PT 7.7.6

நான்கு யுகங்களாக ஆனவன் ஆமருவியப்பன்

1613 தோயாவின்தயிர்நெய்யமுதுண்ணச்
சொன்னார்சொல்லிநகும்பரிசே * பெற்ற
தாயால்ஆப்புண்டிருந்துஅழுதேங்கும்
தாடாளா! தரையோர்க்கும்விண்ணோர்க்கும்
சேயாய்! * கிரேததிரேததுவாபர
கலியுகம்இவைநான்கும்முனானாய்! *
ஆயா! நின்னடியன்றிமற்றறியேன்
அழுந்தூர்மேல்திசைநின்றஅம்மானே!
1613 toyā iṉ tayir nĕy amutu uṇṇac
cŏṉṉār * cŏlli nakum parice * pĕṟṟa
tāyāl āppuṇṭu iruntu azhutu eṅkum
tāṭāl̤ā * taraiyorkkum viṇṇorkkum
ceyāy ** kireta tireta tuvāpara
kaliyukam- * ivai nāṉkum muṉ āṉāy *
āyā niṉ aṭi aṉṟi maṟṟu aṟiyeṉ *
-azhuntūr mel ticai niṉṟa ammāṉe-6

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1613. When you were given good yogurt and ghee you ate them and laughed, but then your mother Yasodha tied you to a mortar and you cried but you were strong enough to pull the mortar. You are a child for the people of the earth and the god of gods in the sky and you are the four yugas, Krta, Treta, Dvapara and the Kaliyuga. I know nothing other than your feet, my father who stay in Thiruvazhundur facing west.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சொன்னார் வாய்க்கு வந்தபடி; சொல்லி பேசுகிறவர்கள்; நகும் பரிசே பழிக்கு அஞ்சாமல்; தோயா நன்றாகத்தோயாத; இன் தயிர் இனிய தயிரையும்; நெய் அமுது உண்ண நெய்யையும் உண்ண; பெற்ற தாயால் பெற்ற தாய் அவளால்; ஆப்புண்டு இருந்து கட்டுண்டு இருந்து; அழுது ஏங்கும் விக்கிவிக்கி அழுது; தாடாளா! ஏங்கும் பெரியோனே!; தரையோர்க்கும் மண்ணவர்க்கும்; விண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்; சேயாய்! அறியமுடியாத துர்லபனே!; கிரேத திரேத துவாபர கிரேத திரேதா துவாபர; கலியுகம் இவை கலியுகம் ஆகிய; நான்கும் முன் நான்கு யுகங்களுக்கும்; ஆனாய் நிர்வாஹகமானவனே!; அழுந்தூர் மேல் திசை அழுந்தூர் மேல் திசை; நின்ற அம்மானே! நின்ற அம்மானே!; ஆயா! கண்ணனே!; நின் அடி அன்றி உன் திருவடி அன்றி; மற்று அறியேன் வேறு ஒன்று அறியேன்