, ஒரே சமயத்தில் ஏற்படாது என்பதால், இந்த மதக் கொள்கை ஒதுக்கப்படுகிறது. இந்தக் கருத்தையே ஆழ்வார், ‘‘உளனெனில் உளன் அவனுருவம் இவ்வு ருவுகள் உளனலனெனில் அவனருவம் இவ்வுருவுகள்’’ (திருவாய். 1-1-9) என அருளிச்செய்தார்.
‘பாஞ்சராத்ர ஆகமம் ப்ரமாணமல்ல’ என்னும் கருத்தை தகுந்த, விளக்கங்களுடன் இல்லையெனச் செய்தார் ஸ்ரீபாஷ்யகாரர். பாஞ்சராத்ர ஆகமத்திற்கு வேதத்திற்கு நிகரான அதிகாரத் தன்மை உண்டு என்பது சாரீரகத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த கருத்தை ஆழ்வார், ‘சுடர்மிகு சுருதியுள்- உளன்’’ ‘‘உளனெனில் உளன் அவனுருவம் இவ்வு ருவுகள் உளனலனெனில் அவனருவம் இவ்வுருவுகள்’’ (1-1-7, 1-1-9) என்னும் வரிகளில் அருளிச் செய்துள்ளார்.
இவ்வாறாக திருவாய்மொழி 1-1-8 மற்றும் 1-1-9 பாசுரங்களுக்கும் இரண்டாம் அத்யாயம் இரண்டாம் பாதமான தர்க்க பாதத்திற்கும் கருத்தொற்றுமை உள்ளது காட்டப்பட்டது.
பரந்ததண்பரவையுள் நீர்தொறும்பரந்துளன்
பரந்தஅண்டமிதென நிலவிசும்பொழிவற
கரந்தசிலிடந்தொறும்இடம்திகழ்பொருள்தொறும்*
கரந்தெங்கும்பரந்துளன் இவையுண்டகரனே.
கரவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை வரனவில்திறல்வலி அளிபொறையாய்நின்ற
பரனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொல் *
நிரனிறையாயிரத்து இவைபத்தும்வீடே. (திருவாய்மொழி1-1-10,11)
ஆகியவை முறையே, சாரீரகத்தில் இரண்டாம் அத்யாயம் மூன்று மற்றும் நான்காம் பாதங்களுடன் கருத்தொற்றுமை கொண்டிருப்பது அடுத்தபடியாக விவரிக்கப்படுகிறது. இந்த அண்டமானது, ப்ரஹ்மத்தின் காரியம் என்று இந்த இரண்டு பாதங்கள் நிரூபிப்பதை இந்த இரண்டு பாசுரங்கள் வெளிப்படுத்துகின்றன என்பதால், கருத்தொற்றுமை உண்டு.
இரண்டாம் அத்யாயம், மூன்றாம் பாதம் ‘‘வியத் பாதம்’’ எனப்படுகிறது. இதன் முதல் அதிகரணத்தில் ‘‘வியத்’’ எனப்படும் ஆகாசத்திற்கு தோற்றம் என்பது உண்டா என்று ஆராயப்படுகிறது. சாந்தோக்ய சொற்றொடர்களால், ஆகாயம் ப்ரஹ்மத்தின் காரியம் இல்லையோ என்னும் ஐயப்பாடு எழுகின்றது. தைத்திரீய உபநிஷத்தில், ‘‘ஆகாஶஸ் ஸம்பூ4த:’’ (தை.ஆந. 1-2), (பரமாத்மா விடமிருந்து) ஆகாசம் உண்டாயிற்று ஆகாசம் தோற்றத்தை உடையது என்று காட்டித்தரப்பட்டிருப்பதாலும், சாந்தோக்யத்தில் வேறு இடங்களில் ஆகாசத்திற்கு தோற்றம் குறிப்பிடப் படுவதாலும், ஆகாசம் ப்ரஹ்மத்தால் தோற்று விக்கப்பட்டதால் அது ப்ரஹ்மத்தின் கார்யம் என்று உறுதிபடுத்தப்பட்டது.
இரண்டாம் அதிகரணத்தில் (தேஜோதி4கரணம் 2-3-2), இந்த ஆகாசத்திலிருந்து, காற்றும், அதிலிருந்து ஒளியும், என்னும் வரிசையில் ஒரு பூதத்திலிருந்து மற்றொன்று தோன்றிற்றா என்னும் கேள்வி எழ, இது அவ்வாறல்ல. ஆகாசத்தை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தி லிருந்தே அவை ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின என்பது உறுதிபடுத்தப்பட்டது.
தேஜோ(அ)தஸ் ததா2ஹ்யாஹ, (ப்ர.ஸூத். 2-3-10)
ப்3ரஹ்ம வ்யதிரிக்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய ப்3ரஹ்ம கார்யத்வமுக்தம், இதா3நீம் வ்யவஹித கார்யாணாம் கிம் கேவலாத் தத்தத3நந்தர காரணபூ4தாத்3வஸ்துந உத்பத்தி:, ஆஹோஸ்வித் தத்தத்3ரூபாத் ப்3ரஹ்மண இதி சிந்த்யதே I கிம் யுக்தம்? கேவலாத் தத்தத்3வஸ்துந இதிI குத:? தேஜஸ்தாவத், அத:- மாதரிஶ்வந ஏவோத்பத்3யதே ‘‘வாயோரக்3நி:’’ (தை. ஆநந்த. 1-1) இதி ஹ்யாஹ II
எல்லா அசேதனப்பொருள்களும் ப்ரஹ்மத்திற்குக் கார்யமாயிருக்கையால், பரம்பொருள் ஜகத்காரணமாகிறது என்று முன் அதிகரணத்தில் கூறப்பட்டது. எல்லாப் பொருள்களுக்கும் ப்ரஹ்மம் நேரே காரணமாகிறதா. அல்லது - முப்பாட்டன் பாட்டனுக்கு நேரே காரணமாகி, தகப்பனுக்கும், தனக்கும் (முறையே) பாட்டன் மூலமாகவும், தகப்பன் மூலமாகவும் பரம்பரையாக காரணமாவதுபோல், ப்ரஹ்மமும் இடைப்பட்ட கார்யப் பொருள்களுக்கு முந்திய காரணப் பொருளின் மூலம் பரம்பரையாக காரணமாகிறதா என்னும் ஐயப்பாடு எழுந்தவளவில், தேஜஸ் முதலான அத்தகைய பொருள்களுக்கு ப்ரஹ்மம் நேரே காரண மாவதில்லை, வாயு முதலான முந்திய காரணப்பொருள்களின் மூலம் பரம்பரையாக காரணமாகவே ஆகிறது என்னும் எதிரியின் வாதத்தைத் தள்ளி, அவ்விடங்களிலும் - அவ்வக்காரணப் பொருள்களை சரீரமாகக்கொண்டு ப்ரஹ்மம் நேரேயே காரணமாக ஆகிறது என்று ஸித்தாந்தம் செய்யப்படுகிறது இவ்வதிகரணத்தில்.
முதலில் ‘தேஜஸ்’ என்னும் அக்நி தத்துவத்தை எடுத்துக் கொண்டால், அது தனக்கு முந்திய ‘வாயு’ எனப்படும் காற்றிலிருந்தே உண்டாகிறதேயொழிய, ப்ரஹ்மத்திடமிருந்து நேரே உண்டாவதில்லை. ஏனெனில். ‘‘வாயோரக்3நி:’’ (தை.ஆந.1.1) (வாயு விடமிருந்து அக்னி உண்டாகிறது) என்றன்றோ ச்ருதி கூறுகிறது. ஆக இப்படி ச்ருதி கூறுகையால். ப்ரஹ்மத்திடமிருந்து பரம்பரையாகப் பிறந்த வாயு விடமிருந்து அக்னி உண்டாகிறது என்று கொள்ள வேண்டுமேயொழிய, ப்ரஹ்மத்திடமிருந்து நேரே அக்னி பிறக்கிறது என்று கொள்ள முடியாது.
மூன்றாம் அதிகரணத்தில் (ஆத்மாதி4கரணம் 2-3-3), ‘‘தோயேந ஜீவாந் வ்யஸஸர்ஜ பூ4ம்யாம்’’ (நாராயண உபநிஷத் 1.1) - ‘‘நீரினால் ஜீவர்களைப் படைத்தான் (பரமாத்மா)’’, என்று ஜீவனை ஸ்ருஷ்டித்ததாக ச்ருதி சொல்வதால் ஜீவனுக்கும் உற்பத்தி உண்டு என்று தெரிகிறது. இதுபோன்ற ச்ருதி சொற்றொடர்களால், ஜீவாத்மாவிற்கு தோற்றம் உண்டோ என்னும் ஐயப்பாடு ஏற்படுகிறது.
‘‘ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்’’ (கடோ. 2-18) - ‘அறிவாளியான ஒருவன் பிறப்பதுமில்லை; இறப்பது மில்லை’, போன்ற ஸ்ம்ருதி சொற்றொடர்களால், ஜீவனுக்கு தோற்றமும் அழிவும் இல்லாதது காட்டப்படுவதால், ஜீவன் நித்யமானவன் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. அதன் ஞானத்தில் சுருக்கமும். விரிவும் ஏற்படக்கூடுமே ஒழிய அது ஸ்வரூபத்தால் நித்யமானது என்று அறியப்படுகிறது.
நான்காம் அதிகரணத்தில் (ஜ்ஞாதிகரணம் 2-3-4),
‘யோ விஜ்ஞாநே திஷ்ட2ந்’’ (ப்ருஹ. 5-7-26) - ‘எவன் விஜ்ஞானத்தில் வசிக்கிறானோ’.’’விஜ்ஞாநம் யஜ்ஞம் தநுதே’’ (தை. ஆந. 5-1) - ‘விஜ்ஞானம் வேள்வியை விரிவுபடுத்துகிறது(பரப்புகிறது). ‘‘ஜ்ஞாந ஸ்வரூபமத்யந்த நிர்மலம்’’ (ஸ்ரீவி.பு. 1-2-6) - ஜ்ஞானத்தில் இயல்பு மிகவும் தூய்மையானது. போன்ற சொற்றொடர்களால், ஜீவன் வெறும் ஞானமே வடிவானவன் என்பது அறியப்படுகிறது. ஆனால், ‘‘விஜ்ஞாதாரமரே கேந விஜாநீயாத்’’ (ப்ருஹ. 6-5-15) - ‘அன்பானவனே! எதனால் ஒருவர் அறிபவனை அறிவார்?’ போன்ற சொற்றொ டர்களால், ஜீவன் அறிபவன் என்பது உணர்த்தப்படுகிறது. அறிபவனான இந்த ஜீவனின் ஸ்வரூபமே, அறிதலாகிய ஞானம். ஆத்மா ‘‘ஜ்நாதா’’. அவன் ‘பண்பு’ ஞானம். இவன் அணுவளவானவன்; விபு அல்ல (எங்கும் வ்யாபித்தவன் அல்ல) என்பதும் இந்த அதிகரணத்தில் எடுத்துக் காட்டப்பட்டது.
ஐந்தாவது அதிகரணத்தில், (கர்த்ரதி4கரணம் - 2-3-5)
‘‘ஹந்தா சேந்மந்யதே ஹந்தும் ஹதஶ்சேந் மந்யதே ஹதம், உபெ4ள தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ‘‘ (கட.2-19) - ‘ஒருகால், கொல்பவன் நினைத்தால்’. இவை போன்றவற்றில், கொல்வது போன்ற செயல்களுக்கு, ஆத்மாவானவன் முகவரல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது- இது, ஆத்மா நிலையானவன் (அழிவில்லாதவன்)என்பதால், அவன் கொல்லப்படு வதற்குத் தகுதியற்றவனாக இருப்பதால், இது போன்ற ச்ருதி சொற்றொடர்களால், ஆத்மாவிற்கு ‘‘கர்த்ருத்வம்’ - கர்த்தாவாக இருக்கும் தன்மை- இல்லையோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. ஸ்வர்க்கம் மோக்ஷம் போன்ற பலன்களைப் பெற, சாஸ்த்ரங்களில் கூறப்பட்டிருப்பதை மேற்கொள்வதால், ஜீவனுக்கு, ‘‘கர்த்ருத்வம்’’ உண்டு என்பது அநுமதிக்கப் படவேண்டும். ஸம்சாரத்தில் கட்டுண்ட அவன் செயல்கள் குணங்களால் ஏற்படுபவை, அவன் சுய ஸ்வரூபத்தால் ஏற்படுபவை அல்ல. எனவே, கர்த்ருத்வம் அவன் ஸ்வரூபம் என்று நிர்ணயிக்கப்பட்டது.
  ஆறாம் அதிகரணத்தில் (பராயத்தாதி4கரணம் 2-3-6), ஜீவனுக்கு கர்த்ருத்வம் பரமாத்மாவாலேயே அருளப்பட்ட போதிலும், ஜீவனுக்கு தன் கர்மத்திற்கேற்ப ஓர் செயலைத் தொடங்கும் அளவிற்கு மட்டுமே, கர்த்ருத்வத்தில் சுதந்திரம் உள்ளது என்பது விளக்கப்படுகிறது.
ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாதீனமானதே யாகும். ஏனெனில்: வேதச்சொற்றொடர்கள் - ‘ஜீவன் பரமாத்மாவால் நியமிக்கப்பட்டே காரியங்களைச் செய்கிறான்’ என்றன்றோ கூறுகின்றன. எந்தச் சொற்றொடர்கள் அப்படி கூறுகின்றனவெனில்; ‘‘அந்த: ப்ரவிஷ்ட: ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா’’ - (தைத்-ஆர-3.11.3) (ஸர்வாந்தர்யாமியான பகவான் ஜனங்களை உள்நுழைந்து நியமிக்கிறான்) ‘‘ய ஆத்மநி திஷ்ட2ந் ஆத்மநோ(அ)ந்தர: யமாத்மா ந வேத3 யஸ்யாத்மா ஶரீரம் ய ஆத்மாநமந்தரோ யமயதி ஸ த ஆத்மா(அ)ந்தர்யாம்யம்ருத:’’ (ப்ருஹ. 5.7.22) (எவனொருவன் ஜீவாத்மாவின் வெளிப்புறம் நிற்கிறானோ, ஜீவனின் உட்புறமும் இருக்கிறானோ, எவனை ஜீவன் அறிவதில்லையோ எவனுக்கு ஜீவன் சரீரமோ, எவன் ஜீவனை உள்நுழைந்து நியமிக்கிறானோ மரணமற்ற அவ்வந்தர்யாமியே உனக்கு ஆத்மா வாகிறான்.) முதலான ச்ருதிகள் பரமாத்மாவே ஜீவனை எப்போதும் நியமிப்ப தாகக் கூறுவதைக் காணலாம்.
ஆகையால், ஜீவனுடைய கர்த்ருத்வம் - பரமாத்மா தீநமேயாக வேண்டும். ‘‘ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி3 ஸந்நிவிஷ்ட: மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞாநமபோஹநம் ச’’ (பகவத்கீதை. 15.15) (எல்லா ஜீவர்களின் ஹ்ருதயத் திலும் நான் வாழ்கிறேன்; என்னாலேயே ஜீவனுக்கு நினைவு, அறிவு, மறதி முதலியவை அனைத்தும் ஏற்படுகிறது.) ‘‘ஈஶ்வர: ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3ஶே (அ)ர்ஜுந திஷ்ட2தி, ப்4ராமயந் ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா’’ (பகவத் கீதை. 18-61)(அர்ஜுனா! ஸர்வேச்வரனான வாஸுதேவன் எல்லா ஜனங்களுடைய ஹ்ருதய ப்ரதேசத்திலும் - ப்ரக்ருதியாகிற யந்திரத்தில் ஏறியிருக்கும் அவற்றை ஸத்வாதி குணமயமான ப்ரக்ருதி கார்யமான சரீரேந்திரியங்களைக் கொண்டு அந்தந்த ஸத்வாதி குணத்திற்கு அநுகுணமாகச் செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு நிற்கிறான்.) என்று கீதையிலும் இவ்வர்த்தமே கூறப்பட்டது. ஆகையால் ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாதீநமானது என்றே கொள்ள வேண்டும் என்பது ஸித்தாந்தமாகும்.
ஏழாம் அதிகரணத்தில் (அம்ஶாதிகரணம் 2-3-7), ஜீவன், ப்ரஹ்மத்தின் ஓர் பகுதியுமன்று; மாயைக்கு உட்பட்ட ப்ரஹ்மம் ஜீவனன்று. அவன் ப்ரஹ்மத்தோடு பேத அபேதங்கள் இன்றி, அவனுடைய அம்சமாக இருப்பவன் என்பது வாதிகளால் விளக்கப்பட்டது.
ஜீவன் பரமாத்மாவைக் காட்டிலும் மிகவும் வேறுபட்டவனே. ‘‘ஜ்ஞாஜ்ஞௌ த்3வாவஜாவீஶ நீஶௌ’’ (ச்வே.1.9) (ஈச்வரனும், ஜீவனுமான இருவரும் முறையே ஸர்வஜ்ஞனும், அஜ்ஞனுமாகவும், நியமிப்ப வனும், நியமிக்கப்படுபவனுமாகவும் உள்ளனர்.) முதலான ச்ருதிகள் ஜீவனைப் பரமாத்மாவைக் காட்டிலும் மிகவும் வேறானவனாகவன்றோ காட்டுகின்றன. அவ்விருவரையும் ஒன்றாகவும் சில ச்ருதிகள் காட்டு கின்றனவே, எனில், ‘‘ஆதி3த்யோ யூப:’’ என்று யூபஸ்தம்பத்தை ஸூர்யனாகவே கூறும் ச்ருதியானது கண்கூடாகக் காண்பதற்கு மாறுபட்டதாகையால், ‘‘ஆதித்யனைப் போல் பிரகாசமுடையது யூபஸ்தம்பம்’’ என்று அதற்கு அமுக்யமாகப் பொருள் கொள்வதுபோல், முற்கூறிய பல பேதச்ருதிகளுக்கு முரணாயிருக்கையால் அபேதச்ருதி களுக்கு ‘‘ப்ரஹ்மத்துக்கு ஜீவன் பரதந்த்ரன்’’ என்று அமுக்யமாகவே பொருள் கொள்ள வேண்டும். இல்லாவிடில், ‘‘அக்3நிநா ஸிஞ்சேத்’’ (நெருப்பால் நனைக்க வேண்டும்) என்னும் சொற்றொடர் போலே ச்ருதிசொற்றொடர்கள் முன்னுக்குப்பின் முரணாகிவிடும். இது த்வைதிகளின் வாதமாகும்.
ப்ரஹ்மமே மாயையால் மயங்கி ஜீவனாகத் தோற்றமளிக்கிறது என்றே கொள்ள வேண்டும். ஏனெனில்: ‘‘அயமாத்மா ப்3ரஹ்ம’’ (ப்ருஹ.6.5.4) (இந்த ஜீவாத்மா ப்ரஹ்மமே) ‘‘தத்த்வமஸி’’ (சாந்.6.8.7) (நீ ப்ரஹ்மமே யாகிறாய்) முதலான அபேத ச்ருதிகளில் ப்ரஹ்மமும் ஜீவாத்மாவும் ஒன்று என்றல்லவோ உபதேசிக்கப்படுகிறது. த்வைதிகள் ப்ரமாணமாக எடுக்கும் பேத ச்ருதிகள் - கண்கூடாகக் காண்பதினால் தோற்றும் பேதத்தை, அபேத ச்ருதிகளால் தள்ளுவதற்காக அநுவதிக்கின்றனவேயொழிய, பேதத்தை விதிப்பவை யல்ல என்பது அத்வைதிகளின் வாதமாகும்.
முற்கூறிய இரண்டு பக்ஷங்களும் தவறு. உண்மையான உபாதியினால் ப்ரஹ்மமே ஜீவனாகத் தோற்றுகிறது என்றே அபேதச்ருதிகளிலிருந்து விளங்குகிறது. பொய்யான மாயையினால் ப்ரஹ்மம் மயங்குகிறது என்று அத்வைதிகள் கூறுவது ஒட்டாது. பொய்யான மாயையால் ஸுகது:க்காநுபவரூபமான ஸம்ஸார பந்தம் ஏற்படுகிறது என்பதும், பிறகு வாக்யார்த்த ஜ்ஞானத்தால் அவ்வநுபவம் நீங்குகையாகிற மோக்ஷம் ஏற்படுகிறது என்பதும் பொருந்தாதன்றோ. அபேதச்ருதி களுக்கு முரணா யிருப்பதால், பேதச்ருதிகள் உபாதிகல்பிதமான பேதத்தைச் சொல்லுவத ாகவே அமுக்யமாகப் பொருள் கொள்ளவேண்டும் என்பது பேத அபேத வாதிகளின் கூற்றாகும்.
இந்த மூன்று பக்ஷத்திற்கும் கீழ்கண்டவாறு பதிலளிக்கப்படுகிறது. ஜீவன் ப்ரஹ்மத்தின் அம்சம் என்று ஸித்தாந்திகள் கூறுவதும் பொருந்தாது. ஒரு பொருளின் ஒரு பகுதியன்றோ அம்சம் (கூறு) எனப்படுகிறது. அவயவமற்றதான ப்ரஹ்மத்தைப் பகுதி பகுதியாகப் பிரிப்பது ஒட்டாதாகையால், ஜீவன் ப்ரஹ்மத்தின் ஒரு பகுதியாகிற அம்சமாக முடியாது. மேலும், ஜீவனை ப்ரஹ்மத்தின் அம்சமென்று கொண்டால் ஜீவனின் குற்றங்களெல்லாம் பரமாத்மாவினுடையவையாக வேண்டி வரும். ஆகையால், ஜீவன் ப்ரஹ்மத்தின் அம்சம் என்பது பொருந்தாது.
பரமாத்மாவை ஸத்ய ஸங்கல்பன், ஸர்வஜ்ஞன், குற்றமற்றவனென்றெல்லாம் வேதம் முழங்கா நிற்க, அவனுக்கு அஜ்ஞானமோ தேஹாதிகளின் சேர்க்கையால் மற்றும் குற்றங்களோ கொள்ளத்தகாவாகையாலே ஜீவனும் பரமாத்மாவும் வேறே. ஆனால் அபேத ச்ருதியும் கெடாதபடி அந்த பேதத்தைக் கொள்ள வேண்டும். ஆக ஜீவாத்மா உடல், பரமாத்மா அவனுக்கும் ஆத்மா, ஆக ஜீவாத்மா உடலாய் விசேஷணமாய் அம்சமெனப்படுகிறான். நீலமான பொருளிலே நைல்யம் அம்சம், மதுரமான பொருளுக்கு இனிப்பு ஓரம்சம் என்னுமாபோலே சேதந அசேதந விசிஷ்டமான பரமாத்மா என்ற தத்துவத்தில் சேதனன் அம்சமாகிறான். இப்படியிசைவது பேதச்ருதி யாலும் அபேதச்ருதியாலுமாம். அபேதச்ருதியை யுபேக்ஷிக்கலாகாது. ‘செம்படவர்கள் ப்ரஹ்மம், ஊழியர்கள் ப்ரஹ்மம், சூதாடுகின்றவர்கள் ப்ரஹ்மம்’ என்றெல்லாம் மிகவும் நீசரானவர்களோடும் ஒன்றாம் தன்மை சொல்லப் பட்டிருக்கிறதால். ஆகையால் சரீராத்ம பாவமென்கிற தொடர்பினைக் கொண்டு யாவருக்கும் அந்தர்யாமி என்று அவனது பெருமையைக் குறைக்காமல் அவனுக்கு மேன்மையைச் சொல்வதிலே நோக்கு வேதத்திற்கென்க.
நான்காம் பாதம் ‘‘ப்ராண பாதம்’’ என்றழைக்கப் படுகிறது. இதன் முதல் அதிகரணத்தில் (ப்ராணோத் பத்த்யதி4கரணம்-2-4-1), ஜீவனுக்கு அநுபவத்திற்கு உதவும் இந்திரியங்கள் நித்யமானவை; அவற்றிற்கு தோற்றமும் அழிவும் கிடையாது என்பது மறுக்கப்படுகிறது. இவை நிலையானவை என்று கூறும் வாக்கியம் (சொற்றொடர்) ஜகத் காரணனாக ப்ரஹ்மத்தையே கூறுகின்றன என்பதாலும், ச்ருதி, இந்திரியங்களின் தோற்றத்தை குறிப்பிடுவதாலும், இவை நித்யமானவை அல்ல என்று நிரூபிக்கப்படுகிறது.
இரண்டாம் அதிகரணத்தில் (ஸப்தக3த்யதி4கரணம் 2-4-2), இந்திரியங்களின் எண்ணிக்கை ஏழு அல்ல மனதையும் சேர்த்து 11 என்று நிர்ணயிக்கப்பட்டது.
மூன்றாம் அதிகரணத்தில் ( ப்ராணாணுத்வாதி4 கரணம் - 2-4-3), இந்திரியங்கள், ‘‘விபு’’ என்பதை மறுத்து, அவை ஒருவர் மரணமடைகையில், ஜீவனுடன் சேர்ந்து புறப்பட்டுச் செல்வதால், அதற்கு இயக்கம் உள்ளது. எனவே அது அணுவானது என்பது உறுதிபடுத்தப்பட்டது.
நான்காம் அதிகரணத்தில் (வாயுக்ரியாதி4கரணம் - 2-4-4), முக்ய ப்ராணன் என்பது வெறும் காற்றல்ல; மூச்சு விடுகையுமன்று, அது ஓர் சிறப்பிக்கப்பட்ட இருப்பினம் என்பது நிலை நிறுத்தப் பட்டது.
ஐந்தாம் அதிகரணத்தில் (ஶ்ரேஷ்டா2ணுத்வாதி4 கரணம்-2-4-5), இந்த முக்ய ப்ராணன் ஜீவனுடன் உடலை விட்டு புறப்பட்டுச் செல்வதால், இது விபுவன்று அணுவே என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஆறாம் அதிகரணத்தில் (ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2 நாதி4கரணம்- 2-4-6), இந்திரியங்கள் மற்றும் ப்ராணன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது ஜீவனே ஆனபொழுதும் (அதிஷ்டானம்), இந்த சக்தி அவனுக்கு பரமாத்மாவால் வழங்கப்படுவது விளக்கப்படுகிறது.
ஏழாம் அதிகரணத்தில் (இந்த்3ரியாதி4கரணம் 2-4-7), ப்ராணன் என்பது இந்திரியங்களில் ஒன்றல்ல; அது பதினொரு இந்திரியங்களைக் காட்டிலும் வேறுபட்டது என்பது காட்டப்படுகிறது.
எட்டாம் அதிகரணத்தில் (ஸம்ஜ்ஞாமூர்த்திக்லுப்த் யதி4கரணம்- 2-4-8 ), நாமரூபங்களோடு கூடிய அண்டம் ஹிரண்யகர்பனால் (சதுர்முகப்ரஹ்மனால்) படைக்கப் படுகிறது என்பது மறுக்கப் பட்டு-அதுவும் ப்ரஹ்மத்தின் செயலே என்பது விளக்கப்பட்டது.
இவ்வாறு, இரண்டாம் அத்யாயத்தின் இரண்டாம் பாதங்களால் நிர்ணயிக்கப்பட்ட பொருளை, ஆழ்வார்,
பரந்ததண்பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டமிதென நிலவிசும்பொழிவற
கரந்தசிலிடந்தொறும் இடம் திகழ்பொருள்தொறும்*
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்டகரனே.
என்னும் திருவாய்மொழி 1-1-10-ஆம் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.
‘‘விரிந்து பரந்ததாக உள்ள கடலில் இருக்கும் ஒவ்வொரு நீர்த்துளியிலும், மிகச் சிறியதாக உள்ள அந்த துளி இந்த அண்டம் போல் பெரிதாகத் தோன்றும்படி மிக நுண்ணிய வடிவுடன், தான் இருக்கும் இடத்தில் எந்தவித நெருக்கப்படும் செயலும் இல்லாமல் அதனால் ஏற்படும் எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் இருக்கும் பரமாத்மா, பூமி, ஆகாயம் என்று வேறுபாடு இல்லாமல், மிகச் சிறிய பொருளிலும், மிகப்பெரிய பொருளிலும், அந்தந்த பொருளுக்கு ஒளியூட்டுபவனாக இருக்கும் ஆத்ம வஸ்துக்களிலும் மிளிர்ந்து கொண்டு, இந்தப் பொருள்களைக் காட்டிலும் தனக்குள்ள தனித்தன்மை மாறாமல் இருந்து, இந்த ஜகத்தை நிலைபெறச்செய்கிறான். இவன் அசைக்க இயலாத ப்ரமாணமான வேதத்தால் அறியப்படுபவன்’’ என்று திருவாய்மொழி பாசுரம் 1-1-10-இல் அருளிச்செய்கிறார்.
திருவாய்மொழி பாசுரம் 1-1-11ஆம் பலச்ருதி பாசுரத்தில்,
கரவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை வரனவில்திறல்வலி அளிபொறையாய்நின்ற
பரனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொல் *
நிரனிறையாயிரத்து இவைபத்தும்வீடே.
என்பதால், ‘‘நிலைபெற்று நிற்பவையான ஆகாயம், ஒளி, காற்று, நீர் மற்றும் மண் ஆகியவற்றைத் தரித்து, அவற்றின் செயல்கள் இடையூறின்றி நடத்தும் திறமை உடையவனும், அதற்கான பொறுமை உடையவனுமான மிக உயர்ந்தவன் திருவடிகளைக் குறித்து, ஆழ்வார் அருளிச் செய்த இந்த பொருள் நிறைந்த பாசுரங்கள் ஆயிரத்துள், இத்திருவாய் மொழி முக்தியை அளிக்கவல்லது’’ என்பது தெரிவிக்கப் படுகிறது.
இந்த பாசுரத்தின் முதற்பகுதியில், இந்த அண்டம் ப்ரஹ்மத்தின் காரியமாக இருப்பதை அருளிச்செய்து விட்டு, அடுத்த பதிகத்தில் முதல் திருவாய்மொழியான, ‘‘வீடுமின் முற்றவும்’’ (1-2-1) என்பதால், அறிவிக்கப்போகும் பரத்வஞானம் மோக்ஷ சாதனமாக இருப்பதை இத்திருவாய் மொழி பாசுரத்தின் (1-1-11) பிற்பகுதியில் தெரிவிக்கிறார்.
இரண்டாம் அத்யாயம், மூன்றாம் பாதமான, ‘வியத்பாத’த்தின் முதல் அதிகரணத்தில் (வியத3தி4கரணம் 2-3-1) காணப்படும் பொருள், ‘‘நிலவிசும் பொழிவற’’ (1-1-10) என்பதால், மண் போன்றவற்றைப் போல ஆகாசத்தின் தோற்றமும் ப்ரஹ்மத்தின் செயல் என்பது தெளிவாக்கப் படுகிறது.
‘‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ: ஸம்பூ4 த:’’ (தை.ஆந.1-2) (அத்தகைய இந்தப் பரமாத்மா விடமிருந்து ஆகாசம் உண்டாயிற்று) என்னும் தைத்தரீய உபநிஷத் வார்த்தை, மற்றும் சாந்தோக்ய உபநிஷத் வார்த்தைகள் சிலவற்றிலும் ஆகாசத்திற்குத் தோற்றம் உண்டு என்று கூறுவதால், மண் போன்ற வற்றைப்போல, ஆகாசத் திற்கும் தோற்றம் உண்டு. அது ப்ரஹ்மத்தின் காரியம் என்னும் அதே பொருள், இப்பாசுர வரிகளால் (1-1-10) அறிவிக்கப் படுகிறது. எனவே, தைத்தரீய உபநிஷத் மற்றும் சாந்தோக்ய உபநிஷத் வார்த்தைகளின் நிர்வாகம் இந்த வரிகளில் தோன்றுவதால், இது முதல் அதிகரணத்தின் பொருளைத் தருகிறது என்பதில் ஐயமில்லை.
இரண்டாம் அதிகரணம் (தேஜோதி4கரணம்- 2-3-2), மற்ற பூதங்கள் ஆகாசத்திலிருந்து தோன்றுவதை மறுத்து, அவை அனைத்தும் ப்ரஹ்மத்தின் செயலே என்கிறது. இந்த பொருள் ‘‘பரந்ததண் பரவையுள்’’ (1-1-10) என்று தொடங்கும் பாசுரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாம் அதிகரணம் ( ஆத்மாதி4கரணம் 2-3-3), ஜீவனுக்கு தோற்றம் உண்டு என்பதை மறுக்கிறது. இந்தப் பொருளாவது, ‘‘இடம் திகழ் பொருள் தொறும்’’ (1-1-10) என்னும் பாசுர வரிகளில் அடங்கியுள்ளது. ‘இடந்திகழ்’ என்பதால், ஆத்மா தான் வசிக்கும் இடத்தில் வ்யாபிக்கக்கூடிய தன்மை பெற்றது என்பது அறியப் படுகிறது. இப்படி வ்யாபகமான பொருளுக்கு அழிவு கிடையாது என்பது அறியப்படுகிறது. இந்த உண்மையை, ஸ்ரீகிருஷ்ண பகவானே ஸ்ரீமத் பகவத்கீதையில் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறான்:-
‘‘அவிநாஶி து தத்3வித்3தி4 யேந ஸர்வமித3ம் ததம் | விநாஶமவ்யயஸ்யாஸ்ய ந கஶ்சித் கர்த்துமர்ஹதி || (பகவத்கீதை. 2-17)
இந்த கீதை ச்லோகத்திற்கு பாஷ்யகாரர் இவ்வாறு விளக்கம் தருகிறார்:- ‘‘ஆத்மநஸ்த்வவிநாஶித்வம் கத2மித்யத்ராஹ (அவிநாஶி து இதி) தத் - ஆத்மதத்வம் அவிநாஶீதி வித்3தி4; யே ந - ஆத்மதத்வேந சேதநேந, தத்3வ்யதிரிக்தமித3ம் அசேதநத்வம் ஸர்வம் ததம் - வ்யாப்தம்; வ்யாபகத்வேந நிரதிஶய ஸூக்ஷ்மத்வா தா3த்மநோ விநாஶாநர்ஹஸ்ய தத்3வ்யதிரிக்தோ ந கஶ்சித் பதா3ர்த்தோ2 விநாஶம் கர்த்துமர்ஹதி; தத்3வ்யாப்யதயா தஸ்மாத் ஸ்தூ2லத்வாத்; நாஶகம் ஹி ஶஸ்த்ர ஜலாக்3நிவாய்வாதி3கம் நாஶ்யம் வ்யாப்ய ஶிதி2லீகரோதி; முத்3க3ராத3யோ(அ)பி ஹி வேக3வத் ஸம்யோகே3ந வாயுமுத்பாத்3ய தத்3த்3வாரேண நாஶயந்தி; அத: ஆத்மதத்வம் அவிநாஶி’’- ஆத்மாவானது ப்ராப்யமாகையாலும், அதன் நித்தியத் தன்மையை அறிவதே சோகம் நீங்குவதற்கு முக்கிய காரண மாகையாலும், ப்ரதிஜ்ஞை செய்த கிரமத்திலே விவரிக்காமல் முதலில் ஆத்ம நித்யத்வத்தை நிரூபித்தருளுகிறான் கண்ணன்.
மேலும், தேஹம் அநித்தியமானது என்பது அர்ஜுனனையுள்ளிட்ட அனைவரும் நன்கு அறிந்ததாகும். ஆத்மாவின் நித்தியத்தன்மையை அறிவாளிகளைக்கூட ஐயமுறவைப்பது. ஆகையால் அதை முந்துற விளக்குகிறான். (அவிநாசி து தத்3 வித்3தி4) அவ்வாத்மதத்வத்தை அழிவற்றதாக அறிவாயாக. ‘து’ என்ற சொல்லாலே அழிவுள்ளதான தேஹத்தைக்காட்டிலும் ஆத்மாவுக்குள்ள வேறுபாடு உணர்த்தப்படுகிறது. (தத்) ஜீவாத்ம ஸமூஹம் முழுவதையும் குறிக்கிறது. (அவிநாசி) ‘‘ந விநஷ்டும் சீலம் அஸ்யேத்யவிநாசி’’ என்று வ்யுத்பத்தி. அழியாமையையே இயற்கையாகக்கொண்டது ஆத்மா என்றபடி.
ஆத்மா அழியாததென்பதை எப்படியறிவது? எனில்: (யேந ஸர்வமித3ம் ததம்) ஆத்மதத்துவத்தினால் அதைக் காட்டிலும் வேறுபட்ட அசேதன தத்துவம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளமையாலே என்கை. (ஸர்வம் இத3ம்) ‘இவையெல்லாம்’ என்று கையாலே காட்டுகையாலே தமக்குத்தாமே பிரகாசிக்காமல், பிறர்க்கே ஒளிவிடும் ப்ராக் திர வியங்களான அசேதன தத்துவங்கள் காட்டப்படுகின்றன. அதற்குப் பிரதிகோடியாக (யேந) என்று எடுக்கப்படுவது தனக்குத்தானே பிரகாசிக்கும் ப்ரத்யக் த்ரவ்யமான சேதநஸமூஹமேயாக முடியும். (ததம்) ஆத்ம ஸமூஹமானது எள்ளில் எண்ணெய்போலவும், கட்டையில் நெருப்பைப் போலவும், கறந்தபாலில் நெய்யைப் போலவும். அசேதந ஸமூஹம் முழுவதையும் வியாபித்திருக்கிறது என்று கருத்து. ஆத்மா அணுவாயினும், அநந்தமான ஆத்மாக்களின் கூட்டம் முழுவதும் சேர்ந்து அநந்தமான அசேதன ஸமூஹத்தை வியாபிக்கக் குறையில்லையன்றோ. அன்றிக்கே, ஒவ்வோ ராத்மாவும் அசேதநஸமூஹம் முழுவதையும் தேசகால பேதத்தாலே வியாபிக்கத் தகுதியுள்ளது என்னும் கருத்திலே சொல்லுகிறதாகவுமாம்.
ஆத்மதத்துவமானது வியாபகமாகவும், அசேதந தத்துவமானது அதனால் வியாபிக்கப்படுவதாக வுமிருப்ப தாலே ஆத்மா எப்படி நித்தியமாகிவிடமுடியும்? என்னும் கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கிறது உத்தரார்த்த4ம் (அவ்யயஸ்ய அஸ்ய) அசேதனப் பொருள்கள் அனைத்தை யும் வியாபித்திருப்பதாகக் கூறியதிலிருந்து அவற்றைக் காட்டிலும் ஆத்மதத்துவம் மிகவும் ஸூக்ஷ்மமானது என்று ஏற்படு கிறபடியால் ஸ்தூலமான அவற்றாலே அழிக்கத்தகாத இவ்வாத்மதத்துவத்திற்கு. (கச்சித்) அவ்வாத்மதத்துவத்தைக் காட்டிலும் வேறுபட்டதாய், அதனால் வியாபிக்கப்படுவதாய், அதைக் காட்டிலும் ஸ்தூலமாயிருப்பதான அசேதனப்பொருள் எதுவும். (விநாசம் ந கர்த்தும் அர்ஹதி) அழிவைச்செய்ய வல்லமையுடையதன்று.
ஆத்மதத்துவம் ஸூக்ஷ்மமான தாகையாலும். அசேதன தத்துவம் ஸ்தூலமாகையாலும், உலகில் ஸூக்ஷ்மவஸ்துவே ஸ்தூல வஸ்துவின் உட்புகுந்து அதை அழிப்பதைக் காண்கையாலும், அசேதனப்பொருள் எதுவும் ஆத்மாவை அழிக்க சக்தியுடையதல்ல என்று கருத்து. ஸூக்ஷ்மவஸ்துவே ஸ்தூலவஸ்துவை அழிக்கும் என்பதை எங்கே காண்கிறோம்? எனில்; ஆயுதங்கள், நீர், நெருப்பு, வாயு முதலானவை தம்மைக்காட்டிலும் ஸ்தூலமான பொருள்களை உட்புகுந்து வியாபித்து அவற்றை உருக்குலையச்செய்து அழிப்பதைக் காண்கிறோமன்றோ.
இப்படி ஜீவன் வ்யாபித்திருப்பதால், அவன் நித்யமானவன் என்பது தேறுகிறது. இந்த அர்த்தத்தைக் காட்டும் இப்பாசுரவரி, ‘‘இடந்திகழ் பொருள் தொறும்’ (1-1-10) என்பது. மூன்றாம் அதிகரணத்தின் (ஆத்மாதி4 கரணம் 2-3-3) ஸாரமாக அமைந்துள்ளது.
நான்காம் அதிகரணம் (ஜ்ஞாதிகரணம் 2-3-4), ஜீவனின் ஞானத்தைப் பேசுகிறது. இதன் பொருளும், ‘‘திகழ் பொருள் தொறும்’’ (1-1-10) என்பதால் விவரிக்கப்படுகிறது. ஏனெனில், ‘‘திகழ் பொருள்’’ என்பதற்கு ‘ஜ்ஞாநத்வாஶ்ரய மானவஸ்து’ என்பது பொருளாகும். அதாவது ஞானத்திற்கு இருப்பிடமாக இருப்பவன் என்கிறபடி.
‘‘ஜ்ஞாதா’’ என்றால், ‘அறிபவன்’ என்று பொருள்படும். அறிபவன் என்னலாம். ஆழ்வார் இவ்வாறு அருளிச் செய்யாது, ‘‘திகழ்பொருள்’’ என்று அறிபவனுடைய அறிவு மட்டுமே தோன்றும்படி அருளிச் செய்வதற்குக் காரணம் என்னவென்றால், - ‘‘ஜ்ஞாதா’’ என்றால் அறிவதை பண்பாக உடையவன் என்பது மட்டுமே தோன்றும். அவன் அறிவே வடிவானவன் என்பது தோன்றாது. எனவே, இந்த இரண்டும் தோன்றுவதற்காக ஆழ்வார் இவ்வாறு அருளிச் செய்தார் என்பதே ஏற்புடைய பொருளாகும்.
‘‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’’ (தை.ஆந. 1-1) - ‘ஸத்யமும் ஜ்ஞானமும் முடிவற்றதுமான ப்ரஹ்மம்’ என்னும் ச்ருதி வாக்யத்தின் வ்யாக்யானத்தில், ச்ருதப்ரகாசிகை யில் இவ்வாறு அறிவிக்கப்படுகிறது
ஐந்தாம் அதிகரணம் (கர்த்ரதி4கரணம் 2-3-5) ஜீவனுக்கு கர்த்ருத்வம் உண்டு என்பதைக் கூறுகிறது. ‘‘ஜ்ஞாதா என்றபோதே கர்த்தா, போ4க்தா என்னுமிடம் தன்னடைவே தேறுகிறது’’ என்று அருளிச்செய்கிறார், நம்பிள்ளை. இதன்படி ஜ்ஞானமே வடிவான ஜீவனுக்கு, கர்த்ருத்வமும் உண்டு என்பது தேறும். இந்த அர்த்தத்தையும் காட்டித்தருகிறது ‘‘திகழ்பொருள் தொறும்’’(திருவாய். 1-1-10) என்னும் சொற்றொடர்.
ஆறாம் அதிகரணம் (பராயத்தாதி4கரணம்- 2-3-6), ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவால் அளிக்கப்பட்டதை நிலை நிறுத்துகிறது. இத்துடன் கருத்தொற்றுமை கொண்ட வரி: ‘‘திகழ்பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன்’’ (திருவாய் 1-1-10) என்பதாகும். ஜீவனுக்கு கர்த்ருத்வம் ஏற்படுவது, அவனுக்குள் பரமாத்மா ஊடுருவி உள்ளுறை வதாலாகும். இதைக் காட்டித்தருவது,
பராத்து தச்ச்2ருதே: - 2-3-40, என்னும் ஸூத்ரத்திலுள்ள, ‘‘அந்த: ப்ரவிஷ்ட: ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா’’ (தை. ஆர. 3-11-3) - ‘ஸர்வாந்தர்யாமியான பகவான் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கிறான்’.
‘‘யஆத்மநி திஷ்ட2ந் ஆத்மநோ(அ)ந்தரோ யமாத்மா ந வேத3 யஸ்யாத்மா ஶரீரம் ய ஆத்மாந மந்தரோ யமயதி ஸ த ஆத்மா(அ)ந்தர்யாம்யம்ருத:’’ (ப்ருஹ. மாத்யந்தின. 15-7-26) - ‘எவனொருவன் ஜீவாத்மாவின் வெளிப்புறம் நிற்கிறானோ, ஜீவனின் உட்புறமும் இருக்கிறானோ, எவனை ஜீவன் அறிவ தில்லையோ எவனுக்கு ஜீவன் சரீரமோ, எவன் ஜீவனை உள்நுழைந்து நியமிக்கிறானோ மரணமற்ற அவ்வந்தர்யாமியே உனக்கு ஆத்மா வாகிறான்’. போன்ற ச்ருதி வாக்கியங்களாகும்.
ஏழாம் அதிகரணம் ( அம்ஶாதிகரணம் 2-3-7), ஜீவன், ப்ரஹ்மத்தின் பகுதியுமல்ல, மாயைக்குட்பட்ட ப்ரஹ்மமுமல்ல; அவன் ப்ரஹ்மத்தின் ஓர் அம்சம் என்று காட்டித்தருகிறது. இந்த சரீராத்ம பாவத்தை, ‘‘இடந்திகழ் பொருள்தொறும் கரந்தெங்கும் பரந்துளன்’’ (திருவாய். 1-1-10) என்று, வ்யாபகம் வ்யாபிக்கும் பொருள், ஆகிய இரண்டையும் காட்டித்தரும் இந்த பாசுரவரி வெளிபடுத்துகிறது.
இரண்டாம் அத்யாயம் நான்காம் பாதம் (ப்ராணபாதம்), இரண்டு (ஸப்தக3த்யதி4கரணம் - 2-4-2), மூன்று (ப்ராணாணுத்வாதி4கரணம் - 2-4-3), நான்கு (வாயுக்ரியாதி4கரணம் - 2-4-4) , ஐந்து (ஶ்ரேஷ்டா2 ணுத் வாதி4கரணம்- 2-4-5), ஆறு (ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2 நாதி4கரணம் 2-4-6 ) மற்றும் ஏழாம் (இந்த்3ரியாதி4கரணம் 2-4-7) அதிகரணங்களில், இந்திரியங்களின் எண்ணிக்கை போன்றவற்றை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. முதல் அதி கரணத்தில் (ப்ராணோத்பத்த்யதி4கரணம் 2-4-1) இந்திரியங்களின் நிலையானதன்மை மறுக்கப் பட்டு, இதைக் கூறும் ச்ருதி வாக்யங்கள், பரமாத்மா ப்ரளய காலத்தில் உள்ள நிலையை விவரிக்கின்றன என்பது விளக்கப்பட்டது. இந்த பொருளே, ‘‘இவையுண்ட கரனே’’ (திருவாய். 1-1-10) என்னும் பாசுர வரியில் காட்டப்படுகிறது.
எட்டாம் அதிகரணத்தில் (ஸம்ஜ்ஞாமூர்த்திக்லுப்த் யதி4கரணம் 2-4-8 ), அண்டத்தைத் தோற்றுவிப்பது சதுர்முக ப்ரஹ்மன் அல்லன். கர்த்தவான பரமாத்மா என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த பொருளை,
கரவிசும்பெரிவளி நீர்நிலமிவைமிசை வரனவில்திறல்வலி அளிபொறையாய்நின்ற
பரனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொல் *
நிரனிறையாயிரத்து இவைபத்தும்வீடே.
இந்த பாசுரத்தில் ‘அநுப்ரவேசம்’ மற்றும் ‘ஸாமாநாதி கரண நிர்ணயத்தால் சரீர சரீரி பாவம்’ தோன்றுமே தவிர, ‘கார்ய காரண பாவம்’ தோன்றாதே எனப்படலாம். இதனால், மேற்கூறிய அதிகரணங்களின் பொருளை இப்பாசுரம் கொண்டிருப்பது எப்படி என்று ஐயப்படலாம். இந்த ஐயப்பாடு நீக்கப்படுகிறது.
‘‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகர வாணி’’ (சாந். 6-3-2) - ‘உட்புகுந்த பிறகு, உயிருள்ள இந்த ஒன்றால், நான், பெயர் மற்றும் வடிவத்தை வகைப்படுத்தக் கடவேன்.
‘‘தத் ஸ்ருஷ்ட்வா I ததே3வாநுப்ராவிஶத் I தத3நுப்ரவிஶ்ய I ஸச்ச த்யச்சாப4வத் II’’ (தை.ஆந. 6-2,3) - [(பரம்பொருளானது) உலகை ஸ்ருஷ்டித்து, அதையே உள் நுழைந்து வியாபித்தது; அதை வியாபித்த பின் விகார மற்றதான சித்தாகவும், விகாரமுடைய அசித்தாகவு மாயிற்று]. போன்ற ச்ருதி வாக்கியங்கள் அநுப்ரவேசத்தால் ஸ்ருஷ்டி ஏற்படுவதைக் காட்டித் தருகின்றன. ஸ்ருஷ்டியைக் கூறுமிடங்களில் அநுப்ர வேசமும், அநுப்ரவேசத்தைக் கூறுமிடங்களில் ஸ்ருஷ்டியும் அறியப்படும் என்பது ஸ்ரீபாஷ்யத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, அநுப்ரவேசத்தால் ஸ்ருஷ்டி ஏற்படுகிறது என்பது இப்பாசுரங்களில் (திருவாய். 1-1-10, 1-1-11) சுருக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம்.
அநுப்ரவேசத்தால் சரீர சரீரி பாவம் ஏற்படுகிறது. அநுப்ரவேசத்தால் ஸ்ருஷ்டி என்பதால் காரண கார்ய பாவமும் தோன்றுகிறது
இவ்வாறு திருவாய்மொழி 1-1-10 மற்றும் 1-1-11 ஆகிய பாசுரங்கள், இரண்டாம் அத்யாயம், மூன்று, மற்றும் நான்காம் பாதங்களுடன் கருத்தொற்றுமை கொண்டவை என்பது அறியப்படுகிறது.
எனவே, ப்ரஹ்மத்திற்கு காரணத்வத்தைச் சொல்லும் ஸ்ரீபாஷ்யத்தின் இரு அத்யாயங்களின் பொருளை, ஆழ்வார் முதற்பத்து, முதற்திருவாய்மொழி, பதினொன்று பாசுரங்களின் வாயிலாக வெளியிட்டருளினார். *
திருவாய்மொழி- முதல் பத்து இரண்டாம் பதிகம் (1-2)
6.0. ‘‘வீடுமின் முற்றவும்’’ மற்றும் சாரீரக மீமாம்ஸை மூன்று மற்றும் நான்காம் அத்யாயங் களுக்கிடையிலான கருத்தொற்றுமை (ஐககண்ட்யம்).
மூன்றாம் அத்யாயம் (ஸாத4நாத்4யாயம்), ப்ரஹ்மத்தை அடைவதாகிய பலனைப் பெறுவதற்குரிய சாதனைகளைக் கூறுகிறது. எனவே இது ‘ஸாதனாத்யாயம்’ எனப்படுகிறது. இந்த இரண்டாம் திருவாய்மொழியும் இதையே உபதேசம் செய்வதால், இரண்டிற்கும் கருத்தொற்றுமை உண்டு.
6.1. நம்பிள்ளை, இத்திருவாய்மொழியின் உபாஸனத் தைக் (நெறி) கூறும் மூன்றாம் அத்யாயத்தின் பொருள் என்று அருளிச் செய்தாரே தவிர, மூன்று மற்றும் நான்காம் அத்யாயங்கள் காட்டித்தரும் உபாய மற்றும் உபேயத்தை (நெறி மற்றும் பலன்) கூறுவதாக அருளிச் செய்யவில்லை. இதற்குக் காரணம் ‘உபாஸனை’ என்பது பலத்தையும் காட்டித்தரும் பொருளைக் கொண்டது என்று நம்பிள்ளை அருளிச் செய்தார். உபாஸனை என்பது, ஞானத்திற்கு இணையானது. ப்ரஹ்மத்தை அடைகிற வடிவிலான பலமும் ஞானத்தால் ஏற்படுவது, எனவே இரண்டையும் இங்கே ஒருங்கே அருளிச்செய்தார் நம்பிள்ளை.
6.2. இதே கருத்தை வேதாந்த தேசிகரும் தம்முடைய ரஹஸ்யத்ரயஸாரத்தில் (9. உபாயவிபாகாதிகாரம்) அருளிச் செய்கிறார். ‘‘இவர்களுக்கு கர்தவ்யமான (செய்யவேண்டிய) உபாயமாவது ஒரு ஜ்ஞானவிகாஸவிசேஷம் (ஜ்ஞானத்தின் ஒரு வகை மலர்ச்சி). இத்தாலே ஸாத்யமாய் ப்ராப்திரூபமான உபேயமாவது-ஒரு ஜ்ஞானவிகாஸ விசேஷம் (ஜ்ஞானத்தின் ஒரு வகை மலர்ச்சி). இவற்றில் உபாயமாகிற ஜ்ஞானவிகாஸ விசேஷம் கரண ஸாபேக்ஷமாய் (இந்த்ரியங்களை எதிர்பார்ப்பதாய்) சாஸ்த்ர விஹிதமுமாய் (சாஸ்த்திரத்தில் விதிக்கப்பட்டதாய்), ஸத்யத்வாதிகளான ஸ்வரூபநிரூப தர்மங்களோடே கூடின அவ்வோவித்யாவிசேஷ- ப்ரதிநியத- குணாதிகளினாலே (அந்த அந்த ப்ரஹ்மவித்யைக்கே உரிய குணம் முதலியவைகளால்) நியதப்ரஹ்ம- விஷயமுமா யிருக்கும் (அந்த அந்த குணங்களோடு கூடியதும் இதர வித்யைகளில் சொல்லப்பட்ட குணங்களில்லாததுமான ப்ரஹ்மத்தைப் பற்றியது). உபேயமாகிற ஜ்ஞானவிகாஸ விசேஷம் கரண நிரபேக்ஷமுமாய் (இயல்பாகவே ஏற்பட்டதாயும்), குணவிபூத்யாதிகள் எல்லாவற்றாலும் பரிபூர்ணப்ரஹ்ம விஷயமுமாயிருக்கும்.’’
6.3. முதல் பத்து, இரண்டாம் திருவாய்மொழி, முதல் பாசுரம் ‘‘வீடு செய்மினே’’ (1-2-1) என்பதில் தொடங்கி, ‘‘திண்கழல்சேரே’’(1-2-10) என்பது வரையிலும், ஆழ்வார், பாசுரங்கள் தோறும் முக்திக்கான வழியை அந்த வாக்கியங் களின் முக்கியப் பொருளாகவும், அததற்குரிய பலன் களுக்கான பொருளை முக்கியமற்றதாகவும் அருளிச் செய்துள்ளார்.
6.4. ‘‘ஸ்வர்க்க3 காமோ யஜதே’’ - என்னுமிடத்தில் ஸ்வர்க்கத்தை அடைவதற்கான ஸாதனம், வாக்கியத்தின் பொருளாக, முக்கியமானதாகவும், ஸ்வர்க்கத்தை அடைவதான பலன் பதார்த்தமாக (சொல்லிற்கான பொருளை) முக்கிய மற்றதாகவும் அறிவிக்கப்படுவதால் இந்த வாக்யம் ‘‘ஜ்யோதிஷ்டோமரூப ஸாதனத்தை’ காட்டுகிறதென்பது பூர்வர்கள் கூறிய முறையிலேயே நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார். ஆகையால் பலத்தைத் தருவதைக் குறித்து ஆழ்வார் அருளிச் செய்ததையே நம்பிள்ளையும் அருளிச் செய்கிறார்.
எனவே, வீடுமின் முற்றவும்* வீடுசெய்து * உம்முயிர்
வீடுடையானிடை *
வீடுசெய்ம்மினே. (திருவாய். 1-2-1)
என்கிற திருவாய் மொழி, உபாய உபேயங்களைக் கூறும் இந்த சாரீரகமீமாம்ஸை. பொருளோடு கருத்தொற்றுமை கொண்டது என்பது ஏற்புடையது.
6.5. இத்திருவாய்மொழியில், முதல் பாசுரம் ‘‘வீடுமின் முற்றவும்’’ (1-2-1) என்பது மூன்றாம் அத்யாயத்தின் (ஸாதனாத்யாயம்), முதல் பாதத்தின் (வைராக்3யபாதம்), பொருளை உணர்த்துவதாகவும், இரண்டாம் பாட்டு, ‘‘மின்னின் நிலையில’’ (1-2-2) மற்றும் மூன்றாம் பாசுரம் ‘‘நீர் நுமது’’ (1-2-3), இரண்டாவது பாதத்தின் (உப4யலிங்க3 பாதம்) பொருளுக்கு இணையானதாகவும், நான்காம் பாசுரம் தொடங்கி, மேலே நான்கு பாசுரங்கள், ‘‘இல்லதும் உள்ளதும்’’ (1-2-4), ‘‘அற்றது பற்றெனில்’’ (1-2-5) ‘‘பற்றிலன் ஈசனும்’’ (1-2-6) மற்றும் ‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7), மூன்றாம் பாதமான, கு3ணோபஸம்ஹார பாதத்தின் பொருளாகவும், எட்டாம் பாசுரம், ‘‘உள்ளம் உரை செயல்’’ (1-2-8) என்பது, நான்காம் பாதமாகிய ‘‘அங்கபாத’ அர்த்தமாகவும் உள்ளது. இவ்வாறாக, முதல் எட்டு பாசுரங்கள் சாரீரகமீமாம்ஸா பாஷ்யத்தின் மூன்றாம் அத்யாயத்தில் கூறப்பட்டவையோடு கருத்தொற்றுமை கொண்டவை.
6.6. ஒன்பதாம் பாசுரம் ‘‘ஒடுங்க அவன்கண்’’ (1-2-9) மற்றும் பத்தாம் பாசுரம் ‘‘எண்பெருக்கு’’ (1-2-10) ஆகியவை, நான்காம் அத்யாயம் நான்காம் பாதங்களின் பொருளை உள்ளடக்கியவை.
6.7. ‘‘நிகமநப்பாட்டு’’ எனப்படும், பலனைக் கூறும் 11ஆவது பாசுரம் ‘‘சேர்த்தட’’ (1-2-11) என்பது, இத்திருவாய் மொழியின் ஸாரமான பரமாத்மாவின் ஸௌலப்யம் போன்ற குணங்களை சுருக்கமாகக் காட்டித்தருவதாக உள்ளது.
6.8. சாரீரகத்தில், மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதம் ‘‘வைராக்ய பாதம்’’ எனப்படுகிறது. இதன் முதல் அதிகரணம்(தத3ந்தரப்ரதிபத்த்யதி4கரணம்- 3-1-1) கர்மபலனை அநுபவிக்க வேண்டிய ஜீவனானவன், ஓர் உடலைத் துறந்து மற்றொரு உடலை அடைகையில், பூத ஸூக்ஷ்ம சரீரத்தோடு (நுண்ணிய உடலோடு) செல்கிறான் என்பது பஞ்சாக்நிவித்யையின் சான்றாதாரத்தோடு நிரூபிக்கப் படுகிறது. மேலும்,
‘பா4க்தம் வா அநாத்ம வித்த்வாத் ததா2 ஹி த3ர்ஶயதி’ - (3-1-7) ‘‘தேவர்கள் ஸோமராஜாவை உண்கி றார்கள் என்று கூறியது அமுக்யமே; பரமாத்மாவைப் பற்றிய உண்மையறிவு அற்றவனாகையால் (தேவர்களுக்கு உபகரணமாகிற அந்நமாகிறான் என்றது.) வேதவாக்யமும் அப்படியே ஓதுகிறது’’ என்கிற ஸூத்ரத்திலே தேவலோகம், பித்ருலோகம் ஆகியவற்றை விளக்கி, ஸ்வர்க்கலோக அநுபவம், நிலையற்றது என்பதும் காட்டித்தரப்படுகிறது.
இரண்டாம் அதிகரணத்தில் ( க்ருதாத்யயாதி4 கரணம்- 3-1-2), ஜீவனானவன் மீண்டும் இப்பூவுலகில் பிறக்கையில், மீதமிருக்கும் கர்மத்தோடு இறங்குகிறானா, எவ்வித கர்மமும் மீதமில்லாமல் இறங்குகிறானா என்பது விசாரிக்கப்படுகிறது. ‘‘ரமணீய சரணர்கள்’’ எனப்படும் நற்கர்மம் செய்தவர்கள், ‘‘ரமணீயயோநி’’ எனப்படும் நற்குடியில் பிறக்கிறார்கள். ‘‘கபூயசரணர்கள்’’ எனப்படும் தீய கர்மத்தை செய்தவர்கள் ‘‘குத்ஸித யோநி’ எனப்படும் தாழ்ந்த குடியில் பிறக்கிறார்கள், என்று ச்ருதி கூறுவதால், ஜீவனானவன், மீதமுள்ள கர்மத்தோடு இறங்குகிறான் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஸூக்ஷ்ம தேஹத்திற்குக் காரணமாக இருக்கும் இந்த கர்மம், முக்தியடையும் வரையிலும் தொடர்கிறது’’ என்று விவரிக்கப்பட்டது, இந்த ஸம்சார மண்டலத்தின் தாழ்ச்சியைக் காட்டித்தருவதாக உள்ளது.
மூன்றாம் அதிகரணத்தில் (அநிஷ்டாதி3கார்யதி4 கரணம்- 3-1-3), பாவகர்மங்களைச் செய்தவர்கள் சந்திரலோகத்திற்குச் செல்கிறார்களா என்னும் கேள்வி எழ, இவர்களுக்கு ‘‘பித்ருயாணம்’’ என்னும் மார்க்கத்தில் பயணம் சொல்லப்படாததால், இவர்கள் சந்திரலோகம் செல்வதில்லை என்று நிர்ணயிக்கப்பட்டது. பாவ கர்மங்கள் செய்தவர் களுக்கு, யமலோகத்தில் யாதநா சரீரத்துடன் ரௌரவம் போன்ற நரகங்களின் அநுபவமும், புழு போன்ற பிறவிகள் கிடைக்கும் என்பதும் விளக்கப்பட்டு, ஸம்சாரத்தின் தாழ்ச்சி காட்டித் தரப்படுகிறது.
நான்காம் அதிகரணத்தில் (தத்ஸ்வாபா4வ்யாபத்த் யதி4கரணம்- 3-1-4), ஜீவனானவன், ஆகாசத்தின் வழியாக கீழ் இறங்குகையில், அவன், ஆகாசத்தின் தன்மையை அடைவதில்லை. தேவர், மனிதர் போன்ற உடல்களில் கிடைக்கும் ஸுக, துக்க அநுபவத்தைப் பெறுவதில்லை; ஆகாசத்திற்கு ஒத்த நிலையை அடைகிறானே தவிர, அதை உடலாகப் பெறுவதில்லை என்பது காட்டப்படுகிறது. ஸ்வர்க்கம் போன்ற லோகங்களை அடைபவர்கள் கூட, ஆகாசத்தை உடலாகப் பெறுவதில்லை. அத்துடன் நெருக்கம் மட்டுமே உள்ளது எனப்பட்டது.
ஐந்தாவது அதிகரணத்தில் (நாதிசிராதி4கரணம் 3-1-5), ஆகாசம், புகை, மேகம், மழை ஆகியவற்றில் பயணம் மேற்கொள்கையில், ஜீவனின் நிலை என்ன என்பது விசாரிக்கப்படுகிறது.
‘‘அதோ வை க2லு து3ர்நிஷ்ப்ரபதரம்’’ (சாந். 5-10-6) - (இதிலிருந்தே யன்றோ மிகவும் துன்பப்பட்டு (நீண்டகாலம் கழித்து) ஜீவன் வெளியேறுகிறான்.).
‘து3ர்நிஷ்ப்ரபதரம்’ - என்னும் சொல்லில் ‘த’ என்பது ‘ஒலிப்பில் உயிரொலியாக வேதத்தால் கொள்ளப்படுகிறது. ‘து3ர்நிஷ்ப்ரப (த) தரம்’ - ‘மேலும் அதிக சிரமத்தோடு வெளிவருவது - இதுவே பொருள்.
[Explanatory Note: 'Dusniprapatara' is explained as an irregular comparative form of the adjective, 'dusniprapata' (‘து3ர்நிஷ்ப்ரபதரம்’ ). The regular form is by the addition of the suffix, 'tarap', which would make it 'dusniprapatatara' (‘து3ர்நிஷ்ப்ரப (த) தரம்’ ). A syllable, 'ta' (‘த’) has been omitted. See the Bava Prakasika for a discussion on the grammar involved here.].
என்பதால், ஜீவன் இந்த இடங்களில் சிறிது காலமே வசிக்கிறான் என்பது நிர்ணயிக்கபப்ட்டது.
ஆறாவது அதிகரணத்தில் (அந்யாதி4ஷ்டி2தா தி4கரணம்- 3-1-6), ஸ்வர்க்கலோகம் சென்று மீண்டும் பூலோகம் திரும்பும் ஜீவாத்மா, நெல் போன்றவற்றில் புகுகிறான் என்பது ஆராயப்படுகிறது. இவன் நெல்லாகவே பிறக்கிறானா அல்லது நெல்லோடு சகவாசம் பண்ணுகிற வனாக பிறக்கிறானா என்னும் ஐயப்பாடு தோன்ற, நெல் போன்றவையாகவே பிறப்பது, ச்ருதி வாக்யங்களில் காணப்படாததால், அது ஒதுக்கப்பட்டு, நெல் போன்ற தான்யங்களிலும் நெருக்கம் கொண்டவனாகத் தோன்றி, ஓர் மனிதனால், உட்கொள்ளப்பட்டு, அவன் வீரியத்தின் வழியாக பெண்ணின் கர்பத்தை அடைந்து, அடுத்த உடலைப் பெறுகிறான் என்பது காட்டப்பட்டது.
சாரீரகத்தில் மூன்றாம் அத்யாயத்தில் முதல் பாதம் ஆறு அதிகரணங்களில் காட்டப்பட்ட பொருள், ஆழ்வார் அருளிச் செய்த ‘‘வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்ம்மினே’’ என்னும் பாசுரத்தில் காட்டப்பட்டது. ‘உலகியல் விஷயங்களில் பற்றை விடுங்கள்; அது தாழ்ச்சி நிறைந்தது; அதை விட்டு, பரமபத நிலையனான ஸர்வேச்வரனிடம் ஆத்மாவை ஸமர்ப்பியுங்கள்’ என்று அறிவு குறைந்தவர்களும் புரிந்து கொள்ளும்படி, சுருக்கமாக அருளிச் செய்தாராயிற்று.
ஸூத்ரகாரர் மிகவும் விரிவாகச் சொன்ன விஷயத்தை, ஆழ்வார் இவ்வளவு சுருக்கமாக சொல்வதற்குக் காரணம் என்ன என்று ஆராயப்படுகிறது. ஆழ்வார், ‘‘ஏ பாவம் பரமே!’’ (திருவாய்.2-2-2) என்கிறபடி எப்பொழுதுமே பகவத் அநுபவம் செய்யும் இவருக்கு ஸம்சாரத்தின் தாழ்ச்சியை விரிவாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ‘‘நல்குரவும் செல்வும்’’ (திருவாய். 6-3-1) என்னும் பாசுரத்தில் காட்டித் தரப்பட்டபடி எல்லா பொருள்களும் ப்ரஹ்மத்தை ஆத்மா வாகக் கொண்டு அநுபவிக்கத்தக்கதாக இருந்த பொழுதும், ஸம்சாரிகள் பக்கல் உள்ள கருணையாலே, அவர்கள் நன்மைக்காக, தமக்குத் தோற்றாத தோஷத்தையும் சொல்ல வந்தவராகையால் ‘‘முற்றவும் வீடுமின்’’(1-2-1) என்று தமது கருணையால் இப்படி சுருக்கமாக வெளியிட்டருளினார் என்கிறபடி.
இப்பாதம் வைராக்யத்தை விதிக்கிறது. ஆழ்வார், அதை அருளிச் செய்யாமல், உபாயத்தை ஏன் அருளிச் செய்கிறார் என்றால், வைராக்யத்திற்கு உபாயம் அங்கம். பக்தியை உபாயமாகக் கொள்கையில், விஷயங்களில் வைராக்யம் தேவை. ப்ரபத்தியை உபாயமாகக் கொள்கையில், உபாயங்களை விடுதலாகிய வைராக்யம் தேவை. இந்த, ‘‘அங்காங்கி’’ பாவத்தையே ‘‘வீடு செய்து’’ (திருவாய். 1-2-1)என்று அருளிச் செய்கிறார், ஆழ்வார். எனவே, இந்தப் பாசுரத்திற்கும், மூன்றாம் அத்யாயம் முதல் பாதத்திற்கும் கருத்தொற்றுமை உள்ளது.
இரண்டாம் பாதம் (உபயலிங்கபாதம்) முதல் அதிகரணத்தில் (ஸந்த்4யாதி4கரணம்- 3-2-1), ஜீவனுக்கு கனவுகள் என்பவை ஜீவனால் ஏற்படுத்தப்படுகிறதா அல்லது பரமாத்மாவினாலா என்பது ஆராயப்படுகிறது. ஸம்சாரத்தில் கட்டுண்ட ஜீவனுக்கு, அவன் கர்மவசப்பட்டிருப்பதால், கனவுகளை படைக்கும் ஸங்கல்பம் இருக்கமுடியாத தாகையாலே, இது ஜீவனின் காரியமல்ல, பரமாத்மாவின் செயலே என்பது உறுதி படுத்தப்படுகிறது.
இரண்டாம் அதிகரணத்தில் ( தத3பா4வாதி4கரணம்- 3-2-2), கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவன் (ஸுஷுப்தி) ஓய்வு எடுக்கும் இடம் எது? ஹித நாடி என்னும் இடத்திலா, புரிதத்நாடியிலா அல்லது இதயத்தில் வசிக்கும் ப்ரஹ்மத்திடமா என்பது ஆராயப்பட்டு, இவை மூன்றும் இணைந்த இடமே, ஜீவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமிடம் என்று நிச்சயிக்கப் பட்டது. (வீடு, கட்டில், மெத்தை - ஆகிய மூன்றுமே ஒருவர் உறங்கும் இடத்தைக் குறிக்கும், இதைப் போன்றதே ஜீவனின் உறங்கும் இடமும்).
மூன்றாம் அதிகரணத்தில் (கர்மாநுஸ்ம்ருதி ஶப்3த3 வித்4யதி4கரணம்- 3-2-3), உறக்கம் கலைந்து எழுபவன் அதே ஜீவனா, வேறு ஒருவனா என்னும் ஐயப்பாடு விலக்கப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்திற்கு முன்பு தொடங்கிய கர்மம், விழித்தெழுந்த பிறகு அநுபவிக்கப்படுவதால், உறங்கிய அதே ஜீவன்தான் விழித்தெழுகிறான் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.
நான்காம் அதிகரணத்தில் (முக்3தா4தி4கரணம்- 3-2-4), மனிதன் மயக்கமடைவது மரணமா? இல்லையா? என்பது ஆராயப்படுகிறது. ப்ராணன் போன்றவை காணப்படுவதால், அது மரணமல்ல. உடல் பாகங்களில் மாறுபாடு காணப்படுவதால், அது உறக்கமும் அல்ல, மயக்கம் என்பது, ‘‘பாதி மரணம்’’, ‘‘அர்த்த-சம்பத்தி’’ என்று முடிவு கட்டப்பட்டது.
ஐந்தாவது அதிகரணத்தில் (உப4யலிங்கா3தி4 கரணம்- 3-2-5) ஜீவனானவன் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளில் இருக்கையில், பரமாத்மாவும் உடனிருப்பதால், பரமாத்மாவிற்கு இதனாலான தோஷங்கள் ஏற்படுமா? என்னும் கேள்விக்கு பதில் அளிக்கப்படுகிறது. எல்லாப் பாவங்களும் நீங்கப் பெற்றிருப்பது, எல்லையற்ற கல்யாண குணங்களின் சுரங்கமாக இருப்பது ஆகிய இரு பண்புகளால் சிறப்பிக்கப்பட்ட பரமாத்மாவை, இந்த தோஷங்கள் தீண்டாது என்று உறுதிபடுத்தப்படுகிறது.
ஆறாம் அதிகரணத்தில் (அஹிகுண்ட3லாதி4கரணம் 3-2-6 ), அசித் வடிவான அண்டத்தின் நிலை என்ன என்பது ஆராயப்படுகிறது. ‘‘அம்ஶோ நாநாவ்யபதே3ஶாத்’’ (ப்ரஹ்ம ஸூத்ரம் 2-3-42) - (ஜீவன் ப்ரஹ்மத்தின்) அம்ஶமாயிருப்பவனே; (சில ஶ்ருதிகளில் ஜீவன் ப்ரஹ்மத்தைக் காட்டிலும்) வேறுபட்டவன் என்று உபதேஶிக்கையாலும்.’’ என்கிற நியாயத்தாலே, உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவே (சரீர-சரீரி பாவம்) இங்கேயும் உள்ளது. அசித் வஸ்துவும் ப்ரஹ்மத்தின் உடலேயாகும். ஜீவனும் ப்ரஹ்மமும் முறையே அம்ஶமாகவும், அம்ஶியாகவும் இருப்பது போன்றே, அசித்தும் பரஹ்மமும் உள்ளன.
ஏழாவது அதிகரணத்தில் (பராதி4கரணம்- 3-2-7), ப்ரஹ்மம், ‘சேது’ (பாலம்) என்று வழங்கப்படுவதால், இந்த ப்ரஹ்மம் அடைவிக்கும் இன்னமும் உயர்ந்த வஸ்து ஒன்று உள்ளதோ என்னும் ஐயப்பாடு விலக்கப்படுகிறது.
‘‘யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித் யஸ்மாந் நாணீயோ ந ஜ்யாயோ(அ)ஸ்தி கஶ்சித்’’ (ச்வே.3-9) (எந்தப் பரமாத்மாவைக்காட்டிலும் மேலானது வேறொன்று இல்லையோ, எவனைக்காட்டிலும் அணுவானவனும் பெரியவனும் இல்லையோ) என்கிற ச்ருதி வாக்கியத்தாலும் ப்ரஹ்மம் ‘சேது’ என்று அழைக்கப்படுவது, அவன் ஸம்சாரக் கடலைத் தாண்டுவிக்கும் பாலமாக, முக்தி பெற்றவர்கள் இந்தக் கடலில் மீண்டும் விழாமல் காக்கும் அணையாக இருப்பதால், எனவே, ‘‘ஜகத் காரணனான பரமாத்மாவைக் காட்டிலும் உயர்ந்ததான மற்றொரு பொருள் இல்லை’’ என்பது உறுதிசெய்யப்பட்டது.
இறுதியான எட்டாம் அதிகரணத்தில் (ப2லாதி4 கரணம்- 3-2-8), யாகம், தானம், ஹோமம் போன்ற உபாஸனங்களுக்குப் பலன் தருவது கண்களால் காணப்படாத ‘‘அபூர்வம்’’ என்னும் சக்தியா அல்லது பரமாத்மாவா என்னும் ஐயப்பாடு நீக்கப்பட்டு, எல்லா உபாஸனைகளுக்கும் பலனைத் தருவது பரமாத்மாவே, முக்தியளிப்பதும் அவனே என்று நிர்ணயிக்கப்பட்டது.
6.9. இந்த மூன்றாம் அத்யாயத்தில் முதல் பாதம் (வைராக்யபாதம்) பரமாத்மா தோஷங்களால் தீண்டப் படாமல் இருப்பதையும், இரண்டாம் பாதம் (உபயலிங்கபாதம்) அவனுடைய கல்யாண குணங்களைக் காட்டுவதாகவும் அமைந்திருப்பதை, தேசிகர் தம் அதிகரணஸாராவளியில் காட்டித்தருகிறார்,
‘‘பாதே3 த்வர்த்தா2ஷ் ஷட2ஸ்மிந் வபுரிஹ விஜஹத்3பூ4தஸூக்ஷ்மைஸ்ஸஹேயாத், பு4க்தஸ்வர்க்கா3வரோஹே(அ)ப்யநுஶய ஸஹிதோ மாத்ரயா பி4ந்நமார்க்க3: | சந்த்3ர ப்ராப்த்யாதி3 ந ஸ்யாந்நிரயபத2ஜுஷாமம் ப3ராதெ3ள ஸத்3ருக்த்வம். தஸ்மாச்சீ2க்3ரா வரோஹ: பரவபுஷி சிரம் வ்ரீஹிபூர்வே(அ)பி யோக3: ||’’
(மூன்றாம் அத்யாயம்-முதல்பாதம்-இறுதியில் அமைந்துள்ள 20வது ச்லோகம்-288) - மூன்றாவது அத்யாயத்தின் முதல் பாதத்தில் (வைராக்யபாதத்தில்), ஆறு அர்த்தங்கள் நிரூபிக்கப்பட்டன. 1. இவ்வுலகில் சரீரத்தை விடும் ஜீவன், பூதஸூக்ஷ்மங்களோடுகூட மேலுலகிற்குச் செல்கிறான். 2. புண்யத்தின் பலனாக, ஸ்வர்க்கத்தை அடைந்தவன், அது கழிந்த பிறகு, மீதி கர்மங்களோடு, மேலேறிய வழியல்லாத வேறொரு வழியில் ஸம்சாரத்தை அடைகிறான். 3.பாபத்தைச் செய்து, நரகபலனை அடைந்தவர்களுக்கு சந்த்ரனை,அடைவது கிடையாது. 4.ஜீவனானவன் ஆகாசத்தின் வழியாகக் கீழே இறங்குகையில் ஆகாசத்தை உடலாகப் பெறுவது கிடையாது. ஆகாசத்துடன் நெருக்கம் மட்டுமே. 5. ஆகாசத்திலிருந்து ஜீவன் விரைவாகவே இறங்குகிறான். 6. நெல் போன்றவற்றில் ஜீவன் புகுந்திருக்கிறானேயன்றி, அதுவாக ஆவதில்லை.
‘‘பாதே3 ஸ்வப்நார்த்த2 ஹேது: தத3யமிஹ ஸுஷப்த்யா த்4ருதிஸ்ஸுப்தகோ3ப்தா, முக்4தே4 போ3தா4தி4 கர்த்தா த்வநக4 ஶுப4கு3ணோ (அ)சித் பி4ரம்ஶீ ஸதே3ஹ: | பாரம்யஸ்யைக ஸீமா ஸகலப2லத3 இத்யுச்யதே ப4க்தி பூ4ம்நே ஸத்யே ஹ்யேவம் கு3ணாதா3வத2 பரப4ஜநே ரூபபே4தா3தி3 சிந்த்யம் ||’’ (மூன்றாம் அத்யாயம்- இரண்டாம் பாதம்-இறுதியில் அமைந்துள்ள 32வது ச்லோகம்- 320).
மூன்றாவது அத்யாயத்தின் இரண்டாம் பாதத்தில், தூக்க நிலையில் அநுபவிக்கப்படும் விஷயங்களை ஸ்ருஷ்டிப்பவன் பரமாத்மாவே; அவனே அந்த தூக்க நிலையில் ஜீவனுக்கு இருப்பிடமாக இருப்பவன்; தூக்க நிலையில் அவனுக்கு ஓய்வையும், பிறகு விழித்தலையும் கொடுத்து ரக்ஷிப்பவன்; தூக்க நிலையிலிருக்கும்போது விழித்தலையோ, மரணத்தையோ கொடுப்பவன் அவனே; எல்லாக் குற்றங்களுக்கும் எதிர்த்தட்டாயிருப்பவன்; பரதத்வத்தின் எல்லை நிலமாயிருப்பவன்; ஸகல பலங்களையும் கொடுப்பவன் என்றிப்படி உபாஸநத்தின் வளர்ச்சிக்காக பரமாத்மகுணங்கள் சொல்லப்பட்டன. இப்படியே மூன்றாம் பாதத்தில், உண்மையாக இருக்கக்கூடிய பரமாத்மவிக்ரஹகுணங்கள், பரமாத்ம உபாஸநத்திற்காக நினைக்கத்தக்கது.
இவற்றுள், திருவாய்மொழி பாசுரம், ‘‘மின்னின் நிலையில’’ (1-2-2) என்பது, முதல் நான்கு அதிகரணங் களுடனும் (3-2-1, 3-2-2, 3-2-3,3-2-4), திருவாய்மொழி பாசுரம் . ‘‘நீர் நுமது என்றிவை’’(1-2-3) என்பது, அடுத்த நான்கு அதிகரணங்களுடனும் (3-2-5, 3-2-6, 3-2-7, 3-2-8) கருத்தொற்றுமை கொண்டுள்ளது விளக்கப்படுகிறது.
முதல் நான்கு அதிகரணங்களில் உடல் மட்டுமே அநுபவிக்கும் கனவு எனப்படும் நிலையின், தோஷங்கள் விளக்கப்படுகின்றன. ஆழ்வார் ‘சிறிது நேரமே நிகழும் கனவு போன்றதே இந்த உடல்’ என்று அருளிச் செய்கிறார்.
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் தோன்றி மறையும் மின்னலோடு உடம்பின் நிலையாமை ஒப்பிட்டுப் பேசுகிறார். ‘‘மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள் என்னுமிடத்து இறை உன்னுமின்நீரே’’ (திருவாய் 1-2-2) என்று, ‘‘ஆத்மா நிலைத்திருக்கும் இந்த உடல், மின்னல் நிலைபெறும் நேரம் கூட நிலைபெறாதது; இதை நீங்கள் சிந்திக்கவேண்டும்’’ என்று உபதேசிக்கிறார்.
மேலும் கனவுகளைத் தோற்றுவிப்பவன், ஜீவன் அல்ல. ஏனெனில், கர்ம வசப்பட்ட அவனுக்கு, ‘ஸங்கல்பம்’ என்பது இல்லை. கனவுகளை நிர்வஹிப்பவன் பரமாத்மாவே. உடலுடன் கூடியிருக்கும் ஜீவனுக்கு, கனவுகளைப் படைக்கும் திறன் இல்லை என்பதை, ‘‘மன்னுயிராக்கைகள்’’ (திருவாய். 1-2-2) என்று ஸங்கல்பத்திற்கு விரோதியாக அமையும் உடல் தொடர்பைக் காட்டித்தருகிறார், ஆழ்வார்.
நான்காம் அதிகரணம் (முக்3தா4தி4கரணம் 3-2-4), ஆத்மா நித்யமானது என்பதைக் கூறுகிறது. இதையே ஆழ்வார், ‘‘மன்னுயிர்’’ (திருவாய். 1-2-2) என்று அருளிச் செய்கிறார் என்பது வ்யாக்யதாக்களின் ஒருமித்த கருத்து.
இங்கே நான்கு அதிகரணங்களும் (3-2-1 முதல் 3-2-4 வரை), பகவானுடைய பெருமையைப் பேசுவதால், அவனுக்குண்டான நியமிக்கும் தன்மையை, ‘‘இறை’’ (திருவாய். 1-2-2) என்பதால் சுட்டிக் காட்டுகிறார் ஆழ்வார்.
‘‘இறை உன்னுமின்’’(1-2-2) என்பதற்கு, பூர்வா சர்யர்கள், ‘‘இதை ஆராயுங்கள்’’ என்று பொருள் கூறினார்கள். பன்னீராயிரப்படியில் அழகியமணவாள ஜீயர் இதற்கு, ‘‘ஸ்வாமியை மநநம் பண்ணுங்கோள்’’ என்று பொருள் கூறினார். ‘இறை’ என்பதால் ‘ஸ்வாமித்வமும்’, ‘நியந்த்ருத் வமும்’ இரண்டும் பொருளாக அமையும் என்பதால் இவ்வாறு பொருள் கூறத்தட்டில்லை.
திருவாய்மொழி பாசுரம் ‘‘நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறை சேர்மின், உயிர்க்கு அதன் நேர்நிறையில்லே’’ (1-2-3) என்பது, அடுத்த நான்கு அதிகரணங்களுடன் (3-2-5 முதல் 3-2-8 வரை), ஒத்த கருத்தைக் கொண்டுள்ளது அறியப்படுகிறது. இதில், ஆழ்வார்,: ‘‘நீங்கள் என்றும்’’ ‘உங்களுடையதென்றும்’ நினைக்கத் தோன்றும் அஹங்கார மமஹாரங்களை வாசனை யோடு விட்டு விட்டு, ஈச்வரனை வழிபட எண்ணுங்கள். ஆத்மாவிற்கு இதைவிடச் சிறந்தது ஒன்றுமில்லை’’ என்று அருளிச் செய்கிறார்.
ஐந்தாம் அதிகரணத்தில் (உப4யலிங்கா3தி4கரணம் - 3-2-5) வர்ணிக்கப்பட்ட பரமாத்மாவின் இரண்டு அடை யாளங்களான எல்லாப் பாவங்களும் விலக்கப்பெற்றிருக்கை, மற்றும் எண்ணற்ற கல்யாண குணங்கள் நிறைந்திருக்கை ஆகியவற்றை, ‘‘இறை’’ (1-2-3) என்னும் சொல்லால் காட்டித்தந்து, இவன், சித், அசித்தைக் காட்டிலும் வேறுபட்டி ருப்பது இந்தப் பண்புகளால்தான் என்பதை சுட்டிக்காட்டு கிறார்.
ஆறாம் அதிகரணத்தில் (அஹிகுண்ட3லாதி4கரணம்- 3-2-6), அசித் தத்வம், ப்ரஹ்மத்தின் பரிணாமமல்ல, ப்ரஹ்மத்திற்கு இணையான பொருளுமல்ல, ஜீவனைப் போலவே, ப்ரஹ்மத்திற்கு ப்ரகாரமாக இருப்பது என்பது காட்டப்பட்டது. இதே பொருளை ஆழ்வார், ‘‘நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறை’’ (திருவாய். 1-2-3) என்பதால், அறிவிக்கிறார். எவ்வாறென்றால், ப்ரக்ருதியின் தொடர்பால் ஏற்படும் அஹங்கார மமகாரங்கள் விடத்தக்கவை என்பதால், ப்ரக்ருதியும் விடத்தக்கது. எனவே, அண்டத்தின் மூலப்பொருள் காரணமான (உபாதான காரணமான) ‘ப்ரஹ்மத்தின் பரிணாமமாக அசித் இருக்காது’ என்று தேறுகிறது. இது, ப்ரஹ்மத்திற்கு இணையானதாக ஆகாது. எனவே, இதுவும் சித் வஸ்துவான ஜீவனைப்போலவே ப்ரஹ்மத்திற்குச் சரீரமானதே. இதற்கும் சரீரமாக உள்ள பண்பே உள்ளது என்பதும்; ‘‘இறை’’ (திருவாய். 1-2-3) என்பதால் உணர்த்தப்பட்டது. இதனால், ஆறாம் அதி கரணத்தில் காட்டப்பட்ட ‘‘அசித் தத்துவத்தின்’’ ஸ்வரூபமும் இதனால் விளக்கப்பட்டது.
ஏழாம் அதிகரணத்தில் (பராதி4கரணம் 3-2-7), பரமாத்மாவைக் காட்டிலும் உயர்ந்ததான தத்வம் ஒன்று இல்லை என்பது நிலை நிறுத்தப்பட்டது. இதே கருத்தை ஆழ்வார், ‘‘இறை சேர்மின், உயிர்க்கு அதன் நேர்நிறை யில்லே’’ (திருவாய். 1-2-3) என்னும் வரியில் அருளிச் செய்கிறார். ‘‘இறை’’ என்பது ‘‘ஈஶன்’’ என்னும் சொல்லுக்கு இணையான பொருளைக் கொண்டது. ஜகத் காரணமான பொருளை இவர், ‘‘இறை’’ (திருவாய். 1-2-3) என்னும் சொல்லால் குறிப்பிடுவதால், இதற்கு மேலான பொருள் ஒன்று கிடையாது என்பது தெளிவாக்கப்பட்டது.
எட்டாவது அதிகரணத்தில் (ப2லாதி4கரணம் 3-2-8), இதர தேவதைகளை ஆராதிப்பவர்களுக்கும், அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக இருக்கும் பகவானே பலனளிக்கிறான், பூர்வ மீமாம்ஸகர்கள் கூறும்’’ஆபூர்வம்’’ எனப்படும் காணப்படாத தத்துவமல்ல என்பது காட்டப்பட்டது. இந்த அர்த்தத்தையும் ஆழ்வார், ‘‘இறை சேர்மின்’’ (திருவாய். 1-2-3) என்பதால் பகவானை ஆராதனை செய்வதையே விதித்து, ஆராதிக்கப்படும் பரமாத்மாவின் உகப்பே பலன், ‘அபூர்வத்தால்’ கிடைப்பது பலன் அல்ல என்று அறிவுறுத்துகிறார்.
எனவே, மூன்றாம் அத்யாயம் இரண்டாம் பாதத் திற்கும் (உபயலிங்கபாதம்) முதல் பத்து, இரண்டாம் திருவாய் மொழியில் இரண்டு மற்றும் மூன்றாம் பாசுரங் களுக்கும் (’மின்னின் நிலையிலே’, நீர்நுமதென்றிவை) கருத் தொற்றுமை தெளிவு படுத்தப்பட்டது.
மூன்றாம் அத்யாயத்தின் (ஸாதனாத்யாயம்) மூன்றாம் பாதம் ‘‘குணோபஸம்ஹார பாதம்’’ எனப்படுகிறது. இதற்கும் திருவாய்மொழி ‘‘இல்லதும் உள்ளதும்’’ (1-2-4), ‘‘அற்றது பற்றெனில்’’ (1-2-5), ‘‘பற்றிலன் ஈசனும்’’ (1-2-6), மற்றும் ‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7), பாசுரங்களுக்கும் கருத்தொற்றுமை உண்டு.
முதல் அதிகரணத்தில் (ஸர்வவேதா3ந்தப்ரத்ய யாதி4கரணம் 3-3-1 ), பல ச்ருதிச் சொற்றொடர்களால் காட்டித்தரப்படும் த3ஹர வித்யை, வைஶ்வாநர வித்யை போன்றவை, ஒன்றேயா, வெவ்வேறா என்பது வினாவாக, அவற்றைத்தெரிவிக்கும் சொற்றொடர்களின் பொருளும், மேற்கொள்ளப்பட வேண்டிய வழி முறைகளும், வழி பாட்டிற்குரிய பொருள்களும், மற்றும் பெறப்படும் பலன்களும் ஒன்றாகவே இருப்பதால், எல்லா வித்யைகளும் ஒன்றே என்பது உறுதிபடுத்தப்படுகிறது.
இரண்டாம் அதிகரணத்தில் (அந்யதா2த்வாதி4 கரணம்-3-3-2), சாந்தோக்ய உபநிஷத் மற்றும் ப்ருஹ தாரண்யக உபநிஷத்தில் (வாஜஸநேயம்) அறியப்படும், உத்கீத2ம் - ஒன்றேயா அல்லது வெவ்வேறா என்னும் கேள்வி எழ, (சாந்தோக்யவாஜஸநேயங்களில் ச்ருதையான உத்கீதவித்யையில் ப்ராணத்ருஷ்ட்யுபாஸ்தி, சோதநாத் யவிசேஷத்தாலே ஏகமென்று சங்கித்து, ஒரு ஸ்தலத்தில் உத்கீதாவயவமான ப்ரணவத்தில் ப்ராணத்ருஷ்டியும், ஸ்தலாந்தரத்தில் க்ருத்ஸ்நோத்கீதத்தில் ப்ராணத்ருஷ்டிமாய் இருக்கையாலே, ரூபபேதாத் வித்யாபேதம் என்று நிர்ணயித்தார் ) வழிபடப்படும் பொருளும், வழிபாட்டிற்கான காரணமும் வெவ்வேறாக இருப்பதால், இந்த இரண்டு உபநிஷத்துக் களில் காணப்படும் உத்கீதை2 வெவ்வேறு என்று நிர்ண யிக்கப்பட்டது.
மூன்றாம் அதிகரணத்தில் (ஸர்வாபே4தா3தி4கரணம்- 3-3-3), வாஜஸநேயம், சாந்தோக்யம் மற்றும் கௌஷீதகி ப்ராஹ்மணத்தில் காணப்படும் ப்ராணனின் வழிபாடு, வடிவ வேறுபாடுகளால் வெவ்வேறோ என்கிற ஐயப்பாடு எழ, வடிவத்தில் வேறுபட்டிருந்தாலும், வழிபட வேண்டிய குணங்களால் ஒன்றுபட்டிருப்பதால், இவற்றில் அறியப்பட்ட வித்யை ஒன்றே என்று நிலை நிறுத்தப்பட்டது.
நான்காம் அதிகரணத்தில் (ஆநந்தா3த்3யதி4 கரணம் -3-3-4), ப்ரஹ்மம் தியானிக்கப் படுகையில் எந்த குணத்துடன் கூடியதாக வழிபடப்பட வேண்டும் என்னும் கேள்வி எழ, ஸத்யம், ஞானம் மற்றும் அநந்தம் போன்ற குணங்கள் ப்ரஹ்மத்திடமிருந்து பிரிக்க இயலாததாகையால், எல்லா வித்யைகளாலும், இந்த குணங்களுடன் கூடிய ப்ரஹ்மமே வழிபடப்பட வேண்டும் என்பது நிலை நிறுத்தப்பட்டது.
ஐந்தாம் அதிகரணத்தில் (கார்யாக்2யாநாதி4கரணம் -3-3-5) சாந்தோக்யம் மற்றும் வாஜஸநேயங்களில் விதிக்கப்பட்டிருக்கும் ‘ஆசமநீயம்’’- அதாவது உணவு உட்கொள்வதற்கு முன்பு குறிப்பிட்டளவு நீரை மூன்று முறை உட்கொள்வது, உணவு உண்ட பிறகு குறிப்பிட்டளவு நீரை உட்கொள்வது ஆகியவை ப்ராண வித்யை மேற்கொள்பவர் களுக்கு விதிக்கப்பட்ட ஆணையா என்னும் கேள்வி எழ, இது விதிக்கப்பட்டதல்ல. இவ்வாறு உட்கொள்ளப்படும் நீர் ப்ராணனுக்கு ஆடையாக அமைகிறது என்று காட்டப்பட்டது.
ஆறாம் அதிகரணத்தில் (ஸமாநாதி4கரணம் - 3-3-6), வாஜஸநேயக அக்நி ரஹஸ்யத்திலும், ப்ருஹதாரண்யகத்தில் காணப்படும் சாண்டில்ய வித்யையிலும், ஓர் இடத்தில் பரமாத்மாவின் ஸத்ய ஸங்கல்பம் காணப்படுவதாலும், வேறோர் இடத்தில் ‘வஶித்வாதிகள்’ என்னும் குணம் காணப் படுவதால், இவை வெவ்வெறு வித்யைகளோ என்னும் ஐயப்பாடு நீக்கப்பட்டு, இவை இரண்டும் ஒன்றே என்று உறுதிபடுத்தப்படுகிறது.
ஏழாம் அதிகரணத்தில் (ஸம்ப3ந்தா4தி4கரணம்- 3-3-7), ‘‘ஆதித்யமண்டலத்திலும் அக்ஷியிலும் ஶ்ருதமான ஸத்யஶப்தவாச்யப்ரஹ்மத்தினுடைய வ்யாஹ்ருதி ஶரீரத்வோ பாஸநம் துல்யமாகையாலே, ‘‘அஹம் அஹ:’’ என்கிற ரஹஸ்ய நாமங்களும் இரண்டு ஸ்தலத்திலும் அநியமேன அந்விதங்களாகின்றன என்று சங்கித்து, ‘அக்ஷ்யாதித்யஸ்தான ஸம்பந்தித்வாகார பேதத்தாலே ரூபம் பிந்நமாய், வித்யை பேதிக்கையாலே, இரண்டு நாமங்களும் வித்யாத்வய நியதங்கள்’ என்று நிர்ணயித்தார்.’’ -
3-3-20 ஸூத்ரத்தில் காணப்படும் விளக்கம்:-
சூரியகோளத்திலும், கண்ணிலும் இருக்கும் ஸத்ய ப்ரஹ்மத்தை வழிபாட்டிற்குரிய பொருளாகக் குறிப்பிட்ட பின்பு, சரீரத்தைப் பெயராகக் கொண்டிருப்பதை - இரண்டு உபநிஷத்துக்கள்- ரகசிய பெயர்கள்- தேவதைகளைக் குறிப்பிடுவது- இதில் காணப்படுகிறது.
‘‘தஸ்யோபநிஷதஹரிதிஅதி4தை3வதம்’’ (ப்ருஹ. 7-5-3) - அவனுடைய ரகசியமான பெயர் ‘அஹ:-’ என்பது’, உடலைக் குறிப்பிடுவதாக இதில்: ‘‘தஸ்யோபநிஷத3ஹ மித்யத்4யாத்மம்’’ (ப்ருஹ. 7-5-3) - ‘அவனுடைய ரகசியமான பெயர் ‘அஹம்’ என்பது’.
(ப்ருஹதாரண்யகத்தில் படிக்கப்பட்டுள்ள அக்ஷி ஆதித்ய வித்யைகளில் உபாஸன சேஷமாக சொல்லப் பட்டுள்ள ‘‘அஹ:’’ ‘‘அஹம்’’ என்கிற ரஹஸ்ய நாமாக்களின் உபஸம்ஹாரத்தைப் பற்றியது. இங்கு அது விவரிக்கப் படுகிறது. ‘‘தத்யத்ஸத்யம் அஸௌ ஆதித்ய ஏஷ: ஏதஸ்மிந் மண்டலே புருஷ: யஶ்சா(அ)யம் தக்ஷிணே அக்ஷந் புருஷ: .....’’ (ப்ருஹ.7-4-1) (இதற்கு முன் ப்ராஹ்மணத்தில் ஸத்யத்வேந ஹ்ருதயோபாஸனத்தைக் கூறினார். இப்போது அக்ஷி ஆதித்யாந்தர்வர்த்தியான ப்ரஹ்மமானது நிர்விகாரத்வ ரூப (ஸத்யமாக இருப்பதால்) ஸத்யத்வேந வ்யா ஹ்ருதி ஶரீரகத்வேநச (ஸத்யனாயும் வ்யாஹ்ருதி ஶரீரக னாயும்) உபாஸனத்தை செய்ய வேண்டுமென்று கூறுகிறார்.
தத் ஸத்யமென்று ‘‘ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷோ த்ருஶ்யதே’’ ‘‘ய ஏஷோ அந்ரக்ஷிணி புருஷோ த்ருஶ்யதே’’ என்று சாந்தோக்ய ச்ருதி ப்ரஸித்தம். அக்ஷந் அக்ஷிணி - கண்களில் என்று அர்த்தம் சொல்லி, ‘‘ய ஏஷ ஏதஸ்மிந் மண்டலே புருஷ: தஸ்ய பூ: இதி ஶிர: ஏகம் ஶிர: ஏகம் ஏததக்ஷரம், புவ: இதி பாஹூத்வௌ பாஹூத்வே ஏதே அக்ஷரே ஸுவரிதி ப்ரதிஷ்டா த்வே ப்ரதிஷ்டே த்வே ஏதே அக்ஷரே தஸ்ய உபநிஷத் அஹ: இதி ஹந்தி பாப்மாநம் ஜஹாதி ச ய ஏவம் வேத’’).
(ஆதித்ய மண்டலத்தில் இருக்கிற ஸத்ய புருஷனுக்கு பூ: என்கிற வ்யாஹ்ருதியானது ஶிரஸ். அதாவது அதை சிரஸ்ஸாக தியானம் செய்ய வேண்டுமென்று பொருள். சிரஸ்ஸு என்பது ஒன்றுதான். ஆகையால் பூ: என்கிற ஒரு எழுத்தை சிரஸ்ஸாக சொல்லிற்று: புவ: என்கிற வ்யாஹ்ருதியை ஸத்யபுருஷனுடைய கைகளாக த்யானம் பண்ண வேண்டும். கைகள் இரண்டாகையால் புவ: என்கிற இரண்டு அக்ஷரங்களை கைகளாக த்யானம் செய்ய சொல்லிற்று. ஸுவ: என்பதால் ஸத்யபுருஷனுடைய திருவடிகளாக தியானம் பண்ணவேண்டும். ஸுவ: என்கிற வ்யாஹ்ருதியானது இரண்டு அக்ஷரங்களை உடையதாக இருப்பதால் இரண்டு திருவடிகளாக தியானம் செய்யச் சொல்லிற்று. ஆதித்ய மண்டலாந்தரவர்த்தியான இந்த புருஷனுக்கு அஹ: என்று ரஹஸ்ய நாமா - ஸங்கேதப் பெயர். இவ்விதமாக ஆதித்ய மண்டலாந்தரவர்த்தியான புருஷனை எவன் உபாஸிக்கிறானோ அவன் பாபத்தைப் போக்கடிக் கிறான். பாபத்தை விடவும் செய்கிறான். அஹ: என்பதற்கு ‘ஹந்தி’, ‘ஜஹாதி’ என்கிற இரண்டு ரூபங்களும் உண்டாகை யால் இரண்டையும் சொல்லிற்று என்று கருத்து).
இவ்விதமே அக்ஷிரந்தர்வர்த்தியான ஸத்யபுருஷனை வ்யாஹ்ருதி ஶரீரகனாக உபாஸனம் பண்ணும்படியாக சொல்லி அக்ஷியந்தர்வத்தியான புருஷனுக்கு ‘அஹம்’ என்று ரஹஸ்யநாமா என்று சொல்லியிருக்கிறது. பாஷ்யத்திலுள்ள ‘உபநிஷதௌ’ என்பதற்கு ரஹஸ்யநாமாநி என்று பொருள்.).
எட்டாம் அதிகரணத்தில் (ஸம்ப்4ருத்யதி4கரணம்- 3-3-8), தைத்திரீய சாகை மற்றும் சாந்தோக்யத்தில் ப்ரஹ்மத்தின் தியானிக்கப்படவேண்டிய சிறப்பான பண்புகளாக குறிப்பிடப்பட்டிருக்கும், ஜ்யேஷ்டத்வம், ஸம்ப்ருதி(புகழத்தக்க வீர்யங்களைத் தாங்கிநிற்கை) மற்றும் த்யுலோக வ்யாப்யத்வம் (தேவலோகத்தைவ்யாபித் திருக்கை) ஆகியவை, மற்ற உபாஸனைகளுடன் சேர்த்துக் கொள்ளப்படக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
ஒன்பதாம் அதிகரணத்தில் (புருஷவித்3யாதி4 கரணம் -3-3-9), இரு ஶாகைகளிலும் (தைத்திரீய உபநிஷத் மற்றும் சாந்தோக்யத்தி) ஓதப்பெற்ற இவ்வித்யைகள் புருஷவித்யை என்று ஒரே பெயரைப் பெற்றிருந்தபோதிலும், ஒன்றில் ஓதப்பெற்ற குணங்கள் மற்றொன்றில் ஓதப்படாமையால் வெவ்வேறானவையே என்றே கொள்ள வேண்டும்.
பத்தாம் அதிகரணத்தில் ( வேதா4த்3யதி4கரணம் 3-3-10 ), உபநிஷத்துக்களை ஓதத் தொடங்குகையில், ப்ரார்த்தனையாக ஓதப்படும் ஶாந்தி மந்த்ரம், ‘‘ஶம் நோ மித்ர: ஶம் வருண:’’ (தை.சீக்ஷா-1) (நமக்கு மித்ரன் (சூரியன் -பன்னிரண்டு ஆதித்யர்களில் ஒருவன்), வருணன் முதலான தெய்வங்கள் மங்களத்தை உண்டாக்கட்டும்) என்று தொடங்கும் மந்திரங்கள் உள்ளன. இது போன்றவை வித்யையின் அங்கங்களல்ல. எனவே வித்யை ஆரம்பிக்க இவை ஓதப்படவேண்டிய அவசியம் இல்லை என்பது காட்டப்பட்டது.
பதினொன்றாவதுஅதிகரணத்தில்(ஹாந்யதி4க ர ணம் 3-3-11), ப்ரஹ்மஜ்ஞானியானவன், மரணமடைகை யில், தன்னுடைய நற்கர்மங்கள் மற்றும் தீய கரமங்களை விடுவதாகிய ‘‘ஹாநி’’(இராமை) என்பதை த்யானிக்க வேண்டுமா அல்லது இந்த கர்மங்களை முறையே நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் மாற்றுவதாகிய, ‘‘உபாயந’’ என்பதை த்யானிக்கவேண்டுமா என்னும் கேள்வி எழ, ‘‘ஹாநி’’ என்பது ‘உபாயநத்தையும்’ (அடைதலையும்) உள்ளடக்கி யிருப்பதால், இரண்டுமே த்யானிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக்கப்பட்டது.
பன்னிரண்டாம் அதிகரணத்தில் (ஸாம்பராயாதி4 கரணம்-3-3-12), ப்ரஹ்மஞானியானவன் மரணமடை கையில், அவன் உடலை விட்டு நீங்கும் நேரத்திலேயே, தன் நற்கர்மம் மற்றும் தீய கர்மங்களைக் கைவிடுகிறானா? அல்லது பரமபதத்தின் எல்லையை அடைந்தபிறகு கைவிடுகிறானா? என்னும் ஐயப்பாடு எழ, ஜீவன் உடலை விட்டு புறப்பட்ட பிறகு, அவனுடைய புண்ய பாபங்களை அநுபவிக்க வாய்ப்பில்லாததால், இவை உடலைவிட்டு புறப்பட்ட உடனேயே நீங்கிவிடுகிறது என்று நிர்ணயிக்கப் பட்டது.
பதிமூன்றாம் அதிகரணம் (அநியமாதி4கரணம்- 3-3-13 ), அர்ச்சிராதி மார்க்கத்தில் பயணம், குறிப்பிட்ட சில வித்யைகளை மேற்கொள்ளும் உபாஸகர்களுக்கு மட்டுமே உரியதா என்னும் கேள்வி எழ, அல்ல, அது எல்லா ப்ரஹ்ம உபாஸனம் செய்யும் ப்ரஹ்ம வித்துக்களுக்கும் பொதுவானது என்று தெரிவிக்கப்பட்டது.
பதினான்காம் அதிகரணத்தில் (அக்ஷரத்4யதி4 கரணம்- 3-3-14), ப்ருஹதாரண்யகம் மற்றும் முண்டக உபநிஷத்துக்களால் கற்றுத் தரப்படும் அக்ஷர வித்யையில், அஸ்தூலம், அநண்வ, அஹ்ரஸ்வ, அதீ3ர்க4ம், அலோஹிதம், அஸ்நேஹம், அக்3ராஹ்ய போன்ற ப்ரஹ்மத்தின் குணங்கள் மற்ற வித்யைகளின் உபாஸனத்தை மேற்கொள்ளப் படுகையில் உள்ளடக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதற்கு, இவை ‘ஹேய-ப்ரத்யநீகத்வ குணங்கள்’. இவை ப்ரஹ்மத்தின் முக்யமான குணங்களான ஸத்யம், ஜ்ஞானம், அநந்தம் மற்றும் ஆநந்தத்துடன் சேர்த்து த்யானிக்கப்பட வேண்டியவையே என்பது நிலை நிறுத்தப்பட்டது.
பதினைந்தாவது அதிகரணத்தில் (அந்தரத்வாதி4 கரணம்-3-3-15), ப்ருஹதாரண்ய உபநிஷத்தில் யாஜ்ஞ வல்கியர், உஷஸ்த்த மற்றும் கஹோலா என்பவர்களுக்கு கற்றுத் தந்த ‘‘உஷஸ்த கஹோல வித்யை’’ இரண்டும் வெவ்வேறு வித்யைகள் அல்ல. ஒன்றே. ஏனெனில், அவை இரண்டும் வழிபாட்டிற்குரிய பொருளான ப்ரஹ்மத்தையே விவரிக்கின்றன என்பது தெளிவாக்கப்பட்டது.
பதினாறாவது அதிகரணத்தில் (காமாத்3யதி4 கரணம் 3-3-16), சாந்தோக்யத்திலும், ப்ருஹதாரண்யகத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும் இதயத்தில் வசிக்கும் தஹராகா ஶத்தை வழிபடும் முறையில், வழிபட வேண்டிய அதன் குணங்களில் சிறிது வேறுபாடு உள்ளதால், இந்த இரு உபநிஷத்துக்கள் போதிக்கும் வித்யை வேறு வேறோ என்னும் ஐயப்பாடு எழ அது நீக்கப்படுகிறது. ப்ருஹதாரண்யகத்தில் காணப்படும், ‘‘வஶிஸ்த்வா’’ என்பது, சாந்தோக்யத்தில் காணப்படும் ‘‘ஸத்ய ஸங்கல்பத்தின்’’ ஓர் வடிவே. எனவே, இவை இரண்டும் வெவ்வேறான வித்யைகள் அல்ல என்று நிர்ணயிக்கப்பட்டது.
17ஆவது அதிகரணத்தில் (தந்நிர்த்த4ராணா நியமாதி4 கரணம்-3-3-17), உத்கீத உபாஸனை வித்யைக்கு இன்றிய மையாததா என்பது விசாரிக்கப்பட்டு, அது வித்யையின் அவசியமான அங்கமல்ல என்பது காட்டப் பட்டது.
18ஆவதுஅதிகரணத்தில் (ப்ரதா3நாதி4கரணம் -3-3-18), தஹரவித்யையை விவரிக்கும், ப்ரஹ்மத்தின் வழிபாடு அது இதயத்தில் இருக்கும் ஓர் நுண்ணிய இடமாக த்யானிக்கப்படவேண்டும் என்று விதிக்கிறது. இங்கு ப்ரஹ்மத்தின் குணங்கள் மட்டும் த்யானிக்கப்பட வேண்டுமா? அல்லது சாந்தோக்ய உபநிஷத்தில் குறிப்பிடப்பட்ட எட்டு குணங்கள் கூடியதான ப்ரஹ்மத்தை வழிபடப்பட வேண்டுமா? என்னும் கேள்வி எழ, குணங்களுடன் கூடிய ப்ரஹ்மமே த்யானிக்கப்பபட வேண்டும் என்று காட்டப்பட்டது.
19ஆவது அதிகரணத்தில் (லிங்க3பூ4யஸ்த்வாதி4 கரணம்- 3-3-19), தைத்திரீய நாராயணத்தில், நாராயணன், பரப்ரஹ்மம், பரதத்வம், பரம்ஜோதி போன்ற சொற்களால் அறிவிக்கப்படுகிறான். இது, தஹரவித்யைக்கு மட்டுமே பொருந்துமோ என்று ஆராயப்பட்டு இது அவ்வாறு அல்ல, ‘‘நாராயணன் மிக உயர்ந்த தெய்வம், அவன் த்யானத்திற்கு உரிய பொருள் என்பது தஹரவித்யையையும் சேர்த்து எல்லா வித்யைகளுக்கும் பொதுவானது’’ என்பது நிலை நிறுத்தப் பட்டது. ஏனெனில் இந்தச் சொற்றொடர்கள், அடையாளக் குறியீடுகளை, மீண்டும் குறிப்பிடுவதால் வலிமை மிக்க சான்றுகள். இது, லிங்க3பூ4யஸ்த்வாத் தத்3தி4 ப3லீயஸ்தத3பி (3-3-43) என்ற ஸூத்ரத்தில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. (லிங்க3பூ4யஸ்த்வாத் - (தைத்திரீய நாராயணா நுவாகம் எல்லாப் பரவித்யையிலும் உபாஸிக்கப்படும் பரம்பொருள் எந்த தேவதை என்று நிர்த்தாரணம் செய்வது என்னும் விஷயத்தில்) அடையாளங்களாகிற சொற்றொடர் கள் அதிகமாயிருக்கையால் (அவ்விஷயம் தேறுகிறது.) தத் ஹி ப3லீய: - அந்த வாக்யமன்றோ (ப்ரகரணத்தைக் காட்டிலும்) வலிமைமிக்கது. தத் அபி - இந்த விஷயம் பூர்வ மீமாம்ஸையிலும் சொல்லப்பட்டது.)
20ஆம் அதிகரணத்தில் (பூர்வவிகல்பாதி4கரணம்- 3-3-20), அக்நிரஹஸ்யத்தில், மனதால் சில சடங்குகள் மேற் கொள்ளப்படுகையில் அவை அக்நியில் ஸமர்ப்பிக்கப்படும் பலியைப் போன்றதா? அல்லது மனதால் த்யானிக்கப்படும் வித்யையின் ஓர் பகுதியா? என்ற கேள்வி எழ, இவை த்யானத்தின் வடிவானவை என்று நிலை நிறுத்தப்படுகிறது.
21ஆம் அதிகரணத்தில் ( ஶரீரேபா4வாதி4கரணம்- 3-3-21), ஜீவாத்மாவின் உபாஸனம் விவாதிக்கப்படுகிறது. ப்ரஹ்மத்தை த்யானிக்கையில், ஜீவனை உபாஸிப்பதும் ஓர் பகுதியாக விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜீவன் த்யானிக்கப்படுகையில் அவன் கர்த்தா, போக்தா போன்ற குணங்களுடன் உடலுருக் கொண்டவனாக த்யானிக்கப்பட வேண்டுமா? அல்லது அவன் இயல்பான பண்புகளாகிய அபஹதபாப்மத்வம் மற்றும் ஸத்யஸங்கல்பத்வம் போன்ற குணங்களுடன் கூடியவனாக த்யானிக்கப்பட வேண்டுமா? என்னும் கேள்வி எழ, அவன், அவனுடைய உண்மையான வடிவிலேதான் வழிபடப்பட வேண்டும்; உடலுருக்கொண்ட வடிவில் அல்ல என்று நிர்ணயிக்கப்பட்டது.
22ஆம் அதிகரணத்தில் (அங்கா3வப3த்3தா4தி4 கரணம்- 3-3-22), சில உபநிஷத்சாகைகளில் விதிக்கப் பட்டிருக்கும் உத்கீத2 உபாஸனை, எல்லா சாகைகளுக்கும் பொருந்துமா? என்னும் கேள்வி எழ, ‘‘உத்3கீ3த2முபாஸீத’’ (சாந். 1-1-1)- ‘ஒருவர் உத்கீதத்தை வழிபட வேண்டும்’. என்பதால் எல்லா சாகைகளுக்கும் பொருந்தும் என்று பதிலளிக்கப்படுகிறது.
23-ஆம் அதிகரணத்தில் (பூ4மஜ்யாயஸ்த்வாதி4 கரணம்- 3-3-23), வைஶ்வாநர ஆத்மாவைக் குறித்த த்யானம் பேசப்படுகிறது. வைஶ்வாநர ஆத்மா த்யானிக்கப் படுகையில், அதன் பகுதிகளான த்யுலோகம், ஆதித்யன், வாயு, ஆகாஶ்ம் மற்றும் ப்ருத்வி ஆகியவை தனித்தனியாக த்யானிக்கப்பட வேண்டுமா என்னும் கேள்வி எழ, இவை எல்லாவற்றையும் பகுதிகளாகக் கொண்ட வைஶ்வாநர ஆத்மாவின் அண்டமளாவிய வடிவமே த்யானிக்கப்பட வேண்டும் என காட்டித்தரப்பட்டது.
24-ஆம் அதிகரணத்தில், (ஶப்3தா3திபே4தா3தி4 கரணம் 3-3-24), நாநா வித்3யா: (பலவகைப்பட்ட வித்யைகள் வித்யைகளுக்குள்)’’- ‘‘ஜக3தே3ககாரணத்வா பஹதபாப்மத்வா த்3யநுப3ந்த4 பே4தா3:’’ - அறியப்பட வேண்டும்’, ‘வழிபடப்பட வேண்டும்’ - ஆகிய சொற்கள், த்யானத்தைப் பலமுறை குறிப்பிடும் போதிலும், த்யானங்கள், ப்ரஹ்மத்தை மட்டுமே குறிப்பிடும் போதிலும், வித்யைகள் வேறுபட்டவை. இவை பல்வேறு சூழ்நிலைகளில் விவரிக்கப்பட்ட, ‘பண்புகளால் சிறப்பிக்கப் பட்ட ப்ரஹ்மம்’ ‘அண்டத்தின் ஒரே காரணமாயிருக்கை’, ‘எல்லாப் பாவங் களும் அழிக்கப்பட்டிருப்பது’ ஆகியவற்றை தியானிப்பதை, மீண்டும் மீண்டும் மேற்கொள்வதைக் கற்பிக்கின்றன. இவை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்ட தியானத்தின் இயல்பைக் கொண்டவை. தஹர வித்யை,சாண்டில்யவித்யை, ஸத் வித்யை, ஆநந்தமய வித்யை போன்ற பல வித்யைகளுக்குள் பேதமில்லை என்பது அறியப்படுகிறது. ஆனால், எந்த குணங்களுடன் கூடியதாக வழிபடப்பட வேண்டும் என்பதைக் குறித்து இந்த வித்யைகள் விதிக்கும் அதிகார ஆணைகளுக்குள் வேறுபாடு இருப்பதால், வித்யைகள் வெவ்வேறு என்று நிர்ணயிக்கப்படுகிறது.
25-ஆம் அதிகரணத்தில் (விகல்பாதி4கரணம் 3-3-25), எல்லா வித்யைகளாலும் அடையப்படும் பலன் ஒன்றாக இருப்பதால், ப்ரஹ்மத்தை, அடையத்தக்க வித்யைகள் ஒன்றுக்கொன்று மாற்று வழி என்பது காட்டித்தரப்பட்டது.
26-ஆம் அதிகரணத்தில் (யதா2ஶ்ரயபா4வாதி4 கரணம்3-3-26 ), சில உபாஸனைகளில் விதிக்கப் பட்டிருக்கும் உத்கீத2 உபாஸனை, எல்லா வித்யைகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியது இல்லை என்பது காட்டித் தரப்பட்டது. ஏனெனில், இந்த உபாஸனை, ப்ரஹ்மத்தை உபாஸிப்பதற்கு துணையானதாக அறியப்படுவதில்லை.
இவ்வாறாக இந்த 26 அதிகரணங்களில், ஸூத்ரகாரர் நான்கு விஷயங்களை நிரூபிக்கிறார். இரண்டு, மூன்று, ஐந்து, ஏழு, பத்து மற்றும் இருபத்தி ஆறாம் அதிகரணங்களில், தாழ்ந்த பலன்களுக்காக மேற்கொள்ளப்படும் உபாஸனை களை விவரித்தார்.
இருபதாவது அதிகரணத்தில், ப்ரஹ்மத்தை உபாஸிக்கும் முறையை நிரூபித்தார்.
நான்கு மற்றும் பதினான்காவது அதிகரணங்களில் ப்ரஹ்மத்தின் ஸ்வரூப நிரூபக குணங்கள் போலவே, அஸ்தூலத்வாதி குணங்களும் எல்லா வித்யைகளுக்கும் பொதுவானது என்று நிரூபித்தார்.
பத்தொன்பதாவது அதிகரணத்தில், அடையாளக் குறியீடுகள் மீண்டும் கூறப்படுவதால் நாராயணன் எல்லா வித்யைகளாலும் பரமாத்மா என்று அறியப்படுபவன் என்பதைத் தெரிவிக்கிறார்.
ஏழு மற்றும் பத்தாவது அதிகரணங்களில் பல்வேறு வித்யைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை விவரித்தார்.
இவ்வாறு ஸூத்ரகாரர் நிரூபித்த நான்கு வகையான விஷயங்கள், ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி ‘‘இல்லதும்உள்ளதும்’’(1-2-4),’’அற்றதுபற்றெனில்’’(1-2-5) ‘‘பற்றிலன்ஈசனும்’’(1-2-6) மற்றும் ‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7) பாசுரங்களில் காணப்படுகின்றன.
இதில் பாசுரமாகிய ‘‘இல்லதும்உள்ளதும்’’(1-2-4), என்பதில், பரமாத்மாவின் ஸ்வரூப நிரூபக குணங்கள் எல்லா வித்யைகளிலும் கற்கப்படவேண்டும் என்பதை அருளிச் செய்தார்.
‘‘அற்றதுபற்றெனில்’’(1-2-5) என்பதில் அற்ப பலன்களுக்காக மேற்கொள்ளப்படும் உபாஸனைகளை செறுத்து நிலைநிற்கும்படி பகவத்விஷயத்தைக் கிட்டப் பார்க்கில் ஈச்வரனை ஆச்ரயிக்கவேண்டுமென்கிறார்.
‘பற்றிலன்ஈசனும்’’(1-2-6) பாசுரத்தில், வித்யை களுக்கிடையே உள்ள வேறுபாடு மற்றும் வேறுபாடற்ற தன்மைகளை அருளிச் செய்கிறார்.
‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7) பாசுரத்தில், பரமாத்மா எல்லாவற்றிற்கும் உடையவனாக இருப்பதை காட்டித் தருகிறார்.
‘‘இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு எல்லையில் அந்நலம் புல்குபற்றற்றே’’ (1-2-4) என்ற பாசுரத்தில் ‘பரமாத்மாவின் ஸ்வரூபம், அசித் போன்றது அல்ல, சித் போன்றதும் அல்ல, இடைவெளியற்ற ஆநந்தமே உருவான வன் அவன். மற்ற பொருள்களில் விருப்பத்தைத் துறந்து பரமாத்மாவின் வடிவத்தை ஆச்ரயிப்பாயாக’’ என்று அறிவுறுத்துகிறார். ஆநந்த வல்லியிலும் ஆதர்வணிகத்திலும் காட்டித்தரப்படும் பரமாத்மாவின் ஆநந்தம், நுண்ணிய தன்மை, ஆகிய அவனுடைய ஸ்வரூப நிரூபக தர்மங்கள் எல்லா வித்யைகளுக்கும் பொதுவானது என்பது இப்பாட்டில் விளக்கப்படுகிறது.
‘‘அற்றதுபற்றெனில் உற்றது வீடு உயிர் செற்றது மன்னுறில் அற்றிறைபற்றே’’ (1-2-5) பாசுரத்தில், புலனுகர்ச்சியில் அநுபவம் போதும் என்று தோன்றும் காலத்தில், ஆத்மாவை அநுபவிக்க தோன்றும், அது அற்பமான ஆநந்தத்தைத் தரக்கூடியது. இது தாழ்ந்தது என்பதை உணர்ந்து இந்த அதிசயமான பலனில் பற்று அற வேண்டுமானால் ஸர்வேச்வரனை சரணடையுங்கள் என்று உபதேசிக்கிறார். உத்கீதை2 உபாஸனை போன்றவற்றில் ஆத்ம உபாஸனை உபதேசிக்கப்படுகிறது ப்ரஹ்மத்தின் உபாஸனை கூறப்படவில்லை. இப்படிப்பட்ட ஆத்மா உபாஸனை கூறும் வழிகள் கைவிடப்பட வேண்டும் என்பது இப்பாசுரத்தில் அறியப்படுகிறது.
கீதாபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர், உயர்ந்த பலனான ப்ரஹ்மத்தை அடைவதற்கு, உடலுடன் கூடி இருக்கை யிலேயே முயற்சிக்க வேண்டும் என்பதால், உடல் தொடர்பைத் துறந்து, ஆத்மாநுபவத்தில் ஈடுபட்டபிறகு, இது கூடாது என்பதால், விடத்தக்கது என்று விளக்கியதை இப்பாசுரத்தில் காட்டித்தருகிறார். ஆழ்வாரும், இப்பாசுரத்தால், ப்ரஹ்ம உபாஸனையைக் கூறாத வித்யைகள், விடத்தக்கவை என்பதை அருளிச் செய்கிறார். ‘‘இறை பற்று’’ (திருவாய். 1-2-5) என்பதால், அப்படிப்பட்ட உபாஸனைகளை விட்டுவிட்டு பரமாத்மாவையே சரணடைய வேண்டும் என்பதை காட்டித்தருகிறார்.
‘‘பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன், பற்றிலையாய், அவன் முற்றிலடங்கே’’(1-2-6) என்னும் பாசுரம், பரமாத்மாவை வழிபடும் வித்யைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு மற்றும் வேறுபாடற்ற தன்மையை, விளக்குவதாக உள்ளது. ‘‘ஈச்வரனான எம்பெருமான், தன்னை வழிபடுபவர்கள் அனைவர்க்கும் ஸமமானவனாக இருக்கிறான். நீயும் இதை உணர்ந்தவனாக, அவனுக்கு ஆற்றும் எல்லா கைங்கர்யங்களிலும் விருப்பம் உடையவனாக இரு’’ என்று உபதேசிக்கிறார் ஆழ்வார்.
ந்யாஸ வித்யையால் (சரணாகதியால்) அறியப்படுவது , பரமாத்மாவின் வாத்ஸல்யம், சௌசீல்யம், ஸௌலப்யம், ஸ்வாமித்வம் போன்ற குணங்களும், அவன், ஜீவாத்மாக் களுக்குள் வேறுபாடு காணாதவன் என்பதும் அறியப் படுகிறது. இதை ஆழ்வார், ‘‘பற்றிலன்’’ (திருவாய். 1-2-6) என்பதால் அருளிச் செய்கிறார். ‘அவன் ஸ்வாமி’ என்பதை, ‘‘ஈசன்’’ (திருவாய். 1-2-6) என்னும் சொல்லால் சுட்டிக் காட்டுகிறார். இதனால், ந்யாஸவித்யை, மற்ற வித்யைகளைக் காட்டிலும் வேறுபட்டது என்பது தோற்றுகிறது. தஹர, சாண்டில்ய, உபகோசல வித்யைகளைக்காட்டிலும் ந்யாஸ வித்யை வேறுபட்டிருப்பதும் இங்கே தெளிவு. தைத்திரீயம், ச்வேதாச்வதரம் ஆகிய உபநிஷத்துக்களில் விதிக்கப்பட்டுள்ள ந்யாஸவித்யையின் வடிவத்தில் ஒற்றுமை உண்டு என்பதால், இவற்றுள் வேறுபாடு இல்லை என்று அறியப்படுகிறது.
‘‘அவன் முற்றிலடங்கே’’ (1-2-6) என்று ந்யாஸ வித்யா பலமாக எல்லா கைங்கர்யங்களையும் விதிப்பதால், ‘‘விகல்போ(அ)விஶிஷ்டப2லத்வாத்’’ (3-3-57) - ‘‘(ப்ரஹ்மவித்யைகளில்) ஒவ்வொன்றே அனுஷ்டிக்கத் தக்கது; (ஒவ்வொன்றாலும்) அடையப்படும் பலம் வேறுபடாமையால்’’ என்கிற விகல்பாதிகரணத்தின் பொருள் இதனைத் தெளிவுபடுத்துகிறது.
ஸூத்ரகாரர், வேதத்தின் பல சாகைகளில் காணப்படும் அனேக வித்யைகளுக்கிடையே உள்ள பேத, அபேதங்களை, நிரூபணம் பண்ணாமல் விட்டு விட்டு, ந்யாஸவித்யையை ப்ரதானமாக விளக்கியருளினார். ஆழ்வாரும் கூட, ந்யாஸ வித்யைக்கும் மற்ற வித்யை களுக்கும் இடையே உள்ள பேத, அபேதங்களைக் காட்டி, இதனால் வித்யைகளுக்கிடையில் பேத, அபேதங்கள் தன்னிடையே தோன்றும் என்று இப்பாசுரத்தில் (திருவாய். 1-2-6) அருளிச்செய்கிறார்.
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாருக்கு, சிறப்புடையதோர் பெருமை உண்டு. வேதாசார்யரான பாதராயணர் கற்பித்த வேதாந்தங்கங்களை ஆராய்ந்து, அவர் விரிவாகக் கூறியவற்றைத் தாம் சுருக்கமாகவும், அவர் சுருக்கமாக சொன்னதை தாம் விரிவாகக் கூறுவதே இந்த பெருமை.
இதற்கு உதாரணம், ஸூத்ரகாரர் ஸம்சார தசையில் ஜீவன் பெறும் அநுபவங்களான ஸ்வர்க்கம் செல்லுதல், தாய் தந்தையருக்குக் குழந்தையாகப் பிறத்தல், ரௌரவம் போன்ற நரக அநுபவங்களைப் பெறுதல், ஆகியவற்றை விரிவாகச் சொன்னார். இதை ஆழ்வார், :’’வீடுமின் முற்றம்’ (1-2-1)’ என்று வெகு சுருக்கமாக, அருளிச் செய்தார். பாஸுபதாதி கரணத்தில், ஸூத்ரகாரர், பாஸுபத மதத்தைக் கண்டித்ததை, ஆழ்வார், ‘‘புரமொருமூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து, அரனயனென உலகழித்தமைத்துளனே’’ (திருவாய். 1-1-8) என்று, பசுபதி, ஹிரண்யகர்பன் (சதுர்முக ப்ரஹ்மா) ஆகியோருடைய பெருமையைக் கண்டிக்கிறார். இப்படி, ஸூத்ரகாரர் விரிவாகச் சொன்னதை, சுருக்கமாகச் சொல்கையும், சுருக்கமாகச் சொன்னதை விரிவாகச் சொல்வதும் இவருக்கு உள்ள அதிசயமான பண்பு. இதற்கு, ஆழ்வாருக்கும் ஸூத்ரகாரருக்கும் இடையே உள்ள கருத்தொற்றுமையே காரணமாகும்.
‘‘அடங்கெழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே’’ (1-2-7) பாசுரத்தில், எல்லா வித்யைகளாலும் அறியப்படும் பரமபொருள் ‘‘ஸ்ரீமந் நாராயணனே’’, ‘அவனே உயர்ந்த தெய்வம்’ என்னும் கருத்து அருளிச் செய்யப்படுகிறது. ‘‘பரமாத்மாவின் விபூதி பரந்து விரிந்து இருப்பதைக் கண்டு, நீயும் அந்த செல்வத்தில் ஒன்று என்று உணர்ந்து, அதற்குள் அடங்கு’’ என்று ஆழ்வார் உபதேசிக்கிறார். இப்பாசுரத்தில் (1-2-7), ப்ரஹ்மா, ருத்ரன், இந்திரன் போன்ற சிறப்புடைய புருஷர்களும், எம்பெருமானுடைய விபூதியில் அடங்கி யவர்கள்; அவனே விபூதிமான். பொதுவாக, ‘சம்பு’, ‘சிவன்’ போன்ற சொற்களால் அறியப்படுபவனும் நாராயணனே. இந்த பொருள்,
‘‘ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவஸ் ஸேந்த்3ரஸ் ஸோக்ஷர: பரமஸ்வராட்’’ (நாரயணஸூக்தம்) - அவன் ப்ரஹ்மனுக்கும் அந்தர்யாமி, அவன் சிவனுக்கும் அந்தர்யாமி, அவன் இந்திரனுக்கும் அந்தர்யாமி, அவன் கர்மத்திற்கு வசப்படாதவனும், மேலானவனுமான முக்தாத்மாவிற்கும் அந்தர்யாமி. உலகில் ஜ்ஞான சக்திகளை அதிகமாயுடை யவர்களான ப்ரஹ்மருத்ரேந்த்ரர்களும், முக்தாத்மாவும் இந்த பரமாத்மாவினுடைய விபூதிகளே என்று உரைக்கப்படுகிறது. அந்த பரமபுருஷனே பிரமனுக்கும், சிவனுக்கும் அந்தர்யாமி; அவன் இவர்களைக் காட்டிலும் மேலானவனும், அகர்மவச்யனுமான முக்தாத்மாவுக்கும் அந்தர்யாமி, இவ்வர்த்தத்தை,
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்றெல்லாமும் அறிந்தனமே. (திருவாய்.9-3-2)
என்று ஆழ்வார் அருளிச்செய்துள்ளார். இங்கு ‘ஸ:’ ‘ஸ:’ என்று படித்ததை ஆழ்வாரும் ‘அவன்’ ‘அவன்’ என்று உணர்த்து வதைக் காண்மின்.
போன்ற வேதச் சொற்றொடர்களால் காட்டித்தரப் படுகிறது. இந்த அர்த்தமும், எல்லா வித்யைகளும் நாராயணனின் ரூபம், உபாஸிக்கத்தக்கதாக சொல்லி யிருப்பதும் இப்பாசுரத்தால் (1-2-7) அறியப்பட்டது.
இவ்வாறு ‘‘இல்லதும்உள்ளதும்’’(1-2-4), ‘‘அற்றதுபற்றெனில்’’ (1-2-5) ‘‘பற்றிலன் ஈசனும்’’ (1-2-6) மற்றும் ‘‘அடங்கெழில் சம்பத்து’’ (1-2-7) ஆகிய நான்கு பாசுரங்களுக்கும் மூன்றாம் அத்யாயம் மூன்றாம் பாதமான குணோபஸம்ஹார பாதத்திற்கும் கருத்தொற்றுமை உள்ளது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
அடுத்து, ‘‘உள்ளம் உரை செயல்’’ (1-2-8 ) பாசுரத்திற்கும் நான்காம் பாதமான அங்கபாதத்திற்கும் இடையே உள்ள கருத்தொற்றுமை காட்டித்தரப்படுகிறது.
இந்த நான்காம் பாதம், முதல் அதிகரணத்தில் (புருஷார்த்தா2தி4கரணம்- 3-4-1), கர்மம் நேரடியாக மோக்ஷ ஸாதனமாகுமா? கர்மம், வித்யையின் பகுதியா? அல்லது வித்யை, கர்மத்தின் பகுதியா? ஆகியவை ஆராயப்பட்டது. கர்மமே வித்யைக்கு அங்கம். எனவே, கர்மத்தால் மேற்கொள்ளப்பட்ட வித்யை, மோக்ஷஸாதனம் என்று நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாம் அதிகரணத்தில் (ஸ்துதிமாத்ராதி4 கரணம் 3-4-2 ), உத்கீதை2 பெருமை படுத்தப்பட்டிருப் பதால், இவை இந்தப் பாடல்களில் துதிக்கத் தக்கவையா என்பது ஆராயப்பட்டு, இவை உத்கீத2 உபாஸனை விதிக்கும் அதிகார ஆணைகளே என்பது தெளிவாக்கப்பட்டது.
மூன்றாம் அதிகரணத்தில் (பாரிப்லவார்த்தா2தி4கரணம்- 3-4-3), ப்ரஹ்ம வித்யையின் பெருமையைப் பேசும் பாரிப்லவங்கள், சில உபநிஷத் சொற்றொடர்களில் காணப் படுகின்றன. இதுவும் உபாஸனையை விதிக்கும் அதிகார ஆணை போன்றதே என்பது தெளிவாக்கப்படுகிறது.
நான்காம் அதிகரணம்(அக்3நீந்த4நாத்3யதி4கரணம் 3-4-4 ), வேள்வித்தீயை மூட்ட (அக்நிஸந்தானம்) தகுதியற்ற ஸந்யாசிகளுக்கு, ப்ரஹ்மத்தை த்யானிக்கும் தகுதி உண்டா என்பது ஆராயப்படுகிறது. இவர்களுக்கு, அக்நியை தீண்டும் உரிமை இல்லாததால், கர்மத்தை உபாஸனைக்கு அங்கமாக ஆக்க இயலாது. ஆனாலும், அவர்கள் ஸந்யாச ஆச்ரமத்திற்கு உரிய கர்மங்கள் ஆற்று வதால், அவர்களும் உபாஸனையை மேற்கொள்வ தற்கு தகுதி பெற்றவர்களே என்று நிலை நிறுத்தப்படுகிறது.
ஐந்தாம் அதிகரணத்தில் (ஸர்வாபேக்ஷாதி4கரணம் - 3-4-5), க்ருஹஸ்தர்களின் நிலை விவரிக்கப்படுகிறது. இவர்கள், தங்களுடைய ஆச்ரமத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் யஜ்ஞம், தானம், தபஸ் போன்றவற்றை உபாஸனைக்குப் பயன்படும் வகையில் உபயோகிக்கலாம். ஏனெனில், இவர்களுக்கு வேள்வித்தீயை மூட்ட தகுதி உண்டு.
ஆறாம் அதிகரணத்தில் (ஸமத2மாத்3யதி4கரணம்- 3-4-6 ), க்ருஹஸ்தர்கள் தமக்கு விதிக்கப்பட்ட சடங்குகளை மேற்கொள்வதோடு நில்லாமல், ஶமம்- மன அமைதி, தமம்-புலனடக்கம், உபரதி-மனநிறைவு, மற்றும் திதிக்ஷு-பொறுமை, ஸமாஹி தத்வ-சமநோக்கு, ஆகியவற்றை தாம் கற்கும் வித்யைக்கு துணை போவதாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
எழாம் அதிகரணத்தில் (ஸர்வாந்நாநுமத்யதி4 கரணம்- 3-4-7), ப்ரஹ்ம வித்திற்கு உணவின்றி உயிர் பிரியக்கூடிய அபாயம் நேர்கையில், கிடைக்கும் எந்த உணவையும் உட்கொண்டு உயிர் தரிக்கலாம். மற்ற நேரங் களில் எல்லா உணவையும் உட்கொள்ளக்கூடாது என்பது தெளிவாக்கப்பட்டது. இந்த விஷயத்திற்கு சாந்தோக்ய உபநிஷத்தில் காணப்படும் உஷஸ்தரின் கதை உதாரண மாகக் காட்டப்பட்டது.
எட்டாம் அதிகரணத்தில் (விஹிதத்வாதி4கரணம் 3-4-8), மோக்ஷத்தில் விருப்பம் இல்லாத க்ருஹஸ்தர்களாலும், யஜ்ஞம், தானம், போன்ற கர்மங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், அவை இவர்களுக்கு வேதத்தால் விதிக்கப்பட்டுள்ளன என்பது, காட்டித்தரப்படுகிறது.
ஒன்பதாம் அதிகரணத்தில் (விது4ராதி4கரணம் - 3-4-9 ), நான்கு ஆச்ரமங்களுள் எதிலும் சேராத அநாச்ரமியான விதுர்களுக்கும் (மனைவியை இழந்தவர் களுக்கும்) ப்ரஹ்ம வித்யையில் அதிகாரம் உண்டு, என்பது நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு உதாரணம்:- அநாச்ரமிகளான ரைக்வர் மற்றும் பீஷ்மரின் வாழ்க்கை, எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டது.
பத்தாவது அதிகரணத்தில் (தத்3பூ4தாதி4கரணம்- 3-4-10), ப்ரஹ்மச்சர்யம் போன்ற ஆச்ரமங்களில் உள்ளவர்கள், பாவச்செயல்களைச் செய்தால், அவர்கள் ப்ரஹ்மவித்யை தொடரக்கூடிய தகுதியை இழக்கிறார்கள். ஏனெனில், சாஸ்த்ரங்கள் அவர்கள் ப்ரஹ்ம வித்யையைத் தொடர தடை விதிக்கிறது என்பது காட்டப்பட்டது.
11- வது அதிகரணத்தில் (ஸ்வாம்யதி4கரணம் 3-4-11), உத்கீத2 உபாஸனை செய்ய விரும்பும் ஒருவர், அதற்கான யாகத்தை ஆற்றுவதற்குத் தகுதி பெற்ற சமய குருக்களின் உதவியோடுதான் மேற்கொள்ள வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டது.
12-வது அதிகரணத்தில் (ஸஹகார்யந்தரவித்4யதி4 கரணம்- 3-4-12 ) ‘மௌனம்’ என்பது தியானத் திற்கு உரிய பொருளை மனனம் செய்வது (மீண்டும் மீண்டும் சிந்திப்பது)-இந்தப் பண்பு, உபாஸகர்களுக்கு பாண்டித்யம் (ஆழ்ந்த அறிவு) மற்றும் பால்யத்வம் (பாலகனைப் போன்ற பண்பு) ஆகியவற்றுடன் சேர்த்து விதிக்கப்பட்டிருப்பது தெளிவாக்கப்படுகிறது.
‘‘தஸ்மாத் ப்3ராஹ்மண: பாண்டி3த்யம் நிர்வித்3ய பா3ல்யேந திஷ்டா2ஸேத் பா3ல்யம் ச பாண்டி3த்யம் ச நிர்வித்3யா (அ)த2 முநி:’’ (ப்ருஹ.5-5-1) (வைராக்யம் அவச்ய மாகையால் வேதாத்யயனம் செய்த அந்தணன் வேதார்த்தத்தைக் கேட்டறிந்து (தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமையாகிற) பால்யத்துடன் நிற்கவேண்டும். பால்யத்தையும் பாண்டித்ய த்தையும் அடைந்தபிறகு சிறந்த மனனத்தையுடைய முநியாக வேண்டும்) என்னும் சொற்றொடர் காணப்படுகிறது, என்பதில் ‘முநி’ என்பதால், மனன ரூபமாகிய மௌனம் பேசப்படுகிறது.
‘‘ஶ்ரோதவ்யோ மந்தவ்ய:’’ (ப்ருஹ. 4-4-5, தை.ப்ருகு. 6-5-6) - ‘அவன் கேட்கப்பட வேண்டும்; நினைக்கப்பட வேண்டும்’, என்பதிலும் ‘மனனம்’ வித்யை களுக்குத் துணை போவ தாகவே நிர்வஹிக்கப்படுகிறது
13-வது அதிகரணத்தில் (அநாவிஷ்காராதி4கரணம் 3-4-13), ‘‘தஸ்மாத் ப்3ராஹ்மண: பாண்டி3த்யம் நிர்வித்3ய பா3ல்யேந திஷ்டா2ஸேத்’’ (ப்ருஹ. 5-5-1) - ‘ஆகையால் வேதாத்யயனம் செய்த அந்தணன் வேதார்த் தத்தைக் கேட்டறிந்து பால்யத்துடன் நிற்கவேண்டும்’,என்ற ப்ருஹ தாரண்யக உபநிஷத்தில் கூறபப்பட்டது போல், பால்யத்வம் என்பது, சிறு பிள்ளைத் தனமான பொறுப்பற்ற செயலைக் குறிக்காது. மாறாக, ‘தான் ப்ரஹ்ம ஞானி’ என்னும் கர்வத்தை விட்டு விட்டு சிறுபாலகனைப் போல, கள்ளங்கபடமற்று இருப்பதைக் குறிக்கும் என்று காட்டப்படுகிறது.
14- ஆவது அதிகரணத்தில் ( ஐஹிகாதி4கரணம்- 3-4-14), மோக்ஷத்தைக் காட்டிலும் வேறு பலன்களாகிய ஸ்வர்க்கானுபவம், செல்வம் போன்றவற்றை வேண்டி ஆற்றப்படும் வேள்விகள், உடனே பலன் தருமா, தராதா என்பது ஆராயப்பட்டு, தடை செய்யக்கூடிய ப்ராரப்த கர்மம் இல்லாத பொழுது, அவை உடனே பலன் தரும் என்பது உறுதிபடுத்தப்பட்டது.
15-ஆவது அதிகரணத்தில் (முக்திப2லாதி4கரணம் 3-4-15), மோக்ஷத்தை அடைவதற்கு ஆற்றப்படும் உபாஸனைகள், ப்ரஹ்மவித்திற்குப் பகையான ப்ராரப்த கர்மங்கள் தடை செய்யாத பொழுது, இலக்காகிய மோக்ஷத்தை, த்யானம் முடிந்த உடனே அடைவிக்கும் என்று காட்டப் பட்டது.
இவ்வதிகரணங்களுக்குள், இரண்டு, மூன்று மற்றும் பத்தாம் அதிகரணங்கள், ‘ப்ராசங்கிகங்கள்’. மேலும், பத்து அதிகரணங்களால், வித்யையே மோக்ஷ ஸாதனமென்றும், எந்த ஆச்ரமத்தில் இருந்தாலும், அந்த ஆச்ரம தர்மத்தை மேற்கொள்வதே அவர்கள் மேற்கொள்ளும் வித்யைக்கு அங்கங்களென்றும், எந்த ஆச்ரமத்திலும் சேராத விதுரர்கள் போன்றவர்களுக்குத் தவம், தானம் போன்ற கர்மங்கள் வித்யைக்கு அங்கமென்றும், க்ருஹஸ்தர்களுக்கு, சமம், தமம் போன்ற குணங்கள் வித்யைக்கு அங்கமென்றும், தகாத உணவைத் தவிர்ப்பதும் வித்யையின் அங்கமென்றும், வித்யாங்கங்களுக்கே ஆச்ரமத்தின் அங்கமாக இருக்கும் பண்புகள் உண்டென்றும், ஆச்ரம தர்மங்களையும் கைவிட்ட வர்களுக்கு வித்யையில் அதிகாரம் இல்லை என்பதும், மற்றும் பாண்டித்யம், பாலகரூபம் ஆகியவை வித்யைக்கு அங்கங்கள் என்றும் நிரூபிக்கப்பட்டது.
14, 15-வது அதிகரணங்களில், பாதகமற்ற நிலையில், அங்கங்களால், அங்கியான உபாஸனத்திற்கு பலன் தரும் தகுதியில் மாற்றமில்லை என்பது நிலை நிறுத்தப் பட்டது.
இவற்றுள் ப்ராஸங்கிகளான இரண்டு மூன்று மற்றும் பத்தாவது அதிகரணங்களை விட்டு விட்டு, பத்து அதிகர ணங்களின் பொருளை, ‘‘உள்ளமுறை செயல், உள்ள இம் மூன்றையும், உள்ளிக்கெடுத்து, இறை உள்ளில் ஒடுங்கே’’ (திருவாய். 1-2-8) என்று ஆழ்வார் அருளிச்செய்கிறார். ‘மனனம் செய்வதற்கு (மீண்டும் மீண்டும் சிந்திப்பதற்கு) உதவியாக இருக்கும் மனமும், ஸ்தோத்ரம் செய்து துதிக்க உதவியாக இருக்கும் வாக்கும், வணங்கி எழ உதவியாக இருக்கும் உடலும், ஆகிய இம்மூன்றையும் , இவை படைக்கப்பட்ட காரணத்திற்காக உபயோகித்து, மற்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பலனாகிய பரமாத்மாவிடம் ஈடுபடச் செய்யுங்கள்’ என்று ஆழ்வார் உபதேசித்தார். இதனால், அங்கத்தின் வடிவத்தையும், இந்த அங்கங்களால் அங்கி கிடைக்கப் பெறுவதையும் வெளி யிட்டருளினார் ஆழ்வார்.
முதல் அதிகரணம் (புருஷார்த்தா2தி4கரணம் 3-4-1), வித்யையே மோக்ஷ சாதனம் என்று நிரூபிக்கிறது. இதையே ஆழ்வார், ‘‘இறையுள்ளிலொடுங்கே’’ (திருவாய். 1-2-8) என்கிறார்.ஸித்தோபாயமாக உள்ள பரமாத்மாவை பற்றுத லாகிய, ஜ்ஞான விசேஷத்தையே தஞ்சமாக அருளிச் செய்கிறார், இப்பாசுரவரியில்.
நான்கு (அக்3நீந்த4நாத்3யதி4கரணம் 3-4-4 ), ஐந்து (ஸர்வாபேக்ஷாதி4கரணம் 3-4-5) மற்றும் ஒன்பதாவது (விது4ராதி4கரணம் 3-4-9)அதிகரணங்களில், வானப்ரஸ்த ஆச்ரமத்தில் உள்ளவர்களுக்கு, அவர்கள் ஆசர்மத்திற்கு ஏற்ற கர்மங்களே வித்யையின் அங்கங்கள் என்றும், க்ருஹஸ்தர் களுக்கு அவர்கள் ஆச்ரமத்திற்கு ஏற்ற வேள்வி போன்றவை அங்கங்கள் என்றும், மனைவியை இழந்த விதுரர்களுக்கு தானம் போன்றவை, வித்யைக்கு அங்கமென்றும் நிர்ணயிக்கப்பட்டது.
பரமாத்மாவை அடையும் உபாயங்களில், கைமுத லற்ற ‘அகிஞ்சன’னான ந்யாஸவித்யா நிஷ்டனுக்கு, பலனும், சாதனையும் ஒன்றே என்பதை, ‘‘உள்ளம் உரை செயல் இம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து’’ (திருவாய். 1-2-8) என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார். இந்தப் பாசுரவரிகளில் காட்டப்பட்ட மனம், வாக்கு, உடலால் பரமாத்மாவை வழிபடுவதை, அங்கமாக அருளிச் செய்கிறார், இதனால், மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அதிகாரிகளுக்கு விதிக்கப் பட்ட, ‘செயல்களை அங்கமாகக் கொண்ட அநுஷ்டானத் தால் கூடிவரும் வித்யை’, ந்யாஸவித்யா நிஷ்டனுக்கு கைகூடுமென்று சொல்லப்பட்டது.
ஆறாவது அதிகரணத்தில் (ஸமத2மாத்3யதி4கரணம் 3-4-6),’மேற்கொள்வது, கைவிடுவது’ ஆகிய கர்மங்க ளுக்குள் விரோதமில்லை என்று நிரூபிக்கப்பட்ட பொருள், ‘‘உள்ளம் உரை செயல்’’ (திருவாய். 1-2-8) என்பதால் காட்டப்பட்டது. இதனால், வேண்டாதவை ஒதுக்கப் படுவதையும், வேண்டியவை கைக் கொள்ளப்படுவதும் தெளிவாக அறியப்படுகிறது.
தேவையற்ற விஷயங்களிலிருந்து, மனம், வாக்கு, உடல் ஆகியவற்றை மீட்க வேண்டும் என்று கூறும் இந்தப் பாசுர வரிகளால், ஏழாவது அதிகரணத்தில் (ஸர்வாந்நாநு மத்யதி4கரணம் 3-4-7) கூறப்பட்ட பொருளும் அறியப்படுகிறது. எட்டாம் அதிகரணத்தில் (விஹிதத்வாதி4 கரணம் 3-4-8) குறிப்பிடப்பட்ட வித்யாங்கத்வமும், ஆச்ரமாங்கத்வமும் ஒரு தர்மத்திற்கே கூடும் என்பதை, இதர விஷயங்களில் ஈடுபடும் மனம் முதலியவற்றை பகவத் விஷயத்தில் ஈடுபடும்படி விதிக்கையால், ஆழ்வார் இப்பாசுர வரிகளில் விவரித்தார் ஆயிற்று.
பத்தாவது அதிகரணத்தில் (தத்3பூ4தாதி4கரணம் 3-4-10), ஆச்ரம தர்மங்களைக் கைவிட்டு, தகாதசெயல் களில் ஈடுபடுபவர்களுக்கு, வித்யையில் தகுதியில்லை என்பது கூறப்பட்டது. இதையே ஆழ்வார், ‘‘உள்ளம் உரை செயல் உள்ள இம்மூன்றையும் உள்ளிக் கெடுத்து’’ (திருவாய். 1-2-8) என்று ஆச்ரம ப்ரஷ்டர்களுக்கு ஏற்படக் கூடிய கொடுமையை அருளிச் செய்கிறார் என்பது உணர்த்தப் படுகிறது.
12-ஆம் அதிகரணத்தில்(ஸஹகார்யந்தரவித்4யதி 4 கரணம் 3-4-12), மற்ற விஷயங்களில் உள்ள ஈடுபாட்டை, பகவத் விஷயத்தில் ஈடுபடச் சொல்லி விதிப்பது இப்பாசுர (திருவாய். 1-2-8) வரிகளில் காட்டப்படுகிறது என்று கொள்ளலாம்.
13-ஆம் அதிகரணத்தில் (அநாவிஷ்காராதி4கரணம் 3-4-13) ‘பாலகனைப் போல் இருப்பது’ என்பது குழந்தைகள் போல மனம் போனபடி இருப்பதைக் குறிப்பதன்று, ‘தமக்குள்ள வித்யா கர்வத்தைத் தொலைத்து விட்டு இருப்பது அது’ என்பது விளக்கப்பட்டது. இவ்வாறு மனம் போனபடி செயலாற்றக்கூடாது என்பதும், இந்தப் பாசுர (திருவாய். 1-2-8) வரிகளால் உணர்த்தப்பட்டது என்னலாம்.
14-ஆம் (ஐஹிகாதி4கரணம் 3-4-14) மற்றும் 15-ஆம் (முக்திப2லாதி4கரணம் 3-4-15)அதிகரணங்களில், அங்கங்களோடு கூடி இருக்கையிலேதான் அங்கியான வழிபாடு பலனைத் தரும் என்பது, மனம், வாக்கு, செயல் ஆகியவற்றால் பரமாத்மா வழிபடப்படவேண்டும் என்னும் ஆழ்வார் வாக்கால் தெளிவாகிறது.
7.0. இவ்வாறாக திருவாய்மொழி 1-2-8ஆம் பாசுரத்திற்கும், அங்கபாதத்திற்கும் (மூன்றாம் அத்யாயம் நான்காம் பாதம்) இடையே கருத்தொற்றுமை உள்ளது காட்டித்தரப்பட்டது.
7.1. இனி, அடுத்ததாக சாரீரக மீமாம்ஸை நான்காம் அத்யாயத்திற்கும், (பலாத்யாயம்), திருவாய்மொழி ‘‘ஒடுங்க அவன்கண்’’ (1-2-9) பாசுரம், ‘‘எண்பெருக்கு அந்நலத்து’’ (1-2-10 ) பாசுரம் ஆகியவற்றிற்கும் இடையே உள்ள கருத்தொற்றுமை காட்டப்படுகிறது. இதில் 1-2-9-ஆம் பாசுரம் நான்காம் அத்யாயத்தின் முதல் (ஆவ்ருத்திபாதம்) மற்றும், இரண்டாம் (உத்க்ராந்திபாதம்) பாதங்களுடனும், 1-2-10-ஆம் பாசுரம் மூன்று (கதிபாதம்) மற்றும் நான்காம் (முக்தி-பல பாதம்) பாதங்களுடனும் கருத்தொற்றுமை கொண்டிருப்பது அறியப்படுகிறது.
முதல் பாதம் (ஆவ்ருத்திபாதம்) முதல் அதிகரணத் தில் (ஆவ்ருத்த்யதி4கரணம் 4-1-1), ‘வேத3ந’’ எனப் படுவது , ‘‘உபாஸனம்: அல்லது, ‘‘த்யானம்’’ என்னும் சொற்கள் தரும் அதே பொருளைக் கொண்டது என்பது நிலைநாட்டப்பட்டு, மிக உயர்ந்த இலக்கை அடைய இது நேரான பாதை, எனவே, இது மீண்டும் மீண்டும் தொடர்ச்சி யாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது.
இரண்டாம் அதிகரணத்தில் (ஆத்மத்வோ பாஸ நாதி4கரணம் 4-1-2), உபாஸனைகள் மேற்கொள்ளப் படுகையில், (த்யானிக்கையில்), ப்ரஹ்மத்தை, தன்னைக் காட்டிலும் வேறுபட்டவனாக த்யானிக்க வேண்டுமா, அல்லது வேறுபடாதவனாக த்யானிக்க வேண்டுமா என்னும் கேள்விக்கு, ‘ப்ரஹ்மம் தனக்கு, உள் உறைபவனாக’ த்யானிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது,
‘‘ப்3ரஹ்மாத்மேத்யேவ உபாஸீத’’ - ‘ஒருவர் ப்ரஹ்மத்தை ஆத்மாவாகவே வழிபட வேண்டும்’ என்கிற சொற்றொடரால் அறியப்படுகிறது.
மூன்றாம் அதிகரணத்தில் (ப்ரதீகாதி4கரணம் 4-1-3 ),
‘‘மநோ ப்3ரஹ்மேத்யுபா ஸீத’’ (சாந். 3-18-1) - ‘மனத்தை ப்ரஹ்மமாக உபாஸிக்கக் கடவன்’, என்கிற வாக்கியத்தில் காணப்படுவதுபோல, உபாஸகன், மனம், ப்ராணன் போன்ற இருப்பினங்களை உபாஸிக்கையில், இவற்றை அவன் தன் ஆத்மாவாக எண்ண வேண்டுமா? என்னும் வினா எழ, அவன் இவற்றை தன் ஆத்மாவாக எண்ணக்கூடாது என்று விதிக்கப்பட்டது.
நான்காம் அதிகரணத்தில் (ஆதி3த்யாதி3மத்யதி4 கரணம்), உத்கீதை2, ஆதித்யனின் ஓர் அடையாளக்குறியீடு என்று த்யானிக்கையில், உத்கீதை2யே ஆதித்யனாக த்யானிக்கப்படவேண்டும். ஏனெனில், ஆதித்யன் உத்கீதை2யைக் காட்டிலும் உயர்ந்த இருப்பினம் (உத்கர்ஷ முடையது) எனப்பட்டது. இப்படி, உத்கர்ஷமான ஆதித்யனே பலனைத் தருபவன் என்று நிர்ணயிக்கப்பட்டது.
ஐந்தாம் அதிகரணத்தில் (ஆஸீநாதி4கரணம் 4-1-5), உபாஸனையில் ஈடுபடுகையில், உபாஸகன் நிற்க வேண்டுமா, அமர்ந்திருக்க வேண்டுமா, அல்லது படுத்திருக்க வேண்டுமா என்னும் ஐயப்பாடு எழ, ‘நிற்பது கடினம், படுத்தால் உறக்கம் ஏற்படக்கூடும், எனவே, அமர்ந்த நிலையே சிறந்தது’ என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான், உடலும், மனமும் உறுதியான நிலையில் இருக்கும்.
ஆறாம் அதிகரணத்தில் (ஆப்ரயாணாதி4கரணம் 4-1-6),
‘‘ஸ க2ல்வேவம் வர்த்தயந் யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோக மபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) - ‘அவன் இப்படி வர்ணாச்ரம தர்மங்களையும் உபாஸநத்தையும் தன் ஆயுள் முடியும்வரை அநுஷ்டித்து ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான்; (அங்கிருந்து) அவன் திரும்பி வருவதில்லை, அவன் திரும்பி வருவதில்லை’ என்கிற சாந்தோக்ய ச்ருதி வாக்கியத்தின்படி, த்யானம் என்பது ஒருவரின் வாழ்க்கை முடியும் வரையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
[Explanatory Note: (i) The previously mentioned characteristics of the meditation are its frequent repetition, its having to be performed when seated etc., (ii) ''Departure from life'' does not necessarily mean the end of the life in which meditation is carried out. The prarabdha-karma or the karma which has begun to yield fruits has to be exhausted; and that may mean one or more lives to be lived, (iii) Ramanuja appears to have quoted Chand.Up.(8-15-1) by way of implied reply to Sankara's view that this section deals only with upasanas which do not have moksha or right knowledge as their aim.].
ஏழாம் அதிகரணத்தில் (தத3தி4க3மாதி4கரணம் 4-1-7), ப்ரஹ்மத்தின் தெளிவான காட்சி தெரியும் அளவிற்கு பக்குவ நிலை அடைந்து விட்ட உபாஸனம். இதற்கு முன்பு செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தையும் நசிக்கச் செய்யும் வல்லமை பெற்றது (விநாசம்). இதற்கு மேல் அறியாமல் செய்யும் தீய கர்மங்கள், உபாஸகனைத் தீண்டுவதில்லை (அஶ்லேஷ) எனப்பட்டது. அவன் அதன் பலனை அநுபவிப் பதில்லை என்பது.
‘‘Ôநாபு4க்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடிஶதைரபி (ப்ரஹ்மவைவர்த்தபுராணம் \&ப்ரக்ருதி காண்டம் 26.70) (நூறுகோடி கல்பங்களானாலும் கர்மம் அனுபவிக்காமல் அழியாது) என்னும் சாஸ்த்ர வசனத்துக்கு முரணாக உபாஸகனுக்குக் கர்மங்கள் அழிகின்றன’ என்றும் ‘ஒட்டுவதில்லை’ என்றும் கூறுவது பொருந்தாது’(அவதாரி கையில் எடுத்த) வேதச்சொற்றொடர்களும் ப்ரஹ்ம வித்யா விதிக்கு ஶேஷமான அர்த்தவாத வாக்யங்களேயாகும். ஆகையால் இந்தச் சொற்றொடர்கள் வித்யையைப் புகழ்வதற்காக ஏற்பட்டவை என்றே கொள்ள வேண்டும். ஆகையால் உபாஸகனுக்குச் சொல்லப்படும் கர்மங்களின் அச்லேஷ விநாஸங்கள் பொருந்தமாட்டா என்று தேறிற்று''.
இந்த வாதம் பொருந்தாது. உபாஸகனுக்கு உபாஸன மானது நேரே காணும் காட்சிபோல் ஸித்தித்தவளவில், செய்யப்போகும் பாபங்களுக்கு ஒட்டாமையும், செய்த பாபங்களுக்கு அழிவும் உண்டாகின்றன என்று முற்கூறிய வேதச்சொற்றொடர்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.
எட்டாம் அதிகரணத்தில் (இதராதி4கரணம் 4-1-8), உபநிஷத்துக்கள், ‘பாவங்கள் என்பது புண்யங்களையும் சேர்த்ததாகும்’’ என்பது தெளிவாக்கப்படுகிறது. ஏனெனில், புண்ய கர்மங்களும், பாவ கர்மங்களைப் போல மோக்ஷ மடைய தடையாக நிற்கக்கூடியவை.
ஒன்பதாம் அதிகரணத்தில் (அநாரப்3த4கார்யாதி4 கரணம் 4-1-9 ), வித்யையால் இன்னும் பலன் தரத் தொடங்காத புண்யபாப கர்மங்கள், முழுவதுமாக அழிக்கப் படுகிறது என்றும், பலன் தரத்தொடங்கிவிட்ட புண்யபாப கர்மங்கள் நசிப்பதில்லை என்பதும் தெளிவாக்கப்பட்டது.
It is only the two (i.e., sin and merit) which are earlier (than vidya) and which have not begun to produce their fruits (that perish), because they (i.e., the karmas which have begun to yield fruits) last till that (i.e., death).
பத்தாம் அதிகரணத்தில் (அக்3நிஹோத்ராத்3யதி4 கரணம் 4-1-10), ப்ரஹ்ம வித்யையில் ஈடுபட்ட ஒருவருக்கு, ‘அவர் ஆச்ரம தர்மமான அக்நிஹோத்ரம் போன்றவை தரும் பலனால் அவருக்கு உபயோகம் இல்லை என்பதால், அவற்றை, அவர் மேற்கொள்ள வேண்டுமா’ என்னும் வினா எழ, ஆச்ரமங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மங்கள் கடைப் பிடிக்கப்பட வேண்டியதே என்று உணர்த்தப்பட்டது.
பதினொன்றாவது அதிகரணத்தில் (இதரக்ஷபணாதி4 கரணம் 4-1-11), பலனைத் தரத்தொடங்கிவிட்ட புண்யபாப வடிவான ப்ராரப்த கர்மத்தின் பலன், இந்த பிறவி முடிவதற்குள் அநுபவிக்கப்படவேண்டும். அவை முடியாமல் போனால் இன்னொரு பிறவி அடைந்தாவது அதை அநுபவித்தே தீரவேண்டும் என்று விளக்கப்பட்டது.
இரண்டாம் பாதம் (உத்க்ராந்தி பாதம்) எனப்படுகிறது. இதன் முதல் அதிகரணத்தில் (வாக3தி4கரணம் 4-2-1),
‘‘வாங்மநஸி ஸம்பத்3யதே’’ (சாந். 6-8-6) - ‘வாக்கானது மனதில் லயமடைகிறது’ என்று, ஒருவர் மரணம் அடை கையில், அவருடைய வாக்கானது மனதுடன் சேர்கிறது என்பது விவரிக்கப்படுகிறது. இதனால், வாக்கின் ஸ்வரூபம் மனதுடன் ஒன்றுபடுகிறது என்பது நிர்ணயிக்கப் பட்டது.
இரண்டாம் அதிகரணத்தில் (மநோதி4கரணம் 4-2-2)
‘மந: ப்ராணே ஸம்பத்3யத’ (சாந்தோ. 6-8-6) - ‘மனம் ப்ராணனில் அமிழ்கிறது’ என்பதால், மனம் ப்ராணனில் ஒடுங்குவது கூறப்பட்டது. எல்லா இந்திரியங்களுடன் கூடிய மனம், ப்ராணனில் கரைவதில்லை. ஆனால் அத்துடன் ஒன்று படுகிறது என்பது காட்டப்பட்டது.
மூன்றாம் அதிகரணத்தில் (அத்4யக்ஷாதி4கரணம் 4-2-3),
‘‘ப்ராணஸ்தேஜஸி’’ (சாந். 6-8-6) - ‘ப்ராணன் தேஜஸில் (ஒளியில்)’. ப்ராணனானது, தேஜஸிலேயே (ஒளியிலேயே ஒடுங்குகிறது) என்பதால், ப்ராணன் தேஜஸில் மட்டும் ஒன்றுவது குறிப்பிடப்படவில்லை, மாறாக எல்லா புலனுறுப் புகளுடன் கூடிய ப்ராணன், எல்லா புலனுறுப்பு களின் எஜமானனாகிய ஜீவனுடன் ஒன்றுகிறதை குறிப் பிடுகிறது என்பது தெளிவாக் கப்பட்டது. ‘‘ப்ராணஸ்தேஜஸி’’ (சாந். 6-8-6) - ‘ப்ராணன் தேஜஸில்’. இதில், ஜீவனுடன் தொடர்பு கொண்ட பிறகு, இணைந்து, தேஜஸில் ஒடுங்குவது குறிப்பிடப் பட்டுள்ளது. இது கங்கையுடன் இணைந்து யமுனையானது கடலிடம் செல்லும் போதிலும், ‘யமுனை கடலிடம் செல்கிறது’ என்பது எவ்வாறு முரண்படாதோ, அதைப் போன்றது.
நான்காம் அதிகரணத்தில் (பூ4தாதி4கரணம் 4-2-4), தேஜஸுடன் ப்ராணன் ஒன்றுவது, உபநிஷத் வார்த்தைகளில் காட்டப்படுகிறது. இது, ப்ராணன் ஒளி ஒன்றினோடு மட்டும் ஒன்றுவதைக் குறிப்பிடுவதல்ல. நெருப்பையும் சேர்த்து மற்ற நுண்ணிய பூதங்களுடன் ஒன்றுவதைக் குறிப்பிடுகிறது என்பது விளக்கப்படுகிறது.
ஐந்தாம் அதிகரணத்தில் (ஆஸ்ருத்யுபக்ரமாதி4 கரணம் 4-2-5 ), ஜீவன் உடலைவிட்டு வெளியேறும் ‘‘உத்க்ராந்தி’’ எனப்படுவது, ப்ரஹ்மத்தை உணர்ந்தவர் களுக்கு மட்டுமா? அல்லது ப்ரஹ்மத்தை உணர எந்த உபாஸனையும் மேற்கொள்ளாதவர்களுக்கும் பொதுவானதா? என்னும் வினா எழ, இதயத்திலிருந்து புறப்பட்டு கபாலத்தின் நடுப்பகுதியை அடையும் மூர்த்தந்ய நாடியில் நுழைவது வரை, இந்த உத்க்ராந்தி என்பது இருவகைப்பட்டவர்களுக்கும் பொதுவானது என்று காட்டப்பட்டது.
ஆறாம் அதிகரணத்தில் (பரஸம்பத்த்யதி4கரணம் 4-2-6), உத்க்ராந்தியின் இறுதி கட்டத்தில், ஸூக்ஷ்ம சரீரத்தால் மூடப்பட்ட ஜீவாத்மாவிடம், இன்ப துன்பங்கள் விளைவிக்கும் கர்மங்கள் ஏதும் காணப்படாததால். அதற்கு பரமாத்மாவின் அநுபவம் கிடைக்காது என்பது மறுக்கப் படுகிறது.
‘தேஜ: பரஸ்யாம் தே3வதாயாம்’’ (சாந். 6-8-6) - ‘தேஜஸானது, மிக உயர்ந்த இறைவனிடம்’ என்னும் ச்ருதி வாக்கியத்தால் இந்த அநுபவம் உண்டென்று காட்டப் படுகிறது. ஜீவனானவன், தன் ப்ராணன் மற்றும் நுண்ணிய நிலையிலுள்ள புலன்களோடு, அந்தர்யாமியாக உடலினுள் உள்ள பரதேவதையோடு தற்காலிகமாக ஒன்றி அநுபவிக்கிறான். இது இத்தனை காலம் ஸம்சாரத்தில் அநுபவித்த துன்பம் தீருவதற்காக என்று காட்டித்தரப்பட்டது.
ஏழாம் அதிகரணத்தில் (அவிபா4கா3தி4கரணம் 4-2-7 ),
‘‘வாங்மநஸி ஸம்பத்3யதே’’ (சாந். 6-8-6) - ‘வாக்கானது, மனதில் ஒடுங்குகிறது’ என்பதில் ‘ஸம்பத்யதே’ என்பது, ஜீவாத்மா பரமாத்மாவில் கரைந்து விடுவதைக் குறிப்பிடாது, மாறாக அவன் தனியாக அடையாளம் காணப்பட இயலாத வண்ணம் ஒன்று படுகிறான். (அவிபாகம்) என்பதைக் காட்டுகிறது என்பது உறுதி படுத்தப்பட்டது.
எட்டாம் அதிகரணத்தில் ( ததோ3கோதி4கரணம் 4-2-8), ‘‘இதயத்திலிருந்து புறப்படும் நூற்று ஒரு நாடிகளில் ஸுஷும்நா நாடி வழியாகவே ஜீவன் வெளியேற வேண்டும் என்னும் நியதி இல்லை. எந்த நாடி வழியாகவும் வெளியேறலாம்’’ என்பது மறுக்கப்பட்டு, உபாஸகனின் இடைவிடாத த்யானத்தால் மகிழ்ந்த பரமாத்மா, அவன் ஸுஷும்நா நாடி வழியாக வெளியேற போதிய வெளிச்சத்தை ஏற்படுத்தித் தருவதாலும், உபாஸகன் தொடர்ந்து அர்ச்சிராதி மார்க்கத்தை சிந்தித்துக்கொண்டே இருப்பதாலும் அவன் ஸுஷும்நா நாடி வழியாகவே வெளியேறுவான் என்பது நிர்ணயிக்கப்பட்டது.
‘‘ஶதம் சைகா ச ஹ்ருத3யஸ்ய நாட்3யஸ்தாஸாம் மூர்தா4நமபி4நிஸ்ஸ்ருதைகா I தயோர்த்4வமாயந்நம்ருதத்வ மேதி விஷ்வங்ஙந்யா உத்க்ராமணே ப4வந்திII’’ (கடோ. 6-16) - ‘தலையை நோக்கிச் செல்லும் நூற்றோராவது ஸுஷும்நாநாடியின் மூலமாகவே ப்ரஹ்மஜ்ஞானி வெளிக்கிளம்புகிறான்; மற்றவர்கள் மற்ற நாடி மூலமாக வெளிக்கிளம்புகிறார்கள்’. என்னும் ச்ருதி வாக்யம், ஜீவன், மூர்த்த நாடி வழியாகவே (ஸுஷும்நா நாடி) வெளியேறு வதைக் குறிப்பிடுகிறது.
ஒன்பதாவது அதிகரணத்தில் ( ரஶ்ம்யநுஸாராதி4 கரணம் 4-2-9 ), உடலிலிருந்து வெளியேறிய ஜீவன், சூரிய கிரணங்கள் வழியாக பயணிக்க வேண்டியுள்ளதால், இரவில் மரணம் அடைபவர்களுக்கு, இந்த பாதை கிடையாது என்னும் எண்ணம் மறுக்கப்பட்டு, இரவிலும் சூரிய கிரணங்கள் உண்டு என்பதால் இரவில் மரணமடைபவர் களுக்கும் இந்த பாதை வழியே பயணம் உண்டு என்று நிர்ணயிக்கப்பட்டது.
பத்தாவது அதிகரணத்தில் (நிஶாதி4கரணம் 4-2-10), இரவில் மரணம் அடைவதை சாஸ்த்ரம் போற்றுவதில்லை. எனவே, ‘இரவில் மரணம் அடையும் ப்ரஹ்ம வித்திற்கு ப்ரஹ்ம ப்ராப்தியில்லை’ என்பது மறுக்கப்படுகிறது. கர்ம ஸம்பந்தம் ஒழிவதாலேயே மோக்ஷம் என்பதால், ப்ரஹ்மவித் இரவில் இறந்தாலும், ப்ரஹ்மத்தை அடைகிறான் என்று உறுதிபடுத்தப்பட்டது.
11-வது அதிகரணத்தில் (த3க்ஷிணாயநாதி4கரணம் 4-2-11), தக்ஷிணாயனத்தில் (சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் காலம்) மரணம் அடையும் ப்ரஹ்மவித் சந்திரனை அடைகிறான் என்றும், சந்திர லோகத்தை அடைபவர்கள் மீண்டும் பூவுலகம் திரும்புகிறார்கள் என்றும் ச்ருதி கூறுவதால், இவனுக்கு ப்ரஹ்ம ப்ராப்தி இல்லை எனப்படுவது மறுக்கப்படுகிறது. பித்ருயான பாதையில் சந்திர லோகத்தை அடைபவர்களே மீண்டும் பூலோகம் வருவார்கள் என்பதாலும், சந்திரலோகம் அடைந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்கிற நியதி இல்லாததாலும், இவர்களுக்கும் ப்ரஹ்மப்ராப்தி உண்டு என்று நிச்சயிக்கப்பட்டது.
இவ்வாறாக முதல் பாதத்தில், முதல் ஆறு அதிகரணங்களால், பல்வேறு உபாஸனங்களின் ஸ்வரூபம் ஆராயப்பட்டது. ஏழாம் அதிகரணம் தொடங்கி மேற்படி ஐந்து அதிகரணங்களில், ஜீவாத்மா தேஹத்துடன் கூடி இருக்கை யில் வித்யையால் கிடைக்கும் பலன் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாதத்தில், ‘‘உத்க்ராந்தி நிரூபணம்’’ எனப்படும், மரணம் சம்பவிக்கையிலும் அதன் பிறகும் நடைபெறும் நிகழ்வுகள் விவரிக்கப்பட்டன. இப்படி, இந்த இரண்டு பாதங்களால் உணர்த்தப்பட்ட பொருளை, ஆழ்வார், -’’ஒடுங்க அவன்கண் ஒடுங்கலும் எல்லாம் விடும்; பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே’’(திருவாய்.1-2-9) என்று அருளிச்செய்தார். ‘‘ஸ்வாமியானவனிடமிருந்து இயற்கை யான தயை உன்னிடம் பாயும்பொழுது, ஆத்மாவின் அஜ்ஞானம் போன்ற தன்மைகள் அழியும். ஞானத்தின் சுருக்கம் கழியும். இதனால், உண்டாகும் அவித்யைகள் எல்லாம் விலகும். அச்சமயம், இந்த உடலின் முடிவைப் பார்த்து அதை விடும் பொழுதை எண்ண வேண்டும்’’ என்று ஆழ்வார் உபதேசிக்கிறார்.
‘‘ஒடுங்குக அவன் கண்’’ (திருவாய். 1-2-9) என்கிற முதல் வரியாலே முதல் பாதம், ஆறு அதிகரணங்களில் வெளியிடப்பட்ட உபாஸனைகளின் ஸ்வரூபம் ஆராயப்பட்டு நிர்வஹிக்கப்பட்ட விஷயம் அறிவிக்கப் பட்டது.
‘‘ஒடுங்கே’’(திருவாய். 1-2-9) என்பது, ‘‘பஜன பரமாகவும்’’ யோசிக்கப்பட்டது என்று ஈட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது, சதுர்விம்சதி ஸஹஸ்ரம் (இருபத்துந ாலாயிரப்படி), முதலிய வ்யாக்யானங்களில், ‘‘பஜநம் எளிதானாலும்’’ என்றும், ‘‘பஜநமாவது தனக்காக தந்த கரணங்களை அவனுக்குக் கொடுக்கை’’ என்றும் விளக்கம் தரப்பட்டது எனவே, இந்தப் பாசுரம் ‘‘பஜனபரமானது’’ எனத்தட்டில்லை.
7.2. ‘‘வீடுமின் முற்றவும்’’ (திருவாய். 1-2)- ப்ரபத்திபரம்’’, ‘‘பத்துடை எளியவர்’’ (திருவாய். 1-3)- பக்திபரம் என்று சொல்லப்படுவதற்கு, ‘‘இப்படி இப்பாசுரம் பஜனபரம் என்று சொல்வது பொருந்தாதே எனில்’’, ஸ்ரீபாஷ்யகாரர் காலத்திற்கு முற்பட்ட முதலிகள் இவ்வாறு நிர்வஹிக் கிறார்கள் என்றாலும், ஸ்ரீபாஷ்யகாரருக்குப் பிற்பட்ட முதலிகள், இந்த இரண்டு பத்துகளும் பக்திபரமென்று நிர்வஹிக்கிறார்கள். மேலும், வ்யாக்யானம் அருளிச் செய்யும் அனைவரும், இப்பாசுரம் பஜநபரமானது என்று விளக்குவதாலும், இங்கே கருத்து வேற்றுமை இல்லை.
ஆனால், ‘‘வீடுமின் முற்றவும்’’ (திருவாய் 1-2)- பக்தி பரமாயும், இந்த பாசுரம் - பஜந ப்ரகார பரமாயும் இருந்த போதிலும், ‘‘இந்த திருவாய்மொழி ஸாத்ய பக்தியை காட்டித்தருவது’’ என்று, ‘‘வீடுமின் முற்றவும்’’ பாசுர விளக்கம் தொடக்கத்திலேயே நம்பிள்ளை நிர்ணயம் பண்ணியிருப் பதால், இது ஸாத்யபக்தி பரமானது என்பது தோன்றும். இவ்வாறிருக்கையில் இந்த ஆறு அதிகரணங்கள் காட்டித்தரும் ஸாதன பக்தி, இத்துடன் எவ்வாறு பொருந்தும் என்ற வினா எழுகிறது.
இதற்காகத் தரப்படும் விளக்கம்: நாதமுநி போன்ற நம் பூர்வாசார்யர்கள் மேற்கொண்ட ஸாத்யபக்திக்கும், உபாஸகன் மேற்கொள்ளும் ஸாதன பக்திக்கும்,’ஸாதனையில் ஈடுபடு கிறோம்’ என்ற எண்ணத்தால் வரும் பேதம் உள்ளதே ஒழிய, ஸ்வரூபங்களில் வேறுபாடு இல்லை. யமம், நியமம், ப்ராணயாமம் போன்றவற்றை மேற்கொள்வதிலும், கீர்த்தனம், யாகம், வந்தனங்கள் போன்றவற்றாலும், பிற அநுஷ்டானங் களாலும், இரண்டும் ஒத்திருக்கின்றன. எனவே, இந்தப் பாசுரம், ஸாத்ய பஜனத்தை சொன்னாலும் ஸாதன பஜனையைக் கூறும் அதிரணங்களுடன் கருத்தொற்றுமை கொண்டுள்ளது என்பது ஏற்கத்தக்கதே. (குறிப்பு:- சாத்ய பக்தி- பரமாத்மாவையே உபாயமாகப்பற்றுவது; சாதன பக்தி- பரமாத்மாவை அடைய உபாயங்களை அனுஷ்ட்டித்தல் )
இனி, ஏழு முதல் பதினொன்றராம் அதிகரணம் வரை, ஐந்து அதிகரணங்களில் உடம்பின் தொடர்போடு இருக்கை யில், வித்யையின் பலன் கிடைப்பது. ‘‘ஒடுங்கலு மெல்லாம் விடும்’’(திருவாய். 1-2-9) என்பதால், அருளிச் செய்யப் படுகிறது. ஆத்ம ஸ்வரூபத்திற்குப் பொருந்தாத அவித்யை யால் ஏற்படும் கர்ம பலன்களை அநுபவிப்பதாகிய ப்ரக்ருதி தொடர்பு, விட்டு விடும்’ என்று வித்யையின் பலனால், எல்லாவிதமான விரோதி ஸ்வரூபங்களும் நீக்கப்படுவது இந்தப் பாசுர (திருவாய். 1-2-9) வரிகளால் அறிவிக்கப் படுகிறது.
‘‘உடலை விடுவதை சிந்தியுங்கள்’’ என்பதை- ‘‘ஆக்கை விடும்பொழுது எண்ணே’’(திருவாய். 1-2-9) என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். இதனால் மரணம் ஏற்படுகையில் நடைபெறும் நிகழ்வுகளை வர்ணிக்கும் உத்க்ராந்தி பாதத்தின் ஒன்றாம் அதிகரணத்திலிருந்து, எட்டாம் அதிகரணம் வரையிலும் விளக்கப்பட்ட விஷயங்கள், இவ்வரிகளால் அறிவிக்கப் பட்டது. பஞ்ச பூதங்களும் ஒன்றாக ஒடுங்குவது, ‘‘ஆக்கை விடும்’’ (திருவாய். 1-2-9) என்பதால் அறிவிக்கப்பட்டது.
ஒன்பதாம் அதிகரணம் தொடங்கி பதினொன்றாம் அதிகரணம் ஈறாக, ‘ப்ராரப்த கர்மம் முடிகையிலேயே மோக்ஷம்’ என்பதும், முக்தியடைவதற்கு அதிகாரியை ‘‘சரீரத்தை விடும் காலம் எப்பொழுது வரும்’ என்று சிந்தி’’ என்று அறிவுறுத்துவதும், ‘‘விடும்பொழுதெண்ணே’’ (திருவாய். 1-2-9) என்பதால் காட்டப்பட்டது.
இவ்வாறு பாசுரம் 1-2-9திற்கும், சாரீரக மீமாம்ஸை நான்காம் அத்யாயம், முதல் மற்றும் இரண்டாம் பாதங் களுக்கும், கருத்தொற்றுமை உள்ளது காட்டப்பட்டது.
மேற்கொண்டு, திருவாய்மொழி ‘‘எண் பெருக்கு அந்நலத்து, ஒண்பொருள் ஈறு இல, வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே’’ (திருவாய். 1-2-10), என்னும் பாசுரத்திற்கும், சாரீரக மீமாம்ஸையின் நான்காம் அத்யாயம் மூன்று மற்றும் நான்காம் பாதங்களுக்கும் இடையே உள்ள கருத்தொற்றுமை ஆராயப்படுகிறது.
நான்காம் அத்யாயாத்தில், கதிபாதம் எனப்படும் மூன்றாம் பாதம், முதல் அதிகரணத்தில் (அர்ச்சிராத்3யதி4 கரணம் 4-3-1), ப்ரஹ்ம ப்ராப்தி அடைந்த ஜீவன், ‘அர்ச்சிராதி’ என்னும் மார்க்கம் வழியாக பயணிப்பதாகவும், வேறு சில மார்க்கங்களில் பயணிப்பதாகவும் மாறுபட்ட கருத்துக்கள், சாந்தோக்ய மற்றும் வாஜஸநேயங்களில் காணப்படுகிறது. இதில் எது பொருத்தம் என்று ஆராயப்பட்டு, ‘‘அர்ச்சிஸ்’’ அல்லது ‘‘ஒளி’’ என்பதில் தொடங்கும் மார்க்கத்தில் ஆதித்யன் போன்ற தேவதைகளால் வழி நடத்தப்பட்டு அர்ச்சிராதி மார்க்கம் வழியாக, முக்தன் சென்று, ப்ரஹ்மத்தை அடைகிறான் என்று நிர்ணயிக்கப் பட்டது.
இரண்டாம் அதிகரணத்தில் (வாய்வதி4கரணம்- 4-3-2), முக்தியடைந்த ஜீவன் கடந்து செல்லும் உலகங்களின் வரிசைக் கிரமத்தில் காணப்படும் வேறு பாடுகள் ஆராயப்படுகின்றன. சில உபநிஷத்துக்கள், தேவ லோகத்தைக் கடந்து செல்கிறார்கள் என்றும், சில உபநிஷத்துக்கள் வாயு லோகத்தைக் கடந்துசெல்கிறார்கள் என்றும் கூறுகின்றன. ‘இவற்றுள் ‘‘தேவலோகம்’’ என்று ஒன்றில் குறிப்பிடப்பட்டது, மற்றொன்றில் குறிப்பிடப்பட்ட வாயு லோகத்தைக் காட்டிலும் வேறுபட்டது அல்ல’ என்று தெளிவாக்கப்பட்டது.
மூன்றாம் அதிகரணத்தில் (வருணாதி4கரணம்- 4-3-3 ), தேவதைகள் எந்த வரிசை க்ரமத்தில் இடம் பெற வேண்டும் என்னும் ஐயப்பாடு எழ, மழைக்குக் காரணமான வருணபகவான் (பர்ஜன்யன்) மின்னலுக்கு அதிபதியான ‘‘வித்யுத்’’ என்பவருக்கு அடுத்தபடியாக இடம் பெற வேண்டும், இருவருக்கும் தொடர்பு உள்ளதால், என்பது நிர்ணயம் செய்யப்பட்டது.
நான்காம் அதிகரணத்தில் (ஆதிவாஹிகாதி4கரணம்- 4-3-4), ‘‘அர்ச்சிஸ்’’ (ஒளி) நாள், மாதம், போன்றவை பௌதிகமான இருப்பினங்களைக் குறிப்பிடுவன அல்ல, அநுபவத்திற்கான இடங்களும் அல்ல; இவை, இவற்றை நிர்வஹிக்கும் தேவதைகளைக் குறிப்பவை. இந்த தேவதை களே, ஜீவனை, பரமாத்மாவிடம் செல்லும் பாதையில் வழி நடத்தும் ‘‘ஆதிவாஹிகள்’’ என்பது, தெளிவாக்கப்பட்டது.
ஐந்தாம் அதிகரணத்தில் (கார்யாதி4கரணம் 4-3-5), ‘எந்த உபாஸகன் ப்ரஹ்மத்தை அடைகிறான்’ என்பதில், பாதராயணருக்கும், ஜைமிநிக்கும் கருத்து வேற்றுமை உள்ளது அறியப்படுகிறது. சதுர்முக ப்ரஹ்மனையோ அல்லது ப்ரஹ்மத்தை மட்டுமே த்யானிப்பவர்கள், பரப்ரஹ்மத்தை அடைவதில்லை. ஆனால், பாதராயணரால் நிலை நிறுத்தப்பட்டபடி, ப்ரஹ்மத்தையும் ஜீவாத்மாவையும் இணைபிரியாதவர்களாக (ப்ரஹ்மாத்மகனாக) எவர்கள் த்யானிக்கிறார்களோ, அவர்கள் மட்டுமே ஆதிவாஹிகர்களால் அர்ச்சிராதி மார்க்கம் வழியாக வழி நடத்தப்படுகிறார்கள் என்று காட்டித்தரப்பட்டது.
7.3. நான்காம் அத்யாயம், முக்திபாதம் எனப்படும் நான்காம் பாதம், முதல் அதிகரணத்தில் (ஸம்பத்3யாவிர்பா4 வாதி4கரணம் 4-4-1), ப்ரஹ்மத்தை அடைந்த ஜீவன், முக்தியடைந்த நிலையில், வேறு ஓர் புதிய வடிவத்தைப் பெறுகிறானா? அல்லது தன் பழைய வடிவத்தோடே இருக்கிறானா? என்னும் ஐயப்பாடு எழ, ப்ரஹ்மத்தை அடைந்த ஜீவன், தன்னுடைய இயல்பான வடிவத்தைப் பெறுகிறான். (ஸ்வேனரூபம்-தன் இயல்பான ஸ்வரூபம்) அப்பொழுது, ‘அவன், ஸம்சாரத்தில் தளையுண்டு இருந்த காலத்தில் மறைக்கப் பட்டிருந்த எட்டு குணங்களும்,’’ய ஆத்மா(அ)பஹதபாப்மா விஜரோ விம்ருத்யு: விஶோகோ விஜிக4த்ஸோ(அ)பிபாஸ ஸத்யகாம: ஸத்யஸங்கல்ப:’’ (சாந். 8-7-1) - ‘‘எந்த ஆத்மா, பாவங்கள் அழிக்கப்பெற்று, வயது வரம்பற்று, மரணமற்று, துன்பம் நீக்கப்பெற்று, பசி நீக்கப்பட்டு, தாகமில்லாமல், விருப்பங்கள் ஈடேறப்பெற்று, நினைவுகள் (எண்ணங்கள்) நிறைவேறப் பட்டு’’ முழுவதுமாக வெளிப்பட்டு ஒளிர்கிறான்’ என்பது நிலை நிறுத்தப்பட்டது.
இரண்டாம் அதிகரணத்தில் (அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாதி4கரணம் 4-4-2), முக்தியடைந்த ஜீவன், ப்ரஹ்மத்தின் குணங்களை அநுபவிக்கையில் தன்னை ப்ரஹ்மத்திடமிருந்து வேறுபட்டவனாக இருந்து அநுபவிக் கிறானா. (ப்ருத2க்3பூ4தம்) அல்லது ப்ரஹ்மத்திடமிருந்து வேறுபடாதவனாக உணர்ந்து அநுபவிக்கிறானா. (அவிப4க்தம்) என்னும் ஐயப்பாடு எழ, முக்த ஜீவன், தன்னை ப்ரஹ்மத்திடமிருந்து வேறுபடாதவனாக, தனக்கும் ப்ரஹ்மத் திற்கும் உள்ள முழுமையான உறவை உணர்ந்தவனாக, ப்ரஹ்மத்தின் ப்ராகாரமாகவே அநுபவிக்கிறான். (அவி பா4கே3ன த்3ருஷ்டத்வாத்) என்று உறுதிபடுத்தப் பட்டது.
மூன்றாம் அதிகரணத்தில் (ப்3ராஹ்மாதி4கரணம் 4-4-3), முக்தியடைந்த நிலையில், ஜீவன், எட்டு குணங்களோடு விளங்குகிறான் என்று சாந்தோக்யம் கூறுவதை ஆதரிக்கிறார் ஜைமிநி. அவன் உணர்வை மட்டுமே பண்பாகக் கொண்டுள்ளான் (சிந்-மாத்ரம்) என்பது ஔடுலோமியின் கருத்து. பாதராயணர், ஜைமிநியின் கண்ணோட்டத்தை ஆதரிக்கும் வகையில், ஜீவனுடைய முக்தி தசையில், ‘அபஹதபாப்மத்வம்’ தொடக்கமான எட்டு குணங்களுடன் ப்ரகாசிக்கிறான், என்கிறார். இந்த இரண்டு கண்ணோட்டங்களும் ச்ருதியால் ஆதரிக்கப்பட்டது என்பது காட்டப்படுகிறது.
நான்காம் அதிகரணத்தில் (ஸங்கல்பாதி4கரணம் 4-4-4), முக்த ஜீவனுக்கு, தன் விருப்பம் போல் இயங்கும் திறன் உள்ளதா? அல்லது தளையுண்ட ஜீவாத்மாவைப் போல் அவனும் தன் விருப்பங்களை ஈடேற்றிக் கொள்ள சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமா?, என்னும் ஐயப்பாடு எழ, ‘அவன் தன் விருப்பம் போல, இயங்குகிறான், தனியாக எந்த முயற்சியும் அவசியமில்லை’ என்பது விளக்கப்பட்டது.
ஐந்தாம் அதிகரணத்தில் (அபா4வாதி4கரணம் 4-4-5), கர்மத்தின் தொடர்பற்ற முக்த ஜீவன் இயங்குகையில், உடல் மற்றும் புலனுறுப்புகளோடு இருப்பானா அல்லது, சரீரமற்று இருப்பானா என்பதில், பாதரி மற்றும் ஜைமிநி ஆகியோருக்குள் கருத்து வேறுபாடு தோன்ற, பாதராயணர், அதைத் தீர்த்துவைக்கிறார். ‘முக்தன் விரும்பினால் உடலுடன் இருப்பான். அவன் விரும்பினால் உடல் இல்லாமலும் இருப்பான்’ என்று தீர்மானிக்கப்பட்டது..
ஆறாவது அதிகரணத்தில் (ஜக3த்3வ்யாபாரவர் ஜாதி4 கரணம் 4-4-6), முக்த ஜீவன், ப்ரஹ்மத்துடன் மிக அதிகமான ‘‘ஸாம்யத்தை’’(ஒற்றுமையைப்) பெறுவதால், அவனும் அண்டத்தைப் படைப்பானா என்னும் முக்யமான வினா எழுகிறது. அதற்கு, அண்டத்தைப் படைக்கும் திறமை பரமாத்மா ஒருவனுக்கே சொந்தமானது. அநுபவத்தில் மட்டுமே முக்த ஜீவனுக்கு ஸாம்யம் என்று பதிலளிக்கப் படுகிறது.
சாரீரக மீமாம்ஸா பாஷ்யத்தின் இறுதி ஸூத்ரமாவது, அநாவ்ருத்திஶ்ஶப்3தா3த3நாவ்ருத்தி: ஶப்3தா3த் - 4-4-22 என்பதாகும். இதில் ஸர்வஸ்வதந்த்ரனான பரமாத்மா, முக்த ஜீவனை மீண்டும் ஸம்சார மண்டலத்திற்கு அனுப்பி விடுவானோ என்னும் ஐயப்பாடு தெளிவாக்கப் படுகிறது. ‘முக்தியடைந்த ஜீவன் திரும்ப வருவதில்லை’ என்பது ச்ருதி வாக்யம் என்பதாலும், ஸத்ய ஸங்கல்பனான ஈச்வரன், தன் ஸங்கல்பத்திற்கு மாறாக செயல்படமாட்டான் என்பதாலும், முக்தியடைந்த ஜீவன், மீண்டும் ஸம்சாரத்திற்கு வருவதில்லை - புநராவ்ருத்தி இல்லை - என்பது நிர்ணயிக்கப் பட்டது.
‘‘யதி3 பரமபுருஷாயத்தம் முக்தைஶ்வர்யம் தர்ஹி தஸ்ய ஸ்வதந்த்ரத்வேந தத்ஸங்கல்பாந்முக்தஸ்ய புநராவ்ருத்தி ஸம்ப4வாஶங்கேத்யத்ராஹ -
அநாவ்ருத்திஶ்ஶப்3தா3த3நாவ்ருத்திஶ்ஶப்3தா3த் (4-4-22)
யதா2 நிகி2லஹேயப்ரத்யநீககல்யாணைகதாநோ ஜக3ஜ்ஜந்மாதி3காரணம் ஸமஸ்தவஸ்துவிலக்ஷண: ஸர்வஜ்ஞ: ஸத்யஸங்கல்ப: ஆஶ்ரிதவாத்ஸல்யைக ஜலதி4: பரமகாருணிகோ நிரஸ்தஸமாப்4யதி4க ஸம்பா4வந: பரப்3ரஹ்மாபி4தா4ந: பரமபுருஷோ (அ)ஸ்தீதி ஶப்3தா3த3வக3ம்யதே, ஏவமஹரஹநுஷ்டீ2ய மாநவர்ணா ஶ்ரம த4ர்மாநுக்3ருஹீத தது3பாஸநரூபதத் ஸமாராத4ந ப்ரீத: உபாஸீநாநநாதி3கால ப்ரவ்ருத்தாநந் தது3ஸ்தர கர்மஸஞ்சய ரூப அவித்3யாம் விநிவர்த்ய ஸ்வயாதா2த்ம் யாநுப4வரூபாநவதி4காதிஶய ஆநந்த3ம் ப்ராபய்ய புநர்நாவர்த்தயதீதி ஶப்3தா3தே3வாவக3ம்யதே ஶப்3 த3ஶ்ச, ‘‘ஸ க2ல்வேவம் வர்த்தயந் யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோகம் அபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) இத்யாதி3க: I
ததா2 ச ப4க3வதா ஸ்வயமேவோக்தம், ‘‘மாமு பேத்ய புநர்ஜந்ம து3:க்கா2லயமஶாஶ்வதம் I நாப்நு வந்தி மஹாத்மாந: ஸம்ஸித்3தி4ம் பரமாம் க3தா: II’’ (ப.கீ. 8-15) ‘‘ஆப்3ரஹ்மபு4வநால்லோகா: புநரா வர்த்திநோ (அ)ர்ஜுந I மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்3யதேII’’ (ப.கீ. 8-16) இதி I ந ச உச்சி2ந்ந கர்மப3ந்த4ஸ்ய அஸங்குசித ஜ்ஞாநஸ்ய பரப்3ரஹ்மா நுப4வைக ஸ்வபா4வஸ்ய ததே3க ப்ரியஸ்ய அநவதி4 காதிஶயா நந்த3ம் ப்3ரஹ்மாநு ப4வதோ அந்யாபேக்ஷா தத3ர்த்தா2ரம் பா4த்3ய ஸம்ப4வாத் புநராவ்ருத்திஶங்காI
ந ச பரமபுருஷ: ஸத்யஸங்கல்போ(அ)த்யர்த்த2 ப்ரியம் ஜ்ஞாநிநம் லப்3த்4வா கதா3சிதா3வர்த்தயிஷ்யதி, ய ஏவமாஹ - ‘‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்த்த2ம் அஹம் ஸ ச மம ப்ரிய:II’’ (ப. கீ. 7-17) ‘‘உதா3ராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்I ஆஸ்தி2த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க3திம் II (ப. கீ. 7-18) ‘‘ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதேI வாஸுதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது3ர்லப4:II’’ (ப.கீ. 7-19) இதி I ஸூத்ராப்4யாஸ: ஶாஸ்த்ரபரிஸ மாப்திம் த்3யோதயதி இதி ஸர்வம் ஸமஞ்ஜஸம் II ‘‘
முக்தனின் பெருமையாகிய செல்வம், பரம புருஷனைச் சார்ந்திருப்பதாலும், மேலும் பரம புருஷன் சுதந்திரமான வனாலும், ‘முக்தன் மீண்டும் ஸம்சாரத்திற்கு திரும்பிவரும் ஸாத்யக்கூறு உள்ளதோ?’ என்னும் ஐயப்பாடு எழுகிறது - எனவே, அங்கு ஸூத்ரகாரர் கூறுகிறார்.
ஸி.ஸூ: அநாவ்ருத்திஶ்ஶப்3தா3த3நாவ்ருத்தி: ஶப்3தா3த் - 4-4-22.
(முக்தன் ஸம்ஸாரத்திற்குத்) திரும்பி வருவதில்லை; வேதச்சொற்றொடர் அப்படிக் கூறுகையால்.
‘‘ச்ருதியிலிருந்து , பரம புருஷன், பரப்ரஹ்மம், சீரான மங்களத்தை உடையது என்பது அறியப்படுவது போல, கைவிடத்தக்க எல்லாவற்றின் எதிரி, அண்டம் போன்ற வற்றின் காரணம், எல்லா இருப்பினங்களிலிருந்தும் வேறு பட்டவன். எல்லாம் அறிந்தவன்; எண்ணங்கள் ஈடேறப் பெற்றவன்; தன்னைச் சரணடைந்தவர்களுக்குக் கருணைக் கடலாக இருப்பவன்; மிக அதிகமான இரக்கம் உள்ளவன்; அவன் திறத்தில் அவனுக்கு சமமானவரோ, மிக்கவரோ இருப்பார் என்கிற கேள்விக்கே இடமில்லை’’ ஆகியவை அறியப்படுகின்றன.
இதைப்போலவே, ச்ருதியிலிருந்தே ‘‘வர்ணாச்ரமத்திற்கு உரித்தான கடமைகளை, தினந்தோறும் சீரிய முறையில் மேற்கொண்டு, அதனால் அரவணைக்கப்பட்ட வழிபாட்டால் உகப்படைந்த அவன் (பரமாத்மா), மிகவும் மகிழ்ந்து, அவனை இவ்வாறு வழிபடுபவர்கள் மீண்டும் ஸம்சாரத்திற்கு திரும்பிவரும் நிலையை ஏற்படுத்தமாட்டான்’’ என்பதும் அறியப்படுகிறது. நினைவில் வைத்துக் கொள்ள இயலாத காலத்திலிருந்து, தொடங்கி, எல்லையற்று, கடப்பதற்கு அரிதாக இருக்கும் குவியலான கர்மங்களிக் பலனான அவித்யையை விலக்கிவிட்டு, அவர்கள் தன்னை அறிவதான வடிவைக் காட்டி, மிகுதியான ஆனந்தத்தை அடையச் செய்த பிறகு - அவர்களைத் திரும்ப அனுப்புவதில்லை. ச்ருதி கூறுவதாவது: ‘‘ஸ க2ல்வேவம் வர்த்தயந் யாவதா3யுஷம் ப்3ரஹ்மலோகம் அபி4ஸம்பத்3யதே ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே’’ (சாந். 8-15-1) - ‘வர்ணாச்ரம தர்மங்களையும் உபாஸனத்தையும் ஆயுள் உள்ளவரை அநுஷ்டித்து ப்ரஹ்மத்தின் உலகத்தை அடைகி றான் (முக்தன்); மறுபடி ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவ தில்லை, திரும்பி வருவதில்லை’.
இதே பயனை, கீதையில் கண்ணன் கூறுகிறான்: ‘‘மாமுபேத்ய புநர்ஜந்ம து3:க்கா2லயமஶாஶ்வதம் I நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்3தி4ம் பரமாம் க3தா: II’’ (ப. கீ. 8-15) - ‘மேலான ஸம்ஸித்திரூபமான (உயர்ந்த புருஷார்த்தமான) என்னை அடைந்தவர்களான மஹாத்மா க்களான ஜ்ஞானிகள், என்னை அடைந்த பின் எல்லாத் துன்பங்களுக்கும் இருப்பிடமாயிருப்பதாய், நிலைநில்லாத தான தேஹத்தை மறுபடியும் அடைகிறதில்லை’.
‘‘ஆப்3ரஹ்மபு4வநால்லோகா: புநராவர்த்திநோ (அ)ர்ஜுந I மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்3யதேII’’ (ப.கீ. 8-16) - ‘அர்ஜுனா! (ப்ரஹ்மாண்டத் தினுள்ளிருக்கும்) ப்ரஹ்மலோகம் வரையிலுள்ள எல்லா உலகங்களும் அழிவை உடையவை; குந்தீபுத்திரனே! என்னை அடைந்த பின் போவெனில்; மறுபிறப்பு இல்லை’.
வேறு எதையும் சார்ந்திருப்பது இயலாததாலும், கர்மத்தின் தளை நீங்கப்பெற்ற ஒருவர் திறத்தில், இதற்காகன முயற்சிகள் செய்யப்படாததாலும், அவனுடைய அறிவு எந்த விதமான சுருக்கத்தை அறியாததாலும், அவர் ப்ரஹ்மத்தை அறிவதான ஒரே நினைவையே கொண்டிருப்பதாலும், அவர் மட்டுமே அவனுக்கு (பரமாத்மாவுக்கு) பிரியமானவராக இருப்பதாலும், அளவற்ற மிகுதியான ஆநந்தமயனான ப்ரஹ்மத்தை அறிந்திருப்பதாலும் - எண்ணங்கள் ஈடேறப்பெற்ற பரம புருஷன், தனக்கு எல்லை கடந்த விருப்பமான அந்த ‘‘அறிந்த ஒருவனை’’ பெற்ற பின்பு. எந்த காலத்திலும் அவனைத் திரும்பவும் போக விடமாட்டான். பரம புருஷன் இதை இவ்வாறு அறிவிக்கிறான்:
‘‘ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்த்த2ம் அஹம் ஸ ச மம ப்ரிய:I (ப. கீ. 7-17) - ‘நான் ஞானிக்கு சொல்ல வொண்ணாதவளவுக்கு இனியவன்; அவனும் எனக்கு இனியவன்’. ‘‘உதா3ராஸ்ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்I ஆஸ்தி2த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க3திம் II (ப. கீ. 7-18) - இவர்கள் அனைவருமே, வண்மை மிக்கவர்கள்; ஞானியோவெனில், (எனக்கு) தாரகனாகவேயிருப்பவன் (என்று), என் ஸித்தாந்தம். என்னோடு சேர விரும்புகின்ற அவன், என்னையே ஒப்பற்ற ப்ராப்யமாகக் கொண்டுள்ளானன்றோ’.
‘‘ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந் மாம் ப்ரபத்3யதேI வாஸுதே3வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது3ர்லப4:II’’ (ப.கீ. 7-19) - ‘பல புண்ணியப் பிறப்புகள் கழிந்தபின், அறிவு முதிரப்பெற்ற ஞானியானவன், ‘வாஸுதேவனே எனக்குப் பரமப்ராப்யமாகவும், ப்ராபகனா கவும், தாரகம், போஷகம், போக்யம் முதலான எல்லா மாகவும் இருக்கிறான்’ என்று எண்ணி, என்னை சரண மடைகிறான். அவன், விசாலமான நெஞ்சையுடையவ னாவான்; (இவ்வுல கில் எனக்கும்) மிகவும் கிடைத்தற் கரியவனாவான்’. இதில், ‘‘மீண்டும் திரும்பி வருவதில்லை. மீண்டும் திரும்பி வருவதில்லை’’ என்று இருமுறை கூறப்பட்டிருப்பது, சாஸ்த்திரம் முடிவடைந்து விட்டதைக் காட்டு வதற்காகும். இவ்வாறு அனைத்துக் கருத்து வெளிப்பாடு களும் ஒருங்கிணைக்கப்பட்டு பரமபதத்தைச் சேர்ந்த முக்தன் மீண்டும் ஸம்ஸாரத்தை அடையமாட்டான் என்பது நிலை நாட்டப்பட்டுள்ளது.
Explanatory Note: The return of the released self to the world can be due to three reasons and three only; his own desire, Karma and the unfettered will of the Lord. It is argued out here that these causes cannot operate in his case.
(ii) The concluding sentence of the Sribhashya claims that different types of scriptural texts such as those asserting indentity between the self, the world and Brahman, those asserting difference etc have been harmoniously explained and reconciled, that logical reasoning has upheld Ramanuja's position and refuted, those who differ from him and that the thesis enunciated at the outset has been successfully expounded.
இந்த இரண்டு பாதங்களில் (கதிபாதம்-முக்தி(பல) பாதங்களில்) காணப்படும் அர்த்த விசேஷங்களையே, ஆழ்வார் ‘‘எண் பெருக்கு அந்நலத்து, ஒண்பொருள் ஈறு இல, வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே’’ (திருவாய். 1-2-10) என்னும் பாசுரத்தில் அருளிச்செய்கிறார். ஆநந்தவல்லியில் வர்ணிக்கப்பட்ட ‘‘பெருகிவரும் ஆநந்தத்தை உடையவனாக, எல்லாச் சொற்களுக்கும் பொருளாக இருப்பவனான, அனைத்துப் பொருள்களிலிருந்தும் வேறுபட்டவனாக, கணக்கற்ற, எல்லையற்ற கல்யாண குணங்கள் நிறைந்த கடலாக உள்ள, ‘‘நாராயணன்’ என்னும் நாமத்தால் அறியப்படும் ஸ்வாமியின் திருவடிகளைச் சரணடையுங்கள்’’ என்று உபதேசிக்கிறார், ஆழ்வார்.
இதில், ‘நலம்’ (திருவாய். 1-1-9) என்பதால் ஈச்வரனை ஒத்த ஆநந்தத்தை உடைய முக்தன் சொல்லப்படுகிறான். இதனால், அவன் பரமாத்மாவுடன் ஸாம்யத்தைப் பெற்றதும், அவன் அர்ச்சிராதி மார்க்கத்தில், பல தேவதைகளால் உபசரிக்கப்பட்டதும் வெளிப்படுத்தப் படுகிறது. எனவே, இதனால் ‘‘அர்ச்சிராதி’’ என்னும் சொல்லின் பொருள் இதில் அடக்கம்.
நான்காம் பாதம் (முக்திபாதம்) முதல் அதிகரணத்தில் (ஸம்பத்3யாவிர்பா4வாதி4கரணம் - 4-4-1) காட்டப் பட்டபடி, ‘முக்தாத்மா தன் இயல்பான வடிவத்தைப் பெற்று, ‘‘அபஹதபாப்மத்வம்’’ தொடக்கமான எட்டு குணங்களுடன் ப்ரகாசிக்கிறான்’ என்பது, ‘‘ஒண்பொருள்’’ (திருவாய். 1-2-10) என்பதால் தெளிவாக்கப்பட்டது.
‘‘நாரணன்’’ (திருவாய். 1-2-10) என்பதால், எல்லா காலங்களிலும், சேதனனுக்கும், ஈச்வரனுக்கும் இடையே ஸம்பந்தம் இருப்பது காட்டப்படுகிறது. எனவே, முக்த தசையில், ஜீவன், தன்னை ப்ரஹ்மத்தின் சரீரமாக உணர்ந்தே அநுபவிக்கிறான் என்று கூறும் இரண்டாம் அதிகரணத்தின் (அவிபா4கே3ந த்3ருஷ்டத்வாதி4கரணம் - 4-4-2) பொருள் இங்கே தோன்றுகிறது.
  ‘‘ஒண் பொருள்’’ (திருவாய். 1-2-10) என்பதில் ஆத்மாவிற்கு ‘‘ஒண்மையாவது’’ அபஹதபாப்மத்வம் போன்ற குணங்கள், சுருக்கமின்றி ஒளிர்வதும் மற்றும் ஞானம் விரிவடைவதும் ஆகும். இந்த இரண்டு குணங்க ளையும் விளக்கும் மூன்றாம் அதிகரணத்தின் (ப்3ராஹ்மாதி4 கரணம் 4-4-3) பொருள் இந்த ‘‘ஒண்பொருள்’’ (திருவாய். 1-2-10) என்பதால் விளக்கப்படுகிறது. ஈடு வ்யாக் யானத்தில், ‘‘எண்பெருக்கென்று இத்தாலே- ஜீவாநந்த் யத்தைச் சொல்லுகிறது. (நலத்து) இவ்வஸ்துக்கள்தான் ஜ்ஞான குணாச்ரயமுமாயிருக்கக் கடவதிறே’’ என்று பொருளுரைக்கப் படுவதால், இந்த அதிகரணத்தின் பொருள் இந்த வரியால் சொல்லப்பட்டது என்பது தெளிவு.
  ‘‘ஒண்’’ (திருவாய். 1-2-10) என்பதால் ‘‘அபஹதபாப்மத்வம்’’ போன்ற எட்டு குணங்களில், ஸங்கல்பத்தையும் குறிக்கும் என்பதால், முக்த ஜீவன், தன் ஸங்கல்பத்தால் தன் முயற்சியின்றி இயங்குகிறான் என்று கூறும் நான்காம் அதிகரணத்தின் (ஸங்கல்பாதி4கரணம் 4-4-4) பொருளும் இங்கே தெளிவாகிறது.
‘‘ஒண்பொருள்’’ (திருவாய். 1-2-10), என்பதால் ‘அபஹதபாப்மத்வத்தின் ஓர் குணமான ‘ஸத்யகாமமும்’ அறியப்படுகிறது. ‘ஸத்யகாமம்’ என்பது தன் விருப்பப்படி இருப்பது. முக்தன் விருப்பமுண்டானால், உடலுடன் இருக்கிறான், விரும்பினால் உடல் இல்லாமல் இருக்கிறான் என்று கூறும் ஐந்தாம் அதிகரணத்தின் (அபா4வாதி4கரணம் 4-4-5) அர்த்தம் இங்கே பொருந்தும்.
ஆறாம் அதிகரணத்தில் (ஜக3த்3வ்யாபாரவர்ஜா தி4கரணம் 4-4-6 ), ‘ஜீவனுக்கு ப்ரஹ்மத்தின் ஆநந்தத்தை அநுபவிப்பதில் மட்டுமே ஸாம்யம் கூறப்படுகிறது. ‘அண்டத்தைப் படைப்பதில் அல்ல’ என்பது விளக்கப் பட்டது. ப்ரஹ்மத்தை ஒத்த ஆநந்தத்தை அடைகிறான் ஜீவன், என்பது, ‘‘அந்நலம்’’ (திருவாய். 1-2-10) என்னும் சொல்லால் காட்டப்பட்டது.
ஸர்வ ஸ்வந்தரனாகிய ஈச்வரன், ஜீவனை மீண்டும் பிறவியில் தள்ளுவானோ என்னும் ஐயப்பாடு எழ, ‘அவன் ஸத்யஸங்கல்பன், கருணை மிக்கவன்; அதனால் இச்செயலைச் செய்யமாட்டான்’ என்பது ‘‘திண்கழல்’’ (திருவாய். 1-2-10) என்பதால் தெளிவாக்கப்படுகிறது. தன்னைச் சரணடைந்தவர்களை ஒருநாளும் நழுவவிடாத திண்மை மிக்க அவன் திருவடிகள் இந்தப் பொருளைக் காட்டித்தருகிறது.
இப்படியாக, எண்பெருக்குஅந்நலத்து,ஒண்பொருள் ஈறில,வண்புகழ் நாரணன், திண்கழல்சேரே. (திருவாய். 1-2-10) -ஆம் பாசுரத்திற்கும், நான்காம் அத்யாயம் மூன்று மற்றும் நான்காம் பாதங்களுக்கும் (கதிபாதம்,முக்திபாதம்) இடையே கருத்தொற்றுமை காட்டித்தரப்பட்டது.
பலனைக் கூறும் நிகமநப் பாசுரமான, ‘‘சேர்த் தடத்,தென்குருகூர்ச் சடகோபன், சொல் சீர்த்தொடை ஆயிரத்து, ஓர்த்த இப்பத்தே’’ என்னும் (திருவாய்.1-2-11) பாசுரம், ‘‘தடாகங்கள் நிறைந்த திருநகரிக்கு நிர்வாஹகரரான ஆழ்வார் அருளிச் செய்த, பரமாத்மாவின் கல்யாண குணங்களால் தொகுக்கப்பட்ட ஆயிரம் பாசுரங்களின் பொருள், இப்பத்து பாசுரங்களைக் கொண்டு நிரூபிக்கப் பட்டது என்று தலைக்கட்டப்படுகிறது.
பகவானின் வடிவம் மற்றும் ப்ராப்யம் (உபாயம்) ஆகியவற்றைக் காட்டித்தருவது இந்த திருவாய்மொழி என்று காட்டப்பட்டது. ஈட்டிலே, ‘‘சீர்த்தொடை’’, என்பதற்கு, ‘உபாஸனையின் உதவியால், உபாசிக்கப்படுபவனின் கல்யாண குணங்களால் தொகுத்த ப்ரபந்தம்’ என்று பொருளுரைக்கப்பட்டது.
இவ்வாறு ‘‘வீடுமின் முற்றவும்’’ (1-2) திருவாய் மொழிக்கும், சாரீரக மீமாம்ஸை மூன்று மற்றும் நான்காம் அத்யாயத்திற்கும் (ஸாதன,பல அத்யயாயங்களுக்கு) இடையே நிலவும் கருத்தொற்றுமை நிரூபிக்கப்பட்டது.
7.4. நான்கு அத்யாயங்களாய், பதினாறு பாதங்களாய், நூற்று ஐம்பத்தி ஆறு அதிகரணங்கள், ஐநூற்று நாற்பத் தைந்து ஸூத்ரங்கள் கொண்ட சாரீரக மீமாம்ஸா சாஸ்த்திரத்திற்கும், இருபத்திரண்டு பாசுரங்களைக் கொண்ட, முதல் பத்து முதல் மற்றும் இரண்டாம் திருவாய் மொழி களுக்கும் இடையே அமைந்துள்ள- ஐககண்டயம்- கருத்தொற்றுமை பூர்வாசார்யர்கள் அநுக்ரஹித்தபடி விளக்கப் பட்டது. *
ஸ்ரீ:
நம்பிள்ளை ஈட்டில் காணப்படும் ப்ரஹ்மஸூத்ரங்கள் மற்றும் உபநிஷத் சொற்றொடர்களுக்கான விளக்கங்கள்