PT 2.1.2

மனமே! வேங்கடவனுக்கே அடிமை செய்

1049 உறவுசுற்றமென்றொன்றிலா ஒருவன்உகந்தவர்தம்மை * மண்மிசைப்
பிறவியேகெடுப்பான் அதுகண்டு என்நெஞ்சமென்பாய்! *
குறவர்மாதர்களோடுவண்டுகுறிஞ்சிமருளிசைபாடும் வேங்கடத்து *
அறவனாயகற்கு இன்றுஅடிமைத்தொழில்பூண்டாயே.
PT.2.1.2
1049 uṟavu cuṟṟam ĕṉṟu ŏṉṟu ilā * ŏruvaṉ ukantavar-tammai * maṇmicaip
piṟaviye kĕṭuppāṉ * atu kaṇṭu ĕṉ nĕñcam ĕṉpāy **
kuṟavar mātarkal̤oṭu * vaṇṭu kuṟiñci marul̤ icai pāṭum * veṅkaṭattu
aṟavaṉ nāyakaṟku * iṉṟu aṭimait tŏzhil pūṇṭāye-2

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1049. O heart, the god of dharma who has no relatives or family and who destroys the future births of his devotees on this earth stays in the Thiruvenkatam hills where gypsy girls and bees sing kurinji songs together. Become his slave now.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சம் என்பாய்! எனது நெஞ்சே!; உறவு பந்துக்கள்; சுற்றம் என்று உறவு முறை என்று சொல்லக்கூடிய; ஒன்று இலா ஒன்றும்; ஒருவன் இல்லாத ஒப்பற்ற எம்பெருமான்; உகந்தவர் தம்மை தானுகந்த பக்தர்களுக்கு; மண் மிசை பிறவியே இப்பூமியில் பிறவியை; கெடுப்பான் தன் அருளாலே போக்குவான் என்னும்; அது கண்டு ஸ்வபாவத்தை கண்டு; குறவர் மாதர்களோடு குறபெண்களோடு; வண்டு வண்டுகள்; குறிஞ்சி மருள் குறிஞ்சி என்னும்; இசைபாடும் பண்ணைப் பாடும்; வேங்கடத்து திருவேங்கடத்திலிருக்கும்; அறவன் தர்மமே உருவான; நாயகற்கு இன்று வடிவையுடைய எம்பெருமானுக்கு; அடிமை கைங்கர்யம் பண்ணுவதை; தொழில் பூண்டாயே ஏற்றுக் கொண்டாயே
uṛavu relatives (based on karma); suṝam paternal relatives; enṛu being in this manner; onṛu a connection; ilā one who is not having; oruvan being matchless; ugandhavar thammai for those who are dear to him; maṇ misai on the earth; piṛavi birth; keduppān one who eliminates; kuṛavar mādhargal̤ŏdu with nomadic ladies; vaṇdu beetles; kuṛinji marul̤ tune named kuṛinji; isai pādum singing with music; vĕngadaththu one who is eternally residing on ṣrī vĕnkatādhri; aṛavan most magnanimous; nāyagaṛku for sarvĕṣvaran; adhu kaṇdu meditating upon his nature; en nenjam enbāy ẏou who are my mind; inṛu now; adimaith thozhil pūṇdāyĕ ẏou are engaged in serving him!